அழகிய போர்க்களம் தான்

எங்களது பள்ளிப்பேருந்து

ஆரவாரமே எங்களின் சங்கநாதம்…..

அவளருகில் நின்ற என்னை

கண்களைக் கொண்டு கணைதொடுத்தாள்

அவளின் பாணங்கள் பட்டவுடன்

நெறுங்கியது எனது கவசங்கள்

அழகிய அந்த தோல்வியை ஏற்று

அவள் பாத்த்தில் சமர்ப்பித்தேன்

என்னையும் என் காதலையும்…..

என் இதய இராஜ்ஜியத்தின்

என்றும் ஆளூம் சக்ரவர்த்தினியாய் அமரவைத்தேன் – அவளை !!!

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

வகுப்பறைச் சாரல்கள் Copyright © 2015 by நவீன் ராஜ் தங்கவேல் is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book