"

அத்தியாயம் 4

தேடல்கள்

எவரும், எந்த தேடல்களில் வாழ்க்கைத் தொடங்கியாலும்,   எல்லவித தேடுதல்கனின் முடிவில், மிக மிக அதிக மதிப்புள்ள ஒன்றை ஒருவர் அடைந்தார் என்றால்,  அது பிரமனைப் பற்றிய அறிவுதான்.

எல்லா விதத் தேடல்களும் உயிர்களின் பயணங்களுக்குக் காரணமாகிறது. சாதாரண மக்களான நாம் செய்யும் பயணத்தை வாழ்க்கைப் பயணம் அல்லது பொருள் பாதைப் பயணம் என்று   சொல்லலாம்.

எல்லா    உயிர்களும்   பல   பிறவிகள்      எடுப்பதாக          ஞானிகள்   சொல்கிறார்கள். என்னைப் போன்ற சிலர்  விஞ்ஞானிகளையும்  மெய் ஞானிகளையும் சுத்தமாக நம்புவார்கள்.

தங்களை எல்லாம் அறிந்தவராக உணர்ந்த பலர், மறுபிறவியை நம்பாமல் இருக்கலாம். தவறில்லை. இந்த வித மனப்போக்கு மனிதர்களை நன்றாகவே ஓடவைக்கும்.  அது பிரம்மாவுக்கு நல்லது.  மாயாவுக்கு மிகவும் பிடிக்கும்.

ஏன்? போகப்போகத் தெரியும்.

நமது பாதையிலே

பொருள்பாதை என்ற பாதையிலே பலவித மக்கள்.  கிடைக்கும் ஊதியதிற்கும் அதிகமாக உழைக்கும் மக்கள், உழைக்காமலேயே பிழைக்கும் மக்கள்,  லஞ்சத்தில் ஊறிய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், திருடர்கள், கொள்ளைக்காரர்கள், கடத்தல்காரர்கள், அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், சமூகவிரோதிகள், தேசத் துரோகிகள், தீவிரவாதிகள், நல்ல மருத்துவர்கள், நியாயத்தை விலைக்கு விற்காத சில நீதிபதிகள், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாத ஒரு சில போலீஸ் அதிகாரிகள், வாங்கிய சம்பளத்திற்கு அதிகமாகவே உழைக்கும் ஓரிரு அரசு அதிகாரிகள்.  சமூக நலனில் அக்கரை கொண்ட மக்கள் என்று சிலர்.  பிராணிகள் மீது அன்புகாட்டுவோர், சுற்றம் சூழ்னிலையில் அக்கரை கொள்வோர் –  பட்டியல் மிக மிகப் பெரியது !

ஞானிகளின் பாதையிலே:

ஞானிகளின் பாதையை அறிவுப்பாதை அல்லது அருட்பாதை என்றும் அவர்கள் பயணத்தை அருட்பயணம் என்றெல்லாம் அழைக்கிறார்கள். பொருள்பாதையிலே வாழ்கையைத் தொடங்கி,  நல்ல, தீய வழிகளில் மாறி மாறி நடந்து, பல பிறவிகள் எடுத்து நல்ல வழியிலே கடந்து,  இறுதியாக நாம் எல்லொருமே ஞானிகளின் பாதையை அடைவதாக, நாம் அறிகிறோம்.

ஞானிகளைப்பற்றி நாம் ஓரளவு தெரிந்து கொண்டது:

  1. ஞானிகள் எல்லோருமே, ஆன்மிகப் பாதையில் பயணம் செய்யும் மக்கள். இவர்களில் பலர், இந்தப் பாதையில் வரும் முன்னால், சிலர் மதங்கள்  காட்டிய வழிகளில் தங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கியிருக்கலாம்.
  2. ஞானிகள் எல்லோருமே, தனிப் பயிற்சிகளாலும், ஒரு குருவின் உதவிகளால் மட்டுமே உயரலாம் என்பதில்லை.
  3. இவர்கள் ஒவ்வொருவரும், ஆன்மீக உலகில் நுழைய ஒரு காரணம் இருந்ததாக நாம் படித்திருப்போம். உன்னிப்பாகக் கவனித்தால், அது உண்மையாக இருக்க நியாயம் இல்லை.
  4. ஞானிகள் ஒவ்வொருவரும், விதவிதமான கல்வி, குடும்பம் மற்றும் சமூகப் பின்னணிலிருந்து வந்தவர்கள். சித்தர்களைப் பற்றிய புத்தகம் ஒன்று, இந்த கருத்தை நிரூபிக்கும் வகையில் பல பிரபலங்களைக் குறிப்பிட்டு, இவர்கள் எந்த சாதியில் பிறந்தவர்கள் என்பதைக்கூடப் பட்டியலிட்டுத் தந்துள்ளார்கள்.
  5. வாழ்க்கையில் மிகவும் உயர்வாகக் கருதப்படுவது ஆன்மீகப் பாதை. அதில் பயணம் செய்பவர்களுக்கு மதங்கள் ஒரு ஏணியைப்போல.

அவர்கள் மதத்தின் துணையோடு ஆன்மிக வாழ்கையை தொடங்கினாலும், ஒரு கட்டத்தில், அவர்கள், மதம் என்ற சிறிய வட்டத்திலிருந்து வெளியேறி ஆன்மிகம் என்ற மாபெரும் வட்டத்தை  (மாவட்டம்)அடைகிறார்கள்.

ஆன்மீகம் என்ற (மா) வட்டத்தை  அடைந்தபின், மதம் என்ற ஏணி அவர்களுக்கு அவசியம்  இல்லை.

  1. இவர்களில் சிலருக்கு சாதாரண மக்களுக்கு இல்லாத (அமானுஷ்ய) சக்திகள் இருப்பதைக் கண்டு நேரடியாக அறிந்தவர்கள் சிலர் எழுதி வைத்ததால் நாம் படித்துத் தெரிந்து கொண்டோம்.

மக்களுக்கு தங்கள்  வாழ்க்கைப் பயணம் இனிதாக அமைய பொருள்  பாதையை செப்பனிட்டு தந்தார்கள் புனிதர்கள். அவர்களின் வாழ்க்கையைப் படிக்கும் போது அவர்கள்  மக்களைத் தன் அமைத்த பாதையில் நடத்திச் செல்ல பல அதிசயங்கள்  நிகழ்த்தியது  தெரியவரும்.

உதாரணமாக, தீராத நோய்களைக்  குணப்படுத்துவது, குருடருக்குப் பார்வை தருவது, வரவிருக்கும் நிகழ்ச்சிகளை முன்கூட்டியே அறிவது (அறிவிப்பது), இறந்தவரை உயிருடன் எழச் செய்வது,

பதினெட்டு சித்தர்கள் என்று அறியப்பட்டவர்கள்  தமிழ்நாட்டில் பிறந்து யோக சாதனைகளில் ஈடுபட்டாலும்  உலகத்தின்  பல பகுதிகளுக்குச் செல்வதும்   அங்குள்ள பல சித்தர்களுடன் தொடர்பில்    உள்ளதையும்     திரு பா.கமலக்கண்ணன்   எழுதிய சதுரகிரியில் கோரக்க சித்தர்கள் என்ற புத்தகத்தில் காணலாம்.

* சாகாவரம் பெற்று – அதிக வருடங்கள் உயிருடன் இருக்க.

*  தேக சித்தி – நரை திரை மாறும் யானை பலம் உண்டாகும்.

*  இறந்தவரை உயிர்ப்பிக்கும் சஞ்சீவி

* பிறர் கண்ணிற்கு தெரியாமல் மறைவது

*  விரும்பிய இடத்தை வினாடிகளில் சேர்வது .

இவர்கள்  சில மூலிகைகளை  உபயோகித்து தயாரித்த தைலம்  மை ஆகியவற்றால் நம்ப இயலாத பல நலன்களைப் பெற்றார்கள்

இப்போது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பட்டியலைப் பார்ப்போம்:

ஆன்மிகப்பாதையை அடைவது சுலபம்தான்.

 நம்மைப் போல ஒரு சாதாரண மனிதர் ஞானிகளாக மாறுவதற்கு எதையும் புதியதாகப் பற்றிக் கொள்வதில்லை. மாறாக, தாங்கள்  பற்றிய பொருள், பிடித்த பிடி, ஊறிய நம்பிக்கைகள்,  உடன் பிறப்புகள், சொந்த பந்தங்கள் என்று அனைத்தையும்,மனதிலிந்து   விட்டு  விடவே கற்கிறார்கள்.

ஞானிகளைப்பற்றிய சில உண்மைகள்

* ஞானிகளை, ஒருபோதும், மாயை தாக்குவதில்லை.

* உண்மையான சாமியார் அல்லது, ஞானி நம்மைப் போன்ற சாதாரண மக்களிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை.  எதிர்பார்த்தால், சந்தேகமில்லாமல், அவர்கள் போலிகளே !

* ஞானிகளின் வாழ்க்கை, ஒரு தொலை தூரப் பயணம்.

* ஞானிகளுக்கு, மனிதர்களுக்கு (மாயையின் பிடியில் சிக்கியதால்) ஏற்பட்ட  காயங்களை,   அகற்றுவதில்  சக்தியும் ஆர்வமும் உண்டு.

* விஞ்ஞானிகளுக்கும் மெய்ஞானிகளுக்கும் மிகப் பெரிய ஒற்றுமை உண்டு.  இருவருமே தங்கள் வாழ்க்கையின்  பெரும் பகுதியை புலன்களில் சிக்காத அறிவைத் தேடுவதிலும், பெற்ற அறிவில் தேர்ச்சி பெறுவதிலும் செலவிட்டவர்கள்.

மனித வாழ்கைக்கு அவசியமான மருத்துவம், அறிவியல், வான சாத்திரம், கணிதம்  என்று மனிதனின் அறிவாற்றலை கடந்த பல துறைகளில் ஆராய்ச்சியும் செய்துவந்து அதன் முடிவை மக்களுக்கு கவிதையாகவும், பாட்டாகவும், கட்டுரைகளாகவும் தந்திருக்கிறார்கள்.

* ஞானிகளும், மிக உயர்ந்த அறிவை அடைந்த, விஞ்ஞானிகளே.

*  இந்த  மெய்ஞானிகளில் பலர்,  பௌதிக அறிவில், அறிவியல் ஆற்றலில் நமது விஞ்ஞானிகளை பல ஆயிரம்   ஆண்டுகள்   அளவில்  முந்தியிருக்கிறார்கள்.

* மெய்ஞானிகளிடம் என்ன கிடைக்கும்?:

அறிவைத் தவிர வேறு எதுவும், உதாரணமாக செல்வம், பதவி அதிகாரம் பொருள் உலக வெற்றி ஆகியவற்றை, அடைய இவர்கள் உதவியைத் தேடுவது பலன் தராது.

* ஞானிகளாக மாற உலகம் முழுவதும் பின்பற்றுவது, நான்கு பாதைகளில் ஒன்று அல்லது அதன் கிளைகள். இவைகள் மாத்திரமே அருள்பாதைகள் இல்லை. இவை இல்லாமல் எல்லா உயிர்களிடத்திலும் (ஜீவ காருண்யம்) அன்பு செலுத்தும் தன்மை கூட, ஒரு மிக உன்னதமான பாதைதான்.

சிறிய ஆன்மிகப் பயணங்கள்

நாம் எல்லோருமே, நம்மையும் அறியாமல் அவ்வப்போது சிறிய ஆன்மிகப் பயணங்கள் செய்கிறோம்.

இனிய இசையிலோ, அல்லது இறைவனின் (தியான நிலை) நினைவிலோ,  மலரின் மணத்திலோ,  இயற்கைக் காட்சிகளிலோ மனதைப் அவ்வப்போது செலுத்துகிறோம். அது மட்டுமல்லை  சலசலக்கும் ஆற்று நீர் ஓட்டத்தைக் கவனிக்கும் போது, கடலலைகளைக் கவனிக்கும்போது தன்னை சற்று நேரம் மறந்த நிலையை  அடைகிறோம் இல்லையா. அவற்றை சிறிய சிறிய ஆன்மிகப்  பயணங்களை நாம் மேற்கொள்வதாகக் கொள்ளலாம்.

அந்த சிறிய நேரம், நமது மனமானது  புலன்களால் சலனம் கொள்ளாமல், அலை பாயாமல், சிறிதேனும் சிதறாமல் இருக்கும் ஒரு நிலை. அதுவே அதிக நேரம் நீடித்தால், நாமும் ஞானியாகலாம்.

ஏதோ ஒரு  கட்டத்தில்  அருட்ப்பாதையில்  பயணம்    தொடங்கியாலும்,  அதாவது, ஆன்மிகத்தில்  நாட்டம் வந்தாலும்,  முழு   ஞானியாக    மலர அல்லது வளர  பல பிறவிகள் தேவைப்படுவதாக ஞானிகள் சொல்ல நாம் நம்புகிறோம்.

License

Icon for the Public Domain license

This work (ஓட்டங்கள் - பிரமனுடன் கை குலுக்க்லாம் by nat123; நடராஜன் நாகரெத்தினம்; and N.Natarajan) is free of known copyright restrictions.

Share This Book