நான் உன்னை காதலிக்கிறேன்:
இதை என்னவள் உன்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறாள்
இருந்தும் நான் ஒரு முறை சொல்லிவிடுகிறேன்…..!
கலையழகனே; இயற்க்கைப்பிரியனே;
உன்னை அறிந்தவர் யார் இவ்வுலகில் – எனக்குமேல்;
உன் வெற்றியிலும் தோல்வியிலும்
பங்கு உண்டு – எனக்கு;
குழந்தை குணம் கொண்டவனே;
பொறுமையின் சிகரம் தொட்டவனே;
உன்னை என்னவளுக்கு விட்டுக்கொடுக்க
என் மனம் ஒப்பவில்லை;
என் அன்னை உன்னை ஈன்ற போது
இருந்த அழகு என்னை ஈர்க்கின்றது…..!
ஆதலால் தான் சொல்கிறேன் ; சொல்லிக்கொண்டு இருக்கிறேன்
‘ நான் உன்னை காதலிக்கிறேன் ‘ என்று
இப்படிக்கு
உன் காதலன் “ நான் “