நாம் மாணவர்களாக இருந்த போது, படிச்சி வக்கீலாகப் போறியா, டாக்டராகப் போறிய, இஞ்சியராக போறிய என பல்போன பொக்கைவாய் பாட்டி கூடகேட்டிருக்கிறார்கள். ஆனால், இப்படி கேட்பது தற்போது குறைந்து, சாப்பிட்டு வேர் இஞ்சினியர் ஆகப் போறியா என கேட்க தொடங்கி விட்டார்கள்.
இப்படி யாராவது என்ன முன்பாக கேட்டால், படித்து பொய்யனாக போறியா, கொலைகாரனாக போறியா, மோசடிக்காரனாக போறியா என்று மாற்றி கேளுங்கள்என்பேன் அல்லது அவர்கள் முன்பாக நானே கேட்டு விடுவேன்.
பொய்யர்கள் அதிகமாக, அதிகமாக குற்றங்களும் அதிகமாகின்றன. பொய்யர்களே குற்றவாளி களாகவும், சட்டந்தெரியாத கோமாளிகளாகவுந்தாம்இருக்கிறார்கள். இதேபோல், மருத்துவர்கள் அதிகமாக, அதிகமாக நோய்கள் அதிகமாகின்றன. மருத்துவர்களே பல்வேறு நோயாளிகளாகத்தாம்இருக்கிறார்கள். இதுகுறித்து என்னை போன்றவர்கள் கேள்வி கேட்டால், நாங்களும் மனிதர்கள்தாம் என்பார்கள்.
ஆனால், இவ்வுலகத்தில் எங்களைவிட புத்திசாலிகள் யாருமேயில்லை; நாங்களெல்லாம் கடவுளுக்கு நிகரானவர்கள் என ஒன்றுமறியாத அப்பாவிகளிடம்பீற்றிக்கொள்வார்கள். உண்மைதாம், இவர்களைவிட திறமையாக நம்பிக்கை மோசடி செய்பவர்கள் யாருமே இருக்க முடியாது. ஆகையால், இத்தொழில்களைசெய்பவர்கள் எல்லாம் மனிதப்பிறவிகளே கிடையாது. மாறாக, ஈனப்பிறவிகளே!
நமது வீட்டுக்குள்ளே உலகத்தை கொண்டுவரும் அளவிற்கு வளர்ந்து வந்த தகவல் தொழிற்நுட்பம், திடீரென யாரும் எதிர்பார்க்காத சரிவைக்கண்டு, ஒரேநொடியில் உலகெங்கும் கோடிகணக்கானோருக்கு வேலையில்லாமல் செய்தது.
தகவல் தொழிற் நுட்ப புரட்சியால்தால் உலகம் எல்லா விதத்திலும் முன்னேறியுள்ளது, அதீத வளர்ச்சி கண்டுள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.ஆனால், இந்த தகவல் தொழிற்நுட்பம் எது எதில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை வரையறை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இன்று நம்நாடு உள்ளது.
எது ஒன்றையும் நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்தும் போது அது குறித்து சர்ச்சைகள் ஏதும் எழுவதில்லை. அது குறித்து யாரும் சிந்திப்பதும் இல்லை. தவறாகபயன்படுத்தும் போது அதுகுறித்த சர்ச்சைகள், சந்தேகங்கள், சிந்தனைகள் எல்லாம் இயல்பாகவே எழுகின்றன.
பொதுவாக எந்த ஒரு துறையாக இருந்தாலும் அத்துறைப் பற்றி ஒரளவேணும் மற்ற துறையில் அல்லது மாற்று துறையில் உள்ளவர்களால் புரிந்து கொள்ளமுடியும்.
மற்ற சாதனங்களை பயன்படுத்துவதை விட தகவல் தொழிற்நுட்ப சாதனங்களை மக்கள் பயன்படுத்தாத வினாடிகளே இல்லை என்கிற அளவிற்கு அதன் அதீதவளர்ச்சி கடைக்கோடி சாமானிய மனிதனைக் கூட சென்றடைந்துள்ள இந்த கால கட்டத்தில், ‘‘அதில் ஏற்படும் பிரச்சினைகள், குளறுபடிகள் குறித்து மற்றசாதனங்களில் புரிந்து கொள்வதைப் போல புரிந்து கொள்ள, அத்துறை சார்ந்தவர்களைத் தவிர வேறு யாராலும் முடிவது இல்லை என்பதை விட, பெரும்பாலானசமயங்களில் அவர்களாலேயே கூட முடியவில்லை என்பது அனைவரும் அறிந்த நிதர்சனம்’’.
உலகளாவிய சட்ட விழிப்பறிவுணர்வுக்காக நீதியைத்தேடி… இணையப்பக்கத்தை நிர்வகித்து வரும் நான், சமூக வலைதலங்களில் வரும் புகைப்படங்கள்,காணொலி காட்சிகள் எல்லாம் எப்படி எப்படியோ சித்தரிக்கப்படுகின்றன என்பதை அறிவேன்.
பன்பாடு இல்லாத மேற்கத்திய மற்றும் நம்மவர்களது பாலியல் காட்சிகளுக்கு சற்றும் பஞ்சமில்லை என்பதை இணையத்தில் உலாவரும் ஒவ்வொருவரும்அறிவர். இதனை தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பாலியல் குற்றங்களை மட்டும் தடுக்க நினைப்பதும், நிதிபதிகள் குற்றவாளிகளைதண்டிக்க நினைப்பதும் கையாளாகாத்தனமே தவிர, துடிப்பான தடுப்பு நடவடிக்கை அன்று.
மின்னஞ்சல் மற்றும் உலாப்பேசிகளுக்கு வரும் பரிசு, அவார்டு, லாட்டரி குறித்த மோசடி செய்திகளை யார் அனுப்புவது, எங்கிருந்து அனுப்புகிறார்கள் என்பதைகண்டு பிடிக்க இயலாமல் சைபர் கிரைம், ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அனைத்து துறைகளும் எச்சரிக்கையாக இருக்கவே மக்களுக்கு போதிக்கின்றன என்பதில்இருந்து அவர்களின் கையாளாத்தனம் தெரிகிறது. மத்திய அரசின் முக்கிய இணையதளங்களையே முடக்கி காட்டியிருக்கிறார்கள்.
இன்றும் நம்ம ஊரில், குடிசை தொழில்களில் ஒன்றாக விளங்கும் பீடி சுருட்டுவது போல, சீனாவில் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த அனைத்து பொருட்களும்குடிசை தொழிலாகவே தயாரிக்கப் படுவதாக சொல்கிறார்கள். நம் சந்தைக்கு பெருமளவில் வந்து குவியும் விதவிதமான இப்பொருட்களையும், அதன் மலிவுவிலைகளையும் பார்த்தால் குடிசை தொழில் உண்மை என்றே நம்ப வேண்டியிருக்கிறது.
இப்படி தகவல் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்தவர்களை கொண்டுதாம், டெகல்கா, சேனல் 4 போன்ற ஊடகங்கள் சர்ச்சைக்கு உரிய ஆதாரங்களை மிக எளிதாககைப்பற்றி வெளியிடுகின்றன என்றும், இதற்கு அந்நாட்டு இளைஞர்களுக்கு கொடுக்கும் கூலி சில டாலர்களே என்றும் தகவல் தொழிற்நுட்பத்தில் கைதேர்ந்தநம்மவர்கள் சொல்கிறார்கள்.
ஊருக்கு ஊர் கிராம நிர்வாக ஊழியர்கள் மற்றும் காவலர்கள் இருந்தே குற்றங்களை குறைக்க முடியவில்லை என்கிற அவல நிலையில், தகவல் தொழில் நுட்பகுற்றங்களை கண்டுபிடிக்கும் காவலர்கள் மாவட்ட அளவில் மட்டுமே இயங்கி வருகின்ற போது, எப்படி தகவல் தொழில் நுட்ப குற்றங்களை கட்டுப்படுத்தமுடியும்?
உள்ளூரில் நடப்பதே இப்படியென்றால், வெளி மாநிலத்தில் இருந்தும் நாடுகளில் இருந்தும் செய்யப்படும் குற்றங்களை எப்படி கண்டு பிடிப்பார்கள்,கட்டுப்படுத்துவார்கள்? ஆனால், முக்கிய நபர்களுக்கு ஏதாவது என்றால் மட்டும், கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள்.
நம் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இத்தகவல் தொழில் நுட்பத்தின் மூலம் நம்மை வெகுவாக சுரண்டுகின்றன என்பதையும், அதனை நம்மால் தடுக்கமுடிவதில்லை என்பதையும், அவர்கள் அனுமதிக்கும் அளவை விட குறுஞ்செய்திகளை அனுப்ப முடிவதில்லை என்பதையும், முறையற்ற வகையில்பேசுபவரை எங்கிருந்து பேசுகிறார் என்பதை கூட தெரிந்து கொள்ள முடியவில்லை.
தகவல் தொழில் நுட்பம் என்கிற சூழ்நிலை சூழ்ச்சி வலையில் சிக்கி வெவ்வேறு வகையான சாதனங்களை பயன்படுத்தி வரும் நாம் ஒவ்வொருவரும், மீண்டும்ஒரு நாகரீக அடிமை வாழ்வில் அடியெடுத்து வைத்து, அதாள பாதாளத்தை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கிறோம். இதிலிருந்து, மீண்டு(ம்) வெளிவருவோமா?
தகவல் தொழிற்நுட்பத்தை ஒவ்வொருவரும் தமது வசதிக்கும், நோக்கத்திற்கும் தக்கபடி, தனித்தனியாக உருவாக்கி கொள்ள முடியும் என்பதோடு, அதுமற்றவர்களுக்கு புரியாத வண்ணம் மிகச்சிறப்பான முறையில் கையாள முடியும் என்பதுதான்.
இப்படித்தான், ஓசூர் டி.வி.எஸ் நிர்வாகம், தன்னிடம் இருந்த தகவல் தொழிற்நுட்ப யுக்தியை முறைகேடாக பயன்படுத்தி, தொழிலாளி முறைகேடு செய்தார் எனகுற்றம்சாற்றி சர்வ சாதாரணமாக, சட்ட விரோதமாக பணிநீக்கம் செய்தது.
நிர்வாகத்துக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, நிர்வாகத்தின் சட்ட விரோதமான தகவல் தொழிற்நுட்பத்தை (வருகையை பதிவு செய்யும்மின்னணுப் பதிவை) கண்டும் காணாமல் இருந்த அரசு ஊழியர்களின் கழுத்தில் சட்டம் என்ற கத்தியை சாட்சியாக வைக்கவே, அவ்வூழியர்களோ நிர்வாகத்தின்கழுத்தில் தனது சட்ட அதிகார கத்தியை வைத்தார்கள். விளைவு?
வேறு வழியில்லாமல் டி.வி.எஸ் நிர்வாகம் தொழிலாளியின் வீடு தேடிச் சென்று சுமார் ஏழு லட்ச ரூபாய்களை இழப்பீடாக வழங்கியது.
இதெல்லாம், கோடான கோடிக்கு அதிபதியான நிர்வாகத்தை எதிர்த்து, மாதத்திற்கு ஓரிரு நாட்கள் மட்டுமே ஓசூரில் இயங்கும் சேலம் தொழிலாளர்நீதிமன்றத்தில், நமது பாணியில் மனு செய்த தொழிற்தகராறு வழக்கு எண் 251 / 2005 இல் சுமார் ஒன்றரை வருடத்திற்குள் சர்வ சாதாரணமாக நிகழ்த்திக் காட்டியஇமாலய சாதனை.
இந்நிலையில், நம்நாட்டில் தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது எந்த விதத்திலும் நியாயமானதாகவோ, மக்களாட்சிக்குஉகந்ததாகவோ தெரியவில்லை. ஏனெனில், தேர்தல் தலைமை பொறுப்பு பணி உட்பட மற்ற பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் எவருமே தகவல் தொழிற்நுட்பத்தில் பயிற்சி பெற்றவர்களாக இருக்க இயலாது.
அப்படியே பயிற்சி பெற்றிருந்தாலும் கூட, அழிக்க முடியாத, அழித்தால் சிக்கலை ஏற்படுத்தக் கூடிய, ஆவணங்களிலேயே அரசு ஊழியர்கள் தங்களின்ஆசாபாசங்களுக்காக எதையும் செய்யத் துணியும் போது, பெரும்பாலான மக்களுக்கு புரியாத புதிராக இருக்கிற தகவல் தொழிற்நுட்பத்தை தவறாக பயன்படுத்தமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது?
எந்த ஆட்சி தனது ஆசாபாசங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறதோ, அந்த அரசுக்கு சாதகமாகத் தானே அரசு ஊழியர்கள் செயல்படுவார்கள், அதற்குதக்கவாறுதானே தகவல் தொழிற்நுட்பத்தை மாற்றி அமைப்பார்கள்?
எவ்வித கட்டுப்பாடும் இன்றி குடிமகன் ஒருவர் சுயமாக செலுத்தக்கூடிய வாக்குரிமை பறிபோய், தற்போது அரசு அலுவலரின் சமிக்சைக்காக காத்து நிற்கவேண்டிய அவலம் மின்னணுவில் இருக்கிறது. வாக்குபதிவை விரைவாக கணக்கிட்டு வெற்றியை வெளிப்படுத்துவதில் கள்ளத்தனத்தை காண முடிகிறது.முடிவுகள் சிதம்பர ரகசியமாக உள்ளது.
முன்பு 49ஓ வில் தாம் ஓட்டு போட்டோம் என்பதற்கு உத்திரவாதம் இருந்தது. ஆனா, இப்போ அது கூட உத்திரவாதம் இல்லை. 49ஓ ஒட்டு போட, ஒருதில்லும் வேண்டியிருந்தது. ஏன்னா தில் இல்லாதவங்க, இதுல ஓட்டுபோட மாட்டாங்க. வாக்குப்பதிவு யந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும் எனஒருவர் நிருபித்து இருக்கிறார், பாருங்கள்.
தனது தன்னிகரற்ற தகவல் தொழிற்நுட்ப திறமையால் உலகையே உளவு பார்க்கும் அமெரிக்கா, இன்றளவும் தேர்தலில் வாக்குப்பதிவுக்கு, வாக்குச் சீட்டையேபயன்படுத்தி வருவது, தகவல் தொழில் நுட்பத்தில் எதையும் செய்ய முடியும் என்பதற்கான வெட்ட வெளிச்சம்.
மொத்தத்தில் எல்லா கருத்து கணிப்புகளையும் பொய்யாக்கும் விதத்தில் தவறுக்கு வழிவகுத்து வருகிறது, தகவல் தொழிற்நுட்பம். இந்தியாவில் இதுவரைஅமைந்துள்ள ஆட்சிகள் எதுவுமே மக்களாட்சி இல்லை. இது குறித்து, ‘மகத்தான மக்களாட்சி மலர…’ என்கிற தலைப்பில் விரைவில் படிக்க இருக்கிறீர்கள்!
மக்களாட்சி மலர மிக முக்கியமாக செய்யப்பட வேண்டிய சீர்த்திருத்தங்களில் ஒன்று, ‘வாக்குச் சீட்டு முறையை திரும்ப கொண்டு வர வேண்டும். வேட்பாளரைநிராகரிக்கும் உரிமையான ‘49 ஓ’ வாக்குச் சீட்டிலேயே அச்சிடப்பட வேண்டும்’.
ஐந்தாண்டுகளுக்கு நாட்டையாளும் வேலை யாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிய அதிக பட்சமாக ஐந்து நாட்கள் காத்திருப்பதில் எதுவும்குடிமுழுகி விடாது. வருபவர்கள் பிடிக்காவிட்டாலும் ஐந்து வருடமோ அல்லது அதற்கு மேலோ காத்திருக்கத்தானே வேண்டும்.