6

இப்படி வருடந்தோறும் பல பள்ளிகளை மூடிக்கொண்டிருக்கும் அரசு, பெரும்பாலும் புதியதாய் திறப்பதில்லை என்பதும் வேதனைக்குரிய உண்மையாகும். ஆம். உங்கள் ஊரில் புதியதாக ஏதாவது அரசுப்பள்ளி துவங்கப்பட்டதாக உங்கள் நினைவில் உள்ளதா என்று கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.

1.6.1991லிருந்துதான் தனியார் சுயநிதிப்பள்ளிகள் துவங்க அனுமதிக்கப்பட்டதாக அரசு கூறுகிறது. ஆனால், இந்த இருபத்துமூன்று ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளோடு சவால் விட்டு எப்படி வளரமுடிகிறது? ஒரு தனிநபரின் பள்ளி தரமாய் இருக்கும். ஆனால் சகல அதிகாரமும் கொண்ட ஒரு மாநில அரசு துவங்கும் பள்ளி சீர்கெடும் என்றால், அதற்குக் காரணம் அரசாகத்தானே இருக்கமுடியும்? ஒவ்வொரு ஊரிலும் புதிது புதிதாய் தனியார் பள்ளிகள் துவங்கப்பட்டுக்கொண்டே இருக்கையில் அரசுப்பள்ளிகள் மட்டும் ஏன் பெருமளவில் துவங்கப்படுவதில்லை? கடந்த மூன்றாண்டுகளில் புதிதாய் துவங்கப்பட்டது வெறும் 54 தொடக்கப்பள்ளிகள் தான். அதுவும் கூட சும்மா திறக்கப்படவில்லை. ஒரு கிலோ மீட்டருக்குள் தொடக்கப்பள்ளி இருக்கவேண்டும் என கட்டாய மற்றும் இலவசக் கல்வி உரிமைச்சட்டம் கூறுவதால் துவங்கப்பட்டதுதான். ஆனால், மூடப்பட்டதோ பல நூறு.

கீழே உள்ள இரண்டு விபரங்களைப் பாருங்கள். ஒன்று பள்ளிகள் பற்றியான பட்டியல் மற்றொன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகள் எண்ணிக்கை குறித்த வரைபடம்.

பள்ளிகளின் எண்ணிக்கை

. – பள்ளிகளின் வகை அரசு அரசு சுயநிதி மொத்தம்

எண் உதவி பெறும்

1. தொடக்கப்பள்ளிகள் 23928 5053 6196 35177

2. நடுநிலைப் பள்ளிகள் 7260 1556 934 9750

3. உயர்நிலைப் பள்ளிகள் 3044 633 1925 5602

4. மேல்நிலைப் பள்ளிகள் 2727 1165 2407 6299

மொத்தம் 36959 8407 11462 56828

ஆசிரியர்களின் எண்ணிக்கை

. பள்ளிகளின் வகை அரசு அரசு சுயநிதி மொத்தம்

எண் உதவி பெறும்

1. தொடக்கப்பள்ளிகள் 64855 23446 54866 143167

2. நடுநிலைப் பள்ளிகள் 50508 15312 12919 78739

3. உயர்நிலைப் பள்ளிகள் 27891 6855 39466 74212

4. மேல்நிலைப் பள்ளிகள் 73616 36820 102773 213209

மொத்தம் 216870 82433 210024 509327

மாணவர்களின் எண்ணிக்கை

. பள்ளிகளின் வகை அரசு அரசு சுயநிதி மொத்தம்

எண் உதவி பெறும்

1. தொடக்கப்பள்ளிகள் 1487031 658685 814640 2960356

2. நடுநிலைப் பள்ளிகள் 1249738 523460 235384 2008582

3. உயர்நிலைப் பள்ளிகள் 684169 277480 873875 1835524

4. மேல்நிலைப் பள்ளிகள் 2234690 1652978 2673010 6560678

மொத்தம் 5655628 3112603 4596909 13365140

அதாவது, இரண்டு விசயங்கள் தெளிவாய்ப் புரியும்.. இன்றும் எண்ணிக்கையில் அதிகம் இருப்பது அரசுப்பள்ளிகள் தான். ஆனால், எண்ணிக்கையில் கிட்டத்தட்ட பாதியளவே உள்ள தனியார் பள்ளிகள் கிட்டத்தட்ட

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

எது நல்ல பள்ளி? பேசலாம் வாங்க! Copyright © 2015 by இல. சண்முகசுந்தரம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book