அத்தியாயம் 11
பிரம்மாவை எதற்காக அறியவேண்டும்?
அவசியம் இல்லைதான்.
அறிவுப் பாதையின் பயணம் செய்யும் போது அதன் எல்லையில், இருக்கும் பிரம்மாவை, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், சந்திப்பது தவறாது. ஏனென்றால், அறிவின் எல்லையில் பிரம்மா இருக்கிறார்! தேடுவோர் அனைவருக்கும், தேடல் பயணம் முடிவு பெறும் இடம், பிரமனாகத்தான் இருக்கும். எனவே, இந்த பிரமனைப் பற்றிய அறிவு, அதாவது பிரம்ம ஞானம், ஞானிகளின் தேடலின் கடைசிக் கட்டமாகவே, இருக்க வேண்டும்.
ஆன்மிகப்பயணம், உண்மையில் ஒரு அறிவுப் பயணம்
கடவுள்ளைத் தேடி, உண்மையைத் தேடி, நாம் அருள்பயணம் என்று நினைத்து தொடங்கிய ஆன்மிகப் பயணம் உண்மையிலேயே ஒரு அறிவுப் பயணம். எந்த வகை அறிவிலும் பல கட்டங்கள் இருப்பது நம் எல்லோருக்குமே தெரியும்.
பள்ளியில் கல்லூரிகளில் படிக்காவிட்டால், படித்த மற்றவரை விட ஏழ்மையில் நாம் தள்ளப்படுவோம். அதனால், படிப்பு அல்லது கல்வி அறிவு, அவசியம் என்று உணர்கிறோம். அதிகம் படித்தால் அதிக வளமான வாழ்க்கை கிடைக்கும், இல்லையா? ஐ ஐ டி, ஐ ஐ எம் போன்ற கல்விக்கூடங்கள் மற்ற கல்விக் கூடங்களை விட அதிக தரம் உள்ளது இல்லையா? அதன் காரணமாகவே, அதில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது.
இந்த வகைக் கல்வி, மக்களுக்கு அன்றாட வாழ்க்கையின் அவசியத்தை பூர்த்தி செய்ய ஒரு தொழில் அறிவை அளிக்கிறது. முக்கியமாக இயற்கையை, அதில் பொதிந்துள்ள எண்ணற்ற செல்வங்களை – உலோகத்தை, மரங்களை, நிலத்தை, காற்றை, நெருப்பை – மக்களுக்கு பயன்படும் வகையில் செயல்பட வைக்க இந்த பள்ளிக் கல்விகள் பயன் தரும்.
பள்ளிக் கல்வியில் பல அடுக்குகள் அல்லது நிலைகள் உள்ளதல்லவா?
ஆரம்பக் கல்வி, நடுநிலைபள்ளி, பள்ளி இறுதி, பட்டப்படிப்பு, இளம்கலை, முதுகலை, ஆராய்ச்சி.
இந்தக் கல்வியில் அதிக நிலையை அடைந்தவருக்கு மற்றவரைவிட அதிக வருமானம் அதிக வசதிகள் அதிக மரியாதை அதிக அங்கீகாரம் எல்லாம் கிடைப்பது நமக்கு தெரியும். உயர்கல்விக்கு கடும் போட்டி நிலவுவது இந்த ஓரு காரணத்தினால் தானே?
விரிவடையும் அறிவு
பூமியில், தனது கிராமத்தைத் தவிர எதுவும் இருப்பதாக உணராத மக்கள் ஏராளம் இருந்தார்கள். டெலிவிஷன் கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு நாம் நன்றி சொல்வோம். இன்று, பட்டி தொட்டிகளிலிருந்து அசையாத மக்கள் குறைவு.
பூமியும்நவகிரகங்களும், சூரியனும்மாத்திரமேஉள்ளது. மிகச்சிலரே,. இதைத்தவிரவேறுகிரகங்கள்எதுவும்இல்லைஎன்றுநினைப்பவர்கள்
நமது சூரியன் பல கோடி சூரியன்களில், ஒன்று. நமது நவக்
கிரகங்கள் அதைப்போல கோடானுகோடி கிரகங்களுக்குள், ஒரு சில.
இதை வானவெளி ஆராய்ச்சியாளர்கள் சொல்லி, வெகு சிலரே அறிவார்கள். இந்த கோடானு கோடி கிரகங்களை ஒட்டு மொத்தமாக அண்டம் என்று சொல்லுவோம், இல்லையா?
ஆன்மிக அறிவு
அறிவுப்பாதையில் பயணம் செய்கையில், பௌதிகம், கணிதம், வான விஞ்ஞானம் என்று நமது அறிவு அதிகரிக்கும் போது, ஒரு கட்டத்தில் நாம் ஆன்மிக அறிவை அடைவதை உணரலாம்.
புலன்களுக்குள் சிக்காத எல்லாமே, ஆன்மிக அறிவு அல்லது ஆன்மா சம்பந்தப்பட்ட அறிவைச் சேர்ந்தது என்று சொல்லலாம். ஏனென்றால் ஆன்மா புலன்களுக்கு அப்பாற்பட்டது.
எல்லோருக்கும் சுலபமாக புரிந்து கொள்ள உதவும் வகையில் இப்படியும் சொல்லலாம்:
(1) உயிர்கள் ஓடுகின்றன. ஓட்டங்களால் அதில் காயங்கள் தோன்றுகின்றன. உயிர்கள் என்று அறியப்படுவது – பரு உடலோடு இணைந்த உயிருடல் (உயிர் உடலை பல மதங்களில் பலவேறு பெயர்களில் அறிபபடுகிறது. ஆத்மா, ரூ, சோல், என்பதாக).
(2) உயிர்-உடலின் காயங்களுக்கு மருந்தாக ஆன்மிகப் பயணங்கள் அவசியமாகிறது.
(3) இந்த உயிர் உடலின் தேவைகளை பூர்த்தி செய்ய பலகட்ட கல்வி இருப்பதாக கொண்டால், அதில் உயர்ந்த கல்வி அல்லது இறுதிக் கட்டக் கல்வி, நம்மை படைத்த இறைவனைப் பற்றிய கல்வி, அல்லது இறைவனை அறிவது.
இந்த அறிவு கிடைத்துவிட்டால் மனிதனின் பருஉடலும் உயிர் உடலும் தேவையை விட அதிகமான சக்திகளை பெறும். அந்த இறுதிக் கட்டக் கல்வியின் முடிவில் நாம், பிரமனை அறிந்து கொள்வது தவறாது.
பிரமனை அறிந்து கொண்டால், மேலும் சிறிது முயற்சியில், பிரமனைக் கண்டு, அவருடன் கைகுலுக்குவது சுலபம்தானே ?
இதை அப்படியே சிலர் நம்பலாம். இதில் எதையுமே நம்பும்படியாக இல்லை என்று வேறு சிலர் சொல்லலாம். ஆனால், இந்த பக்கங்களில் படிக்கும் எதையுமே நம்பாதவர்களுக்கும், ஏதாவது பயன் உண்டா? உண்டு !
சாதாரண மனிதர்களின், தற்போதய கவனம் மற்றும் சிந்தனைகள் எல்லாமே நமது தினசரி வாழ்க்கையின் திசை தெரியாத பயணத்தில் ஆழ்ந்து, அற்ப நிகழ்வுகள், துயரம், தோல்வி, போட்டி, சண்டை பூசல்கள், போட்டிகள், பொறாமை, ஆற்றாமை, ஆகியவற்றால் நிரம்பி வழிகிறது.
இந்த புத்தகம் வாசகரை சிறிய ஆன்மிகப் பயணங்கள் செய்ய வைக்கும் . அது என்ன சிறிய ஆன்மிகப் பயணம் ? அதைப் பின்வரும் பக்கங்களில் பார்க்கலாம்.
சுருக்கமாக, நாம் அழுக்கான சிந்தனைகளிலிருந்து விடுபட்டு, நமது மனம் அழகான, சுவாரசியமான, தோல்விகளில்லாத, உயர்ந்த சிந்தனைகளுக்குத் தயாராகும்.