"

அத்தியாயம் 18

முன்னுரை

யோகிகளுடைய சக்திகளை ஒரு மாதிரியாக புரிந்து கொண்டோம். யோகிகளாக மாறுவது அவ்வளவு கடினம் இல்லை என்றாலும் சில கால உழைப்பு  தேவைப்படும் இல்லையா?

அப்படிப்பட்ட உழைப்பிற்குப் பிறகு ஆதாயம் என்ன என்று தேடுவது மனித இயல்பு இல்லையா?

அஷ்ட சித்திகள் என்னும் சக்தி மாத்திரம் கிடைத்தால், நம் உலகில் விரும்புவது எல்லாமே பெறலாம்.

மனிதனை பயமுறுத்தும் மரணத்தை எட்டி உதைக்கலாம்.

பிறர் கண்ணுக்கு தெரியாமல் வாழலாம்.

கண் இமைக்கும் நேரத்தில் நினைத்த இடத்தை  அடையலாம்.

அடுத்த பிறவி என்னவாயிருக்கவேண்டும் என முடிவு செய்யலாம்.

இந்தப் பிறவியில் கிடைத்த அனுபவங்கள் அடுத்தடுத்த பிறவிகளிலும் மறக்காமல் இருக்கும்.

விரும்பியதை அடையும் சக்தி கிடைக்கும். அதோடு எதையுமே விரும்பாத பக்குவமும் சேர்ந்தே  வரும்.

இதெல்லாம் ஒரு புறம்   இருக்க, ஞானிகள்,    தங்களுக்குக்   கிடைத்த  அஷ்டசித்திகள் எனப்படும், மிக உயர்ந்த சக்தியை எப்படி பயன் படுத்துகிறார்கள்?

ஒன்றை மாத்திரம் உறுதியாகச் சொல்லலாம்.    இதை வைத்துப் பொன், பொருள், பதவி என்று  மாத்திரம் தேடி அலைய வாய்பில்லை.  அப்படியானால், அப்படிப்பட்ட சக்தி  கிடைத்து என்ன பயன் என்று பலர் கேட்கலாம்.

விளக்கமான பதில் :  நாம் சிறுவர்களாக இருந்தபோது வசித்த   ஊரிலிருந்து  வெளியேறி, பல வருடங்கள் கழிந்தபின் வளர்ந்து, வாலிபராக, முதியவராக திரும்பி வரும்போது:

மிகத்தொலைவிலுள்ளதாக நம் மனதில் இருந்த இடம், மிக அருகில் உள்ளதாக உணர்வோம்.  அதேபோல, மிக உயரமான கட்டிடங்கள் இப்போது சிறியதாகக் காணப்படும். சிறுவராக இருந்தபோது மிகவும் விரும்பிய ஒரு பொருள் வளர்ந்த பின் ஒரு அற்பப் பொருளாகத் தோன்றும். வளரும் போது நம் தேவைகளும்   மாறிவரும், இல்லையா?

சுருக்கமாக் சொன்னால், ஞானிகளின் நிலையை  அடையாத நாம் எல்லோருமே, சிறுவர்களைப் போலத்தான்.    நமது அறிவு வளர வளர, நாம் ஞானிகளின் நிலையை அடைவோம். வளர்ச்சிக்கு ஏற்றவாறு, நமது  தேவைகள், விருப்ப – வெறுப்புகள், இன்ப-துன்பங்கள், குறிக்கோள்கள் எல்லாமே மாறிவரும்.

சுருக்கமான பதில்: நம்முடைய சிறிய அறிவில் சரியான பதில் தரமுடியாது. ஊகித்தால், நம்மைப் படைத்த கடவுளிடம், பிரம்மாவுடன்  கை குலுக்க விரும்பலாம்.

குறுகிய காலத்தில் நாம் யோகிகளின் சக்தியை அடைய என்ன செய்ய வேண்டும்?

யோக சக்திகளை அடைவது மிகவும் சுலபம். இத்தனை சுலபம் என்று நம்புவதுதான் கடினம்.

அதிலும், ஞானியாக வேதங்களையோ, உபநிஷதுகளையோ கரைத்துக்  குடிக்க வேண்டாம். போன்ற எந்த  அறிவையும்  புதியதாக கற்க அவசியம் இல்லை என்றே சொல்லலாம். தாடி, ஊசிமேல் நின்றபடி தவம், காடு, மலை என்று எதுவுமே அவசியம் இல்லை.

மிக மிக கடினமான பாகம், நாம் கற்பது இல்லை.  மாறாக இதுவரை கற்றவைகளை மறப்பது அல்லது மறுப்பது.

எந்த சக்தியும் ஆக்கத்திற்கு மட்டும் இல்லாமல் அழிவிற்கும் பயனாகும். அருளுக்கு மட்டுமில்லாமல் பொருளுக்கும் பயன் தரும். ஆகையால், கீழே கண்ட உண்ஙையில்  உறுதியாக இருக்க வேண்டும்.

நமக்கு கிடைக்கும் சக்தியைத் தீய வழிகளில் செல்ல விடாமல், பொருள் உலகத்திலும் உபயோகிக்காமல், மிகவும் அரியதான, உயர்ந்த அறிதவை – அறிவை – அடைவதற்காக மாத்திரமே பயன் படுத்துவேன்.  தவறினால் மிக மோசமான முடிவை அடைவேன் என்று உணர்ந்துள்ளேன்.  பொருள் உலகத்திலோ அல்லது எந்த தவறான வழிகளிலும் இந்த சக்திகளைப் பயன் படுத்துவதால் அடையும் பின் விளைவுகளை நான் அறிவேன்.

இப்போது வழிகளைத் தேடுவோம்.

தேடல்கள்

ஞானம் – விஞ்ஞானம் இரண்டிலும் முக்கியமாக நடந்தேறுவது என்னவோ தேடல்கள்தான்.  ஆகையால் நாமும் தேடலாம், இப்போது, காட்டிற்குள் ஒடாமல்,   தாடியில்லாமல்      யோகியின்  சக்திகளை அடைவது எப்படி என்று தேடுவோம்.

யோக சக்தி, யோகியின் சக்தி, சாமியாரின் சக்தி, அஷ்ட சித்திகள், எல்லாமே ஒன்றுதான். பல நாள் காட்டில் மறைந்து வாழ்ந்தவர் ஒரு சாமியாரின் மாணவரானார். குருவின் வழிகாட்டுதலில், நீண்ட யோக பயிற்சி ஒன்றை மேற்கொண்டவர், ஒரு நாள் யோக சக்திகளை தாம் அடைந்ததை உணர்ந்தார். ஆனாலும் ஆனந்தத்திற்கு பதிலாக அதிர்ச்சியே அடைந்தார்  ஏன்  என்று பார்ப்போமா?

License

Icon for the Public Domain license

This work (ஓட்டங்கள் - பிரமனுடன் கை குலுக்க்லாம் by nat123; நடராஜன் நாகரெத்தினம்; and N.Natarajan) is free of known copyright restrictions.

Share This Book