பயம் என்னும் இருட்டுலகில் கிடந்தவனை
காதல் ஒளி கொடுத்து வீரனாக்கினாய்….!
மாவீரனாக்கினாய்…..!
பயம் அறியா காளையனாய் என்னை மாற்றி
இவ்வுலகின் வாசலில் விட்டுச் சென்றாய்…..!
பயம் அறியாமல் வாழ்ந்தேன் உன் வார்த்தைக்காக
மீண்டும் பயம் என்னை பற்றியது
உன் மறைவுக்கு பின்…..!!!