மனுநீதிச் சோழன் சிலை

ஆங்கிலேயன் நம்மை விட்டுச் சென்று அறுபத்தி ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும், ஆங்கிலேயனின் பழக்க வழக்கங்களை இந்தியர்களான நம்மைவிட்டு, அதிலும் குறிப்பாக தமிழர்களை விட்டுப் போவதாய் இல்லை. இல்லையில்லை, தமிழர்கள், புலி வாலை பிடித்த கதையாக, உடும்புப் பிடியாய் பிடித்துக்கொண்டு விடுவதாய் இல்லை.

தமிழன் என்று சொல்லடா; தலை நிமிர்ந்து நில்லடா! என்கிற தன்மானச் சொல்லாடல், தமிழன் என்று சொல்லாதேடா; தலை நிமிர்ந்து நிக்காதேடா! என்றதன்னலமிக்க சொல்லாடலாக மாறி விட்டது. இப்படி சொல்பவன் ஆங்கிலேயனோ, அடுத்த மொழிக்காரர்களோ அல்ல. மாறாக, தமிழர்களே! நீதி வழங்கும்தமிழனே என்பதுதான் தமிழர்களின் தலையெழுத்து!!

மதராஸ் என்பது சென்னை என்று பெயர் மாற்றம் பெற்ற மாநகரமாகி விட்டது. ஆனால், மதராஸ் உயர்நீதிமன்றம் என்பது மட்டும், இன்னும் சென்னைஉயர்நீதிமன்றமாக மாறவில்லை.

இம்மன்ற வளாகத்தில், நீதிக்கு இலக்கணமாகவும், நீதியை லட்சியமாகவும் கொண்ட மனுநீதிச் சோழனின் உருவச்சிலையை வைத்துள்ளார்கள். மனுநீதிச்சோழனது வரலாற்றில், கன்றை இழந்த பசு நீதி கேட்க, அதற்கு நீதி வழங்கப்பட்டது என்பது வரலாறு என்பது தமிழர்கள் மட்டுமல்லாது, மற்ற மொழிஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும் அறிந்ததே.

மனுநீதிச் சோழனது சிலையை உயர்நீதிமன்றத்தில் நிறுவியதன் நோக்கம், இதேபோல இவ்வுயர்நீதிமன்றமம் நீதிவழங்கும் என்பதை சொல்லாமல்சொல்லுவதற்குதான் என நீங்கள் நினைத்தால், அது மாபெறும் மடத்தனம். மாறாக, தமிழனின் பாரம்பரிய மிக்க நீதி வரலாற்றை எடுத்துரைத்து பெருமை பேசிக்கொள்ளத்தான் என நீங்கள் நினைத்தால், இதுவே புத்திசாலித்தனம் என்று நான் சொல்லவில்லை. நீதி வழங்க வேண்டிய நீதிபதிகள் சொல்கிறார்கள்.   

ஆங்கிலேயன் உட்பட அனைத்து மொழிக்காரர்களும் தமிழுக்கு அடிமையாகி, பெருமைமிக்க தமிழ்க் காவியங்கள், செய்யுள்கள், திருக்குறள்கள் எனஅனைத்தையும் தத்தமது மொழிகளில் மொழி பெயர்பதற்காகவே தமிழைக்கற்று, மொழிப்பெயர்த்த காலங்கள் மாறி, இப்போது அவர்களது அற்பமான,அபத்தமான, ஆபத்தான, ஆபாசமான விடயங்களை எல்லாம் பெருமையோடு தமிழில் மொழிப் பெயர்க்கத் தொடங்கி விட்டான், தன்னலத் தமிழன். விளைவு?  

மதம் பிடித்த மதத்தில், சதி செய்யும் சாதியில், ‘‘உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி இருப்பது போல, மொழியிலும் வந்து விட்டது. தமிழைப் படித்தவன், படிப்பவன்எல்லாம் தாழ்த்தப்பட்டவன் என்கிற தொனி பற்பல தரப்பிராலும் பரவலாக காணப்பட்டு, தற்போது நீதி வழங்கும் நீதிபதிகளிடம் கூட, எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது’’.

ஆம்! பசு தன் கண்ணீரால் பேசியதையே மனுவாக ஏற்று, தன் மகனை, தானே தேர்காலில் இட்டு, மாட்டுக்கும் & மனிதனுக்கும் சமநீதிதான் என, நீதியைநிலைநாட்டிய மனுநீதிச் சோழன் சிலை அமைந்துள்ள உயர்நீதிமன்றத்தில், நேற்றைய வழக்கு விசாரணையின் போது, சிவகுமார் என்கிற அடிப்படை சட்டஅறிவு அறவேயில்லாத, கூலிக்கு மாரடிக்கும் அரைவேக்காட்டுத் தமிழ் நிதிபதி, நான் ஒருபோதும் தமிழில் வழக்கை நடத்த அனுமதிக்க மாட்டேன் என்றும்,இதற்கு காரணமாக இந்திய அரசமைப்பில் இதற்கு வழியில்லை என்றும், ஆதலால், இந்த விவகாரத்தில் மேலும் தேவையற்ற சர்ச்சை ஏற்படுவதைத்தவிர்க்கும் வகையில், வேறு எந்த நீதிபதியிடமாவது விசாரணை செய்ய கொடுங்கள் என தலைமை நீதிபதிக்கு தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், நீதி வழங்க மனுவே தேவையில்லை; மாட்டின் கண்ணீரே போதுமானது என்று, தமிழர்களின் தலையாய நீதி முறைக்கு எடுத்துக்காட்டாய்விளங்கிய தமிழனுக்கும், தமிழர்களுக்கும், தாய்மொழி தமிழுக்கும், தன்னலத்திற்காகவே தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறார்”, அறிவு வறுமை மிக்கநிதிபதி சிவக்குமார்.

இந்திய அரசமைப்பு கோட்பாடு 350 இன்படி, ‘‘இந்திய குடிமகனாக உள்ள ஒருவர், தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மொழிகளில் தங்களது தாய் மொழிஎதுவோ, அம்மொழியிலேயே மத்திய அல்லது மாநில அரசு அதிகாரிகளிடம் அல்லது அரசின் அதிகாரம் பெற்றவர்களிடம் மனு கொடுக்க உரிமையுண்டு’’.

எனது இக்கோட்பாட்டுக் கூற்றில், உங்களில் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால், மத்திய சட்ட அமைச்சகம் தனது இணையத்தில் வெளியிட்டுள்ள இந்தியஅரசமைப்பின் ஆங்கில ஆக்கத்தினை படித்து அறிந்து கொள்ள, இங்கே சொடுக்கவும்.

இக்கோட்பாட்டின் கீழ் கொடுக்கப்படும் மனு என்ன மொழியில் கொடுக்கப்படுகிறதோ, அம்மொழியிலேயே பதிலும் தரப்பட வேண்டும் என்பதும் உள்அர்த்தமாகும் என்பதோடு, இக்கோட்பாடு சிறப்பான நெறிமுறைகளின் கீழ் வருவதால், உச்சநீதிமன்றத்தில் கூட, தத்தமது தாய்மொழிலேயே மனு கொடுக்கமுடியும்”.

ஆனால், இவைகள் கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களும், இடைத்தரகர்களும் ஆன வக்கீல்களுக்கும், வக்கீல்களாய் இருந்து நீதிபதிகளான நிதிபதிகளுக்கும்தெரியாது. இவ்வளவு ஏன்?

குடியரசு தலைவருக்கு கூட தெரியாது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியாது. ஆனால், இதுதான் உண்மை. ஆதலால்தான், நான் குடியரசுத் தலைவருக்குதமிழில் அனுப்பிய கடிதத்திற்கு, ஆங்கிலத்தில் பதில் கொடுக்க, அதனை சட்டப்படி ஏற்க முடியாது என அறிவித்ததும் தமிழில் தந்தார்கள். இவ்விருசங்கதிகளையும் 2004 ஆண்டே நடைமுறைப்படுத்தி உள்ளேன்.

அப்படியானால், அறிவு வறுமை நிதிபதி சிவக்குமாருக்கு, 
1. இந்திய அரசமைப்பு கோட்பாடு 350 என்ன சொல்கிறது என்பது தெரியாது என்கிறாரா? 
2. தமிழ்மொழி தேசிய மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை என்கிறாரா?
3. இவர் இந்திய அரசு அதிகாரத்தின் கீழ் நீதிபதியாக நியமிக்கப்படவில்லை என்கிறாரா? 
என்பதுதே, நான் விடுக்கும் கேள்வி. பதில் சொல்வாரா அல்லது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நீதிமன்ற அவமதிப்பு என்று நடவடிக்கை எடுப்பாரா… எதுவந்தாலும் வரவேற்க நான் தயார்!

இந்திய அரசமைப்பின்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆங்கிலத்தைப் போன்றே, தமிழும் சர்ச்சையில்லாத அங்கீகரிக்கப்பட்ட வழக்கு மொழியாக என்னசெய்ய வேண்டும், தமிழை கொண்டு வர வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் தயங்குகிறார்கள், இதில் அவர்களுக்கு உள்ள லாபமென்ன என்பது பற்றிய பற்பலதிடுக்கிடும் தகவல்களை
விரைவில் கட்டுரையாக வடிக்க முயல்கின்றேன்.

மகாத்மா காந்தி வக்கீல் தொழிலையும், நீதிபதி தொழிலையும் விபச்சாரத்தொழில் என்றார். தந்தைப் பெரியார் ஈனப்பிறவிகள் என்றார்.  

இவ்விபச்சார தொழிலுக்கு தக்கதொரு விபச்சாரியாக ஆங்கிலத்தை வைத்துக் கொண்டுள்ளனர் நம் உற்றார், உறவினர், நண்பர்கள் ஆனஆனால், ஆங்கிலேயனுக்கு பிறந்து, ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் படித்தது போன்ற கற்பனையில் வாழும், நமது ஈனப்பிறவி வக்கீல்களும், நீதிபதிகளும்!

வக்கீல்களையும், வக்கீல்களில் இருந்து நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதும் ஒழிக்கப்படும் வரை, நீதிக்கு அநீதியே… சமாதியே… சாபக்கேடே…

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

நீதியைத் தேடி Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book