"

அத்தியாயம் 7

அடுத்து வரும் பக்கங்களில் விவாதிக்கப்படும் விஷயங்களுக்கு ஆதாரம் கீழே கண்ட  பட்டியலில் காணலாம்.

  1. இந்த பிரபஞ்சத்தில் உயிர் இல்லாதது எதுவுமே இல்லை!
  2. நமது கண்ணில் சிக்கும் உயிர்கள், கண்களுக்குக் சிக்காத  உயிர்வகைகளை விட மிகச் சிறிய எண்ணிக்கையாலானது,
  3. எல்லா உயிர்களும் ஓடுகின்றன.
  4. முக்கியமாக, உயிர்கள், பலபரிமாணங்களில் ஓடுகின்றன
  5. பல லட்சம் சிறிய உயிர்கள் சேர்ந்து ஒரு பேருயிராகிறது.
  6. பேருயிரின் நலனுக்காக சிறிய உயிர்கள் தொடர்ந்து ஓட வேண்டும்.
  7. சில உயிர்கள் ஓடுவதில்லை – அவைகளை நாம் பெரிதும் மதிக்கிறோம். அவர்களை ஞானிகளாக அறிகிறோம்.

நம்புவது கடினமாக இருக்கலாம். அடுத்துவரும் பக்கங்கள்  நம்புவதற்கான ஆதாரங்களை அள்ளித்தரும்.

உடலின் ஐந்து பாகங்கள்

உயிர் – உடலும்         இணைந்த ஒரு   கூட்டணியை,     உயிர்   என்றே    சொல்லுவோம்.   ஞானிகள்,  உயிர்   உடல்களை,  ஒன்றின்  உள் ஒன்றாக, ஐந்து  அடுக்குகளால்  (பகுதிகள்) உருவானதாக சொல்கிறார்கள். (பஞ்ச  கோஷா). இந்த ஐந்திலும் ஓட்டங்களைக் காணலாம்.

  1. அன்ன மய கோஷா -நமது கண்களால் உணரக்கூடிய பாகம்.

கடைசி அல்லது வெளி உறை. உணவினால் தோன்றி, உணவினால் வாழ்ந்து, உயிர்பிரிந்த பின் மண்ணோடு கலந்து உணவுக்கு உரமாக மாறும் இதை உணவு  உறை என்று அழைப்பது  சரிதானே.

இந்த உறை ஐந்து, ஐந்து  அடிப்படைப் பொருள்களால்  உருவானதாக அறிகிறோம். மண்,  நீர், காற்று, நெருப்பு வெற்றிடம்.

  1. பிராணமய கோஷா – பிராண சக்தியால் உருவானது,

புலன்களால் உணர இயலாதது. இது அடுத்த உள் உறை.

  1. மனோன்மய கோஷா – மனம் அல்லது உணர்வுகள் எண்ணங்களைக் கொண்டது. இரண்டாம் உள்  உறை.
  2. விஞ்ஞானமய கோஷா – கற்பனா சக்தி, நினைவுகளை உள்ளுணர்வுகள் இங்கேதான் தங்கும். இது மூன்றாவது உள் உறை.
  3. ஆனந்த மய கோஷா. ஆத்மாவை சுற்றிய, கடைசி உள் உறை.

ஆத்மாவை அல்லது உயிரைச் சுற்றி  இந்த ஐந்து உறைகள் ஒன்றன் பின் ஒன்றாக அமைந்துள்ளதாக ஞானிகள் சொல்கிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு யோகா பற்றிய புத்தகங்களில் படிக்கலாம். இண்டநெட்டில் கொட்டிக் கிடக்கிறது. இந்த ஐந்து பாகங்களிலும் வெவ்வேறுவிதமான  – முள்ளே புக்கும் மூச்சுக்காற்று, வெளியேரும் காற்று,  திரவங்கள், உணவு,  ரத்த ஓட்டம், என்று பலவித ஓட்டங்கள் விடாமல் தொடர்வதை, நாம்  உணரலாம்.

பல சிறிய உயிர்கள் ஒரு பேருயிராகிறது

விஞ்ஞானிகளும் மெய்ஞானிகளும் ஒப்புக்கொள்ளும் ஒரு உண்மை, எல்லா உடல்களும் பல லட்சம்  உயிர்களாலானது. சாதாரண மக்களால் இதை ஒப்புக்கொள்வது சுலபமில்லை.

உங்கள்  வீட்டிவே எத்தனை உயிர் இருக்கும்? மனிதரை மட்டுமே  நாம் அறிவோம். அரிசியில், கத்தரிக்காயில், கொதிக்க வைக்காத தண்ணீரில், சுத்தம் செய்யாத அறைகளில் உள்ள உயிர்களை நாம்  கணக்கில்  எடுத்துக் கொள்வதில்லை. இதெல்லாம் கணக்கில் வந்தால் சில ஆயிரமாவது தேறும் இல்லையா?

அதாவது, நமது உடலின்  உள்ளே, குறைந்தது சில லட்சம் உயிர்கள் இருப்பதை நாம் எப்போதுமே  உணர்வதில்லை. இவற்றில் பல நமது புலன்களுக்கு அப்பாற்பட்டது. உடற் கூறு பற்றி அறிந்த மருத்துவர்கள், பல துறைகளைச் சார்ந்த விஞ்ஞானிகள்   சொல்வார்கள் “நமது உடல் திடப்பொருள்கள், திரவங்கள் மற்றும் வாயுக்கள் ஆகியவற்றால் ஆனது.  அதாவது, ரத்தம், எலும்பு, சதை, நகம், தசை குடல் ஆகியவை”.

நம்  உடலின் பாகமாகிய இந்த ஒவ்வொன்றும் பலலட்சம் உயிர்களின் கூட்டமாக சமுதாயமாக  நாம் நினைத்துப் பார்க்கலாம்

உயிர்கள் என்றால் என்ன?

உயிர்கள் ஒவ்வொன்றும் பிறப்பு – வளர்வது – தன் இனத்தைப் பெருக்குவது – தேய்வது – இறப்பது  என்ற  ஒரு வட்டத்தில் வருகின்றன.

 ஓவ்வோரு வித உயிருடல்களுக்கும் உடல் பரிமாணங்களும் வாழும்காலம் வேறுபடுவதைக் கவனிக்கவேண்டும்.

நமது  உடலின் உள்ளே இந்த தனி உயிர்கள் வளர வளர, மொத்தமாக, அதன் இனம் (எலும்பு, தோல், தசை என்று) ஒரு பொது நியதியின் அடிப்படையில், எல்லமே ஒரு சீராக வளர்கிறது.

(அளவுக்கு அதிகமாக வளரும்போது, அதை கான்சர் என்கிறோம்).

இதை மனதில் கொண்டு, ஞானிகள் தெரிவித்ததை ஆராய்ந்தால் நமக்கு, அண்டங்களை பற்றி, நம்மை படைத்த பிரமனைப் பற்றி, இதுவரை வெளிப்படாத அல்லது புலப்படாத ஒரு சில கோணங்கள் தெரியவரும்.

தெரிந்ததைக் கொண்டு தெரியாததை ஊகிப்போம். விஞ்ஞான ஆராய்ச்சியின் ஒரு பொதுவான அணுகு முறையில் ஒன்று தான் இந்த வகை.  நாம் இப்போது செய்யப்போவது அதைத்தான்.

பல சிறிய உயிர்கள் சேர்ந்து ஒரு பேருயிராகிறதோ?

நமது உடலில் ஓரு உயிர் இருப்பதையும், அது நிரந்தரமாகப் பிரிந்தால் மரணம் என்று அறிகிறோம்.

சிறிய பெரிய – உயிர் உடல்கள்

நம்மை விட சிறிய உருவமும், குறைந்த வாழ்நாளும் கொண்ட உயிர்கள் கோடானு கோடி இருப்பதை, இன்று, பல விஞ்ஞான கருவிகள் உதவியுடன் ஒரளவு அறியலாம்.

கண்ணால் மட்டுமல்ல, இன்றளவிலுள்ள மின்   உபகரணங்களையும் இயந்திரங்களைக் கொண்டும் காண முடியாத வைரஸ்கள் என்ற நுண் உயிர்கள் இருப்பதாக மருத்துவர்கள் சொல்லி, நாம்  மருந்து சாப்பிட்டு வருகிறோம். ஆனால் – டாக்டரோ நோயாளியோ – யாருமே ஒரு வைரசைக் கூடப் பார்த்ததில்லை.

நம்மை விட சிறிய நுண்–உயிர்கள் எத்தனை சிறியதாக இருக்கலாம்?

நாம் ஒரு முறை மூச்சுக்காற்றை இழுத்து, அதை நுரையீரலில் அடக்கி, பிறகு மெதுவாக வெளியிட்டு நுரையீரலைக் காலி செய்வது மூச்சை வெளிவிடுவது ஒரு மூச்சுச் சுற்று. இந்த சுற்றிற்கு, நமக்கு பல வினாடிகள் எடுக்குமா?

நாம் ஒரு முறை சுவாசிக்கும்  இந்த சிறிய நேரத்தில் பல கோடி   நுண் உயிர்கள் பிறந்து வளர்ந்து   இனப் பெருக்கம் செய்து,      முதுமை அடைந்து, இறப்பது என்று பல ஆயிரம், சில லட்சம், அல்லது கோடி தடவை நடக்கும். அப்படியானால், அவைகள் உருவத்தில் எத்தனை சிறியதாக இருக்க வேண்டும்?

இதை விட சிறிய உயிர்களும் இருக்கலாம். அதேபோல நாம் உணரமுடியாத ஆனால் நம்மிலும் பல கோடி மடங்கு பெரிய உயிர்களும் இருக்கலாம்.

இந்த இரண்டும் நமக்கு புலப்படாத ஓரு முக்கிய காரணாம் நமது உணரும் கருவிகளின் அறியும் தன்மைக்கு உள்ள எல்லைகள்.

எதற்காக இந்த எல்லைகள்?

எல்லாம் ஒரு காரணமாகத்தான். வாசகர்கள் தங்கள் மனதின் கண்ணைத் திறந்து பார்க்க வேண்டிய ஒரு நேரம் வந்துவிட்டது.

புலன்களால் அறியக்கூடியதும், புலன்களால் அறிய முடியாததுமான எல்லா உயிர்களும் ஒன்றாக இணைந்து  ஒட்டுமொத்தமாக செயல்பட வேண்டிய ஒரு கட்டாயம்.

கொசு ஈ போன்ற சிறிய உயிர்களுக்கு யானை மற்றும் மனிதர்கள் இருப்பது அதன் கண்களுக்குத் தெரிந்தால், நாம் அவை  இருக்கும் இடத்தை அடையுமா?

அப்படி அடையாவிட்டால், இணைந்து செயல்படுவது எப்படி?

அண்டத்திலும் (க்ணடிதிஞுணூண்ஞு)  பிண்டத்திலும் (கடதூண்டிஞிச்டூ ஞணிஞீதூ) எல்லாமே, ஒருவகையில்  நில்லாமல் ஓடுகின்றன.

உயிர்களுக்கும் அதைச் சுமக்கும் உடல்களுக்கும் உள்ள உண்மையான உறவை உணர்வதற்காக பல உதாரணங்களை, பலவிதமாக ஞானிகள் சொன்னார்கள்.

பயணிக்கும் ரயிலுக்கும்  உள்ள உறவு தான். ஒரு பயணம் முடிந்தபின்  (அடுத்த பயணம் தொடங்கும் வரை) ரயில் அவசியமில்லை. உண்மைதானே?

புதியதாகச் சொல்லவேண்டுமானால், அழகான வண்ண வண்ண அட்டை பெட்டிகளில் வைத்து. ஐஸ்கிரீமில் ஆரம்பித்து   டி வி, பிரிட்ஞ் என்று எல்லாமே விற்கிறார்கள். உள்ளே உள்ள ஐஸ்கிரீமோ அல்லது டி.வி தான் உண்மை. ஆத்மாவுக்குச் சமம். தொழிற்சாலையில் அணிவிக்கப்பட்ட அட்டைப்பெட்டிகள் ஷோரூம் வழியாக ஒரு தனி மனிதர் வீட்டை அடைந்ததும், முதலில் கழற்றி எறியப்படுகிறது இல்லையா? மனித உடலும், அந்த அட்டைப் பெட்டியைப் போலத்தான்.

License

Icon for the Public Domain license

This work (ஓட்டங்கள் - பிரமனுடன் கை குலுக்க்லாம் by nat123; நடராஜன் நாகரெத்தினம்; and N.Natarajan) is free of known copyright restrictions.

Share This Book