அரசு பள்ளி என்றாலே மோசம். பிள்ளைய அரசு பள்ளியில் படிக்க வைத்தால் என் கௌரவத்துக்கு பெரும் இழுக்கு தனியார் மெட்ரிக்பள்ளிகளே சிறந்தது எவ்வளவு கஸ்டப்பட்டாவது கடனவுடன வாங்கியாவது ஒரு மெட்ரிக் பள்ளியில் சேர்த்து விட்டுட்டா போதும் பிள்ளைகளோட எதிர்காலம் சுபிட்சமாயிடும் என பெரும்பாலான பெற்றோர்கள் நினைக்கிறாங்க!
இது எவ்வளவு பெரிய மோசடியான கருத்து மோசமான செயல் இந்த பொது கருத்து எப்படி உருவானது? தனியார் பள்ளி முதலாளிகளும் அரசும் தான் திட்டமிட்டு இக்கருத்தை உருவாக்கினர். அரசு கல்வி கொடுக்கும் கடமையிலிருந்து விலகதுவங்கியதுமே கல்வியில் தனியார் மய நடவடிக்கைகள் தீவிரமானது உன்மையில் தனியார் பள்ளிகள் சுபிட்சமான எதிர்காலத்தை உருவாக்குகிறதா? தேசப்பற்று உள்ள சிந்திக்கும் திறன்படைத்த மானவனையா உருவாக்குகிறது என்றால் நிச்சயமாக இல்லை. சிந்திக்கும் திறனற்ற இயந்திரங்களையே இப்பள்ளிகள் உருவாக்குகின்றது. சிறு பிரச்சனையை கூட நம்பிக்கையோடு எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொள்கின்றனர். குரூரமான வன்முறை கலாச்சாரமும் வளர்ந்து விட்டது. ஆம் தனியார் மற்றும் ரெசிடன்சி (உண்டு உறைவிட) பள்ளி மாணவர்களே அதிகமாக தற்கொலை செய்துகொள்கின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தகுதிவாந்த ஆசிரியர்கள் முழுமையான கட்டமைப்பு வசதிகள், பெரும்பாலான தனியார், பள்ளிகளிலும் இல்லை என்பதுவே உண்மை. அரசின் விதிக்கு மாறான கட்டண கொள்ளை இவற்றையெல்லாம் பகுத்து அறியவோ கேள்வி கேட்கவோ கூட நமது பெற்றோர்கள் முன்வருவதும் இல்லை. ஏனென்றால் அப்பள்ளி குறித்து மிகைப்படுத்தலும் விளம்பரங்களும் வேறு வகையான சித்திரங்களை உருவாக்கிவிடுகின்றன. இதனால் கிராமப்புற அரசு பள்ளி உட்பட மாணவர் சேர்கை மிகப்பெருமளவில் சரியத் துவங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டு விட்டன. மேலும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளன.
இந்நிலைக்கு யார் காரணம்? ஒரு காலத்தில் மாணவர் எண்ணிக்கையால் நிரம்பி வழிந்த அரசு பள்ளிகளில் இன்று பத்து இருபது பேரோடு மட்டும் காத்துவாங்குகின்றன. புதிய அரசு பள்ளிகளை துவங்கிட விரும்பாத அரசு சத்தமில்லாமல் மாணவர் எண்ணிக்கை இல்லையென்று சொல்லி பள்ளிகளை மூ டிவருகிறது. வேதனையளிக்கிறது. மறுபுறம் இலவச மடிக்கணினி உட்பட 14 வகையான இலவச நலத்திட்டங்களை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கி சாதனை படைத்தாக சொல்லிக்கொல்லும். அதிமுக அரசால் ஏன்? அரசு பள்ளிகளை சரிவிலிருந்து தடுக்க முடியவில்லை. உன்மையான பிரச்சனைகளை, அடிப்படை காரணிகளை ஆய்ந்து அறிந்து களைவதற்கு மாறாக தனியார் பள்ளிகளை போல் அங்கில வழி வகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனால் அரசு பள்ளிகளில் தொடரும் மாணவர் சரிவை தடுக்கமுடியாது. தாய்மொழி வழி கல்வி என்பதற்கு மாறாக அறிவியல் நடைமுறைக்கு எதிராக தமிழ் மொழியை வகுப்பறையிலிருந்து விரட்டியடிக்கும் வரலாற்றுப் பிழையை செய்துள்ளது. அதிமுக அரசு. தமிழ் சமூகத்துக்கு இதைவிட மற்றொரு துரோகத்தை செய்துவிட முடியாது. ஒரு அரசு பள்ளியை கூட மூடுவதற்கு அனுமதிக்க கூடாது. அப்படி மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் செயல்பட வைப்பதற்கான உருப்படியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதற்கான நிர்பந்தங்களையும் சமசரமற்ற போராட்டங்களை நாம் முன்னெடுத்து செல்ல வேண்டியுள்ளது.
தற்போது மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க கல்வி அமைப்பின் மீது இரண்டு வகையான தாக்குதல்களை தொடுத்து வருகிறது. கல்வி வணிகமயத்தை தீவிரப்படுத்துவதோடு பாடத்திட்டத்தில் இந்துத்துவ மதவெறி கருத்துக்களை திணித்து பொய்யையும், புரட்டையும் வரலாறாக மாற்றிட முயற்சிக்கும் பாசிச அரசின் நடவடிக்கைக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளையும் திரட்டி வலுமிக்க இயக்கத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது. மேலும் சரிவிலிருந்து அரசுபள்ளிகளை மீட்டெடுத்திட அரசுப் பள்ளி பாதுகாப்பு இயக்கத்தை முன்னெடுத்து செல்வோம்.
அரசு பள்ளிகளை பாதுகாக்க பலப்படுத்த…
இப்பிரசுரத்தை ஆயுதமாக அனைவரிடமும்
கொண்டு சேர்போம்…
ஜோ. ராஜ்மோகன்
இந்திய மாணவர் சங்கம்
மாநிலச் செயலாளர்.