12

உண்மையைத் தேடுபவர்களுக்கு ஒரு தெளிவான பாதையைக் காட்டும் நூல் “உண்மையைத் தேடி.“ உலகிற்கு அடிப்படையாகவும், உயிர்களின் இயக்கத்திற்கு ஆதாரமாகவும் இருப்பது எது என்பது பற்றி ‘உண்மை’ என்ற சொல்லைக் கொண்டு இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. சுமார் 50 உட்தலைப்பிற்கும் மேலாக, உலகத்தில் நிலவி வரும் பல்வேறு மத சித்தாந்தங்களை, பல்வேறு அவதார புருடர்களை, கொள்கைகளை, வேதாந்தக் கருத்துகளை, தத்துவங்களை விரிவாகவும், விளக்கமாகவும் ஆய்வு செய்கின்றது இந்த நூல்.

இறைவன் என்பவன் யார், அவனை அடையும் மார்க்கம் என்ன, பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவது எப்படி, யார் ஒரு சரியான வழிகாட்டி, ப்ரம்மம் என்பது என்ன, இறப்பிற்குப் பின் மனிதன் என்னவாகின்றான், அனிமிசம் என்றால் என்ன, சொராஸ்டர், மோசஸ், லா-சூ, பஹாய், தியாசபிகலின் தத்துவங்கள் என்ன சொல்கின்றன, ஜெ,கிருஷ்ணமூர்த்தி கூறுவது என்ன, உடல் தத்துவங்கள், உயிர்க் கூறுகள், இறவாமல் இருக்க என்ன வழி, சித்தர்கள் தத்துவம், யோகம், ஞானம், மந்திரம், தந்திரம், சோதிடம், ஆவிகள், ஏவல், பில்லி, சூனியம்…, தன்னறிவு, ஜீவன்முக்தி, பர வாழ்க்கை, தேவதைகள்… பற்றியெல்லாம் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது, இந்த நூலில்.

மேலும்…

புத்தர் ஏன் துறவியானார்?

வள்ளலார் பெற்ற சித்தி தான் என்ன? எப்படி அவர் தன் உடலை மறைத்துக் கொண்டார்?

ஆத்மா என்பது தான் என்ன? மனித உடலில் அதன் இருப்பிடம் யாது?

மனிதன் ஏன் பிறந்து, இறந்து மீண்டும் பிறக்க வேண்டும்?

சித்தர்களின் உண்மையான நோக்கம் என்ன?

ஒவ்வொரு மனிதனையும் அவனை அறியாமலே ஆட்டி வைக்கும் சக்தி எது?

தியானம் என்பது என்ன?

ஏழு உலகங்களுக்கும், மனித உடலின் ஏழு சக்கரங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

கனவுகள், ஆவிகள், தேவதைகள் இவற்றிற்கெல்லாம் உள்ள தொடர்பு என்ன?

மனிதன் எப்படித் தெய்வநிலைக்கு உயர்வது?…

தூல உடல், சூக்கும உடல், காரண உடல், அவற்றின் பயணம்…

இது போன்ற பல கருத்துக்கள் பற்றி இந்நூலில் மிக விரிவாக ஆய்வு செய்யப்படுள்ளது.

இந்நூலாசிரியர், முனைவர் பேராசிரியர் சுப்பிரமணியம் சந்திரன். அரசியல் தத்துவத்தில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் தம் நூலான “தமிழக ஆட்சியியல்” தமிழக அரசின் பரிசு பெற்றது. அரசியல் – ஆட்சியியல் அகராதியையும் தொகுத்துள்ளார். மற்றும் பல்வேறு நூல்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தகுந்ததாக ”உலக அரசியல்”, ”அயல் நாடுகளில் சுவாமி விவேகானந்தர்”, “அசரீரி” போன்ற நூல்களைக் குறிப்பிடலாம்.

“உண்மையைத் தேடி” என்ற தலைப்பில் வெளிவந்த இந்த நூல், தற்போது இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு ”மெய்ப்பொருள் தத்துவம்”, “ஆன்ம நெறி” என இரண்டு நூல்களாகக் கிடைக்கின்றது. Mystical, Philisophy, Spiritual துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த நூல் நிச்சயம் மேலும் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கும்.

புத்தகம் கிடைக்குமிடம்:

Sivaguru Pathippakam
7/40, East Chetty Street
St. Thomas Mount
Chennai- 600 016.

***

License

Share This Book