நாட்டில் நடக்கும் அனைத்து செயல்களும் நல்ல விதமாக நடக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்திலேயே சட்டம்வரையறை செய்யப்படுகிறது. அதாவது, இச்சட்ட வரையறையின் முக்கிய குறிக்கோள் தனி மனித சுதந்திரம். இதன் மூலமாக ஒட்டுமொத்த சுதந்திரம்.

ஆனாலும், ஒருவருக்கு இவ்வளவுதான் சுதந்திரம் என யாரும், யாருக்கும் குறிப்பிட்டு வரையறை செய்ய முடியாது என்றாலும், ‘உங்களின் சுதந்திரம்,மற்றவர்களின் சுதந்திரத்தை பறிப்பதாக இருக்க கூடாது’ என்று அதிகபட்ச வரையறையை வகுக்க முடியும்.

இதனை மீறும் பொழுது ஏற்படும் தன்மையைப் பொறுத்து, இவைகள் குற்றம் மற்றும் பிரச்சினை என இரு முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அதன்பின்அவைகள் பற்பல உட்பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.

இரத்தினச் சுருக்கமாக சொல்லப்போனால், ‘நமது சுதந்திரம் மற்றவர்களின் சுதந்திரத்தை பறிக்காத வரையே சுதந்திரம். பறித்து விட்டால் குற்றம் எனவும்,நமக்கு இருக்கும் உரிமை அடுத்தவருக்கு இல்லை என எப்போது எண்ணுகிறோமோ, அவ்விடமே பிரச்சினையின் ஆரம்பம்’ என்றும் சொல்லுவேன்.

எனவே, சுதந்திரம் என்பது ஒரு நாட்டிற்கும், அந்நாட்டு மக்களுக்கும் கிடைத்த ஒரு தனிப்பட்ட அசைக்க முடியாத மாபெறும் அங்கீகாரம். இப்படிப்பட்ட மாபெறும்அங்கீகார சுதந்திரத்தை கொண்டாடுவதற்கு இருக்க வேண்டிய ஒரே தகுதி, சுதந்திரத்தை கொண்டாடுபவர்கள் சுதந்திரமாக இருந்து கொண்டாடுவதுதான்.

ஆனால், நாட்டில் இன்று சுதந்திர தின கொண்டாட்டங்களின் கூத்துகள் என்ன?

சுதந்திர தின விழாவிற்கு சுமார் ஒரு மாதங்களுக்கு முன்பே நாடு முழுமைக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படுகின்றன

சுதந்திர தினத்தை பாதுகாப்பாக கொண்டாடி முடிப்பது எப்படி என்பதற்கு ஆயிரக்கணக்கான காவலர்களைக் கொண்டு ஒத்திகை அணி வகுப்புகள்நடத்திப் பார்ப்பது

சுதந்திரத்தை கொண்டாடும் நாட்டின் தலைவர்கள் ஆற்றும் சுதந்திர தின விழாப் பேருரைக்கு குண்டு துளைக்காத கண்ணாடி பாதுகாப்பு

சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெறும் இடத்தை சுற்றி வளைத்து, வானில் இருந்து கண்காணிக்க சிறப்பு வானவூர்தி ஏற்பாடுகள். மற்றவானூர்திகளுக்கு தடை

அந்தப்படை, இந்தப்படை, ஆயுதப்படை என ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையைச் சேர்ந்த வாகனங்கள் மற்றும் வீரர்களின் பாதுகாப்புகள்.

இவைகள் எல்லாம் வெளியில் தெரியும் பாதுகாப்பு ஏற்பாடுகளே! இவைகள் இல்லாமல் உள்ளுக்குள் இன்னும் எத்தனையே பல அடுக்கு பாதுகாப்புஏற்பாடுகள்!?

ஒவ்வொரு வருட சுதந்திர விழாவைவும், குடியரசு விழாவையும் கூட, இப்படி கொஞ்சம் கூட சுதந்திரம் இல்லாமல் பலத்த பாதுகாப்புக்கு இடையில்கொண்டாடத்தான் வேண்டுமா?

இப்படி கொண்டாடுவது வெட்கக் கேடான செயல் அல்லவா?

இதற்காகவா நம் முன்னோர்கள் பல்லாண்டுகள் போராடி சுதந்திரம் பெற்றுத் தந்தார்கள்?

இப்படி கொண்டாடுவது உண்மையிலேயே சுதந்திர தின கொண்டாட்டம்தானா என்ற கேள்வி நாட்டின் மீது அக்கறை உள்ள நம்மைப் போன்ற ஒவ்வொருகுடிமகனின் மனதிலும் எழும் நியாயமான கேள்வியே என்றாலும், இதனை யாரிடம் போய் கேட்பது?

அப்படிக் கேட்டால் நாட்டின் முதல் துரோகி என முத்திரைக் குத்தி விடுவார்களோ என்ற (சு)தந்திர அச்சம் வேறு!

ஆட்சி செய்பவர்களுக்குதான் இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் என்றால், நீதிபதிகளுக்கும் ஒன்றும் குறைச்சல் இல்லை.

நீதியைச் சொல்பவர்களுக்கு கூட, ஏகே 47 பாதுகாப்பு தேவைப்படுகிறது என்றால், ‘‘அடிப்படையிலேயே நீதிபதிகள் ஒழுக்கம் கெட்டுக் கிடக்கிறார்கள்,உயிர்ப்பு தன்மையில்லாத கூ முட்டையைப் போல நாறி நாற்றமெடுத்து கிடக்கிறார்கள்’’ என்றுதானே அர்த்தம்?

இந்த லட்சணத்தில், ‘‘தங்களுக்கு தாங்களே மாண்புமிகு நீதியரசர்கள்’’ என்று தாங்கள் வழங்கும் தீர்ப்புரைகளில் கொஞ்சம் கூட, மானம், வெட்கம், சூடு,சொரனை இல்லாமல் போட்டுக் கொள்கிறார்கள்.

இவைகள் சிறிதாவது இருந்திருந்தால், மகான்களே குறிப்பிடும் விபச்சார வேலைக்கும், ஈனத் தொழிலுக்கும் வந்திருப்பார்களா அல்லது மானம், வெட்கம், சூடு,சொரனை இருக்கிறது என்று இப்போதாவது நிரூபித்து காட்டுவார்களா?

மொத்தத்தில், சுதந்திர தின விழாவை கொடியேற்றி கொண்டாடும் தகுதியுள்ளவர்கள் என நாம் கருதிக் கொண்டிருக்கும் எவரிடமும் முதலில் சுதந்திரமில்லை.ஆதலால், உண்மையில் அவர்களுக்கு தேசியக் கொடியை ஏற்ற மட்டுமல்ல, தொட கூட தகுதியில்லை.

சுதந்திரம் இல்லாத ஒருவர் அந்த சுதந்திரத்தை கொண்டாடுவதற்கு என்ன அடிப்படை தகுதியிருக்கிறது? கொண்டாட்டம் என்கிற பெயரில் நமது வரிப்பணத்தில்பல கோடிகள் செலவு செய்து கூத்தடிப்பதில் யாருக்கு என்ன பயன் இருக்கிறது என்பதை பட்டியல் போட முடியுமா?

எல்லாம் சம்பிரதாயத்திற்காக நடக்கிறதே ஒழிய, மற்றபடி யாருடைய சந்தோசத்திற்காகவும் அல்லவே அல்ல என்பதை விட, நல்லபடியாக கொண்டாடிமுடிப்போமா? என்ற அச்சமே மேலோங்கியிருக்கிறது. இதற்காகத்தாம் இவ்வளவு பாதுகாப்புகள், கெடுபிடிகள்.

உண்மையில், சுதந்திர தினத்தன்று வழக்கமாக இருக்கும் பாதுகாப்புகள், கெடுபிடிகள் கூட, குறைக்கப்பட வேண்டியதுதானே நியாயம்!

இச்சுதந்திர நாட்டில், சுதந்திர தினத்தைக் கூட சுதந்திரமாக கொண்டாட முடியாமல், போனதற்கு அடிப்படைக் காரணமே, அவர்களிடத்தில் உண்மைஇல்லாததுதான். உண்மை இல்லாதவர்கள் பாதுகாப்பிலும், அச்சத்தின் உச்சத்திலும் தானே இருக்க வேண்டும்..?

எனவே, உண்மை ஒன்றே, உண்மையான சுதந்திரமும், பாதுகாப்பும் ஆகும். இதை விடச் சிறந்த பாதுகாப்பு உலகிலேயே வேறெதுவும் கிடையாது.

இந்த வகையில் பார்த்தால் ஒரு நாள் அல்ல; இரு நாட்கள் அல்ல; வருடத்தின் 365 நாட்களும் சுதந்திரத்தை கொண்டாடுபவர்கள் நாட்டின்மன்னர்களாகிய நாமே!

சுதந்திரம் என்ற தமிழ் வார்த்தையில், (சு)தந்திரம் என்று இருபொருள் வார்த்தைகள் அடங்கி இருப்பது போல, ஆங்கிலத்தில் ‘‘இன்டிபென்டண்ட் மற்றும்ஃபீரிடம்’’ என்று இரண்டு பெயர்களும், அர்த்தங்களும் உண்டு.

இன்டிபென்டண்ட் என்றால், ‘‘யாரையும் சார்ந்திராமல், யாருடைய பாதுகாப்பிலும் இல்லாமல் சுயமாக தன்னை மட்டுமே நம்பியிருப்பதாகும்’’.

இதுவே தமிழில், ‘‘சுதந்திரம்’’

ஃபீரிடம் என்றால், நான் முன்னரே சொன்னது போல‘‘எவ்வளவுக்கு எவ்வளவு சுதந்திரமாக இருக்க முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு மிகவும்சுதந்திரமாக இருக்கும் அதே சமயம், உங்களின் ஒட்டு மொத்த சுதந்திரம் அடுத்தவரின் சுதந்திரத்தை பறித்து விடாமல் பார்த்துக் கொள்வதாகும்’’.

இதுவே தமிழில், ‘‘தந்திரம்’’

எனவே, நாம் யாராக இருந்தாலும், எப்பொருப்பில் இருந்தாலும் இந்த இரண்டு சுதந்திரத்துக்கான பொருளையும் வாழ்க்கையில் கடைப்பிடிப்பவர்களே,உண்மையான சுதந்திரத்தை உண்மையாகவே கொண்டாட முடியும். அப்படி இல்லாதவர்கள் கொண்டாடும் சுதந்திரம், இல்லாத சுதந்திரத்தை, இருப்பது போலகொண்டாடும் தந்திரமே ஆகும்.

எதிர் காலங்களில், இவ்விரண்டில் நாம் கொண்டாடப் போகிறோம் என்பது சுதந்திரத்தை கொண்டாட நினைப்பவர்களின் உண்மையிலும், கடமையிலும்தாம்இருக்கிறது.

அனைவருக்கும் குடியரசு, கொடியரசு, கொடிய அரசு தின நல்வாழ்த்துக்கள்.

வெளிவர இருக்கிற கடமையைச் செய்! பலன் கிடைக்கும் நூலின் தலையங்கப் பகுதியில் இருந்து

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

நீதியைத் தேடி Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book