நீதியைத்தேடி… நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்! என்ற நமது சட்ட விழிப்புணர்வு நூல், பாதிக்கப் பட்டவர்களுக்கு வரப்பிரசாதம் என்ற நிலைமாறி எல்லாதரப்பினருமே விரும்பி படிக்கக்கூடிய ஒரு நூலாக இருக்கிறதுஇந்நூல்கள் குறிப்பாக சட்டம் தொடர்பான அதிகாரங்களைத் செலுத்துகிற காவல் துறையினர்,வழக்கறிஞர் மற்றும் நீதிபதிகளின் நீதிக்குப் புறம்பான செயல்பாடுகளை தோலுரித்து காட்டுகிறது.

படிக்கிற பாமரர்கள் முதல் மெத்தப்படித்த மேதாவிகள் வரை என்னிடம் தவறாமல் கேட்கிற கேள்வி, ஒவ்வொருத்தரும் வாதாடலாம் என்கிற போது, ‘‘எதுக்குங்கவக்கீல்கள் எல்லாம் வக்கீலுக்கு படிக்கிறாங்க..?’’

வக்கீலுக்கு படிக்கிற அந்தந்த பொய்யர்களைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வியை, படிக்காத என்னை கேட்டால்,நேர்மையான தொழிலைச் செய்யவக்கில்லாமதான், வக்கீலுக்கு படிக்கிறாங்க…’ என்பதைத் தவிர, வேறென்ன சொல்ல முடியும்?

பொதுவாக ஒரு தொழில் செய்பவர்களைப் பற்றி விமர்சித்தால், அவர்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற வகையில் கோபம் கொள்ளத்தான் செய்வார்கள்.

ஆனால், இதிலிருந்து முற்றிலும் விதி விலக்காக கீழ்நிலைக் காவலர்கள் முதல் மேல்நிலைக் காவல் ஊழியர்கள் வரை படித்து விழிப்பறிவுணர்வுபெற்றுள்ளோம் என்றும், அதில் எங்களைப்பற்றி எதுவும் தவறாக சொல்ல வில்லை என்றும், உண்மையை தவறு செய்தவர்களை 100% ஆதாரப்பூர்வமாக,அனுபவப்பூர்வமாக புகைப் படங்கள் மற்றும் வழக்கு எண்களுடன் கூட விமர்சித்து இருக்கிறீர்கள் என சொல்லி மகிழ்கிறார்கள்.

மறுபக்கமோ வக்கீல்கள் முதல் நீதிபதிகள் வரை படித்து தெரிந்து கொள்கிறார்கள் என்பது வாசகர்கள் மற்றும் வக்கீல்கள் மூலமாகவே அவ்வப்போது தெரியவருகிறது. நீதிமன்றங்களுக்கு நன்கொடையாக கொடுத்து விடுவதால் நீதிபதிகளும், நீதிமன்ற ஊழியர்களும் படிப்பது எளிதாகி விடுகிறது. ஊழியர்கள் படித்தால்,நம்மை மதிக்க மாட்டார்கள் என நினைத்து சில நீதிபதிகள் வீட்டுக்கு எடுத்துச் சென்று வைத்துக் கொள்கிறார்கள் என்பது அ(ந்)நீதிமன்ற ஊழியர்கள் மூலம்தெரிகிறது.

(ந்)நீதிமன்ற ஊழியர்கள் படித்தால் கூட, (ந்)நீதிபதிகள் (அந்நீதி, அப்பீதி, அப்பேதி)மன்றத்தின் தலைமை ஊழியர்கள் என்பதற்காக மதித்தாக வேண்டும்.ஆனால், வீட்டில் பொண்டாட்டி புள்ளைங்க படிச்சா, உங்க மேல இருக்கிற கோவத்துல, ‘‘இவ்வளவு ஃபிராடு பண்ணுற நீயெல்லாம் ஒருநீதிபதியான்னு’’ கேட்டு தூக்கிப் போட்டு மிதிச்சாலும் மிதிப்பாங்க…

அப்படியேதும் அசம்பாவிதம் நடந்து, படக்கூடாத இடத்துல பட்டு, உங்க உயிருக்கு ஏடா கூடமா எதாவது ஆகிப்போச்சுன்னா, கோர்ட்டுக்குன்னு கொடுத்தத,திருட்டுத்தனமா வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போனது, .பி.சி ….. (யுவர் ஆனர், நீதியைத்தேடி… படிச்ச உங்களுக்கு தெரியாத சட்டமில்ல. அதனால அந்த கேப்புலஎன்னன்ன பிரிவுகள் வருமோ அதெல்லாம் கேர்(, பு)ல்லா போட்டுக்குங்க – வடிவேலு) இன்படி, உங்க தப்பேங்கிற வகையில், நாங்க பொறுப்பாக மாட்டோம்.

உங்க கூட்டு கொள்ளையர் சந்துரு வேற, மதுரையில தாலி கட்டிய கணவன் வேலி தாண்டாதே என்று சொல்லி தடுத்ததற்காக, பெற்ற மகளையே கற்பழிக்கமுயற்சித்தார், ஆதலால் நானே அடித்து கொண்டு விட்டேன் என திட்டம் போட்டு, கூலிப்படை வைத்து, கொடூர ஆயுதங்களைக் கொண்டு, கொலை செய்யதூண்டியும், துணை நின்று மனைவி செய்த கொலையையே, தப்பில்லை; தற்காப்பு! என தாண்தோன்றித் தனமாக தீர்ப்பு சொல்லி உள்ளதால், இதைச்சொல்லியே உங்களது மனைவியும், துணைவியும் தப்பிக்க வசதி செய்து கொடுத்திருக்கிறார்…

அதனால, உங்களுக்கெல்லாம் தெரியப்படுத்திக் கொள்வது என்னான்னா, அந்த தீர்ப்புரையை நாங்க ரத்து செய்து, அம்மனைவியை ஜெயிலுக்கு அனுப்புறவரைக்குமாவது, வீட்டுல நல்ல புள்ளையா, பொண்டாட்டி புள்ளைங்க சொல்லுறத கேட்டுகிட்டு, பொட்டிப் பாம்பா, அடங்கி ஒடுங்கி பத்திரமா இருந்துக்கோங்க…

நீதியைத்தேடி… நூலைகளை வாங்க நினைக்கிற வக்கீல்கள் எங்களை தொடர்பு கொள்ளும் போது, இந்நூல்கள் உங்களின் தொழிலுக்கு நேரெதிரான கொள்கைகொண்டது, வக்கீல்களையும், நீதிபதிகளையும் தீ(தி)ட்டி எழுதியிருப்போம், ஆதலால் தேவையில்லாமல் காசை செலவு செய்து, வாங்கி படித்து விட்டுடென்ஷன் ஆகாதீர்கள் என்போம்.

ஒருசிலர், நாமளே சட்ட ரவுடிகள்… நம்மள திட்டுற அளவுக்கு யாருக்கு தைரியம் என யோசிப்பார்கள். ஆனாலும், அப்படி என்னதான் சொல்லியிருக்கீங்கன்னுபார்க்கனும் என்பார்கள்.

ஒருசில பொய்யர்களோ இல்லையில்லை, எங்களின் நீதிபதி அதை மறைத்து வைத்து (படி, பார்)த்துதான் தீர்ப்பு சொல்கிறார். அதனால், நாங்களும் படித்துக்கொண்டால், தீர்ப்பை பெற உதவியாய் இருக்கும். அதனால்தாம் கேட்கிறோம் என கெஞ்சியே கேட்கிறார்கள்.

வாங்கி படித்து விட்டு, உண்மையத்தானே உடைச்சி சொல்லியிருக்கோம் என நினைக்கிற பொய்யர்கள், ‘சார் அவரு எங்கள திட்டல… எங்களோடஅறியாமையதான திட்டுறாரு’ என சொல்லி நட்பு உறவாடுகிறார்கள். 
பதிலுக்கு நாமும் உறவாடினால், நீதிமன்றத்துல நீதிபதி முதல் யார் யார் என்னென்ன தில்லுமுல்லு செய்யிறாங்க.. எப்படிச் செய்யிறாங்க… எந்தெந்த கேசுக்கு,யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கிறோம் அப்படீன்னு நமது கருத்தை ஆதரித்து, பகிரங்க பட்டியல் போடுறாங்க…

ஆனாலும், அப்பொய்யர்கள் சொன்னது உண்மை என நம்பி, அப்படியே வெளியில சொல்ல முடியாது. ஏன்னா, வாங்குற கூலிக்கு பொய் சொல்றதே, அவங்கதொழில் தர்மமாக இருக்கும் போது, நாம கொடுக்காத கூலிக்கு சொல்லுறது மட்டும் எப்படி உண்மைன்னு ஏத்துக்க முடியும்!

ஒருவேளை உண்மையாகவே இருந்தாலும் கூட, எல்லா பொய்யர்களும், கொள்ளையர்களும் சேர்ந்து செய்யிற திருட்டு விபச்சார செயலுக்கு, ஓரிருபொய்யர்களை மட்டும் எதுக்கு தர்ம அடி வாங்க வைக்கோனும்?

இவர்களே, முதலில் சலுகை விலையில் எங்களுக்கு 500 செட் புத்தகங்களை கொடுங்கள். பிறகு 5000 செட்டுக்கு ஆர்டர் கொடுக்கிறோம். தமிழ்நாட்டுல இருக்கிறஒவ்வொரு வக்கீலுக்கும், நீதிபதிக்கும் கொடுத்து படிக்கச் சொல்லனும் என்று வியாபாரத்தில் இறங்க முயற்சிக்கிறார்கள்.

பொதுவுடைமை என்பதால், உங்களது பெயரிலேயே அல்லது உங்களது வழக்கறிஞர் சங்கப் பெயரிலேயே, நீதியைத்தேடி… நூல்களை அச்சடித்து தருகிறோம்என்றால், வக்கீல் ரவுடிகளிடம் யார் தர்ம அடி வாங்குவது என்கிற எண்ணத்தில், அய்யோ வேண்டவே வேண்டாம் என்று அலறுகிறார்கள்.

உன் நண்பர் யார் என்று சொல்; உன்னைப்பற்றி சொல்கிறேன் என்பதற்கு இணங்க வக்கீலின் உதவியாளர்கள் வழக்கில் சிக்கிக் கொண்டால், நம்புவதுஅவ்வக்கீலை அல்ல. நீதியைத்தேடி… நூல்களைத்தான்

நீதித்துறையால் பழிவாங்கப்பட்ட நீதிபதி (நடுவர்) நம்புவதும் நீதியைத்தேடி… நூல்களைத்தான்

தப்பித்தவறி சட்டப்படிப்பு படிக்கின்ற யோக்கியமாணவர்கள் எவராவது இருந்து படித்து விட்டால், படிப்பை பாதியிலேயே கை விட்டுட்டு, விபச்சாரத்தை மூடிமறைக்க உதவும் கருப்பு கோட்டையும் கை விட்டுட்டு, நீதியைத்தேடி… குறித்த கருத்துப் பிரச்சாரத்தில் இறங்கி விடுகிறார்கள்.

இவர்கள் பெரும்பாலும், கிராமப்புற பகுதியை சேர்ந்தவர்கள். தனக்காக தானே வாதாடலாம் என தெரியாமலும், எப்படி போராடுவது என புரியாமல் போராடி,பொய் வழக்குகளால் சிறைக்கு சென்று, குடும்பம் பாதிக்கப்பட்டு, வக்கீல்களால் வஞ்சிக்கப்பட்டு, நான் சொல்வது போலவே, பாதுகாப்புக்காக வக்கீலுக்கு படித்து,இதுவும் பயனில்லை என நீதியைத்தேடி… படித்தப்பின் முடிவெடுத்தவர்கள்.

படித்து முடித்து வக்கீல் தொழிலுக்குள் இறங்கிய இளைஞரோ“You made me hate my advocacy profession… Really I never read the law in my five year college life but your five books makes it so…. Really your work is very honour.. Hats off you….” என பகிரங்கமாக முகநூலில் நூல் விட்டுட்டு, வேறு வேலை தேடுவதாகவும்,தன்னால் இயற்ற நிதி பங்களிப்பை செய்வதாகவும் சொல்கிறார்.

நீதிபதியாகலாம் என்கிற எண்ணத்தில் இருந்த ஒருவர்,நீதிபதிகளை வறுத்தெடுப்பது எப்படி கட்டுரையை படித்தப்பின்“ya very good, let us all follow this. but sure i will not become a judge anymore” என பின்னூட்டம் இடுகிறார்.

இந்தியாவின் 25 வது தலைமை நீதிபதி நீதியைத்தேடி… நூல் குறித்து என்ன கருத்து சொன்னார் என்று அடுத்தப்பதிவில் பார்ப்போம்.  மொத்தத்தில்,பொய்யர்களின் பாரம்பரியம் பட்டுப்போய்க் கொண்டிருக்கிறது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

நீதியைத் தேடி Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book