அத்தியாயம் 9
வாழ்க்கையைப் புரிந்து கொள்வோம். ஏனென்றால் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாமல் நலமாக வாழ முடியாது.
அதுமட்டும் இல்லை, வாழ்க்கையை சரிவர புரிந்து கொள்ளமல் ஞானிகளையும் சரி, ஆன்மிகத்தையும் சரி, புரிந்துகொள்வது கடினம். இந்த இரண்டையும் புரிந்து கொள்ளாமல் பிரம்மனைச் சந்திப்பது சிறிதும் சாத்தியம் ஆகாது.
வாழ்க்கையை மூன்று பரிமாணங்களில் காண்போம்.
வாழ்க்கையை சில உதாரணங்களையும் உவமானங்களையும் கொண்டு விளக்கினார்கள் ஞானிகள். அதில் முக்கியமான இரண்டைப் பார்ப்போம். மூன்றாவதாக, எல்லா உயிர்களின் வாழ்க்கையும் ஓட்டங்கள்தான் என்ற ஒரு புதிய கோணத்திலும் அலசுவோம்.
இதில் ஒரு லாபம் என்னவென்றால் ஆன்மிகம் புரியாவிட்டாலும் சாதாரண வாழ்க்கையை நன்றாக புரிந்து கொள்வதால் கோபம், மன வருத்தம், துக்கங்கள் எல்லாமே குறைந்த (அறவே இல்லாத) வாழ்க்கை நடத்தப் பயன்படும்.
எனக்கு துயரங்கள், துன்பங்கள் பெரும்பாலும் எங்கிருந்து வருகின்றன்?
(1) என் உடலை வருத்தும் பிணிகள் – நோய்கள்.
(2) என் இழப்புகள், நான் அடையும் நஷ்டங்கள்.
(3) எனக்கு சமூகத்தில் ஏற்படும் தோல்விகள் மற்றும் இறக்கங்கள்.
இதைவிட அதிக அளவில் பாதிப்பது என்னைச் சேர்ந்தவர் களுக்கு வரும் :
(1) உடலை வருத்தும் பிணிகள் – நோய்கள்.
(2) இழப்புகள், அடையும் தோல்விகள் மற்றும் நஷ்டங்கள்
(3) சமூகத்தில் ஏற்படும் இறக்கங்கள்.
பிறக்கும்போது இந்த பிரச்சனைகள் ஒன்றும் அறியாமல் இதை சமாளிக்கும் அறிவும் இல்லாமல் பிறக்கிறோம். வாழும் காலத்தில் தோல்விகளால் வாட்டப்பட்டு துயரங்களால் துரத்தப்பட்டு, பாதிப்புகள் மனதைவாட்ட, சிறிது சிறிதாக இவற்றைச் சமாளிக்கத் தேவையான அறிவை அடைகிறோம்.
ஏதோ ஓரளவு தோல்விகளைச் சமாளிக்கத் தேவையான அறிவு வளர்ந்தபோது, முதுமை நம்மை இறுக்கிப் பிடிக்க, செயல்பாடுகள் குறைந்து, தளர்ந்து, ஓய்ந்துவிடுகிறோம்.
பிறவி எத்தனை எடுத்தாலும், எல்லா உயிர்களும் அனுபவிக்கும் கொடுமை இதுதான். ஏன்?
இப்படி நிகழச்செய்வது மாயா. காரணம்? உயிர்கள் ஓடவேண்டும் ஓடாவிட்டால் பிரமன் துன்புருவார்.
தானும் ஓடாமல் பிரமனும் துன்புராமல் இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
ஒரு சாலை அமைக்கும் வேலையில் பல தொழிலாளிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். நாமும் அதில் ஒருவர்.
வேலையில் சேராவிட்டால் சாப்பாடு இல்லாமல் தொல்லைபட வேண்டிவரும். வேலை செய்தாலோ, வெயிலின் கடுமை, உழைப்பில் கிடைக்கும் வலிகள் மற்றும் காயங்கள் தப்பாது.
என்ன செய்தால், நமக்கு வேலை கூலி எல்லாம் கிடைக்கும் ஆனால் வலிகள் வராது?
மேற்பார்வையாளராக உயர்வது ஒன்றுதான் வழி இல்லையா? மற்ற தொழிலாளிகளை ஊக்குவித்து நன்றாக வேலை செய்ய வைப்பது. காயம் அடைந்த தொழிலாளிகளுக்கு வலி நீக்கி அவரை திரும்பவும் வேலையில் கவனம் கொள்ளச் செய்வது.
இது போதாதென்று, மேலும் நல்ல மேற்பார்வை செய்ய தகுதியானவர்களைத் தயார் செய்வது.
ஞானிகள் ஒருவிதத்தில் மேலே விவரித்த சூப்பர்வைசர்கள் அல்லது மேலாளர்கள். தான் ஓடாமல் மற்ற மனிதர்களின் ஓட்டங்கள், தடையில்லாமல் தொடர வைக்கும் மேலாளர்கள். இவர்கள் சேவையில் பிரமனும் மகிழ்வான். அதன் பொருப்பை ஏற்றுள்ள மாவையும் மகிழ்வாள்