"

அத்தியாயம்  12

brahma -001

எச்சரிக்கை:

மக்கள் பலருக்கு கணக்குடன் பிணக்குண்டு. அப்படிப்பட்ட வாசகர்கள், கடைசி வரிகளை மட்டுமே படித்தால் போதும்.

பிரமனை அடையாளம் காண்போம்:

அறிவுப் பாதையில் பிரம்மனைக் கண்டால் நாம் அடையாளம் கொள்ளுவது அவசியம் இல்லையா. அதற்காக, இப்போது பிரமனின் பரிமாணங்களை அறிய  நமது ஆராய்ச்சியைத் தொடருவோம்.

வாசகர்களில் ஒரு சிலர், சில ஆன்மிகப் பெரியவர்கள் சொல்லி, அல்லது ஆன்மிக இலக்கியங்களை படித்து கீழே கண்ட சில வரிகளை  வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அறிந்திருக்கலாம். இருந்தாலும் இதைக் கேள்விப்படாத சிலவற்றறைத்  தெரிந்துகொள்ள, மீண்டும் ஒரு முறை காண்போம்.

(1) பிரம்மா கடவுள்களில் உற்பத்திக்கு பொருப்பு ஏற்ற கடவுள்

(2) பிரம்மா ஒருவரல்ல .

(3) பிரம்மா, நம்மைப் போலவே பிறந்து வளர்ந்து வாழ்ந்து மடியும் ஒரு பிறவிதான்   என்றும்,

(4) நமக்கு,  பூமியைப் போல பல கோடி பூமிகளும், நமது சூரியனைப் போலவே லட்சக்கணக்கில் சூரியன்களும் கொண்ட  ஒரு அண்டம் இருப்பது தெரியும்.  அதே போல, பிரம்மாவுக்கும் அவர் உலகத்தைப்போல  கோடான கோடி பூமிகளும் (உலகங்கள்) சூரியன்களும் கொண்ட அண்டமும் உண்டு.அதுவே பிரம்மாண்டம் (பிரம்மா + அண்டம்)

(5) பிரம்மாவுக்கும் வாழும் காலம், அவர் உலகில் சுமார் நூறு வயது.

(6) நாமும் ஓரு பிரம்மா. (அஹம் பிரம்மாஸ்மி).

மேலே கண்ட விஷயங்கள் நாம்  நமது வாழ்வில் பலமுறை கேட்டது அல்லது படித்தது.

நாம் புதியதாகக் கேட்பது:

(7) அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது.

(8) பிரம்மாவின் உடலும் நமது உடலும், கோடானுகோடி (நம்மைப் போன்ற) உயிர்களால் உருவானது.

(9) நமது உடலில் உள்ள  கோடானு கோடி உயிர்களுக்கு நாம் ஒரு பிரம்மா. (அஹம் பிரும்மாஸ்மி)

(10) நமது விஞ்ஞானிகள் கண்டு சொல்லி, நாம் ஊகித்து உணர்ந்த நமது அண்டம், பிரம்மாவின் (பிண்டம்) உடல்.

ஏதாவது ஒரு பிரம்மாவுடன் உடனடியாக கைகுலுக்க விரும்பினால்,  அடுத்து இருக்கும் மனைவியோ, பிள்ளையோ, தாய் தந்தையோ, அடுத்த வீட்டு மனிதரோ – இதில் யார் கிடைத்தாலும் நீங்கள் கை குலுக்கலாம்.

ஆனால், உங்கள் பிரம்மாவுடன் கை குலுக்க, ஆன்மிகப் பயணம் அவசியம்.

இதற்கு  என்ன ஆதாரம்? தொடர்ந்து படியுங்கள்.

பிரமனின் பரிமாணங்கள் என்ன?

பிரமனை அடையாளம் காண, அவர் பரிமாணங்களை அறிவது அவசியம்.

நம்மைவிட எவ்வளவு அதிக உயரம், பருமன் என்று தெரிந்து கொள்ளுவோம்.

இந்த பிரமன், அடி அல்லது மீட்டரில் அளக்கக்கூடிய உருவம் இல்லை. கிலோ மீட்டரில் அளக்க முடிந்தாலும் பரவாயில்லை.  பிரமன் இன்னமும் அதிக பரிமாணங்கள் கொண்ட ஒருவர்.

பிரமனின் பரிமாணத்தை ஊகிக்கும் ஒரே வழி, நமது நேரத்தோடு பிரமனின் நேரத்தையும் ஒப்பிடுவதே!

நமது நேரத்திற்கும் பிரம்மனின் நேரத்தையும் ஒப்பிட்டு, பிரமன் நம்மைப்போல எத்தனை   மடங்கு பெரிய உருவத்தை கொண்டிருக்க வேண்டுமென்று தோராயமாக கணக்கிடலாம்.

நாம் மூச்சு விடுவதில் நான்கு பாகங்கள் இருப்பதை கவனிக்கலாம். (1) மூச்சை உள்ளெ இழுப்பது. (2) இழுத்த மூச்சை நுறையீரலில் (டூதணஞ்ண்) சிறிது நேரம் வைத்திருப்பது, அடுத்து (3) தேக்கிய மூச்சுக்காற்றை சிறிது சிறிதாக வெளியேற்றுவது.   (4) நுறையீரலை காற்றில்லாமல் காலியாக வைப்பது.

பிரமன் ஒரு சுற்று மூச்சுவிட்டால், நமக்கு ஒரு நான்கு யுகம் முடிந்துவிடும்

கடினமான உடல் உழைப்பு செய்பவர்கள் அதிக ஆரோக்கியத்திற்கு காரணம் அவர்கள் அதிக காற்றை இழுத்து, ஒரளவு ஆழமான மூச்சுவிடும் முறையே என்பதை விஞ்ஞான ரீதியாக நிரூபணமாகியுள்ளது.

உலகம் முழுவதும் மக்கள் யோகா பயிற்சிகளை பின்பற்றுவது இதை நிரூபிக்கிறது.

இந்த  நான்கு மூச்சு நிலைகளை பிரம்மனின் மூச்சுடன் நிலைகளுடன் ஒப்பிடும்போது, அதற்கான நேரம், மனித நேரத்தோடு ஒப்பிட்டு பிரமனின் வயதை கணக்கிடுவோம்.

பிரம்மாவும் நாமும், அவரவர்  உலகத்திலே, சுமார் 12 மணி நேரத்தில் 1000 முறை மூச்சு விடுவதாக கணக்கு. (அ) சத்ய யுகம் 1,728,000; (ஆ) த்ரேதா யுகம் 1,296,000; (இ) த்வாபார யுகம் 864,000; (ஈ) கலி யுகம் 432,000;

ஒரு யுக-சுற்று என்பது 4 யுகங்களை கொண்டது மொத்தம் 4,320,000; வருடங்கள்.

ஒரு கல்ப காலம் = 1000 * 4320 000 மனித நாட்கள். ஒரு பிரம்மனின் நாள அதாவது; இரு கல்ப நேரம் பிரமனின் 24 மணிநேரம் = 2 * 1000  * 4320000

                  =  8,640,000,000 மனித வருடங்கள்.

யுகங்கள்

நம் பலர் யுகம் என்ற சொல்லை கேட்டிருக்கிறோம். யுகங்கள் நான்கு.

நாம் மூச்சு விடுவது போலவே, பிரம்மனும் மூச்சு விடுகிறார். காற்றை மூக்கின் வழியே இழுப்பது, இழுத்த காற்றை நுரையீரலில் சில நேரம் தேக்கி வைப்பது. பின்னர் தேக்கிய காற்றை  வெளியேற்றுவது. நான்காவதாக, நுரையீரலைசில வினாடிகள் நாம் காலியாக வைத்திருப்பது போலவே, பிரம்மனும் தன் நுரையீரலைக் காலியாக வைத்திருக்கிறார்.

இப்போது, நாம் வாழும் காலத்தை  கலியுகம் என்று அறிவோம்.

பிரமனின் வயதை நமது வயதோடு ஒப்பிடுவோம்.

பிரம்மனின் வயதை யுகங்கள் அடிப்படையில், கணக்கிடுவதை தொடங்குவோம்.

இறுதியாக நம் வருடத்தால் பிரமனின் வாழ்நாளைக் கணக்கிடுவோம்.

பிரமனுக்கு 100 வயது. என்றால்,

8,640. 000. 000 து 365 து 100 மனித வருடங்கள்.

பிரமன் எவ்வளவு பெரிய உருவமாக இருக்க வேண்டும்?

எல்லா உயிர்களும் (உயிர் உடலின்) உருவத்தின் அளவுக்கும், அதன் வாழ்நாளுக்கும் ஒரு   சம்பந்தம் – ஞிணிணூஞுடூச்tடிணிண – இருப்பதை நாம்   உணரலாம். அதை வைத்து, உத்தேசமாக,

பிரமன்,  மனிதனைப் போல, 3153600000000 மடங்கு பெரிய உருவமாக இருக்கலாம்.

வேறுவிதமாகசொன்னால், நமதுஅண்டம்நம்மைவிட

3153600000000  என்ற அளவிலானது.

அதே கணக்கில், பிரமாண்டம் (அண்டத்தின் அண்டம் அல்லது பிரமனின் அண்டம்) என்பது சுமார் நம்மை விட

994519296000000000000000

 அளவு பெரிய பரிமாணங்கள் கொண்ட உருவமாக இருக்கலாம்.

ஒரு மாதியாக பிரமனின் பரிமாணங்களை உணர்ந்தோம்.

பிரம்மா ஒரு சங்கிலித் தொடரோ?

பிரம்மாவுக்கும் ஒரு பிரம்மா இருக்கலாம். அந்த பிரம்மாவுக்கும் ஒரு பிரம்மா என்றும் சங்கிலித்தொடர் தெரிகிறது. நம் உடலை அதிலிருக்கும் கோடானுகோடிஉயிர்கள் ஓரு அண்டமாகவே உணரும்.

அது மட்டுமில்லை, நம் உடலிலுள்ள ஒரு நுண்ணுயிர் கூட ஒரு

பிரம்மாதான். அந்த பிரம்மாவின் உடலில் கோடிக்கணக்கில் பிரம்மா என்று அடுக்கடுக்காக பல பிரம்மாக்கள் அல்லது அண்டங்கள் இருப்பதை மனதின் கண்ணினால் நான் காண்கிறேன்.

நான்  சில உதாரணங்களைத்தர, அதன்  உச்தவியுடன்  நீங்களும் காணலாம். பல வருடம் முன்னால், ஒரு ஆன்மிக மகான் தன் உடலைக் களைந்து மேற்கொள்ளும் ஒரு பணத்தில் (ச்ண்tணூச்டூ tணூச்திஞுடூ) ஒரு அனுபவத்தை பாடியதில் கீழே கண்ட கருத்து காணப்பட்டது.

பல தமிழ் அறிஞர்களையும் மெய்ஞானிகளையும் இதைப் பாடியமகான் யார் என்று கண்டுபிடிக்கும்படி வேண்டியிருக்கிறேன்.

அணுவுக்குள் சென்றேன் ஏழேழு உலகம் கண்டேன் . . . .

பிரம்மா ஒரு சங்கிலித்தொடராகத்தானிருக்க வேண்டும்.

பல ஞானிகளின் பாடல்களில் ஈரேழு உலகங்கள் இருப்பதாக சொல்லியதை நாம் காணாலாம்.

பிரம்மாண்டம் :  திருவள்ளுவர் மிகப் பெரியதாக நினைத்தது, நாம் வாழும் உலகம்தான் என்று நினைக்க இடம் உண்டு. (ஏனென்றால், கல்லாதது உலகளவு என்றார்). தற்கால விஞ்ஞான அறிவில் ஓரளவு அறிந்த நமக்கு, உலகத்தை விட பெரியதாக அண்டம் ஒன்று இருப்பது தெரியும். அந்த அண்டம் உலகத்தைவிட கோடானு கோடி அளவு பெரியது என்று நமக்கு எந்த சந்தேகமும் இல்லாமலே தெரியும். அதைவிட பெரியது எதுவும் நமக்கு தெரியாது. (இண்டர்நெட்டில் ஞ்ணிணிஞ்டூஞு)  செய்து, அண்டத்தைப் பற்றி அதிகம் அறிந்து கொள்ளலாமே!) அண்டத்தை விட பெரியது பிரும்மாண்டம். அதாவது  அண்டங்களின் அண்டம் பிரம்மாண்டம்.

பிரம்மாண்டம் என்ற சொல்லை, நாம் கேட்டிருப்போம். அது அண்டத்தை விட, மிக மிக மிக .. பெரியது என்று பொருள்பட உபயோகிக்கிறோம். அது என்ன பிரம்மாண்டம் என்று சிந்தித்திருக்கவே மாட்டோம். பிரம்மாண்டம் என்பது நமது பிரமனின் உலகிலே, அண்டம் என்று அழைக்கப்படுவது.

பிரமனின் அண்டம், நமது அண்டத்தை விட கோடானு-கோடி மடங்கு பெரியதாக இருக்க வேண்டும், இல்லையா? நாம் ஓரு அண்டத்தை உணர்வது போல, பிரமன்    உலகத்திலும் கோடிக் கணக்கான உலகங்களும், உயிர்களும் இருப்பதை நாம்  ஊகிக்க மு டியும், இல்லையா?

மேலே சொன்ன பல விஷயங்களை சில ஆன்மிக நூல்கள் என்று திட்டவட்டமாகச் சொல்லுகின்றன.

நாம் இதை எல்லாம் எப்படி நம்புவது?

நாம் இதற்கான சாட்சியங்களைத் தேடுவோம்.

முக்கியமாக, நாம் யார்? நாம் வாழ்வதால்  சில சமயம் மகிழ்ச்சியும்  மற்ற சமயங்களில் துக்கம் துயரம் என்று அவதிப்பட்டு, வாழ்விலும் பயந்து சாவிலும் பயந்து – ஐய்யா  நிச்சயமாக, நமக்கு  ஒரு  பயன் இல்லை.

அரிசி கோதுமை காய்கறிகள் இயற்கை வளரவிட்டாலும், மனிதனின் முயற்சியும் இருக்கிறது இல்லையா? ஆனால்,  மனிதன் தனது வயிற்றை  நிரப்பவே  உருவாக்குகிறான் என்கிற உண்மையை தாவரங்கள் அறிவதில்லை.

அண்டத்தில்  உள்ள அனைத்துமே, வேறு ஏதோ ஒரு உயிரின் எதோ ஒரு அவசியத்திற்கு உருவானது.

இறைவனோ இல்லை இயற்கையோ, மாயையோ அல்லது மகேசனோ,  ஒரு குறிப்பிட்ட உயிர்களை மாத்திரமே  உணர வைப்பதும்,  மற்ற உயிர்கள் இருப்பதை  மறைப்பதைச் செய்கிறார்கள்.

யாருக்கு பயன்? நாம் வாழாவிட்டால்  யாருக்கு நஷ்டம்? நாம் கடவுளை பார்க்க முடியுமா? நாம் உணரும்  உலகம் பிரமனின்  உலகத்தின்  ஒரு பாகமாக எப்படி உணரலாம்?

License

Icon for the Public Domain license

This work (ஓட்டங்கள் - பிரமனுடன் கை குலுக்க்லாம் by nat123; நடராஜன் நாகரெத்தினம்; and N.Natarajan) is free of known copyright restrictions.

Share This Book