அத்தியாயம் 15
மாயா – ஒரு அறிமுகம்
ஒரு மாறுதலுக்காக, இந்த அத்யாயததை, கேள்வி பதிலாக ஆரம்பிப்போம்.
கேள்வி – மனிதர்களின் துன்பத்திற்கு காரணம் மாயை என்று சொல்லப் படுகிறதே ! அப்படியானால் மாயையை உருவாக்கியது யார்? மயையை உருவாகியது கடவுள் என்றால், கடவுள் ஓரு சாடிஸ்ட்டா?
பதில் – யார் உருவாக்கினார்கள் என்ற கேள்வியை விட, மாயை இருப்பதை நாம் உணருவது எப்படி? ஏன் உருவானது? அதன் தாக்கத்திலிருந்து தப்புவது எப்படி? இந்த கேள்விகள் நியாயமானது.
நிச்சயமாக எவரையும் துன்பப்படுத்தும் எண்ணத்துடன் எதுவும் உருவாக்கப்படுவதில்லை. இந்தக் கண்ணுக்கு தெரியாத, மாயா என்ற சமாச்சாரம், மனிதனை துரத்துவதாகச் சொல்லாத ஞானிகள் இல்லை. இது மனம் சம்பந்தமான சமாச்சாரம். எனவே மனதை முதலில் ஆராயலாம்.
கேள்வி : மாயை மனிதனை கட்டுப்படுத்துவது எப்படி?
பதில் : உள் மனது என்று இருப்பதையும் அது எப்படி மனிதன் அனிச்சையாக செயல்பட வைக்கிறது என்று பார்த்தோம் இல்லையா?
நம் எல்லா உயிரிலும் அதனதன் உள் மனத்திலே, பல, ஓரே விதமான, பல பொய்கள் வசிக்கின்றன. இவைகள் பொய் என்று வெளி மனதிற்கு தெரியும். உள் மனது தன்னிச்சையாக, (அனிச்சையாக) செயல்படுவதால் வெளி மனது உண்மையை அறிந்திருந்தும், பயன் ஏதுமில்லை.
இவற்றில் முக்கியமான பொய்கள்:
- நாம் மரணம் இல்லாதவர்கள், என்றும் நிலைத்திருப்பவர்கள் என்பது போன்ற எண்ணம்.
நாம் எல்லை இல்லாமல் சொத்து சேர்ப்பது, பிறருடன் பகை கொள்வது, நமது நாட்டில் பிறந்த மக்களை ஏமாற்றி, பட்டினி போட்டு வெளிநாட்டு வங்கியில் கோடி கோடியாகப் பணம் சேர்ப்பது – போன்ற எல்லா செயல்களுக்கும் அடிப்படை இந்த மாயைநமது உள் மனதிலே விதைத்த பொய்களே.
- விடாத மரண பயம். உயிர் வாழ, பொருள் மிக மிக அவசியமானது என்ற எண்ணம், பொருள் இல்லாவிட்டால், மரணம் நம்மை விழுங்கிவிடும் என்ற பயம்.
- காதல், நண்பர்கள் இரண்டுமே வாழ்வில் தவிற்க இயலாதது. மற்றும் முக்கியமானது என்ற எண்ணம்.
பொதுவாக, நமது வாழ்வில் அடிக்கடி சந்திக்கும் சூழ்நிலை, நாம் பல முறை அனுபவித்த மிகவும் நல்ல மற்றும் மிகவும் மோசமான அனுபவங்களின் படிவங்கள் நமது உள் மனதில் சேருகிறது.
நமது வெளி மனதில் தங்குவது, முற்றிலும் புதிய அனுபவங்களும், மிக குறைந்த அளவில் மாத்திரமே நாம் பெற்ற அனுபங்களும் மாத்திரம். அதுவும், புதிய அனுபவங்கள் நம்மை அடையும்போது, மறைந்து விடுகின்றன.
மாயையானது, ஏழை, பணக்காரர், அறிவுள்ளவர், இல்லாதவர் என்ற வித்யாசமில்லாமல், மேலே குறிப்பிட்ட மூன்று பொய்களை தவறாமல் எல்லா மனிதரின் உள் மனதிலும் இடம் பெறவைக்கிறது.
அதிக அறிவுள்ள மனிதர்களான ஞானிகளை, இந்த பொ#கள் சிறிதும் பாதிப்பதில்லை. ஏனென்றால், அவர்கள் அடைந்த அறிவு, மாயை உருவாக்கிய பொ#கள் நிரம்பிய உள் மனதைக் காலி செய்கிறது. காலியான உள் மனதை, அவர்கள் பாடுபட்டு அடைந்த அ@த அறிவால்நிரப்ப, ஞானிகள் நம்மைவிட – சிந்தனை, செயல், வாழ்க்கையின் குறிக்@காள் என்று – எல்லாவிதங்களிலும் @வறுபடுகிறார்கள்.
மாயை, அறிவுள்ள மக்களை குறைவாகவும் அறிவில் குறைவுள்ள வரை அதிகமாகவே பாதித்துவிடுகிறது.
மாயை போடும் திரை
இதைப் போன்ற கண்களால் காணமு டியாதவைகளை மனகண்களால் (மனதில் உருவகம் செயது கொள்ள) காண முயற்சி செய்வது மிகவும் அவசியம்.
வெளி மனதின் சேமிக்கும் வசதி உள் மனதின் சேமிப்பைவிடக் குறைவு. புதிய அனுபவங்கள் வரும்@பாது வெளிமனதிலுள்ள பல அனுபங்கள் அழிகின்றன. அதனால், வெளி மனதில் சேமித்தது அதிக நாள் நிலைத்தும் இருப்பதில்லை என்கி@றாம். அரசியல் பிரமு கர்கள் அளித்த வாக்குறுதிகளை நாம் மறந்து விடுகி@றாம்.
கடந்த காலத்தில் பி@ளடுகம்பெனிகள் மக்களின் சேமிப்புகளை விழுங்கிய கதைகளை, வெளி நாட்டில் @வலை வாங்கித்தருவதாக ஏமாற்றிய ஏஜெண்டுகள் பற்றிய செய்திகள், அடைந்த ஏமாற்றங்கள் மற்றும் @தாõல்விகள் எல்லா@ம வெளி மனதில் தங்கிய சில நாட்களில் காற்றில் கரைந்து விடுகின்றன.
அறிவுள்ளவர்கள் அல்லது ஞானிகளின் தன்மை (அல்லது சக்தி) வெளி மனதில் அடைந்த செய்திகளை சாரத்தைப் பிரித்து உள்மனதில் பத்திரமாக செர்ப்ப@த!
அப்படி சேர்த்தவரை, அனிச்சையாக செயல்பட்டாலும் என்று@ம தோல்விகள் தொடராது, வாழ்வில் ஏமாற்றங்கள் நிகழாது, வாழ்க்கையின் குறிக்கோள்கள் மாறுபடும்.
சிந்தித்துச் செயல்படுவது மிகவும் சிலரே!
நாம் பெரும்பாலான சமயங்களில் உள் மனதின் துணையுடனே வாழ்கிறோம். ஆகவே உள் மனது மனிதனின் செயல்களை கட்டுப்படுத்துகிறது.
மாயை கொடுத்த பொய்கள் உள் மனதிலே இருக்கின்றன சில நிகழ்சிகளும் காட்சிகளும் – முக்கியமாக – இறப்பு, அல்லது ஓரு மிக கொடூரமான விபத்து, தீவிர நோய், அழிவுகள், மனதை கலக்கும் வகையான உடல் ஊனமான தோற்றங்கள் – மனிதனின் வெளிமனதில் சில நாட்கள் தங்கி, மனிதரின் செயல்பாடுகளை, அந்த சில காலத்திற்கு நல்லவிதமாக மாற்றுகின்றன. இந்தக் காட்சிகள் எவருக்கு@ம புதியதில்லை. என்றாலும் நம் மனதில் நிலைத்து இருப்பதில்லை இல்லையா?
இந்த நிகழ்வை ஆராய்ந்து பார்த்தால், சில மனதை உலுக்கும் சில காட்சிகள் நம் செயல்பாடுகளை உள் மனதின் கட்டுப் பாட்டிலிருந்து சிறிது காலம் விலக்கி, வெளிமனதின் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது என்று உணரலாம்.
இந்த மனமாற்றத்தை, மாயையானது சாதாரணமாக, உண்மைகளை மனதிலிலிருந்து மறைத்தே இருக்கும் தன் திரையை, சிறிது விலக்கிக் கொள்வதாக சொல்லப்படுகிறது.
மனித வாழ்வில் மாயையின் பொய்கள் இன்றியமையாதது
மாயை உருவாக்கிய பொய்கள் மனிதனின் உள் மனதில் இடம் பெறவில்லையானால், மனிதன் செயல்பாடு நின்றுவிடும், அதனால் ஓட்டங்கள் நின்றுவிடும். அதோடு, இந்த அண்டமும் அழிந்துவிடும். இந்த விதமாகவும் நாம் மாயையை விளக்கலாம். வேறுவிதமாகவும் இந்த மாயையை அணுகலாம்.
மாயையும் – அறிவு – சேமிப்பது.
மனிதருக்கு, இயற்கையாகவே அறியும் திறனில் குறைவு வருவது ஒருபக்கம் இருக்க, அறிந்ததை சேமிப்பதில் அவ்வப்போது, (நினைவில் கொள்ள) குறைவு வருவதையும் மாயை செய்யும் வேலையின் விளைவாக கொள்ளலாம். விளைவு ஒன்றுதானே?
இந்த நினைவாற்றலின் குறைவு, அறிவில் குறைவாகவும் பலர் நினைக்க இடம் உண்டுஇல்லையா?
அண்டமும் – மாயையும்.
புத்தியை ஓரு கம்ப்யூட்டராக கற்பனை செய்து பார்த்தோம்.
இப்போது மாயையையும் ஒரு கம்ப்யூட்டராக நினைத்துப் பார்ப்போம்.
பிரமன் என்ற இந்த அண்டம் ஒரு கம்ப்யூட்டர் என்றால், இதைஇயக்க மாயை என்ற (சக்தியும்) சாப்ட்வேரையும் அவரிடம் உள்ளது என்று கொள்ளலாம்.
மாயை ஒரு சக்தி. இந்த. மாயை, அகில அண்டம் இயங்க உருவானது. மனிதனை துன்புறுத்துவது அதன் நோக்கம் இல்லை. மனிதனின் துயரங்கள் என்பது மாயை தன் வேலையை செய்யும் போது, தவிற்கமு டியாத ஒரு உப-விளைவு. அவ்வளவுதான்.
எதற்காக இந்த இறைவன் நம்மை படைத்து, அதோடு மாயையையும் படைத்து நம்மை படுத்துகிறான் என்று பக்தர்கள் கேட்பதுண்டு. மனிதனை மையமாக வைத்து அலசினால், மனிதன் பொருள் உலகில் அவதிப்படுவது – மாயையினால் என்ற மு டிவு சரியாக தோன்றும்.
அதை விட்டு, பெரிய அண்டத்தை மையமாக வைத்து பார்த்தாலோ! இந்த எண்ணம் தவறு என்பது புரியும். திரையிட்ட மனதினால், மனிதன் அதிவேகமாக செயல்படுகிறான். அழிவை நோக்கி போகிறான் அவன் வேகத்தை அவ்வப்போது குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் அழிந்திடுவான். இதற்கு ஒரு இடைவேளை, @தவை. மாயை தன் திரையை விலக்குவது, அல்லது மனதிலிருந்து சில காலம் மறைந்திருந்ததை மீண்டும் நினைவில் கொண்டு வருவது.
மறந்த அல்லது மறைந்த அந்த அறிவை அல்லது உண்மையை மீண்டும் வெளிமனதில் சேமிக்கிறது (மாயை?!). சில காலம் சென்ற பிறகு, உண்மை மீண்டும் மறையும். இந்த கால-கட்டத்தில் மனிதன் வித்தியாசமாகச் செயல்படுகிறான்.
நாம் அறிந்ததை, சேமித்ததை மனதிலிருந்து குறைந்த காலத்திலேயே மறையும் தன்மையையே, உண்மையை மாயை திரையிட்டு நம்மிடமிருந்து மறைப்பத்தாக நாம் உணர்கிறோம்.
மாயை பிரமனுக்கு அவசியம்
இந்து மதத்தில்-சக்தியை, மஹாமாயே என்று கூவி வணங்குவதை – குறிப்படுவதை கவனியுங்கள். ஏனென்றால் மாயையின் வேலை, பிரம்மனுக்கு, இறுதியாக, நம்மை படைத்த இறைவனுக்குத் தேவை.
கேள்வி – ஞானிகள் மாயையின் பிடியிலிருந்து விலகியவர்கள். ஞானிகளால் பயன் பெருவதுயார்?
பதில் – மாயா, ஒரு அலோபதி மருந்துபோல.
குறிப்பாக, வலியை குறைக்கத் தின்னும் இந்த வகை மருந்துகள், நிச்சயமாக சில மணி நேரங்கள்வரை வலியைப் போக்கும். ஆனால், அதன் உபவிளைவு, புதியதாக, வயிற்றில் உபாதைகளைத் தொடங்கும். கொலஸ்ட்ரால் என்ற வியாதிக்குத் தரப்படும் மருந்து கிட்னியைப் பாதிக்கும் என்று அறிகி@றாம்.
அதே போல மனிதனை ஒட-ஆடவைக்க மாயை செய்யும் வேலை, மனிதனை பலவகை துன்பத்தில் தள்ளுவதை உணர்கிறோம். மனிதன் துன்பத்தில் மாட்டினால் ஓடவேண்டிய ஒட்டம் தடைபடும். மனிதன் உண்மையை உணர்ந்தாலும் மனித செயல்பாடு நின்றுவிடும். பிரமன் கோபம் கொள்வார். அதற்காக, அடிபட்ட மனிதனின் மனக்காயம் ஆறி, மீண்டும் நன்றாக ஒட, ஒரு உத்தி தேவை.
ஞானியே ஒரு மாயையின் படைப்புதானே! மாயையால் (திரையை மு ழுவதும் விலக்கி ) உருவாகிய உயிர்தா@ன? சாதாரண மனிதரின் வலியைப் @பாக்கி திரும்பவும் செயலாக்கத்திற்கு உதவ இந்த ஞானிகள் உதவுகிறார்கள். இதற்காக@வ, மாயை, ஞானிகளை உருவாக்கியது.
இந்த ஞானிகளின் வேலை மருந்து வேலை செய்வது போலத்தான். ஞானிகள் மக்களை சமாதானம் செய்து பல அறிவுறைகளையும், ஆறுதல்களையும் அள்ளித்தந்து, நாளையும் கோளையும் குறை சொல்லி மந்திரமும் எந்திரமும் தந்து மக்களின் மனக்காயங்களை ஆற்ற, வலி ஆறிய மக்கள் மீண்டும் புத்துணர்ச்சியுடன் ஓடத்தொடங்குகிறார்கள்.
மாயைவிலகிய மகாகவி
மகாகவி சுப்பிரமணிய பாரதியை, சிந்தனையாளராக, தேசீய கவியாக, ஏழையின் நண்பனாக, குழந்தைகளின் கவியாக, ஜாதிகளை ஒழிக்க பாடுபட்டவராக பெண்விடுதலைக்கு குரல் கொடுத்தவராக, பல கோணங்களில் நாம் அறிவோம்.
நான் பல காலம் அறியாதது, பாரதியை ஒரு யோகியாக, மாயை கலைந்தவராக. இதை பாரதி என்ற அவரை பற்றிய ஓரு திரைப் படத்தில் ஒரு பாடல் மூலம் அறியலாம். நானும் பாரதியார் பாடல்கள் என்ற சில புத்தகத்தகங்களில் தேடோ தேடோ என்று தேடியும் இந்தப் பாடல் கிடைக்கவில்லை.
இந்த பாடலின் முதல் வரி: நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே ! நீ நிஜம் தானோ?
சுப்பிரமணிய பாரதி, ஆன்மிகவாதியாக மாறும் நேரத்தில், மற்ற ஆன்மீகவாதிகள் எல்லோருக்கும் வந்த இதே சந்தேகத்தை அடைந்து அதை பாட்டாகவும் பாடிவிட்டார்.
நாம் காண்பது எல்லாமே கனவு மயக்கங்களோ? !
உண்மையைத் தேட கணக்கில்லாத மனிதர்கள் இடைவிடாது கிளம்பிக் கொண்டே இருக்கிறார்கள். அப்படியானால் நாம் காண்பது எல்லாமே கனவோ? நாம் அறிவது எல்லாமே பொய்யோ?
அப்படியும் சொல்வதற்கில்லை. உண்மை என்பது ஒன்றில்லை. உண்மைகள் கணக்கில் அடங்காதவை. நாம் உணர்வது மாத்திரம் ஒரு சில மட்டுமே.
நாம் காண்பது எல்லாமே பொய் என்பது சரியல்ல. ஆனால் உணர்வது மாத்திரமே உண்மை என்பதுதான் பொய்.
நாம் புலனாலும், அறிவாலும் உண்மையின் ஒரு சில முகங்களை மாத்திரமே உணர மு டிகிறது. உள்ள எல்லா மு கங்களையும் இல்லை. ஆனால், நாம் புலன்களால் அறிவது மட்டுமே உண்மை. அதைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்ற எண்ணம் மட்டுமே பொய்.
நாம் அறியாத மற்றும் நம்மால் அறியமு டியாத பல உண்மைகள் உள்ளன. ஞானிகளும் விஞ்ஞானிகளும் தேடுவது நாம் அறியாத, அறியமு டியாத அந்த உண்மைகளைத்தான்.
இந்த கட்டத்தில், இதுவரை நாம் அறிந்ததைக் கொண்டு, அறியாததை த் தேடிப்பார்க்கலாம். இது தர்க்க சாத்திர அடிப்படை மட்டுமில்லை. மாறாக எல்லா விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களின் அனுகு முறையின் அடிப்படையும்தான்.
குறிபிட்ட சிலர் – அறிவியல் நிபுணர், யோகி. அதிகம் படித்தவர், நாலும் தெரிந்தவர்கள் இவர்கள் சாதாரண மக்களைவிட அதிகப்படியாக அறிந்ததுதான் என்ன?
மாயையை ஏன் கம்ப்யூட்டர் என்கிறோம்?.
லாஜிக்கலாக சிந்தித்தால், நம்மை மீறிய ஒரு சக்தி நம்மை ஆட்டி வைப்பதாக பெரியவர்கள் சொல்லி நாம் கேட்டிருக்கிறோம் இல்லையா?
இது உண்மையாக இருக்க வாய்ப்பு உள்ளது, ஆனால் வழக்கமாக கடவுளை மனித உருவில் தயாரித்து, அதற்கு உபரியாக நான்கு கை பத்து தலை போன்ற அதிகப்படி உதிரி பாகங்களுடன் காட்சியளிப்பது அல்ல..
பெரிய ரசாயன, உலோக தொழில் சாலைகளின் இயந்திரங்கள் ஒரு காலத்தில், மனிதரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போதைய இயந்திரங்கள் என்னவோ பெரும்பாலும் கம்ப்பூட்டரின் உதவியோடு எலக்ட்ரானிக் சாதனங்களை வைத்து உருவாக்கிய கருவிகளால் கட்டுபடுத்தப்படுகிறது.
இதைப்போல, இந்த நம்மை மீறிய சக்தியும், தற்போதய நிலமையை அனுசரித்து எத்தனை பொருள் உலக மக்கள் வேண்டும், எத்தனை அருள் உலக மக்கள் அவசியம் என்று கணக்கிட்டு, அதன்படி சில பொருள் உலக மக்களை அருள் உலகத்திற்கு தள்ளலாம் என்று கணக்கிட்டு செயல்பட வாய்ப்பு உண்டு.
இந்த பெரிய சக்திக்கு நம்மைப் போல ஒரு தனிப்பட்ட மனிதர், அல்லது ஆத்மா என்றெல்லாம் அக்கரையோ அல்லது கவலை படுவதற்கோ நியாயம் இல்லை. குறிபிட்ட நேரத்தில், மக்கள் ரகங்களில் தேவையான கலவை இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளும். குறைவிருந்தால், ஒரு கண்ட்ரோல், அதிகமானால் வேறு ஒரு கண்ட்ரோல் சிக்னல்களை பிரப்பித்து சமநிலைக்கு கொண்டுவரும்.