அத்தியாயம் 8
எல்லாவித உயிர் இனங்களும் ஓடுகின்றன.
உயிர்கள் பல பரிமாணங்களில் ஓடுகின்றன.
உயிர்களின் தொழில், உடல்களை ஓட்டுவதுதான்.
ஓட்டங்கள் நின்றாலோ:
நமது பருஉடல், ஓட்டங்களால் ஆனது. உடலும் அதன் உள்ளேயும் விடாமல் ஓட்டங்கள் உண்டு. ஓட்டம் நின்றால், பருஉடலிலிருந்து உயிருடல் நிரந்தரமாகப் பிரிந்து விடும் அபாயம் உண்டு.
இந்த உயிர் – உடல் கூட்டணி, ஐந்து உணர்வுகளையும் ( ஒளி (பார்வை), ஒசை (சத்தம்), சுவை , நாற்றம், தொடு உணர்ச்சி) மற்றும் மனம், புத்தி, அகங்காரம் என்ற மூன்றும் சேர்ந்து மொத்தம் எட்டு தத்துவங்களைக் கொண்டது.
இந்த உயிர்-உடலுக்கு மாற்றுப் பெயர் சூக்கும உடல்.
சூக்கும உடலோடு, பரு உடல் ஒன்று இணைவதால், ஒரு மனிதனோ, மிருகமோ, பறவையோ அல்லது புழுபூச்சியோ உருவாகிறது.
சூக்கும உடலில் மனம் உள்ளது. அதில் எழும் விருப்பு வெறுப்புகளைக் கொண்டு மனிதன் (நன்மை, தீமை என்ற இருவினைகளை) செயல் படுகிறான்.
நீர் வீழ்ச்சி தரும் பாடம்
பௌதிக விஞ்ஞானத்தின் பேசப்படுதும் சில அடிப்படைகள் நமக்கு பள்ளியில் படிக்காமலேயே புரியும். அதில் முக்கியமானது, உந்துதல் போன்ற சக்திகள் இல்லாமல் எதுவுமே அசையாது.
மலையிலிருந்து தொடங்கும் நீர் (புவி ஈர்ப்பினால்), நீர் வீழ்ச்சியாக உருவெடுத்து, சமவெளியை அடைந்த பிறகு ஆறாக மாறி பல நூறு மைல்களைக் கடந்து கடலில் கலக்கிறது. இது நமக்கெல்லாம் தெரியும். ஆனால் இது முழு உண்மையல்ல.
என்றாலும், இதை ஒரே ஒரு நீரோட்டமாக, கங்கை, காவிரி, மகாநதி, கிருஷ்ணா, கோதாவரி என்ற பெயர் கொண்ட ஆறுகளாக அறிகிறோம்.
இந்த ஆறு சமாச்சாரத்தில் மூன்று உண்மைகள் உண்டு.
ஆறு தொடங்குவது மலைமீது,
ஆறு முடிவது கடலில்.
இதன் இடைப்பட்ட பிரதேசத்தில், தொடர்ந்து தண்ணீர் ஒட்டத்தை நாம் காணலாம்.
இந்த ஒட்டத்தில் ஓரு படகு கூட விடலாம்.
இந்த ஆறு சமாச்சாரத்தில், உண்மை இல்லாதவை:
மலையில் பயணம் செய்ய ஆரம்பித்த தண்ணீர் எல்லாமே கடலை அடைவதில்லை.
அதில் சிறிதளாவு ஆவியாக மாறி வானத்தை அடைகிறது.
வேறு ஒரு சிறிய அளவு, போகும் வழி எல்லாம், பூமிக்குள் கசிந்து நிலத்தடியில் சேருகிறது.
இந்த நீரோட்டத்தில் ஒரு பகுதியோ, வழியிலுள்ள மரம் செடி கொடிகளுக்கு உணவாகிறது
இதைத்தவிர மனிதர்கள் மிருகங்கள் பறவைகள் பலவற்றின் வாயில் புகுந்து காற்றில், தரையில் சென்று மறைகிறது.
இன்னமு ம் எவ்வளவோ வழியாக மலையிலிருந்து பயணம் செய்யத் தொடங்கிய நீர் கடலில் சேராமல், பாதி வழியில் மறைகிறது. .
இந்த ஆற்றில், போகும் வழியெல்லாம், அங்கங்கே பெய்யும் மழை நீரும் ஆற்று நீரோடு இரண்டரக் கலந்து, ஆற்று நீராக நாம் நினைக்க, அது மிகுந்த தூரத்தை கடக்கலாம்.
சிறு துளிகளின் சிறிய அசைவுகளே, அதிக தூரம் செல்லும் பெரிய ஆறாக, மாறுகின்றன.
ஆமாம், இந்த ஆறு – வரலாறு, எதற்காக இவ்வளவு விரிவாகச் சொல்லப்பட்டது என்று சிந்தித்தீர்களா?
ஆற்றில் போகும் நீர் பல கோடி துளிகளால் உருவானதைப் போல போலவே, நமது உடலில் ஓடும் ரத்தமும், இதர வாயுக்களும், திட, திரவங்களும் பல உயிர் உடல்களால் ஆனது. இவைகளின் ஓட்டத்தில் குறைவு எதுவும் வந்தால் நமது உடலில் தளர்ச்சி உண்டாகும், நம்மை பல நோய்கள் தொடரும்.
நம் உடலின் உள்ளே பிறந்து, வளர்ந்து, இனப்பெருக்கம் செய்து, முதிர்ந்து மடியும் உயிர்களை, நமது அண்டத்தின் நகரும் உயிர்களுக்கு ஒப்பிடலாம்.
நகராத உயிர் என்று நாம் நினைக்கும் தாவரங்களும் நகர்கின்றன. நமது அறிவில், மரம் செடி கொடிகள் ஒரே இடத்தில் இருக்கின்றன. அவைகள் இடம் பெயர்வதில்லை ஆகவே இவைகளை மனிதன், மிருகங்கள், பறவைகளை மற்றும் புழு பூச்சிகளை விடத் தாழ்ந்ததாக காண்கிறோம்.
உண்மையில், இந்த உயிர்களும் நகர்கின்றன. ஆனால் நகரும் விதம்தான் வித்யாசமானது. இந்த உயிரினம், தான் இருந்த இடத்திலிருந்து, தன் விதைகளை வெகுதூரம் போக வைத்து, தன் சந்ததிகளை நகர்த்துகிறது. அதை உறுதி படுத்த பல வகை உயிர்களை தன் பக்கம் இழுக்கிறது. எப்படி?
இந்த நகராத உயிரினம், தான் நகருவதற்கு, மற்ற நகரும் உயிர்களை பயன்படுத்துகிறது.
மனிதன் மற்றும் பல உயிரினங்களின் கண்களுக்கும் மூக்கிற்கும் விருந்தாக மலர்கள், கண்ணிற்கும், நாக்கிற்கும் விருந்தாக பழம் காய் வகைகள் குலுங்க இதர நகரும் வகைகளை தன்பக்கம் இழுத்து, அவர்கள் மூலமாக அதன் பூ, காய் கனிகளை வெகு தூரம் எடுத்துச் செல்ல, (உபயோகிக்க), அதோடு விதைகள் நகர்ந்து அங்கங்கே, செடிகளாக முளைக்க), இந்த வகை உயிர்கள் வெகுதூரம் செல்கின்றன. இதோடு மட்டுமல்ல தாவர விதைகள் காற்றில், மழைநீரில் கலந்தும் நகர்கிறது.
தாவரங்களைப் போன்ற மனிதர்கள்.
நமது மூதாதையர் பலர் பிறந்த மண்ணை விட்டு எங்குமே நகர்ந்திருக்க மாட்டார்கள். பஞ்சம் புயல் போன்ற சில இயற்கையின் சீற்றங்கள் சிலரை இடம் பெயரவைக்கும். வெகு சிலர் பல தலைமுறைக்கு முன்னால், தங்கள் கிராமத்தை விட்டு சிலர் அடுத்துள்ள நகரங்களுக்குள் புகுந்தார்கள். அவர்களை மற்றவர் அதிசயப் பிறவிகளாகவே பார்த்தார்கள்
அடுத்த சில தலைமுறைளில், மானிலத்தின் பல பகுதிகளை அடைந்தனர். சமீப காலத்தில் மக்கள் பாம்பே, தில்லி என்று தூரத்தாலும் மொழியாலும் வேறுபட்ட இடங்களில் குடி பெயர்ந்தார்கள்.
இந்த காலத்தில் கடல் கடந்து பல்வேறு கண்டங்களை, அதிலுள்ள நாடுகளுக்கு நமது மக்கள் இடம் பெயரத் தொடங்கிவிட்டார்கள். தாவரங்கள் போலவே மனிதனும், சந்ததிகள் மூலமாக கண்டம் விட்டு கண்டம் நகர்கிறான் இல்லையா?
நம் உடலினுள் ஓட்டங்கள்
மனிதன் உடம்பின் உள்ளேயும் இரண்டுவித உயிர்கள். ஒன்று, அசையும் உயிர்வகை மற்றது, அசையா உயிர்வகை. ரத்தம், நல்ல வாயு, கெட்ட வாயு, பல வித அமிலங்கள் நகரும் தன்மை கொண்டவை. மாறாக பல குடல், எலும்பு, சதை, கணையம், பித்தப்பை, நுரையீரல், இருதயம் எல்லாமே அசையாது. இந்த இரண்டு வகையும் மனிதன் நகரும் போது தானும் சேர்ந்தே நகர்கின்றன. அதன் உருவ அளவுகளின் அதிகரிப்பு அல்லது மாற்றங்களும், ஒருவகை ஓட்டமே!
அப்படியானால், நமது ஓட்டங்களின் குறைவு, யாரைப் பாதிக்கும்? பிரமனுடைய ஆரோக்கியத்தைத் தான்.
மாயாவின்வேலைகள்
உயிர் உடல்களை உருவாக்குவது,
தேவையை அனுசரித்து தேவைக்கு அதிகமான உயிர் உடல்களை அழிப்பது.
மீதமுள்ள உள்ள உடல் உயிர்களை ஓடவைப்பது .
அந்த ஓட்டங்களை நிருவகிப்பது.
எல்லா உயிர் உயிர் உடல்களுக்கும் ஓடாமல் இருப்பதே விரும்பிய அல்லது இயற்கையான நிலை.
ஒவ்வொருவர் மனதிலும் பல பொய்களை நுழைத்து, உண்மைகளை மறைத்து, அந்த பொய்களின் அடிப்படையில் எல்லா உயிகளையும், மாயை, தன் சக்தியால் ஓடவைப்பதை நாம் உணரலாம்.
மாயாதான் இவைகளை செய்வதாக எப்படி நம்புவது?
ஒவ்வொரு இயக்கத்திற்கும் ஏதோ ஒரு உந்துதல் தேவை, இல்லையா? புவிஈர்ப்பு சக்தி என்று விஞ்ஞானிகள் சொன்னார்கள், கண்ணால் காணமுடியாது ஆனால் செயல்களில் உணரமுடிகிறது. நாமும் அதே பெயரில் குறிப்பிடுகிறோம்.
வேறு ஒரு சக்திக்கு மின்சாரம் என்றார்கள். இன்று, இந்த சக்தியின் இயக்கம் இல்லாமல் நாம் இல்லை என்ற நிலை உள்ளது. விஞ்ஞானி வைத்த பெயரை நாம் சொல்லத் தயங்கவில்லை.
மெய்ஞானி, இந்த அண்டத்தை இயக்கும் சக்திக்கு மாயா என்று பெயரிட்டார்கள். அதை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் ஏன்?