தொய்வுற்ற உன்னை புதுப்பிக்க வந்தோம்

எம் அறிவையும் அறிவியலையும் கொண்டு

எந்தன் எண்ணங்கள் ஈடேற

புதுப்பித்தோம்; பசுமை புரட்சி கண்டோம்

ஆதலால் விவசாயத்தில் முதல் இடம்…..!

 

காளைகள் உழ வேண்டிய நிலத்தை

மனித எந்திரங்கள் உழுகின்றன…..

மரத்தளைகளும் இயற்க்கை உரங்களும்

இருந்த இடத்தில் யூரியாக்கள் உள்ளன…..

விளைவு மனித ஆயுள் குறைவு;

நில வளம் குறைவு;

இதுவா எம் அறிவியல் – வேண்டாம்

இயற்க்கை வேளாண் கடைபிடிப்போம்

நில வளத்தையும்

மனித வளத்தையும் காப்போம்…..!!!

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

வகுப்பறைச் சாரல்கள் Copyright © 2015 by நவீன் ராஜ் தங்கவேல் is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book