அத்தியாயம் 17
ஞானிகளுக்கும் விஞ்ஞானிகளுக்கும் வேறு ஒரு ஒற்றுமை உண்டு.
இந்த இரண்டுவகை மக்கள் பேசுவதைப் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபம் இல்லை!
இந்த இரண்டு வகை மக்கள் எழுதியதை அல்லது சொல்லுவதைப் புரிந்து கொள்ள அவர்கள் அறிந்ததில் சிறிதளவாவது நமக்கு தெரிந்து இருப்பது அவசியம். அவர்கள் அறிந்ததை எல்லாமே அவர்கள் சொல்லத் தலைப்பட்டாலும், ஞானிகளும் – விஞ்ஞானிகளும் சொல்வது என்னவோ புரிவது போல இருந்தாலும், புரியாது.
அப்படிப்பட்ட அறிவை அடைந்திருக்காவிட்டால் கூட பரவாயில்லை. ஞானிகளே அவர்கள் சொல்வதை நம்மால் புரிந்து கொள்வது சுலபமல்ல என்று நாம் ஒரு மாதிரியாக ஊகித்து அறிவும் விதத்தில் உதாரணங்களோடு சொல்லியிருக்கலாம். பதாஞ்சலி யோக சூத்ரா, அப்படிப்பட்ட ஒரு புத்தகம்.
இப்படி சொன்னால் பொதும். மக்களுக்கு புரியும் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டார்களோ. இல்லை உண்மையைச் சொன்னால் நம்பமாட்டார்கள் என்ற பயமோ?
ஞானிகள் சரியாக சொல்லவில்லை! என்பதற்கு நல்ல உதாரணம் பல இருந்தாலும் இங்கே ஒன்றே ஒன்று. கேள்வி: கடவுள் எங்கே?
கடவுள் எங்கே என்ற கேள்விக்குப் பல பதில்கள் பெரியவர்கள் பல காலமாகச் சோல்லி, நாம் கேட்டிருக்கிறோம். நினைவு படுத்திப் பாருங்கள்.
(ஆகாயத்தைக் காட்டி) மேலே இருப்பதாக சொல்வார்கள்.
இறைவன் இல்லாத இடமே இல்லை என்றார்கள்.
தூணிலும், துரும்பிலும்கூட இருப்பதாக சொன்னார்கள்.
இதெல்லாம், நம்மைக் குழப்புவது போதாதென்று, நாமே கடவுள் அல்லது பிரம்மா என்றார்கள்.
தெளிவாக சொல்லியிருந்தால், மனிதனே,
* அண்டத்திலுள்ள உயிர்கள் எல்லாமே பிரம்மவின் பாகங்கள். நமது அண்டம்தான் நமது பிரம்மா.
உதாரணத்துடன் சொன்னால், ஒரு ஸ்கூட்டரை மெக்கானிக் பிரித்துப் போடுகிறார். பிரித்தவுடன் அதில் பல வித அளவுகளில், வண்ணங்களில் உலோகத்தாலான, பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட பல நூறு பாகங்கள் காணப்படும். பிரித்துப்போட்ட பின் ஸ்கூட்டர் மறைகிறது. பாகங்கள் ஓவ்வொன்றும் தனிப் பெயர் பெறுகிறது.
நாம் நமது கடவுளைத் தேடுவது, ஸ்கூட்டரில் உள்ள ஒரு பாகம் ஸ்கூட்டரை அறிய முயல்வதைப் போலத்தான்.
* நமது உடல் என்று கருதுவதும் ஒரு அண்டம்தான். அதனுள்ளே பல லட்சம் அல்லது பல கோடி உயிர்கள், நம்மைப் போலவே பிறவி-இறப்பு என்ற சுழலில் சிக்கியுள்ளன. ஸ்கூட்டர் உதாரணத்தில், மொத்தமாக ஸ்கூட்டருக்கும் வாழ்நாள் இவ்வளவு என்று வரையரை உண்டு. அதன் பாகங்களுக்கு அதிலும் குறைந்த அளவில் வாழ் நாள் உண்டு.
* உயிர்களுக்கு மறுபிறவி இருப்பது போலவே, அண்டத்தில் மறு பிறவி எடுக்காத உயிர்கள் எதுவும் இல்லை. நமது கண்களின் முன்னே தினமும் நடந்தேரும் – ரீ-சைக்ளிங். சில உலோக பாகங்களை, அதன் பயனுள்ள வாழ்நாள் முடிந்தபின், அவற்றை உருக்கி மீண்டும் வேறு ஒரு பொருள்களை உருவாக்குவதை உதாரணமாகக் கொள்ளலாம். புதிய பொருளுக்கு பெயர் பயன்பாடு எல்லாமே மாறுகிறது, இல்லையா?
பிரம்மாக்களில், பல அடுக்குகளை உணருங்கள்:
நமது பிரம்மாவின் உடலில் நாம் என்ன வேலை செய்கிறோம்?
நமக்கு இதற்கான பதிலை நேரடியாக கண்டு கேட்டு சொல்ல யாருமில்லை. ஒரு மாதிரியாக சில ஞானிகள் அறிந்து சொன்னார்கள். நாம் கார்லோஸ் காஸ்டிநேடா தனது நவோஹோ பழங்குடி மக்கள் மத்தியில் உதித்த டான் ஹுவான் என்ற ஞானியின் மாணவராக இருந்து கேட்டு, உணர்ந்த அறிந்து எழுதிய புத்தகங்களில் கண்டது உண்மையானால். (அது உண்மையாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது).
நம் உயிரும் பேருயிரும்
தனியாக, ஒரு மனிதனோ அல்லது வேறு எந்த உயிரும் நமது பேருயிருக்கு ( பிரம்மாவுக்கு ) இன்றியமையாத ஒன்றாகச் சொல்ல முடியாது. ஆனால் கூட்டமாக, சமுதாயமாக நாம், நமது பேருயிருக்கு ஒரு முக்கியமான ஒரு வேலையை செய்து கொண்டிருக்கிறோம்.
வேறு ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். பல்லாயிரக்கணகான தொழிலாளிகள் வேலை செய்யும் ஒரு மிகப் பெரியதொரு தொழிற்சாலையில் ஒரு குப்பை கூட்டும் தொழிலாளி செய்யும் வேலைக்கும், தொழில் நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருளுக்கும் தொடர்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் பங்கும் மறைமுகமாக இருப்பது மறுக்கமுடியாது. அதே சமயம், உருவாக்கிய பொருளில் அந்தத் தொழிலாளியின் பங்கைப் பிரித்துக்காட்ட முடியாது.
சுருக்கமாக நமது உயிர்கள், நமது பரிமாணத்திலிருந்து உணரும் அறிவும் அனுபவமும் நமது பேருயிருக்குத் தேவை.
இது குறித்து, ஷாமண் முனிவர்கள் சொல்வது :
ஒரு பெரும் பருந்து இருக்கிறது – அது, நம் கண்களால் கண்டு உணரமுடியாத அளவு பெரியது. அந்த பருந்துக்கு, நாம் இறந்த உடன், நமது உயிரில் அடங்கியுள்ள செய்திகளே பருந்துக்கு விருந்து. அறிவை (செய்திகளை) மாத்திரம் உறிஞ்சிவிட்டு உயிரை வெளியேற்றுவதாக அறிகிறார்.
இதை நமது உடலோடு ஒப்பிட்டுப் பார்த்தால், நாம் நமது பேருயிரின் நரம்பு மண்டலத்திலிருந்து செய்திகளை தலைச் சோறு எனப்படும், மூளைக்கு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்ட பெரிய குடும்பமாக உணரலாம்.
நமது கலாச்சாரத்தின் அடிப்படையில், ஒரு குடும்பத்தில் ஒருவர் இறந்தால், கருட புராணம் படிப்பது வழக்கம்.
கருட புராணத்தில், நாம் வாழும் காலத்தில் செய்யும் தவறுகளுக்கு தண்டனைகள் விளக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம்.
இங்கே கீழைநாட்டு ஞானிகள் தெரிவித்ததும், நவாஹோ பழங்குடிகளிள் அறிந்ததிலும் ஏதோ ஒரு ஒற்றுமை தெரிகிறது அல்லவா?
மாயை உறங்கினால் அண்டம் அழிந்திடும். ஏன்?
தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். மாயை எல்லா உயிர்களுக்கும் விலகிவிட்டால், உலகம் மட்டுமல்ல பிரபஞ்சமே அழிந்துவிடும்.
ஒரு சிறிய கற்பனை – மாயை விலகியால், மனிதர்கள் யாரும் தவறே செய்யமாட்டார்கள் . நினைத்துப் பாருங்கள். எத்தனை அரசாங்க உத்யோகங்கள் காலியாகிவிடும். போலீள் சட்டம் ஒழுங்கு பூட்டு, கதவு செய்யும் தொழில்களும் காணாமல் போய்விடும். கோர்ட்டு வழக்கறிஞர்கள், அவர்களில் உதவியாளர்கள், சிறைச்சாலைகள், அதன் அதிகாரிகள் அனைவருக்கும் வேலை இல்லை. சினிமா, டிவி சானல், செய்திச் சானல்களுக்குக் கதவடைப்பு. தலைவர்கள், அடியாட்கள், கூலிப்படை எதுவுமே தேவை இல்லை.
படிப்படியாக மிருகங்கள் போல வாழ்க்கை முறை மாறிவிடும். அவரவர் உழைப்பில், சொந்த பலத்தில் வாழ்ந்து மடிவோம்.
முக்கியமாக, இந்த காதல் பிசினஸ். இந்த பெண் (காதலி) அல்லது இந்த ஆண் (காதலன்) நமது வாழ்வில் மகிழ்ச்சி தருவான் (ள்) என்ற எண்ணமே ஒரு மாயை செய்யும் விஷமம் தானே? செய்தித்தாளை படித்து, செய்தி சானல்களில் கணவன்-மனைவிகளை கண்டு, நம் வீட்டிலேயே பிரச்சனைகளைப் பார்த்த பின்னும் மனிதனுக்கு காதல் எப்படி வரலாம்?
மாயை உள்ள வாழ்க்கை நமக்குக் துக்கம் தந்தாலும், மகிழ்ச்சியும் தருகிறது. துக்கமும், மகிழ்ச்சியும் மாயையின் வேலைகள்தான். மாயை இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள். மசாலாக்கள் இல்லாத சினிமா போல. ஆர்ட் பிலிம்ஸ் கூட சில சமயம் விறு விறுப்பாக இருக்கும். அவ்வளாவு போர்!
தாற்காலிகமாக விலகும் மாயை.
ஒரு உண்மை நிகழ்ச்சி
என்னுடன் நட்புடன் பழகிய ஒரு அரசாங்க அதிகாரி. என்னிடமும் மற்ற நண்பர்களிடமும், மிகவும் நேர்மையானவராக ஒரு முகமூடி அணிந்து கொண்டே வருவார். போகப் போக, நண்பர் சிலர் உண்மை முகத்தைக் காண, தாம் செய்வது சிறிய தவறுகள் என்றும் அவைகள் அந்த சூழ்நிலையின் கட்டாயம் என்று நண்பர்களை நம்ப வைத்திருந்தார்.
ஒரு சமயம் அவரைப் போன்றே லஞ்ச ஊழலில் பெயர் போன அவரது உதவியாளர், மிகவும் ஆரோக்கியமாக இருந்தவர், வயதில் க சிறியவர், திடீரென்று மரணம் அடைந்தார்.
இந்த மரணம், நண்பரை அதிகம் பாதித்தது போலும். மாயை என்ற திரை விலகியதை நாங்கள் உணர்ந்தோம்.
அப்போதிலிருந்து சில நாட்களுக்கு தான் என்ன நேர்ந்தாலும் நேர்மையாகவே வாழப் போவதாக பல முறை எல்லா நண்பர்களிடமும் கூறிவந்தார்.
ஒரு மாதம் கூட முழுவதும் முடியும் முன், விட்டிருந்த பழைய வழக்கத்தை சிறிது சிறிதாக தொடர்ந்தார். செய்ய வேண்டிய வேலைக்கு லஞ்சம் – அலுவலக வேலையில் மோசடி என்று முழு அளவில் அவர் திருப்பணி தொடங்கிவிட்டது என்று நண்பர்கள் எல்லாருக்கும் தெரியவந்தது.
அவர், அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, தவறுகள் செய்வதை நிறுத்தவே இல்லை.
மாயையும் மனிதரும்
மாயை நமக்கு தலைவலியை உண்டாக்கலாம். ஆனால் அண்டத்திற்கு மாயையின் சேவை மிகவும் அவசியம்.
ஆகவே மாயை மொத்தமாக இருக்கவே கூடாது என்பதும் தவறு. நாம் வீட்டிற்கு ஜன்னலும் வைத்து அதில் திரையும் பொருத்துவது ஏன்? வெளிச்சமும் காற்றும் பல சமயங்களில் அவசியம், சில சமயங்களில் அவசியம் இல்லை அப்பப்போது கட்டுப்படுத்த அவசியம். இல்லையா? நாம் மாயையையும் திரைச் சீலைக்குத் தானே ஒப்பிடுகிறோம். கணக்கு சரிதானே?
மாயைக்கு மேலும் நான்கு வேலைகள்
இப்போது மாயையை விளக்கமாக அலசுவோம். மாயையின் வேலையை நான்காகப் பிரிப்போம்.
- மாயையின் முதல் தான் கட்டுப்படுத்தும் உயிர்களை அதன் பரிமாணத்திற்குச் சரியான (ஏற்ற) ஒரு நேரத்துக்குள் தள்ளுவது. (தியானங்கள் போன்ற பயிற்சிகள், ஞானியை மாயையின் இந்த முதல் பிடியிலிருந்து விடுவிக்கிறது). இதிலிருந்து விலகினால், பல பரிமாணங்களில்,நம்மால் அறிய முடியாத பல உயிர்களைக் காணலாம்.
- மாயையின் இரண்டாவது வேலை – பிறந்த மனிதர்களை ஓரு குறிபிட்ட வாழ்க்கை வட்டத்துள் வரவழத்து தான் வளர்ந்து, சந்ததிகளை உருவாக்குவதும் அவர்களை வளர்ப்பது, பிறகு அவர்களையும் அதே வாழ்க்கை வட்டத்தில் நுழைப்பது, பின்வளர்ந்து, நலிந்து, முடிவில் இறப்பது என்ற நியதியை உருவாக்கி, அதை பராமரிப்பதே.
- மாயையின் மூன்றாவது வேலை – ஞானிகளை தயார் செய்வதே.
பொதுவாக நம் வாழ்க்கை, வலி நிறைந்தது. அவ்வப்போது வலி தாங்காத மனிதர்கள் ஸ்ட்ரைக் செய்ய முனைவார்கள். அவர்களின் மனக்காயங்களுக்கு மருந்து போட்டு, திரும்பவும் வாழ்க்கை வட்டத்தில் வரவழைப்பது ஓரு முக்கியமான வேலை.
இதற்கு ஒரு மனமருத்துவர் கூட்டம் தேவை இல்லையா? ஞானிகள் செய்யும் சில @வலைகளில் முக்கியமானது இந்த ஒரு வேலை.
தப்பிக்க முயற்சி செய்யும் மனிதர்களில் சிலரை ஞானிகளாக தயார் செய்வதுதான் மாயை செய்யும் மூன்றாவது வேலை.
- மாயை செய்யும் நான்காவது வேலை – அண்டத்தில் இத்தனை வகை உயிர்கள் அவைகள் ஒவ்வொன்றிலும் இத்தனை உயிர்கள் இருக்கவேண்டும் ஒரு இலக்கு இருக்கவேண்டும்.
ஒவ்வொரு, சூழ்நிலையில் சில விதமான உயிர்கள் அதிகமாகவும், மற்றவை அளவில் குறைவாகவும் இருக்க வேண்டும். பேருயிர் உறங்கும் போதும், இளைப்பாரும் போதும் குறைந்த உயிருடல்களும், ஓடும்போதும், கடுமையான உழைப்பின்போதும் அதிக உயிர் உடல்கள் அவசியம்.
பேருயிரின் அங்க அசைவுகள், மற்றும் தேவைகளை அனுசரித்து நால்வகை மக்களும் அவர்களின் எண்ணிக்கையும் கூடியும் குறைந்தும் இருக்கும். ஒவ்வோரு வகையிலும் இத்தனை தேவை என்று இருக்க வேண்டும்.
அதிக@மா குறை@வா அண்டத்திற்கு ஆகாது போலிருக்கிறது.
இதற்கு ஒரு கண்ட்ரோல் கருவி அவசியம். இந்த கண்ட்ரோல் (கட்டுப்பாடு) கம்ப்யூட்டரைப் போல இயங்க @வண்டும்.
நான்காம் தர மக்களை கட்டுப்படுத்த:
உலகில அதிக்கப்படியான மக்கள், அறிவில் குறைந்த நாலாம் தர மக்கள்.
இவர்கள் சிந்தனைகளிலும் குறைந்தவர்கள். ஆனால் குறை@வு இல்லாமல் பிள்ளை பெறுவார்கள். வசதியான வளமான வாழ்க்கை தேடாமல், அதற்கு ஒரு அவசியம் இல்லாமல் ஒரு கடின வாழ்க்கை வட்டத்தில் வாழ்ந்து மடிவார்கள். அதிலிருந்து வெளியே வருவதற்கு சான்ஸ் குறைவு.
பிரமனுக்கு இவர்கள்தான் அதிகம் தேவைப்படும் போலிருக்கிறது.
இவர்கள் கூட்டம் அதிகமாகும் போது, கூட்டத்தை கட்டுப்படுத்த வெள்ளம், பஞ்சம், சுனாமி, இயற்கைச் சீற்றம், கள்ளச்சாராயம், ஜாதி – மத – இன, கலவரங்கள் போதுமானது.
மாயைக்கு, இதே ஏழைகளை அதிக அளவில் எண்ணிக்கையை குறைக்க, இரண்டு நாடுகளிடையே ஒரு போர் போதுமானது. ஒரு போர் உண்டாக, ஒரு நாட்டின் தலைவரின் தலையில் இலேசாகக் கீறிவிட்டால் போதும் சில லட்சம் மக்கள் காலி.
ஒரு மத – இன – ஜாதி – மொழிக் கலவரம். ஓரு தலைவரின் தலையில் மாயை ஒரு தட்டு தட்ட சில நூறுபேர் காலி.
இதெல்லாமே போதாதென்றால், வெள்ளம், வரட்சி, வெய்யில், மழை, புயல், ரயில் விமான விபத்து. கள்ளச் சாராயம் இவைகள் என்றும் அழிவதில்லை.
இவைகள் மாயாவின் ஆட்சியில் உள்ளவை. இது வரை கள்ளச் சாராயத்தால் எத்தனை ஆயிரம் ஏழைகள் இறந்திருப்பார்கள். ஒருவருக்காவது கொலைக் குற்றத்திற்கான தண்டனை கிடைத்திருக்குமா?
முதல் மற்றும் இரண்டம் தர மக்கள் பெருக்கத்தை கண்ட்ரோல், அல்லது கட்டுப்பாடு செய்வது மிகவும் எளிது. இவர்கள் அதிகமாக பிள்ளைகள் பெறுவதில்லை. தொட்டதற்கெல்லாம் தற்க்கொலை செய்து கொள்வார்கள். அதனால் பெரிய அளவில் வெளியிருந்து எந்தக் கட்டுப்பாட்டிற்கும் அவசியமில்லை.
மூன்றாம் தர மக்களோ, முதல் இரண்டு தர மக்கள் ஒரு புறம் இழுக்க, நான்காம் தர மக்கள் மறுபக்கத்தில் நசுக்க தானாக ஒரு கட்டுப்பாட்டில் வந்து விடுவார்கள்.
இப்படி ஒவ்வொரு உயிருக்கும் ஒரு கண்ட்ரோல் வைப்பது மாயையின் வேலை. சுய கட்டுப்பாடுள்ள சில உயிர்கள் நாம் பல பிராணிகளை பற்றி படிக்கும்போது, கீழே கண்டதை அறிகிறோம்.
இயற்கையி@ல@ய, சுய கட்டுப்புடன் வாழும் சில உயிர்கள்:
ஆஸ்ரேலிய கடற்கரையில் (ஒரு காலத்தில்) ஒவ்வொரு ஆண்டும் திமிங்கிலங்கள் கரையில் ஒதுங்கி இறக்கும். இது ஒரு விதமான தற்கொலை. பெருகும் திமிங்கிலங்கள், தேவையான உணவு
கிடைக்காது போனால், தங்கள் இன@ம அழிந்துவிடும் என்று தானாகவே தன் இனத்தை கட்டுப்படுத்திக் கொள்வதாக ஆரா#ச்சியாளர்கள் செய்த மு டிவு.
அதே போல, கண்டம்விட்டுக் கண்டம் பறக்கும் பறவைகள். தனது இனத்தைச் சேர்ந்த நடுவயது பறவைகளை (இனப்பெருக்கம் செய்யத் தகுதியானவைகளை) விட்டுவிட்டு, இளம் மற்றும், முதிய பறவைகள் மாத்திரம் கண்டம் விட்டு கண்டம் பறப்பதை அறிந்துள்ளார்கள். ஒவ்வொரு முறையும் பல ஆயிரம் பறக்கத் தொடங்கி சில நூறுகளே வந்து சேருமாம்.
இதுவும் தானாகவே தன் இனத்தை கட்டுப் படுத்திக்கொள்ள இயற்கை அல்லது மாயை செய்யும் உத்தி.
மாயை எதற்காக உயிர்களின் பிறப்பையும் பிறகு அவற்றின் அழிவையும் உருவாக்குகிறது?
முதலில், உயிர்கள் பிறப்பதும் அழிவதும் மனிதனின் வசதிக்காக் இல்லை. மாறாக, படைத்த பிரம்மாவுக்காக என்பதை மனதில் இருத்தி, சிந்தியுங்கள்.. மனித உடலையும் பிரமனின் உடலையும், ஒரு பன்னாட்டு நிறுவனமாக பாருங்கள்.
நம் நாட்டில், ஒரு நிறுவனம் லாபத்தில் நடக்காவிட்டாலும், இட்ட முதல் கரைந்த பின்னாலும் கடனில் ஓட்டி, கதவடைக்கும் போது, கதவைத் திறக்கும் சன்தர்ப்பமே இல்லாமல் செய்திடுவோம்.
வளர்ந்த நாடுகளில் நிறுவனங்களை, ஒரு உயிராக மதிக்கிறார்கள். நிறுவனம் உயிரோடும், பலமாகவும் இருந்தால், தொழிலாளிகளும் பொதுமக்களும் பயன் அடைவார்கள், இல்லையா?
பன்னாட்டு நிறுவனங்கள், ஆட்கள் அவசியம் இல்லாத நாட்களில், அல்லது தொழிலாளிகளுக்கு வேலை குறைந்தால், ஆள் குறைப்பு செய்வதும், தேவைப்படும் நேரத்தில் புதியதாக ஆள் எடுப்பது இன்று, நமக்கு நன்றாகவே தெரியும். செய்யாத வேலைக்கு செலவு செய்தாலும், அதிக உற்பத்தி தேவையுள்ள போது தொழிலாளர்களை அமர்த்தாவிட்டாலும் நிறுவனம் நலிந்துவிடும்.
அதேபோல, நாம் அசையும்போதும், வேலை செய்யும்போதும், நம்மில் உள்ள சிறிய உயிர்கள் அதிகமாக தேவை. நாம் உறங்கும் போது அவ்வளவு அதிகம் தேவை இல்லை.
மனிதனுக்கும், நாம் அறியும் பலவகை உயிர்களும் அழியும் போது, பிரம்மா ரெஸ்ட் எடுக்கிறார் என்று நினைக்கலாம்.
ஒரு புறம் அழிகள் நடைந்தேரும் போது, மறுபுறம், புதிய உயிர்கள் தடையில்லாமல் உருவாகிக் கொண்டிருப்பதை கவனிக்க வேண்டும். மிகப் பெரிய பளுவும், அதிக பரிமாணங்களுடன் தயாரிக்கப்பட்ட, புதிய விமானங்களில் டைனமிக் ஈக்குவலிபிருயம் எனப்படும் தத்துவம், இப்படிப்பட்டது.
நம்மை ஒரு இருட்டில் அடைத்து நம்மை தன் இஷ்டம்போல இயக்குவது மாயை. ஆனால் நமது இயக்கத்தால் பயன் அடைவது என்ன@வா, பிரம்மா.. இதை பல ஞானிகள் சந்தேகமில்லாமல் அறிந்திருக்கிறார்கள். அவர் அறிந்ததை தங்களால் இயன்றவரை நமக்கு தெரிவிக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.