"

அத்தியாயம் 13

பிரம்மாவை தெரிந்து கொள்ள ஆன்மிகம் உதவும். ஆன்மிகத்தைப் புரிந்து கொள்ள, மனது, மாயை இரண்டையும் சுத்தமாக அறிவது அவசியம். முதலில் மனதை அறிவோம்.

(1) மனதைப் பற்றி கவிஞர்கள் விஞ்ஞானிகள், காதலர்கள், மருத்துவர்கள் என்று படித்தவர்கள், படிக்காதவர் என்றில்லாமல், எல்லோரும் பேசுவார்கள்.

மந்திரி மனது வைத்தால், மெடிக்கல் காலேஜில் சீட்டு கிடைக்கும் என்கிறார்கள்.

தன் மனதை  மற்றவரிடம் பறிகொடுத்து விட்டதாக இளம் காதலர்கள் சொவார்கள்.

தன் மகனின் மனதை மாற்றிவிட்ட விட்டதாக பல அம்மாக்களுக்கு மருமகள் மீது கோபம்.

படிக்காமல் ஊர் சுற்றும் மகன், யார் பேச்சையும் கேட்காமால் வீணாமல் போவதைப் பார்த்து, பல தந்தைகள் மனம் நொந்து போனார்கள்.

கணவனின் மனதில் இடம் பிடித்துவிட்டால், அவன் தாய் தந்தையரை  விரட்டியடிப்பது சுலபம் என்று மகளுக்கு உபதேசம் செய்தாள் ஒரு தாய்.  எனவே, மனினுக்கு எல்லாமே மனதுதான். அதை ஆராயும்போது முக்கியமாக அறியவேண்டிது  அந்த மனம் இருக்கும் இடம், இயங்கும் விதம். ஏனென்றால், மனதை அறியாமல் ஆன்மிகத்தை அலச முடியாது.

கண், மூக்கு, நாக்கு, செவி, தோல் (தோலின் தொடு உணர்ச்சி) என்ற ஐம்பொரிகளால் அறிவதில் சில மனத்தை அடைகிறது. மனதின் நுழைவாயிலில் இருப்பது புத்தி.

இதை கம்ப்யூட்டரைப் போல ஒரு இயந்திரமாக கற்பனை செய்து  கொள்ளலாம். மனதில் வரும் செய்திகளை புத்தி அசைபோடுகிறது. அதிலிருந்த தேவையான அறிவை மாத்திரம் பிரித்து மனதில் சேர்க்கிறது. தேவை இல்லாதது கழட்டி விடப்பட்டு காற்றில் கரைந்து காணாமல்ப் போகிறது.

தேவையான  செய்திகள் மனதின் முதல் கட்டத்தில் அடைய புத்தி அதை அலசி ஆராய்ந்து, எது நன்மை எது தீமை என்பதை பிரித்து மனதின் சேமிப்பில் வைக்கிறது.

மனது என்றால் என்ன?

நமது எண்ணங்களை சேமிக்க பல அடுக்குகளை கொண்ட ஒரு சேமிப்பு.

இந்த சேமிப்புகளோடு இணைந்தது  இயங்கும் கம்ப்யூட்டரைப் போல ஒரு சக்தி அதன் பெயர் புத்தி.    நமது மனது, இந்த இரண்டும் இணைந்த ஒரு ஏற்பாடு என்று கொள்ளலாம்.

அதில் உயிர்கள் பிறக்கும்போது ஒரு குறைந்த அளவு அறிவைக் கொண்ட சேமிப்போடு வருகின்றன. வாழும் இடம், சுற்றம், அன்றாட அனுபவத்தால் கிடைக்கும் அறிவும் மனதில் சேர்ந்து அதன்  உதவியால், உயிர்-உடல்கள்  வளர்ந்து நலிந்து மடிகின்றன.

மனிதனின்  சுகமோ அல்லது துக்கமோ, லாபமோ அல்லது நஷ்டமோ  அதை உணர்வது மனதினால் மட்டுமே! நாம் செயல்   படுவது, மனதில் சேமித்து வைத்த அறிவைப் பற்றியிருக்கும்.

  1. மனிதன் செயல்படும் போது, விடாமல் புலன்கள் மூலம், செய்திகள் மனதின் தாற்காலிக சேமிப்புக்கு வந்தபடி இருக்கின்றன வந்த செய்திகளை, இந்த தாற்காலிக சேமிப்பிற்கு வருவதில் குறைவந்தால், மனிதனை கவனம் குறைவு என்போம்.
  2. சிலரது புத்தியானது, நன்மை தீமைகளை சரிவர பிரிக்கப் படாமல் அது தாறுமாறாக (மனதின்) சேமிப்பில் இடம் பிடிக்க ஒரு காரணமாகிறது, அதைக் கொண்டு செயல்படுபவரை பித்து பிடித்தவர் அல்லது பைத்தியக்காரன் என்று அறிகிறோம். புத்தி கெட்டவன், அறிவு இல்லாதவன் என்றெல்லாம் சொல்கிறோம்.
  3. மனதின் சேமிப்பின் அளவு குறைந்தால், புதிய செய்திகள் உள்ளே வரும்போது, பழைய செய்திகள் அழிந்து விடுகின்றன. அந்த மனிதரை, மறதி உள்ளவராக அறிகிறோம்.

உள்-வெளி மனங்கள்

நமக்கு இரண்டு மனது உள்ளதாக நாம் உணரலாம். நாம் சிந்தித்துச் செயல்படுவதற்கு வெளி மனது என்று ஒன்றும், அனிச்சையாக செயல்பட உள் மனது என்று ஒன்றும்.

நாம் அறிவை அடையும் வழிகள்

சிந்தித்துச் செயல்படுவது என்பது, ஒரு சிலருக்கு, அதுவும் சில சமயங்கள் மாத்திரமே மனிதர்களுக்கு இயல்பாகும். ஆனால், சிந்திப்பது ஞானப்பாதையில் உள்ள எல்லா தேடுவோருக்கும், இயல்பாக வரும்.

கல்லாமல், சிந்திக்காமல் செயல்பட, மற்றவரை பின்பற்ற வேண்டும். பிறரின் அறிவில் அடைக்கலம் தேட வேண்டும்.

நம்மில் பேரதிகம் மக்கள்,  கற்பதோ, சிந்திப்பதையோ மிக சிறிதளவே  கொண்டவர்கள்.

பெரும்பாலும் நாம், அறிவின் துணையில்லாமல்,  அனிச்சையாகச் செயல்படுகிறோம்.

வெளி மனதில் நாம் வைத்திருப்பது – நாம் கற்று அறிந்தது சமீபத்தில் கேட்டு, படித்து – நல்லது கெட்டது, பாவபுண்ணியம், கர்மா, நாம் அழியக் கூடிய ஒன்று போன்ற பல உண்மைகள்.

நமது புத்தி சொல்லி  நாம்  அறிவை சேமித்தால் அதுவும் நம் உள் மனதில் சேரும்.

அப்படி சேர்க்காவிட்டால், அறியாத வயதில் பிறர் சொல்லி     நாம் சேகரித்த அறிவு.  இனம் தெரியாத பல பயங்கள், சரிபார்க்க முடியாத பல வகை நம்பிக்கைகள் ஆகியவை மாத்திரமே நமது உள்மனதில் தங்கியிருக்கும்.

மாயை, தன் விஷமங்களைச் செய்வதற்கு தேர்ந்தெடுத்த இடம் இந்த உள் மனதாகத்தான் இருக்க வேண்டும்!

பலர் ஒரே வீட்டில் வளர்ந்தாலும், ஒரே கல்வி பெற்றாலும் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக செயல்படுவது இந்த மனதின் இயக்கம் வேறுபடும் காரணத்தினால் என்று அறியலாம்.

மனநோய்கள் என்பது, சிலர் அறிவுக்கு பொருந்தாத பல    நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் அவர்கள் உள்மனதின் தங்கியுள்ள தவறான எண்ணங்கள் நம்பிக்கைகள் பயம் ஆகியவற்றில் ஆதாரமாக காணலாம்.

அப்படிப்பட்டவரை. ஆழ்ந்த உறக்கநிலைக்கு (ஞீஞுஞுணீ ண்டூஞுஞுணீ) அழைத்துச் சென்று அதை மாற்ற அறிவுறை தந்து (ண்தஞ்ஞ்ஞுண்tடிணிண) ஒரளவு குணம் காணலாம்.

பொதுவாக சகிக்க முடியாத அளவு செயல்பாடுகளுடன் காணப்படும் பல மனநோயாளிகள் சில சமயங்களில் சாதாரணமாக நடந்து கொள்வதை நாம் உணரலாம், இவர்கள் உள்-வெளி மனதுக்கும் மாறிமாறி தாவுவதாக உணரலாம்.

நல்ல மன நிலையில் உள்ளவரும், செயல்பாடுகளுக்கு இடையே இப்படி இரு மனங்களிடையே மாறி மாறி தாவுவது வழக்கமே!

கம்ப்யூட்டரும் மனதும்

இந்த கால கட்டத்தில் கம்ப்யூட்டரைப் பற்றிய அறிவு மக்களுக்கு அதிகம். அதே சமயம் மனிதன் செயல்பாடு பல விதங்களில் கம்ப்யூட்டரை ஒத்திருக்கிறது.

கம்ப்யூட்டரில் காணும்  (மெமரி, ஹார்டு டிஸ்க்  போன்ற) சில சேமிப்பு உபகரணங்களுடன் மனித மனத்தை ஒப்பிட்டுப் பார்க்கலாமே! வெளி மனம் மெமரியைப் போல விரைவில் அழியும் தன்மை கொண்டது.  குறைவான அளவே சேமிக்க்கமுடியும்.

இதற்கு மாறாக நமது உள் மனம்  ஹார்ட் டிஸ்க்போல. விரைவில் அழியாது. அதிகமான செய்திகளை சேகரிக்க முடியும்.

இந்த உள் மனம் பல விதங்களில் சிறப்பானது.

நமது செயல்பாடுகளில் இரு வகை இருப்பதை நாம் அறிவோம். இச்சை செயல், மற்றது அனிச்சைசெயல்கள்.

அனிச்சை செயல்களுக்கு சிந்தனை அவசியம் இல்லை. கொசு நம்மை கடித்தால், நாம் என்ன செய்யலாம் என்று சிந்தனை எதுவும் செய்வதில்லை. கொசு கடித்த செய்தி உள் மனதுக்கு எட்டியதும், கை தானாகவே கொசுவை அடிக்கிறது.

மனித இயல்புகள் (சுபாவங்கள்)

இச்சை செயல்களுக்கு மனிதன் விழித்த நிலையில் இருப்பது அவசியம். அனிச்சையாக செய்யும் செயல்களை நாம் மனித இயல்புகளாக அறிவோம். பெற்ற கல்வி, படித்த புத்தகங்கள், கேட்ட செய்திகள் சமூக பொருளாதார சூழ்நிலை, வாழ்வில் வெற்றி தோல்விகள், அனுபவங்கள், அதனால் கிடைத்த மன வளர்ச்சி, அறிவு பெறுவதில் ஆர்வம் ஆகிய பல விஷயங்கள் இந்த உள் மனத்தின்  இருப்புகளேஒரு மனிதருக்கும் மற்றவருக்கும் உள்ள வேற்றுமையை  நிர்ணயம் செய்யும்.

அவரவர் உள்-மனதின் எஞ்சியுள்ள அறிவே  ஒருவர் நல்லவராக இருப்பதும் தீயவராக இருப்பதற்கும் காரணங்கள்.

வெளி மனது, புத்தியின் உதவியுடன் சிந்தித்து செயல்படும். சந்தர்ப்பத்தை முன்னிட்டு பொய்கள் பேசலாம். நல்லவரில்லாதவர் மிக நல்லவராக நடிக்கலாம்.

ஆனால் உள் மனது சிந்திக்காமல் செயல்படும். அது மட்டுமல்ல, நமக்கு நிகழவிருக்கும் ஆபத்துகளை தடுக்கக்கூடிய விஷயம், நன்மை தரும் விஷயம், மிகவும் லாபம் தரும் விஷயம், என்பது போன்ற பல விஷயங்கள் (புத்தியின் உதவியுடன்) செயல்பாட்டிற்கு தயார் நிலையில் இருப்பது இங்கே தான்.

இந்த சேமிப்பில் புதிய ஐட்டங்கள் வந்த வண்ணம் இருக்க, அதிகம் பயன்படுத்தாத அயிட்டாங்கள் இந்த சேமிப்பின் மிக அடியில் சேர்ந்து விடுகின்றன. அதை ஆழ்ந்த மனம் எனலாம். இது பழைய பொருள்களை சேர்த்து வைக்கும் கிடங்கைப் போன்றது. இதில் சேர்ந்ததை திரும்பப் பெறுவது சுலபம் இல்லை. ஆனாலும், சில சமயங்களில் நமது சில செயல்பாடுகளுக்கு இதுவே காரணமாக இருக்கிறது.

புத்தியானது, தன்னை கொண்டிருக்கும் மனிதருக்கு எது நல்லது எது தவறு என்று சொல்லித்தருகிறது.

புத்தியின் செயல் திறன், மனிதனின் வெற்றி தோல்வி, வாழும் விதம், தரம் ஆகியவற்றைத் தீர்மானிக்கிறது. அறிவு புத்தி வளரக் காரணமாகிறது.

நாம் அறிவதைத் தாற்காலிகமாக சேமிப்பது. சேமித்ததை தமக்குத் தேவையானது, தேவை இல்லாதது என்று தரம் பிரிப்பது. தேவைப்படும் போது, பிரித்த சேமிப்பிலிருந்து சரியான விடையை தருவது என்ற வேலையையும் செய்வது, இந்த புத்தி.

மனிதன் உறங்கி விட்டால், (புத்தி தாற்காலிகமாக தன் செயல் திறனை இழக்கும்) சிந்தனை உறங்கிடும். ஆனால் மனம் உறங்கிவிட்டாலோ, மனிதன் தன்  செயல் திறனை மொத்தமாக    இழக்கிறான். சுருக்கமாக சொன்னால், மனிதனின் இயக்கமே மனதின் இயக்கம்தான். உதாரணாமாக, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று மனதைக் கேட்கிறோம். இந்த பிரச்சனைக்கு என்ன பரிகாரம் என்று கேட்கிறோம்.  நம் மனதுக்கு தெரியாவிட்டால் யாரை கேட்டு தெளிவு பெறலாம் என்று மனதைத்தான் கேட்கிறோம்.

புதியதாக ஒருவரைக் காணும்போது, அவர் நம்மை நோக்கி சிரித்தால், இவரை எப்போதாவது சந்தித்திருக்கிறோமா என்று மனதை விசாரிக்கிறோம்.

நாம் தவறு செய்ததை உணர்த்துவது மனது. வருந்துவது மனது, விரும்புவதும், வெறுப்பதும் மனது. மகிழ்வதும் மனது, வலியை உணர்த்துவது மூளையின் பகுதியாகிய நரம்பு மண்டலம்.

ஆனால் உணர்வதோ, இந்த மனது.

மருத்துவத்தில், அனெஸ்தீஷியா முறையில், சில ரசாயனப் பொருளை செலுத்தினால் உணர்வுகள்  உறங்வைக்கிறார்கள்.

அதனால் நமது எந்த உணர்வுகளும் மனதை (புத்தியை) அடைவதில்லை. ஹிப்னாட்டிசம் என்ற முறையில் உணர்வுகளை தடை செய்யாமல், புத்தியை அந்த உணர்வுகள்  அடைந்தாலும், புத்தி அதை உணராமல் செய்கிறார்கள், அறுவை சிகிச்சையில் தோன்றும் வலி எந்த பாதிப்பும் ஏற்படுத்தாதபடி செய்கிறார்கள்.

பதஞ்சலி யோக சூத்ரா தரும் விளக்கம்

பதஞ்சலி யோக சூத்திரம் என்ற ஒரு நூல்.   பகவான் கிருஷ்ணனால் எழுதப்பட்டது (சொல்லப்பட்டது) என்று நம்பப்படுகிறது. இதில்  மனிதனைப் பற்றி ஒரு விளக்கம் தரப்பட்டுள்ளது (விஞ்ஞானியின் நோக்கில், இது ஒரு மாடல்),நேரடியாக ஆராய்வது கடினம். மாடைலை ஆராய்ந்தால், மனிதரை அறியலாம். அதை, இப்போது நம் உதவிக்கு அழைப்போம்.

மனித உடலை  ஒரு ரதத்திற்கு ஒப்பிடப்படுகிறது.  அதை  இழுப்பது ஐந்து குதிரைகள். அதாவது ஐம்பொரிகள் எனப்படும் கண், காது, மூக்கு,  நாக்கு மற்றும் தொடு உணர்வு. இந்த   ஐந்தும் மனிதனை தன் இஷ்டப்படி அங்கும்  இங்கும் கொண்டு செல்கிறது.

உதாரணமாக, இந்த ஓட்டலில் நல்ல ருசியான மசால் தோசை கிடைக்கும் என்று நமது நாக்கு, ஒரு உடுப்பி ஹோட்டலுக்கு நம் உடலை இழுத்துசெல்கிறது.

நாம் எல்லா வேலையையும் விட்டுவிட்டு, ஓரு சினிமா தியேட்டர் முன் நிற்பது எதனால்? இந்த சினிமாவில் குளு குளு காதல் காட்சிகள் காட்டுவதாக காது கேட்க, கண்கள் காணத் துடிக்க, இரண்டுமாக சேர்ந்து செயல்படுவதால் கால்கள் நம்மை தியேட்டருக்கு கொண்டு செல்ல. கையானது பணத்தை எடுத்துத் தர, பணம், நேரம் எல்லாமே பாழ்.

இப்படி நாம் எங்கே போனாலும் என்ன செய்தாலும் அதற்கு இந்த குதிரைகளுக்கு ஒப்பிடப்படும் ஐம்புலன்களே முதல் காரணம்.

இந்த குதிரைகளுக்குக் கடிவாளம் இட்டு அதன் கயிறைப் பிடித்திருப்பது,  புத்தி என்கிற வண்டியோட்டி. குதிரைகளை தங்கள் இஷ்டத்திற்கு அங்கும் இங்கும்     வண்டியை  இழுத்து செல்வதைக் கட்டுப்படுத்த முடியும்.

இந்த புத்தி என்பது இந்த ஐம்பொரிகள் மூலம் அடைந்த அனுபவங்கள் தொடங்கி, செவி வழி வந்த மற்றவரின் அனுபவங்கள், ஆன்றோர் அறிந்து நமக்கு நூல்கள் மூலம் அறிவித்தது என்ற எல்லா அறிவுகளின் சேமிப்பும்.

இந்த சேமிப்பை, தேவைப்படும் சமயத்தில் இந்த அறிவைப் பயன்படுத்தும் ஒரு  இயந்திரம் இரண்டும் இணைந்ததாக நாம் உருவகம் செய்து கொள்ளலாம்.

நல்ல அறிவுகள் சேமிப்பை அடைந்தால் நல்ல புத்தி கிடைக்கும். மனம் புலன்களைக் கட்டுப்படுத்தும். மாறாக, நல்ல அறிவை அடையவில்லை என்றால், புலன்கள் மனதை ஆளும். பல ஆண்டுகள் கழிந்து நம்மை இழுக்கும் குதிரைகள் ஒவ்வொன்றாக செயல் இழக்கலாம்.

அல்லது தவறான புத்தி கொண்டு புலன்களுக்கு மனம் கட்டுப் பட்டு, ரதமாகிய உடலை கரடுமுறடான பாதைகளில் இழுத்துச் செல்ல, ரதம் (மனித உடல்) சேதமடையலாம்.

எப்படியோ, ஓரு நாள், இந்த ரத ஒட்டம், ஒட்டு மொத்தமாக நின்று போகும்.  ஒரு முக்கிய விஷயத்தை நாம் மறந்துவிட்டோம். ஆமாம் இந்த ரதத்தில் பயணம் செய்வது யார்?

திருவாளர் ஆத்மா அல்லது உயிர்உடல்.அவர் எங்கே போவதற்காக இந்த  ரதத்தில் ஏறினார்? எங்குமே போவதற்கு இல்லை.

சும்மா, உள்ளே உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கிறார். அவ்வளவுதான். இந்த ரதம் போன போக்கில் செய்யும் அழிவுகளுக்கும்,  மற்ற எல்லாக் குற்றங்களுக்கும் ஆத்மா,  பொருப்பாவாரா?

இல்லவே இல்லை என்கிறது இந்த புத்தகம்.

இந்த ரதம் உடைந்து போனால் … ???

நம்ம ஊரில் நாம் பயணம் செய்யும் கவர்மெண்ட் பஸ் பிரேக் டௌன் ஆனால்,  பாசஞ்சரான நாம் என்ன செய்வோம்.

அதைத்தான்  திருவாளர் ஆத்மாவும் செய்வார், உடைந்து உட்கார்ந்த ரதத்திலிருந்து உடனே இறங்கி, புதிய ரதம் ஏதேனும் பாசஞ்சர் இல்லாமல் இருக்கும் ஒன்றை தேடுவார்.

கல்லாதவனும் – சிந்திக்காதவனும் வாழ்வில் அவதிபடும் காரணம் – கட்டுப்படுத்தப்படாத புலன்கள் நடத்தும் அராஜகம் தான், அதில், அறிவும்-சிந்தனையும் கொண்டவர் சிலர் மாத்திரம் புலன்களை கட்டுப்பாடு செய்வதில் வெற்றி பெறுவார்கள். அதனால் அந்த மனிதன் அடைவது, நல்ல வாழ்வு, அதே சமயம், ஞானப் பாதை, அருட்பாதை, சித்தராவது எல்லாமே, இந்த குதிரைகளுக்கு ஒரு லகான் போட்டு, கட்டுப்படுத்தி, அவ்வப் போது ரதத்தை நிறுத்தி, இறங்கி ஏறி, தன் இஷ்டப்படி ரதத்தை ஒட்ட புத்தி என்ற தேரோட்டியை தயார் செய்து பயன் படுத்துவார். தேர் பத்திரமாகவும் சேதமில்லாமல் ஓடும்.

மனது எங்கே இருக்கிறது?

மனிதனின் தலையில் மூளை என்று இருப்பதாக அறிவோம். அதில் மனதின் சேமிப்பும் இயக்கமு ம் இருப்பதாக பல காலமாக நம்புகிறோம்.

உலகளவில் அறுவை சிகிச்சைகள் நடத்தும் போது சேகரித்த சில மருத்துவத் துறை செய்திகள் இதை தவறு எனறு நிரூபிக்கின்றன. இவைகளை ஆராய்ந்த பிறகு என் முடிவு என்ன?

மனிதனின் மனம், மனிதனின் அன்னம கோஷத்தில் – உடல் என்று அறியப்படும் இடத்தில் இல்லை.

உதாரணமாக, மருத்துவ அறுவை சிகிச்சைக்குப் பிறகு சில நோயாளிகள் தந்த விளக்கங்கள், நம்மை சிந்திக்க வைக்கும். இவர்கள் கண்களை மூடி, மயக்க நிலையில் இருந்தாலும், விழித்திருந்து  அறுவை சிகித்சையை நேரில் கண்டது (கேட்டது) போல, அறுவை நிபுணர்களின் பேச்சுகளை (தவறுகள் செய்ததாக பேசிக்கொண்டது உள்பட) விவரமாக சொல்கிறார்கள்.

இந்த செய்தி, நமக்கு உணர்த்துவது எதை? மனித உடல்  உருப்புகள் மாத்திரமே உணரும் தன்மை உடையவை அல்ல. மனித உடல் அல்லாத பாகம் ஒன்று   உணரும் தன்மையையும் உணர்ந்ததை     சேமிக்கும் தன்மையையும் பெற்றிருப்பதைத்தான்.

நீண்ட காலமாக, மனிதனின் மனம் இருதயத்தில் இருப்பதாக நினைத்தார்கள். இதனால், இதயம் காதல் சின்னமாக அமைந்தது. மனிதர்கள், தம்மால் கட்டுப்படுத்த முடியாத சில நிலைகளை – உதாரணமாக, நோய்கள், விபத்துகள், சில ரசாயன பொருள்கள் உடலில் சேரும்போது உண்டாகும் உடல்-மன நிலைகளை, ஆன்மிகவாதிகள், யோக சாதனைகள், மன கட்டுப்பாடு ஆகியவற்றால் அடைகிறார்கள்.

இந்த விதத்தில் இவர்கள் அமானுஷ்ய சக்திகளாக அடைந்தவராக நாம் உணர்கிறோம். இவர்கள் உணர்ந்து தெரிவித்ததை நாம் ஆராய்ந்தால் நாம் அறியாத சில உண்மைகளை தெரிந்து கொள்ள உதவும்.

உயிர் – பரிமாணங்கள் – நேரம்

இந்த விஷயம், கொஞ்சம் சிக்கலானது. ஆனால், மனதின் கண்ணால் பார்த்து பிறகு அதை மனதில் பதியவைத்துக் கொள்ளலாம். மு டியாவிட்டால், இந்த அத்யாயத்தைப் படிப்பதில் அதிக பயன் கிடைக்காது.

இந்த உயிர் அல்லது ஆத்மா என்ற விஷயம் – மின்சாரம், கம்ப்யுடர் சாப்ட்@வர், காற்று,  @பான்ற ஒரு சமாசாரம் இவைகள் இருப்பதை பார்க்க முடியாது. ஆனால் இருப்பதையோ இல்லாததை@யா உணரலாம்.

எல்லா உயிர் வகைகளையும் இயக்குவது இந்த உயிரே. பலவகை உயிரினங்களுக்கும் உருவத்தில் (பரு உடலில்) மிகுந்த  வித்யாசம் இருந்தாலும்,அதை இயக்கும் உயிர்களில் எந்த வேறுபாடும் இல்லை.

ஆனால் உயிர் புகுந்த உடலும், அந்த உடல் வாழும் இடமும் எப்படியோ அதைப் பொருத்து உயிர் தன்னை மனிதனாகவோ,   செடி, கொடி, மரமாகவோ, மிருகம்-பறவையாகவோ கற்பனை கொள்ள வைக்கிறது.

உதாரணமாக:                            

மிக்சியில் செலுத்திய மின்சாரம், மின்சார அடுப்பில் கொடுத்த மின்சாரம், டிவியில் செலுத்தும் மின்சாரம், ஏர்கண்டிஷணரில் செலுத்தும் மின்சாரம் ஒன்றேயானாலும் ஒவ்வொன்றிலும் செயல்பாடு வேறுபட்டு இருப்பதில்லையா?

அடுத்ததாக  நேரத்தை ஆராயலாம்.

மாயையின் ஆட்சிக்கு உள்பட்டது நேரம்.

உயிருடல்கள் ஒவ்வொன்றின் (1) பரிமாணங்கள் (உயரம், அகலம், பளு) (2) நேரம் (வினாடி,மணி, வருடம்) , (3.) வாழ்நாள்.

 இந்த மூன்றிற்கும் ஒரு நெருங்கிய உறவு உண்டு. இதை உதாரணத்தால் ஆராயலாமா?

மும்பாய், தில்லி @பான்ற நகரங்களில் பலகாலம் வாழ்ந்து விட்டு, ரிடையரான பிறகு ஒரு சிறிய கிராமத்தில் வசிக்க நேர்ந்த    சிலர்    சொல்வது இதுதான். கிராமத்தில்  நேரம் (காலம்) நகராமல் இருக்கும். பொழுது போகாது! கிராமத்தில் (நகரங்களைவிட) அதிக நேரம் அதிகமாக இருப்பதாக உணர்@வாம். ஏன்?

நாம் வாழும் இடத்தின் பரிமாணங்கள் மாறியதா@லே. நம்மைச்         சுற்றிலும் ஓட்டங்களின் குறைவால்!

நாம் சிறுவர்களாக இருந்த காலத்தில் வசித்த ஒரு ஊருக்கு ஒரு முறை சென்று வாருங்கள். சிறு வயதில், அதிக தொலைவு என்று நமது மனதில் இருக்கும் ஒரு இடம் மிக அருகில் இருப்பதையும், ஒரு பெரிய கட்டிடம், மிக சிறியதாக இருப்பதையும் இன்று உணரவாம். இது எதனால்?

உருவ மாற்றத்தோடு பரிமாணங்களும் மாறுவதால்தான்.

License

Icon for the Public Domain license

This work (ஓட்டங்கள் - பிரமனுடன் கை குலுக்க்லாம் by nat123; நடராஜன் நாகரெத்தினம்; and N.Natarajan) is free of known copyright restrictions.

Share This Book