முந்தினம் ஒரு கனவு…..!!!

நிலவின் பௌர்ணமி ஒளியும்,

தென்றலின் இதமான வேகமும்,

பனிப்பொழிவின் மிதமான குளிரும்,

சுற்றி அணைக்க

நான் மட்டும் நிதான உறக்கத்தில்

யாரோ என் இதயக்கதவை தட்டியது போல் உணர்வு

எழுந்தேன்; பார்த்தேன்

சில படிகள் வானை நோக்கி, என்னை அழைத்தன

நானும் ஏறினேன் ஏறினேன்

சிறிது தூரப் பயணம் ; ஒர் உலகத்தை அடைந்தேன்

நான் இறங்கிய இடத்தில்,

அழகான இயற்கைச் சூழல்,

சுத்தமான நீர் நிலைகள்,

மிதமான தென்றல் காற்று,

பாசமாய் வாழும் மக்கள்,

ஊழலற்ற தலைவன்,

ஆம் நான் இறங்கிய இடம் தான் “இந்தியா”

– பின்னொரு காலத்தில்………..!!!

திடுக்கிட்டு எழுந்தேன் உறக்கத்திலிருந்து……!!!

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

வகுப்பறைச் சாரல்கள் Copyright © 2015 by நவீன் ராஜ் தங்கவேல் is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book