அத்தியாயம் 20
ஞானிகளும் – விஞ்ஞானிகளும் முன்னேற்றம் அடைய அவசியாமான கட்டம், அறிந்ததை மறுப்பது அல்லது மறப்பது. அன்-லெணிங். (க்ணடூஞுச்ணூணடிணஞ்).
அடுத்ததாக, கற்பது, கற்றதை சிந்திப்பது. இது சீன தேசத்தில் 1000 வருடங்களுக்கு முன்னால், ஞானிகள் சொன்னது. நமது விஞ்ஞான வளர்ச்சியை நமக்கு சாதகமாக பயன் படுத்திக்கொள்ள முடிந்தால், 20 நாளில் சாமியாராவது எப்படி என்று ஒரு தொலைகல்வி மூலம் ஞானிகளை உருவாகலாம். அவ்வளவு சுலபம்.
ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் விஞ்ஞான வளர்ச்சிகள் சாதாரண மக்களை வந்து அடையவில்லை. ஆனால், இன்றோ, செல்போன், டெலிவிஷன், சாடிலைட், விண்வெளிப் பயணம் போன்ற கண்டுபிடிப்புகளின் விளைவாக இன்று மனிதனின் சிந்திக்கும் பரிமாணங்கள் பல மடங்கு அதிகரித்து இருக்கிறது.
இதனால் பலநூறு ஆண்டுகளாக மனிதன் யூகியத்தும் நம்ப இயலாத பல விஷயங்களை இன்றய மனிதன் கண்டும் உணர்ந்தும் அறியலாம். அதன் காரணமாக, பல நம்பமுடியாத விஷயங்களை இன்று யூகித்து அறிவதும் எளிதாகிவிட்டது.
இன்றுள்ள விஞ்ஞான அறிவு வேகமாக மெய்ஞானிகளின் அறிவை நெருங்கி வருகிறாது. ஒரு கால கட்டத்தில் ஞானிக்கும் விஞ்ஞானிக்கும் உள்ள அறிவின் வித்யாசம் குறைந்தே இருக்கும்.
அன்றும் இன்றும் மெய்ஞானிகளின் வளர்ச்சியில் தடையாக இருந்ததற்கும், இன்றும் அது தொடர்வதற்கும் காரணம் – அவித்யா, அல்லது தவறாக அறிந்ததைத் தலையில் சுமப்பதே!
இன்றய விஞ்ஞான வளர்ச்சி வியப்பூட்டும் ஒன்று. நியூட்டன் காலபௌதிகம், கண்ணால் காணக்கூடிய பொருள்களோடு நின்று விடுகிறது.
அந்த நிலையை கடந்த, ஐன்ஸ்டீன் பௌதிகம் கண்ணில் காணாத அறிவில் வந்து நிற்கிறது.
அதோடு முக்கியமாக மனிதனின் விஞ்ஞான அறிவில் உருவான, பல கண்டுபிடிப்புகளும், மனித வாழ்க்கை, உலகம் மற்றும் அண்டம் இயங்குவதின் பிரதிபலிப்பாக இருப்பதை காணலாம்.
இந்த அறிவு, மெய்ஞானிகள் பல வருடங்கள் தனியாகவும் கூட்டமாகவும் உழைத்து, உடைத்தெறியும் அறிவதில் உள்ள தடைகளை, இன்று, விஞ்ஞான உதவியுடன் அதிவிரைவிலே – சில நாட்களில் அல்லது சில நிமிடங்களில் கூட உடைத்து விட முடியும்.
நான் நேரில் கண்டு உரையாடிய ஒரு ஞானி, ஸ்மாமி ராமா, சமீப காலத்தைச் சேர்ந்தவர். அவரைப்பற்றி இன்டெர்னெட்டில் தேடிப் படியுங்கள்.
ஸ்வாமி ராமாவின் சொற்பொழிவுகளில், கட்டுரைகளில் மிகவும் சுவாரசியமான விஷயங்கள் கொட்டிகிடக்கின்றன.
ஸ்வாமி ராமாவின் (லிவிங் வித் ஹிமாலயன் மாஸ்டர்ஸ் என்ற) சுய சரிதையில் ஞானிகளின் விஞ்ஞான அறிவு மற்றும் சாதனைகளை அறிந்து கொள்ளலாம்.
அகோரி பாபா செய்த அற்புதம்
இன்று பௌதிக விஞ்ஞானத்தின் வளர்ச்சியில், சப்-அடாமிக் பார்டிகிள் பற்றிய அறிவில் மனித இனத்திற்கு பயன்படும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆனால், அகோரி பாபா என்ற ஞானி, மாணவராக இருந்த ஸ்வாமி ராமாவுக்கு, இறந்தவர் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாமிசத்தை ரஸகுல்லாவாக மாற்றித்தருகிறார். இதில் விஞ்ஞானம் என்ன இருக்கிறது? இன்று, உங்களைப்போல, என்னைப்போல, பலரால் நம்ப முடியாத உண்மை.
அங்கே, சிவன்-சக்தி என்ற தத்துவத்தில் விஞ்ஞானம் வெளியாகிறது. ஓரு கட்டத்தில், அணுவைத் துளைத்து அதன் சிறிய பாகத்தை அடையும்போது, ஒரு வித்தியாசமான அனுபவம். அந்த சிறிய பொருள், திடப்பொருளாக சில நேரமும், எனர்ஜி அல்லது சக்தியாக சில நேரமும் காட்சி தருகிறது. சிவனடியார்கள் சொன்னபடி, அர்த்த – நாரீசுவராக, சிவன் காட்சி தருவது இதைத்தானோ!
ஒரு பொருளைச் சக்தியாக மாற்றுவதும், அந்த சக்தியை வேறு ஒரு பொருளாக மாற்றும் வித்தையை, அல்லது விஞ்ஞானத்தை உலகில், மொத்தம் பதினொன்று ஞானிகள் அறிவார்கள் என்று நம்பப்படுகிறது.
இல்லாத ஒரு புத்தகம்
அப்போது, 1984 ம் வருடம், அதற்கு சுமார் 50 வருடங்களுக்கு முன்பு, லண்டனில், கடைசியாக பதிப்பான ஒரு புத்தகம் பல மாதங்கள் தேடியும் கிடைக்கவில்லை. லண்டன் நகரில் இயங்கிவரும் க்வீன் விக்டோரியா நூலகத்தில் ஒரு பிரதி இருந்ததாக நண்பர் மூலம் அறிந்தேன்.
சில மாதங்கள் கழித்து புத்தம் புதிய பிரதி ஒன்று (எந்த வருடம் பதிப்பிக்க்கப் பட்டது போன்ற விவரங்கள் எதுவும் இல்லாதது முன் பின் அறியாத ஓருவர் மூலம் எனக்கு கிடைத்தது. நான் படித்து முடித்தபின் மாயமாக (என் நண்பர் ஒருவர் கொண்டு செல்லும் போது) மறைந்தது. புத்தகத்தின் பெயர் – திபேத்தியன் புக் ஆப் டெட் .
மேலும் பல வருடங்கள் கழித்து ஒரு புதிய பதிப்பு வெளியானதாக அறிந்தேன். இதற்கு இடைப்பட்ட வருடங்களில் பதிப்பு எதுவும் இல்லை என்றும் உறுதியானது.
இதைத்தான் தவ வலிமை என்கிறார்களோ?
சுருக்கமாக. தவத்தின் தீவிரத்தை எப்படியெல்லாமோ விவரித்தார்கள், ஊசியின் மேல் நின்று செய்வது, ஒரு காலில் நின்று பலவருடங்களாக தவமிருப்பது, உணவும் உறக்கமும் இல்லாமல், விடாமல் மனதில் அல்லது சிந்தனையில் கொள்வதை தவம் என்கிறோம்.
தவத்திற்கு ஒரு தடை – மாயை. இது நம் தலையில் அழுக்கைச் சேர்ப்பித்து, இதை நம்பாதே என்று நமக்கு சொல்லும்.
இது மாத்திரம் போதுமா? இதனால் பலன் கிடைக்குமா எனற சந்தேகமே நம் மனதை ஆட்டிப் படைக்கும்.
விருப்பம் நல்லதாயிருக்க வேண்டும்
விரும்பியதை அடைவது எளிது என்பதை பல உதாரணங்களுடன் கதை கதையாக பெரியவர்கள் புரிய வைத்தார்கள். நாம் எதையுமே சரியாக புரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டோம்.
பல அசுரர்கள் (யார் இந்த அசுரர்கள்?) தனியாக அசுரர்கள் என்று யாரும் இல்லை. மாயையில் முழுகிய நாமே தான் இந்த அசுரர்கள் அசுர்- என்றால் சுரம் தப்பியவர்கள்.
புராணங்கள் இதிகாசங்களில் தேவர்கள் அசுரர்கள் என்று இருவித மக்களும் தவம் செய்வார்கள். அசுரர்கள், தவறான குறிக்கோளுடன் தவத்தில் நின்று வெற்றியும் பெற்றார்கள். தவத்தின் பலனாக பெற்ற சக்திகளால் நிகழ்ந்த விளைவுகள் என்ன? அதில் தானே அழிவார்கள் .
தவத்தில் வெற்றிபெற தவத்தில் நம்பிக்கை மற்றும் தீவிரம் மட்டுமே போதும். தவத்தின் பயனை பெற்று நலம் பெற தூய எண்ணங்கள் மிக அவசியம்.
முடிவாக தாம் ஆளமுடியாத சக்தியை, ஆவலுடன் ஏற்றது. ஆள முடியாத சக்திகளைத் தேடுவதும், அருளுலக வெற்றிகளைப் பொருளுலகத்தில் கொண்டு செல்வது எல்லாமே, மனம் பக்குவம் பெறாதவர்களின் தேடுதல்கள்.
இதை மாற்ற தவம் மேற்கொள்ளும் முன்பு மாயை கலைவது அவசியம். பொருளுலகத் தேவைகள் மாயையின் வேலை. எனவே தவத்தில் வெற்றியோடு பயனும் பெற மாயையின் திரை விலகியே இருப்பது அவசியம்.
இதை எப்படி அடைவது என்று உங்களுக்குள்ளே தேடுங்கள்.
இறைவனை உனக்கு உள்ளேயே தேடு !
பல அறிஞர்கள் சொல்வது இறைவன் வெளியே இல்லை. இறைவனை உனக்கு உள்ளேயே தேடு.
உள் எது? வெளி எது?
நம் உள்ளே தேடினால் என்ன கிடைக்கும். அப்படி உள்ளே இருப்பது தான் என்ன ? குடல் இருதயம் நுரையிரல் கல்லீரல் ஆகியவற்றிலா இறைவனை தேடுவது?
இதை புரிந்து கொள்வது மிகவும் சிம்பிள்.
நம் ஐந்து பொரிகளால் அறிக்கூடியது இந்த மனிதனின் உடலின் வெளியே தான். இல்லையா?
வெளியே தேடமுடிந்த உலகம் மிகச் சிறிய உலகம். அது நாம் அறியக்கூடியதே, நாம் அன்றாடம் காணும் நம்மை சுற்றியுள்ள உள்ள உலகம். ஆனால் அண்டத்தில் உள்ள எல்லாவற்றையும் நாம் அறிய இந்த ஐந்து கருவிகள் பயன் தறாது. ஏன்? அறியும் கருவிகளுக்குள்ள எல்லைகள்.
நமக்குச் செய்திகள் வருகின்றன !
நாமும் ஞானிகள்தான். ஞானிகள் தம்மில் தொடர்புகொள்ள டெலி போன், செல்போன் அவசியமில்லை என்பதை அறிவோம்.
எப்போதாவது, நமக்கு மிகவும் நெருங்கியவருடன், டெலிபதி மூலம் செய்தி வந்த அனனுபவம் பலருக்கு இருக்கலாம். அது தற்செயசெயலாக, தன் இச்சையாக இல்லாமல் நிகழும் ஒன்று. இதுவும் மாயையின் வேலைதான்.
நமக்கு இயற்கையாகவே பிறருடன் பரிமாறிக்கொள்ள மின்சார உபகரணங்கள் அவசியமில்லை என்பதை அவ்வப்போது மாயை காண்பிக்கிறது.
அதுவுமில்லாமல், நமக்கு எச்சரிக்கைகள் வருகின்றன. நாம் கொண்ட தவறான அறிவு, அந்த செய்திகளை நம்மிடம் சேரவிடாமல் செய்கிறது. சேர்ந்தாலும், நாம் அதை உணர்வதில்லை. வரும் செய்திகளை அலட்சிய, செய்கிறோம். எனக்கு இந்த வழியில் கிடைத்த அனுபங்கள் கணக்கிலங்காது. அவைளில் இரண்டு மிக சமீபத்தியது.
ஞானிகளுக்கு கிடைப்பது என்ன?
அறிவுப்பாதையில், பல தடைகளை தாண்டி வந்தவர்கள் ஞானிகள். இந்த தடைகளைக் கடக்க பெரும் விருப்பமும், ஆவலும் கடின உழைப்பும் தேவை. இவ்வளவு தடைகளைக் கடந்து வந்தவர்களுக்கு என்ன கிடைக்கும்?
மிக உயர்ந்த அறிவு. அதாவது பிரமனைப்பற்றிய அறிவு.
பொருளுலகக் கண்ணோட்டத்தில் இந்த வகை அறிவு, ஒரு பத்து காசுக் கூடப் பெறாது.
அது பலருக்கு தெரிந்திருக்கிறது. அதனாலோ என்னவோ, தானும் தன் சந்ததிகளும் இந்த ஆன்மிகப்பாதையில் வருவதை இவர்கள் விரும்புவதில்லை, இல்லையா?
அய்யா, அப்படியும் பார்க்கலாம். மாறாக, பிரம்மா துன்புறாதிருக்க மாயா செய்யும் வேலை.