அத்தியாயம் 16
ஓரு கதை.
மாயை விலகின மனிதன் எப்படி இருப்பான்?
இப்போது வேறு ஒரு கதை. இதில் கதாநாயகன் சரியான கல்லுளி மங்கன் என்பார்களே, அப்படி ஒரு ஆள்.
அவன் பெற்றோருக்கு, ஒரே மகன். எல்லா தாய்-தந்தையரையும் போல தன் மகனையும் மற்ற மனிதர்களைப் போல@வ வேலைவெட்டி, குடும்பம் பிள்ளை குட்டி என்று வாழ்வதை கண்டு களித்துவிட்டு நிம்மதியாக கண்ணைமூடக் கனவு கண்டார்கள். (இது மாயை விதைத்த ஏக்கம்)
சோம்பேரியாகத் திரிந்து வந்த தன் மகனுக்கு புத்தி சொல்ல ஓரு படித்த அனுபவமிக்க உறவினரை அணுகினார்கள். ஒரு படித்தவர் ஒப்புக்கொண்டார்.
ஒரு நாள், அந்த பெரியவர், தறுலை என்று தெரிந்தவர்களால் பெயர் கொடுக்கப்பட்ட, அந்த இளைஞனை கண்டார். அந்த இளைஞனிடம் தன்னை ஒரு உறவினர் என்று அறிமுப்படுத்திக் கொண்டு, மெதுவாக ஒரு பேச்சுவார்தையைத் தொடங்கினார்.
பெரியவர் எதிர்பாராத வகையில், இந்த இளைஞன் பணிவுடன் நின்று, கேட்ட கேள்விகளுக்கு நன்றாகவே பதில் சொன்னான். பெரியவர் மகிழ்ந்தார். வந்த காரியம், விரைவில் நலமாக நடந்தேரும் என்று நம்பிக்கை. அதில் தோன்றிய மகிழ்சியுடன் தொடர்ந்தார்.
இவ்வளவு விவரம் தெரிந்த இளைஞனான நீ, ஒரு வேலை- வெட்டி தேடிக் கொண்டாலோ, என்றார் பெரியவர். “தேடிக் கொண்டேன், அடுத்து என்ன செய்யவேண்டும்? என்று பதிலளித்தான் இளைஞன், பணிவாக.
பெரியவர் மகிழ்ந்தார். அடுத்ததாக கல்யாணம்-கார்த்திகை என்று செய்து கொள் என்றார் பெரியவர்.
நீங்கள் சுட்டிக் காட்டிய பெண்ணையே மணக்கிறேன், அடுத்து என்ன செய்ய உத்தரவிடுவீர்களோ? என்ற கேள்வியோடு பெரியவரைப் பார்த்தான் இளைஞன்.
பெரியவர், மனம் நெகிழ்ந்தார். பிள்ளை-குட்டி பெற்றுக்கொள் என்றார்.
அதைத் தொடர்ந்த இளைஞன், அடுத்து என்னவோ என்றான். “குழந்தைகளை வளர்த்து பெரியதாக்கி, தன் காலில் நிற்கச் செய் “ என்றார். தொடர்ந்து அவர்களுக்கு கல்யாணம் கார்த்திகை நடத்து என்று முடித்தார்.
“அடுத்து என்னவோ “? என்றான் இளைஞன்.
சற்றே யோசித்து, அவ்வளவுதான். “இப்போது நிம்மதியாக இளைப்பாறு, என்று பெரியவர் முடித்தார்.
“ பெரியவரே, என்று தொடர்ந்தான் இளைஞன். “நிம்மதியாக இளைப்பாறுவது தான் வாழ்வின் லட்சியமென்றால், அதைத்தானே இப்போதும் நான் செய்கிறேன். நடுவில், திருமணம் – பிள்ளை குட்டி பெற்று, பல அல்லல்களை சந்தித்து பிறகு இளைப் பாறுவானேன்?
“இப்பொழுது நான் இளைப்பாரிக் கொண்டிருப்பதில் என்ன தவறு இருக்கிறது “ என்றான், இந்த புத்திசாலி இளைஞன்.
வாயடைத்துப் போனார் பெரியவர்.
ஒரு விதத்தில் இந்த இளைஞனை மாயை தன் வலையில் சிக்க வைக்க இயலவில்லை. அதனால், பெரியவரை உபயோகித்தது. பெரியவரும் இந்த முயற்சியிலும் தோற்க, இறுதியாக தோற்றது என்னவோ மாயைதான்.
இது எப்படிப்பட்ட சக்தி, எதற்காக என்பதை ஒரு குத்து மதிப்பாக உணரலாம். இல்லை உளரலாம். இல்லை கற்பனை செய்து பார்க்கலாம்.