தமிழில் படித்தால் தலைமை நிதிபதியாக கூட ஆகலாம்….!!!???
ஆம், சதாசிவம் என்கிற தமிழ் வழிக்கல்வியில் படித்த தமிழர், குடியரசுத் தலைவருக்கே பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் அதிகாரம் பெற்ற இந்தியாவின்தலைமை நிதிபதியாகிட்டார் என்று, வெற்று தற்பெருமை பேசுவதில் தமிழர்களுக்கு நிகர் உலகில் வேறு யாருமில்லை என்கிற வகையில் தற்பெருமைகருத்துக்கள் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் அவ்வப்போது உலா வந்து சற்றே ஓய்ந்திருக்கின்றன.
முதலில் இதனை சரி என்றும், பின் சதாசிவம் தமிழரில் இரண்டாவது தலைமை நிதிபதியே அன்றி முதல் தலைமை நிதிபதியன்று. தமிழரில் முதல் தலைமைநீதிபதி, இந்தியாவின் இரண்டாவது தலைமை நிதிபதியாக 07-11-1951 முதல் 03-01-1954 வரை பதவி வகித்த பதஞ்சலி சாஸ்திரி அவர்களே எனவும் சில ஊடகங்கள்மட்டும், ஆதரித்த செய்தியிலேயே மறுப்பு செய்தி வெளியிட்டு உள்ளன.
இதுதான் உண்மையும் கூட என்பதை உச்சநீதிமன்றத்தின் இணையதள தகவல்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது. இதனை தலைமைநிதிபதியாக பொறுப்பேற்றுள்ள நிதிபதி சதாசிவம், தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு இருந்தும், இதுவரையிலும் தெளிவுபடுத்தியதாகதெரியவில்லை.
இந்நிலையில், ஒரு தமிழர் இந்தியாவின் இரண்டாவது தலைமை நிதிபதியாக பதவி வகித்திருக்கிறார் என்பது கூட தெரியாத தமிழர்களாக சுமார் அறுபதுஆண்டு காலம், அறிவு வறுமையில் இருந்திருக்கிறோமே என வெட்கப்பட வேண்டியதற்கு பதிலாக, வெற்று தற்பெருமை எதற்கு?
மொழி என்பது கருத்துக்களை பரிமாறிக்கொள்ள உதவும் ஒருகருவியே! தாய்மொழி கண்போன்றது என்றால், பிறமொழி இமைபோன்றது. இதில்வெற்று தற்பெருமையும், வெறித்தனமும் எதற்கு?
நம் தமிழரான சதாசிவம் இந்தியாவின் நாற்பதாவது தலைமை நிதிபதி. அப்படியானால், இவருக்கு முன்பாகவும், பதஞ்சலி சாஸ்திரிக்கு முன்பாகவும் தலைமைநிதிபதியாக இருந்த மற்ற மொழிக்காரர்கள் எல்லாம் அவரவர்களின் தாய் மொழியில் படிக்காமல், நம் தமிழில் படித்தா தலைமை நிதிபதியானார்கள்?
நிதிபதி சதாசிவத்திற்கு ஆங்கில அறிவு இல்லாமலா தலைமை நிதிபதியாகி விட்டார். ஆங்கில அறிவு இல்லையென்றால் தாலுக்கா நிதிபதியாககூட முடியாது என்று தெரியாத வடிகட்டின முட்டாள்களா தமிழர்களான நாம்?
நிதிபதி சதாசிவத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல் தானாகவே போய் சீட்டில் உட்கார்ந்துகொண்டாரா?
சதாசிவத்திற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது பதவிக்காலம் முழுவதும் பதவியில் நீடித்தால், 26 ஏப்ரலில் 2014இல் ஓய்வு பெற போகிற சதாசிவம், எந்தவொரு குடியரசுத் தலைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் வாய்ப்பை பெறப் போவதில்லையே!
அட இவ்வளவு ஏன்…,
இவர் எந்தவொரு உயர்நீதிமன்றத்தின் தலைமை நிதிபதியாகவும் பதவி வகிக்காததால், எந்தவொரு மாநில ஆளுநருக்கும் கூட, பதவிப் பிரமாணம்செய்து வைத்திருக்க வாய்ப்பு இல்லியே?
உண்மைகள் இப்படி அக்குவேறு, ஆணிவேறாக இருக்க நமக்கெதற்கு விதவிதமான விதண்டாவாத வெற்று தற்பெருமைகளும், பைத்தியக்காரத்தனமானபிதற்றல்களும்?
சதாசிவம் தலைமை நிதிபதியானதில் பெருமைப்பட ஒன்றுமேயில்லை. மகாத்மா காந்தி, பெரியார் மற்றும் எனது ஆராய்ச்சியில் சிறுமைப்படவே நிறையஇருக்கிறது.
சதாசிவம் தலைமை நிதிபதியாக பதவியேற்றபோது, இவரைவிட உச்சநீதிமன்ற நீதிபதிகளில் வயதிலும், அனுபவத்திலும் மூத்தவராக இருந்தவர்ஜி.எஸ்.சிங்வி என்பவரே.
இவர் ராஜஸ்தான் கிளை, பஞ்சாப், ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக 20-10-1990 முதல் 26-11-2005 வரை பணியாற்றி பின்,ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நிதிபதியாக 27-11-2005 தேதி நியமிக்கப்படுகிறார்.
ஆனால், சதாசிவம் 08-01-1996 அன்றே சென்னை உயர்நீதிமன்ற நிதிபதியாக நியமிக்கப்படுகிறார். பின் 20-04-2007 அன்று பஞ்சாப் மற்றும் ஹரியான மாநிலஉயர்நீதிமன்ற நிதிபதியாக நியமிக்கப்படுகிறார். இதன்பின் உயர்நீதிமன்ற தலைமை நிதிபதி பதவிக்கு நியமிக்கப்படாமலே நேரடியாக 21-08-2007 அன்றுஉச்சநீதிமன்ற நிதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
உயர்நீதிமன்ற தலைமை நிதிபதியாக நியமிக்கப்பட்டவர், அடுத்ததாக உச்சநீதிமன்ற நிதிபதியாக நியமிக்க தகுதியானவர் என்கிற முறையிலும், வயதிலும்,அனுபவத்திலும் சதாசிவத்தை விட சிங்வியே முத்தவர்.
அப்படியானால், மூத்த சிங்வியை, சதாசிவம் தலைமை நிதிபதியாக முந்த காரணமே, சிங்வி 12-11-2007 அன்று உச்சநீதிமன்ற நிதிபதியாக படிப்படியாக தகுதியின்அடிப்படையில் நியமிக்கப்பட்டு 12-12-2013 அன்று ஓய்வு பெறுகிறார்.
ஆனால், சதாசிவமோ எந்தவொரு உயர்நீதிமன்றத்தின் தலைமை நிதிபதியாகவும் நியமிக்கப்படாமலே, நேரடியாக உச்சநீதிமன்ற நிதிபதியாக 21-08-2007 அன்றுநியமிக்கப்படுகிறார். இந்த மூப்பு அடிப்படையிலேயே தலைமை நிதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 26-04-2014 அன்று ஓய்வு பெறுகிறார்.
எது எப்படியோ, ஒரு மாநிலத்தின் ஆளுநருக்கோ அல்லது குடியரசுத் தலைவருக்கோ சத்தியப்பிரமாணம் செய்து வைக்கும் தகுதியை பெற்றிராத இந்தியாவின்ஒரே தலைமை நிதிபதி, நம்ம சதாசிவமாகத்தான் இருக்க வேண்டும் என்பதால், நீங்கள் நினைப்பது போன்று அவர் எவ்விதத்திலும் சாதனை சிவமன்று; சாதாசிவமே!