"

அத்யாயம் 14

மெய்ஞானம் – விஞ்ஞானம் இந்த இரண்டிற்கும் ஆதாரம், அறிவு !

முன்னுறை:

நமக்கு அறிவு என்பது பற்றி ஒரு மாதிரியான ஐடியா உண்டு. ஆனால் முழுமையாகத் தெரியாது.

தேர்வுகளில், குறைந்த மார்க்கு வாங்கிய சிறுவர்களை பெற்றோர்கள் அறிவில்லாதர்கள் என்பார்கள். தவறுகள்  செய்து மாட்டிக் கொண்டாலும் அறிவில்லை என்போம்.

அலுவலகத்தில், நிறைய லஞ்சம் வாங்காத அலுவலரின் மனைவியும், தன் கணவனை அறிவில்லாதவனாகச் சொல்லுவாள். கல்விக்  கூடங்களில் தங்காதவர்களுக்கு அறிவு இருப்பதாக நம்மில் பலர் நம்புவதில்லை.

பட்டம் பெற்றவர்களை அறிவின் சிகரமாக உணருவோம்.    ஆனால், எது அறிவு, எது அறிவு இல்லை   என்பதை மாத்திரம்  சரியாகச்   சொல்ல பலருக்குத் தெரியாது.

மூன்று விதமான அறிவு.

அறிவு என்றால் என்ன? எது அறிவு? எது அறிவில்லை?

இதை தமிழ் நூல்கள் தரும் விளக்கம் போல தெளிவான ஒன்றை வேறு எந்த மொழியிலும், நான் படித்ததில்லை.

பொதுவாக அறிவை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

(அ)       அறிந்தது, (ஆ) அறிந்த கொள்ளமுடியும் ஆனால் அறியாதது. மூன்றாவதாக – (இ) அறிந்து கொள்ளவே   முடியாதது. (என்றாவது ஒரு கொசுவுக்கு, நமது நாட்டின் பிரதமர் யார் என்று தெரிந்து கொள்ள முடியுமா?)

இந்த ஞானிகளும், விஞ்ஞானிகளும் தேடிக் கொண்டிருப்பது இரண்டாம்,  மூன்றாம் வகை அறிவையே.

விஞ்ஞான வளர்ச்சி, விண்வெளி பயணங்கள் ஆகியவைகளால் நமது இரண்டாம் வகை அறிவு அதிகரித்து வருகிறது. மைக்ராஸ்கோப் டெலஸ்கோப் ஆகிய உபகரணங்கள் தன் பங்குக்கு நமது புலன்களின் அறியும் தன்மையை விரிவாக்கினாலும், நாம் அறிய முடிந்தது மிகக் குறைவே.

கம்ப்யூட்டர்களோ, மனிதனின் செயல் திறன் தனது சக்திக்கு நிகரில்லை என்று சவால் விடுகிறது.

82 லட்சம் உயிர்வகை இருப்பதாக கீழை நாட்டு ஞானிகள் சொல்கிறார்கள். அதில் நாம் அப்படி  ஒன்றும்      வி.ஐ.பி உயிர்கள் இல்லை.    நமதளவு  அறிவில்லாத உயிர்கள்  கோடிக்கணக்கில் உண்டென்றால், நம்மைவிட அறிவில் அதிகமான உயிர் வகைகளும் அத்தனை இருக்கவேண்டும் என்பதை சிலர் அறிந்திருக்க வாய்ப்புகள் உண்டு.

இந்த எண்ணிக்கை நாம் இருக்கும் இந்த பூமியில் மாத்திரமா? அல்லது அகில அண்டத்திலா?

நம்மால் உணரமுடிந்தது, அதிகமாகப்போனால் சில ஆயிரம் இருக்குமா?

இந்த அழகில், மனிதர்களாகிய நாம் மட்டும் தான் உலகத்திலுள்ள ஜீவராசிகளில் மிகவும் புத்திசாலி என்று எண்ணம் வேறு. அடுத்த பிரமோஷனில் கடவுள் ஆகிவிடுவோம் என்ற கற்பனை  வேறு. இந்த உலகத்தை கடவுள் மனிதனின் மகிழ்ச்சிக்காக  உருவாக்கினார் என்று கற்பனைக்கும். மனிதனுக்கு மட்டும் ஆறு அறிவாம், விலங்குகளுக்கு  ஐந்தே அறிவுதானாம்.

தாவரங்களுக்கு அறிவே இல்லை என நம்பும் மக்களுக்கு, வங்க விஞ்ஞானி ஜே சி போஸ் அவர்களின் ஆராய்ச்சி முடிவுகள் தெரிந்திருக்க நியாயம் இல்லை. மனிதனின் எண்ண அலைகளை பிடித்து அதை புரிந்து கொண்டு செயல்படும்  அறிவு தாவரங்களுக்கு இருப்பதுதான் அது.

ஒரு மனிதனுக்கு அடுத்துள்ள மனிதன் பேசுவதைக் கூட புரிந்து கொள்ள முடியாத சந்தர்ப்பங்களே அதிகம்.

மற்ற உயிர்களை விட மனித உயிர் மேலானது என்பது ஒரு தவறான எண்ணம் என்பது கற்றுணர்ந்த சிலருக்காவது தெரியும்.

இரண்டாம்மூன்றாம்வகைஅறிவுகள்

பல ஞானிகள், பல கால கட்டங்களில் தாம் அறிந்த, உணர்ந்த பல உண்மைகளை பாடல்களாகள்,  கவிதைகள், கட்டுரைகள்,   போன்ற எண்ணற்ற நூல்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள்.   வேதங்கள், உபநிஷதுக்கள் என்று தொடங்கி, எல்லா இந்திய மொழிகளிலும் எண்ணற்ற அறிவு தரும் செய்திகளும்,  இந்தியா முழுவதும் கொட்டிக்கிடக்கின்றன.

சிவனடியார்களின் எழுத்துக்களில், கடவுளைக் கழற்றிவிட்டால், விஞ்ஞானம் வெளியே வரும்.

சித்தர்கள் பாடல்களில் பொதுவிஞ்ஞானம் மட்டுமல்ல   மருத்துவமும் மின்னும்.

நம்மில் கிட்டதட்ட எல்லோருமே நமது எண்ணங்கள், சிந்தனைகள் எல்லாமே மனித உடலில் மூளையில் இருப்பதாக நினைத்து வருகிறோம்.

அறிவில் மிக குறைந்தவர்கள் ஏழைகளாகிறார்கள்

சில ஆயிரம் ஆண்டுகள்  முன்னால் வாழ்ந்த சீன ஞானிகளின்  கண்டுபிடிப்பு இதுதான்.

உலகம் முழுவதும், பெரும்பாலான மக்கள் ஏழைகள். ஏழைகள் அறிவைத் @தடுவதில்லை.  மிகச் சிலரே அறிவைத் தேடுகிறார்கள்.

அறிவைத் தேடியவர் சிந்திக்கப்பழகாவிட்டால் கற்றதெல்லாம் வீணே!

கல்லதவர் சிந்தித்தால், அவருக்கும் அவரைச் சார்ந்தவருக்கும் ஆபத்து.

இங்கே சிந்திப்பது என்பது சிறிது மாறுதலாக உபயோகிக்கப்படுகிறது. தான் கற்றவற்றைக் கொண்டு,  தனது நலனுக்கு பயன் படுத்துதல்.  தான் ஏமாற்றப்படாமல், தோல்விகளைத் தழுவாமல் இருக்க,  கற்றதை பயன் படுத்த வேண்டும்.

சுய சிந்தனை எதுவும் இல்லாமல், மற்றவர் அறிவில் நாம் சிந்தித்தால் (செயல்பட்டால்)நாம் ஏழ்மையை, தோல்விகளை,  இழப்புகளைத் தழுவுவது தவறாது.

இதில், இரண்டு உண்மைகள்  உண்டு.

முதல்  உண்மை. ஏழைகள் அறிவைத் தேடுவதில்லை. உணவைத் தேடவே நேரம் போதாத போது, அறிவைத் தேடுவது எப்போது? அப்படி அறிவு அவர்களை அடைந்தாலும் அதை சேமிப்பதில்லை. சேமித்ததையும் பயன் படுத்துவதில்லை.

இரண்டாவது உண்மை. அறிவில் குறைந்தவர்கள் (எத்தனை குறை@வா அவ்வளவு) ஏழைகளாக,  பின் தங்கியவர்களாக, வளர்வதை நாம் அறிவோம்.

மனிதர்களில், கால் நடைகள்

அறிவில் மிக மிகக் குறைந்தால், மனிதர்கள், (உருவங்களைத் தவிர, மற்ற எல்லா விதத்திலும்) கால் நடைகளுக்கு சமமாக வாழ்வார்கள். கால் நடைகள் கசாப்புக்காரரை பின்பற்றுவதைப் போல, தன் அறிவில் வாழாமல், எவரையேனும் (கண் மூடித்தனமாக) பின் பற்றி வாழ்வதை வழக்கமாக கொள்கிறார்கள். இவர்கள் என்றுமே அடிமைகளாக, தன் உழைப்பைக் குறைந்த விலைக்கு அளித்து ஏழ்மை நிலையில் வாழ்ந்து மடிகிறார்கள்.

அறிவைத் தேடும் மக்கள்.

அறிவதில் ஆர்வம் உள்ளவர்கள் எல்@லாருமே மற்றவர்களிடமிருந்து  வித்தியாசமானவர்கள். அடிமைத்தனத்தை வெறுப்பவர்கள், ஏமாறற்றங்களை தாங்கமாட்டார்கள்.

ஏழ்மையை இவர்கள் விரும்பி ஏற்றுகோள்வார்கள். அதன் மறு பெயர் எளிமை. அதனால் ஏழ்மை இவர்களை வாட்டுவதில்லை.

சிலர் வளமான வாழ்வை விரும்புவார்கள். தனக்கு கிடைத்த அதிகாரம் செல்வாக்கு ஆகியவற்றை எளியோருக்கு பயன்படச் செய்வார்கள்.

இவர்களை ஏழ்மையும் இயற்கையும் என்றுமே வாட்டுவதில்லை. இந்த சிலரே  கற்பது – கற்றதை சிந்திப்பது – சிந்தித்ததை சேமிப்பது என்ற மூன்று-பாகம் கொண்ட அறியும் முறையை பின்பற்றுகிறார்கள்.

இவர்களே தாங்கள் மட்டுமில்லாமல் தங்களை அண்டியவர்களும்,  பிள்ளைகளுக்கும் நல்ல கல்வி, மற்றும் அறிவைத் தருவதில் ஆர்வம் உள்ளவர்கள் தங்களை விட தமது சந்ததிகள் அதிக அறிவை அடைவதில் தீவிரமானவர்கள் அதில் அதிக அறிவை அடைந்தவரை ஞானிகள் என்போம். இவர்களை  ஏழ்மை துரத்துவதில்லை.

அருளைத் தேடுவோர்

இவர்கள் வளமையை ஒதுக்கிவிட்டு ஏழ்மையைத் துரத்திப்பிடிக்கிறார்கள் என்று சொல்லுவது பொருந்தும். கடவுள்  உண்மை என்று எதை எதை@யா தேடத் துவங்கி இரண்டாம், மூன்றாம் வகை

அறிவை அடையும்  மக்கள்.

அறிவின் குறைவு ஆண்டவனின் கட்டளையோ?

அண்டம்   இயங்க அறிவை அதிகம் அடையாத மக்கள் அதிகமாகவும், அறிவை வெவ்வேறு அளவுகளில் அடைந்த மக்கள் குறைவாகவும் தேவை.

இப்படிப்பட்ட தேவைகள் எப்படி நிறைவேறுகின்றன?

இந்த மாதிரியான    கேள்விகளுக்கு       எல்லையே இல்லை.    சுருக்கமாக மாயை என்று ஒரு பெயர் வைத்து, எல்லாப் பழியையும் அதன் மேல் சுமர்த்தலாம். மாயையை அடுத்ததாக அலசலாம்.

License

Icon for the Public Domain license

This work (ஓட்டங்கள் - பிரமனுடன் கை குலுக்க்லாம் by nat123; நடராஜன் நாகரெத்தினம்; and N.Natarajan) is free of known copyright restrictions.

Share This Book