28
ஹெலன் கெல்லர் பல இடங்களில் பேசப்பட்ட தத்துவங்கள் அனுபவம் சார்ந்தவையாக இருந்தன. அவை மற்றவர்களின் வாழ்க்கைக்கும் பொருந்தும் படியாக உள்ளன. இதனை ஹெலனின் பொன்மொழிகள் என்று பலராலும் போற்றப்படுகின்றன.
பறக்க விரும்பினால் படர முடியாது.
மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை.
ஒரு முறை கெல்லரிடம் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் என்ன சாதித்தீர்கள் என்று கேட்டனர். அதற்கு
“இந்த இருண்ட அமைதியான என் வாழ்வை கடவுள் ஏதோ ஒரு திட்டத்தோடு தான் படைத்திருக்கிறார் என்று நம்புகிறேன். அதை என்றாவது ஒரு நாள் நான் உணர்வேன். அப்போது தான் நான் அதுகுறித்து மகிழ்வேன்” என்று கூறினார்.
வாழ்க்கையைப் பற்றி அவர் கூறியதாவது…
வாழ்க்கை என்பது துணிச்சல் மிகுந்த
தீரச் செயல் அல்லாமல் வேறு ஒன்றுல்ல.
ஹெலன் தனக்காகத் திறக்கப்பட்ட கதவுகளை வெகு எளிதில் அறிந்து கொண்டார். தன் இழப்புகளை அலட்சியப்படுத்தி வாழ்வின் இன்பங்களை உணர்ந்து கற்றார். இதனால்தான் அவரால் அரிய பல சாதனைகளைப் புரிய முடிந்தது.
“இன்பத்தின் ஒரு கதவு மூடும் போது, மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால் மூடிய கதவையே உற்று நோக்குவதால் நமக்காகத் திறந்திருக்கும் கதவை நாம் பார்ப்பதில்லை” என்று சொன்னார்.
ஒரு கூட்டத்தில் அமெரிக்க எழுத்தாளர் ஹெலன் கெல்லர் பேசும் போது எனக்கு அமைதியைத் தரும் புரிதலையே என்றும் விரும்புகிறேன் என்றார். அது ஒரு வாழ்வியல் தத்துவமாகவே கருதப்படுகிறது. அதாவது…
“எனக்கு என்னுடைய புரிதலுக்கு மீறிய அமைதி என்றுமே தேவை கிடையாது. மாறாக எனக்கு அமைதியினைத் தரும் புரிதலையே என்றும் நான் விரும்புகிறேன்.”
இவரின் கருத்துக்களின் மூலம் உலகில் மக்களுக்கு நம்பிக்கை என்னும் விதைகளைத் தூவிச் சென்றார் என்றே சொல்லலாம்.
‘வாழ்க்கையில், இழப்பு என்பதே இல்லை; ஒன்று போனால் இன்னொன்று வரும்! அந்த நம்பிக்கை இருந்தால் வாழ்க்கை வெறுமை ஆகாது’ என்று ஹெலன் சொன்னார். தானே அப்படி வாழ்ந்தும் காட்டினார். தன்னம்பிக்கையும், துணிவும் கொண்டு மகிழ்ச்சியோடு வாழ ஹெலன் நமக்கு வழியும் காட்டியுள்ளார்.