அத்தியாயம் 10
நம்மை நாலும் அறிந்தவர்களாவே அறிகிறோம். கேள்விப் படாத ஒன்றை யார் சொன்னாலும் சுலபமாக நம்புவதில்லை. எல்லாவற்றிகுமே தடையங்கள், சாட்சிகள் இருக்கிறதா என்று கேட்போம். அதுவும் நல்லது தான்.
ஞானிகள் – சித்தர்கள் – சொல்கிறார்கள்
நாம் குறிப்பிடும் சித்தர்கள், நம் நாட்டில் பிறந்தவர்கள். இவர்கள் வாழ்க்கை சுவாரசியமானது. இவர்கள் செயல்கள் அதிசயமானவை.
தமிழில் பலர் அழகான கவிதைகள் எழுதியுள்ளார்கள். இருக்கும் இடத்திலிருந்தே, உலகின் பல பகுதிகளிலுள்ள ஞானிகளுடன் தொடர்பு கொண்டவர்கள்.
(எனக்கு படிக்கக் கிடைத்த சில புத்தகங்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலை, கடைசி பக்கத்தில் பார்க்கலாம்).
சித்தர்கள், உலகெங்கும் தோன்றிய மற்ற ஞானிகளைப் போல. அறிவில், ஆற்றலில் நம்மை விட (கணக்கிட முடியாத அளவு) மிகவும் உயர்ந்தவர்கள்.
பல கோடி ஞானிகள், கற்று உணர்ந்த பிறகு, காணாமல் போய் விட்டார்கள். வெகு சிலர் தங்கள் பயணத்தை, கட்டுரைகளாக, பாடல்களாக, கவிதைகளாக நம் உபயோகத்திற்கு தந்துள்ளார்கள்.
அறிவதில் தடைகள்
நம்மைப் போல சாதாரண மனிதர்களுக்கு அறிவதில் எல்லைகள் உண்டு. அது மட்டுமில்லை. நம்மில் பெரும்பாலானோர், குறுகிய எண்ணங்கள் கொண்டவர்கள். நமது சிந்தனைகள் புலன்களால் உணர்வதை மாத்திரமே சுற்றிவரும். இப்படிப்பட்ட குறுகிய எண்ணங்கள், அறிவுப் பயணத்தில், பெரும் தடைகள்.
அடுத்ததாக, புலன்களால் உணர முடியாதவைகளை – ஆன்மாவோ, அணு விஞ்ஞானமோ – அறிந்து கொள்ள விருப்பமோ அல்லது ஆவலோ மக்களுக்கு, மிக குறைவு.
அப்படி ஆவல் உள்ளவர்களுக்கும் அதை அறிந்து கொள்ள தேவையான அடிப்படை அறிவோ, மிக மிக மிகக் குறைவு.
புதிய அறிவை புரிந்து கொள்ள, மொழி தெரிந்தால் மாத்திரம் போதாது. மெய் ஞானமோ, விஞ்ஞானமோ, சொல்பவர்கள் அறிந்ததில் ஒரு சிறிய பாகமாவது நாம் அறிந்திருப்பது அவசியம்.
இன்றய விஞ்ஞான அறிவு வளர்ச்சியின் காரணமாக, சித்தர்கள், ஞானிகள் சொல்வதை ஓரளவு ஊகிக்கத் தேவையான அந்த சிறிய அறிவை நாம் எல்லோரும் அடைந்திருக்கிறோம். அதைக் கொண்டு, நாம் அவர்கள் சொல்வதிலிருந்து, நாம் பிரம்மாவை புரிந்து கொள்ள ஒரளவு நம்பிக்கையுடன் முயற்சி செய்யலாம்.
பாம்பாட்டி சித்தர் என்ன சொல்கிறார்?
பாம்பாடி சித்தரின் பாடல் மிக எளிமையாக இருப்பது என்னவோ உண்மை. ஆனால் அவர் பாடலில் சொல்லிய விஷயமும் நாம் புரிந்து கொள்வதும் வெவ்வேறு என்கிறார் இந்த பாடல்களை மொழி பெயர்த்து நமக்கு விளக்கிய ஸ்வாமி ஆத்மானந்தா. முதலில் ஒரு கவிதை / பாடலை கவனிப்போம்.
அகண்ட பிண்டம் தந்த எங்கள் ஆதிதேவனை
அகலாமலே நினைத்தே அன்புடன் பணிந்து
எண்டிசையும் புகழ்ந்திட ஏத்தி ஏத்தியே
ஏக மனமாக நாடி ஆடு பாம்பே!
அண்டம் என்பது அகண்டம் ஆனது. அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்தில் உள்ளது
அப்படிப்பட்ட உடலைத் தந்த ஆதிதேவனை, எட்டு திசைகளிலும் போற்றிப் புகழும்படியாக அன்புகொண்டு பணிந்து, ஒரே மனமாக நாடி, பாம்பே நீ ஆடு. மனதை கட்டிப்போடு அகலாமலே நினைத்தே: என்பது நாம் நமது சிந்தனையை சிதறவிடாமல் ஒரே எண்ணத்துடன் (ணிணஞு ட்டிணஞீஞுஞீணஞுண்ண்) இருக்கும் நிலையைக் குறிக்கும்.
மனதை குரங்கிற்கு ஒப்பிடுவார்கள். ஒரே இடத்தில் நில்லாமல் அங்கும் -இங்கும் எங்கும் குதித்து கும்மாளம் போடும் குரங்கைப் போன்றது நமது மனது. ஆன்மிக பயிற்சிகளில் முதல் கட்டம், நில்லாமல் அலைபாயும் நமது பொல்லாத மனதை, ஒருநிலைப் படுத்துவது.
மூச்சுப் பயிற்சி, தியானப்பயிற்சி, அல்லது வேறு பல ஆன்மிகப் பயிற்சிகள் எல்லாமே, மனிதனை இந்த நிலைககு தயார் செயகிறது
இந்த மனப்பக்குவம் சாதாரணமாக நம்மை வந்து அடையக்கூடியது இல்லை. முறையான பயிற்சியும் விடா முயற்சியும் தேவை. அதே சமயம், எல்லோருக்கும் ஒரே விதப் பயிற்சி எளிதில் பயன் தராது. எனவே கணக்கில்லாத பயிற்சிகள் தோற்றுவிக்கப்பட்டு அவை புழக்கத்தில் இருப்பதைக் காணலாம்.
பல்வேறு பயிற்சிகளில் ஒன்று, மனதை ஒரு வார்த்தையில் நிற்க வைப்பது. ஒரே வார்த்தையை. திருமபத் திரும்ப சொல்லி, மனதில் இருத்த வெகுநேரம் மு யற்சி செய்வதை – ஜபம் என்கிறோம்.
உணர்வுகள் மனதை அடைவதைத் தவிர்த்து, மனதை ஒரு நிலைப்படுத்தும் மற்றொரு பயிற்சி அதை தவம் என்கிறோம்
குண்டலினி யோகா: இந்த பாடல்களில் வரும் பாம்பு, குண்டலினியை விழித்தெழ வைக்கும் என்று விளக்குகிறார். நமது முதுகுத் தண்டின் கீழே உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி எழுந்தாடினால், சித்தர்களின் நிலையை நாம் அடையலாம்.
இங்கே கவனிக்க வேண்டியது,
அண்டத்திலுள்ளதுதான் பிண்டத்தில் உள்ளது.
மேலே கண்ட, பாம்பாட்டி சித்தரின் பாடலில் இந்த வரி நேரடியாகவோ மறைமுகமாகவோ காணமுடியாது, உரையாசிரியர், வேதங்கள் இவ்வாறு விவரித்திருப்பதாகக் கூறுகிறார்.
அண்டமென்றால் என்ன?
மேலே கண்ட வரியில் நமது ஆராய்ச்சியின் கரு உள்ளது.
இதை நமது மனம் தன் மனக்கண்களின் முன்னால் காண முடிந்தவர்கள் அதிக வேகமாக பிரமனை உணரமுடியும். இந்தக் கருத்தை வலியுருத்த, எளிதாக மனதிலே ஏற்ற, பின்னால் வரும் அத்யாயம் முயற்சிக்கும்.
இப்படித்தான் இருக்கவேண்டும்! ஒரு ஊகம்.
அகில அண்டமும் சேர்ந்து ஒரே ஒரு உயிர்தான். அதுதான் மதங்கள் சொன்ன பேருயிர்.
இந்த பேருயிர் நமது உடலுக்கு வெளியே, எங்கோ இருப்பதாக நாம் கற்பனை செய்து கொள்கிறோம். நாம், பிரம்மாவின் உடலில் ஒரு பகுதியாக கற்பனை செய்து பார்த்தால், பல ஞானிகளின் வார்த்தைகள் புதிய பொருள் கிடைக்கும்.
எல்லோருக்கும் ஒரு சூக்கும உடல்:
உடல் உயிர் இரண்மே தனித் தனிப் பொருள்கள். போற்றிப் பஃறெடை என்ற சைவசித்தாந்த சாத்திர நூலில் கீழேவரும் செய்தி இருக்கிறது:
தனு கரணமும் புவனமும் தந்து, அவற்றால் மனம் முதலால் வந்த விகாரத்தால் – வினை இரண்டும் காட்டி, அதனால் பிறப்பு ஆக்கிக் கைக் கொண்டும் மீட்டு அறிவு காட்டும் வினை போற்றி.
விளக்கம்
தனு கரணம் – சூக்கும உடலில் (நுண்ணுடல்) அதாவது, உயிர் – உடலில் அமைந்துள்ள மனம், புத்தி, அகங்காரம் எனும் மூன்று அந்தகரணங்களை குறிக்கும். நமது விஞ்ஞானம், இன்னமும் தலையிலுள்ள தலைச்சோறு எனப்படும் மூளையில் இருப்பதாக கருதுகிறது.
சிவன் – கடவுள் – அல்லது ஒரு சக்தி, ஒரு அழியாத உயிருடலைப் பிடித்து, உடலை உருவாக்கி, அதனுடன் உயிரை இணைத்து, நல்ல மற்றும் கெட்ட செயல்களைச் செய்ய வைக்கிறது ! நல்ல செயல் சரி. தீய செயல்களையும் செய்விக்கும் இறைவன் ஒரு சாடிஸ்டா ?
நிச்சயமாக இல்லை. இறைவனுக்கு இருவினையும் சாதகமாக இருப்பதால் (ஓட்டதிற்கு உதவுதால்) தீவினையை கண்டுகொள்வதில்லை. இதை அடுத்துவரும் புத்தகத்தில் காண்போம்.