காந்தி தாத்தா போட்டோ போட்டு அச்சடிச்சி உட்டாங்க…
அழகழகா பொம்ம போட்டு ஜோடிச்சித்தான் வச்சாங்க…
விதம் விதமா நம்பரெல்லாம் வக்கணையா போட்டாங்க…
மொத்தத்துல சைபர் என்னும் நெஜத்த மறச்சி புட்டாங்க…
கட்டு கட்டா காகிதத்த அச்சடிச்சி வீசுறான்…
வயிறு காய உழைக்கிறவன் அதுக்கு மதிப்பு கொடுக்கிறான்…
அச்சடிச்சவன் ஆளறான். உழைக்கிறவன் வாடுறான்…
குரங்கு கையில் அப்பம் தந்த பூனைப் போல ஏங்குறான்…
நீயும் நானும் அச்சடிச்சா கள்ளபணம்…
ரிசர்வ் பேங்கும், அரசும் சேர்ந்தடிச்சா நல்ல பணம்…
பித்தலாட்டம் மர்மமான கலர் காதிதம்…
உலகத்த தன் பிடியில் வச்ச வெத்து காகிதம்…
இது புரியாமல் பணமிருந்தால் பத்தும் செய்யலாம், லட்சமிருந்தால் எந்த லட்சியமும் இல்லாமல் வாழலாமென என்கிற எண்ணத்தில், வாழ்க்கையைஅலட்சியம் செய்து விதிமீறல்களை தெரிந்தே செய்கிறார்கள். இதனால், நம் வாழ்க்கை எவ்விதத்திலம் பாதிக்கப்படாது எனவும் நம்புகிறார்கள்.
அடுத்தடுத்து என்ன செய்யலாமெனவும் திட்டந்தீட்டுகிறார்கள். தங்களுக்கு கிடைக்கும் பலன்கள் தங்களது வாரிசுகளுக்கு கிடைக்காமல் போய்விடக்கூடாதுஎன்பதற்காக அத்திருட்டு திட்டத்தில் தங்களது வாரிசுகளையுஞ் சேர்த்துக்கொள்கிறார்கள்.
உன்னுடைய திருட்டில் என்னை சேர்க்காதே என எந்த வாரிசும் சொல்வதில்லை. மாறாக, தந்தையே சேர்க்காவிட்டால் கூட, தகராறு செய்யும் வாரிசுகளாகவும்,தேவைப்பட்டால் தீர்த்துக்கட்டவும் தயங்குவதில்லை. இவர்களுக்கு தெரியாது சொத்துக்காக கொலை செய்தால், வாரிசு உரிமையை இழந்து விடுவோம்என்பதோடு, சட்டப்படி சொத்தும் கிடைக்காது என்பது!
கோடிகோடிக்கு அதிபதியாக இருந்தவர், நொடிப்பொழுதில் பிச்சைகாரன் ஆனார் என்பதோடு, விதிமீறல்களில் ஈடுபட்ட கேடியாகவும் ஆக்கப்பட்டுவிட்டார், சென்னை மௌலிவாக்கத்தில் இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடத்தின் உரிமையாளரும், அவரது வாரிசும்.
இவர்கள் அடுத்து எங்கு வலைத்துப்போடலாம் என்பது உட்பட எத்தனையெத்தனை திட்டங்களைத்தீட்டி, எத்தனையெத்தனை வண்ணக் கனவுகளோடுஇருந்திருப்பார்கள்? எல்லாம் ஒருநொடிப்பொழுதில் நாசமாகி விட்டது. இந்த நாசத்தில் இருந்து இரண்டு மூன்று தலைமுறைகள் மீறுவதே (கு, க)ஷ்டமப்பா!
இதற்காகவே இந்நேரம் பல பிணந்தின்னிப் பொய்யர்கள் உங்களை தண்டனையில் இருந்து காப்பாற்றுகிறேன் என அவர்களை நோக்கி படையெடுத்திருப்பார்கள்;இந்த வழக்கு நம்மிடம் விசாரணைக்கு வராதா என நிதிபதிகள் கணக்குப்போட்டு காத்துக்கொண்டிருப்பார்கள்!!
என்ன விதிமீறல் இருந்தால் நமக்கென்ன? நமக்கு இடம் கிடைத்தால் போதுமென அவ்வடுக்குமாடி குடியிருப்பில் இடம் வாங்கியவர்கள், கட்டடத்தை கட்டஒப்புக்கொண்டவர்கள் என எத்தனையெத்தனை பேர் பெரும் இழப்புகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள்?
இவர்களில் யாராவது ரமணா திரைப்படத்தை பார்க்காமலா இருந்திருப்பார்களா என்றால், வெளிமாநிலத்தில் இருந்து கூலிவேலைக்கு வந்தவர்களைத்தவிர,மற்றவர்கள் எல்லாம் நிச்சயமாக பார்த்திருப்பார்கள். அப்படியிருந்தும் எப்படி துணிந்தார்கள்?
இதையெல்லாம் தட்டிக்கேட்க நிஜத்தில் ரமணா வரமாட்டாரென சந்தடிச்சாக்கில் நக்கலடிக்கிறார்கள். சிலர், இவ்விடம் குறித்த பதிவுத்துறை வரைபடத்தைவலைப்பக்கத்திலிருந்து எடுத்து தங்களுக்கு தெரிந்ததைச் சொல்கிறார்கள்.
ஆவணப்பதிவேடுகளாக இருப்பதையே தங்களுக்கு பாதிப்பென வரும்போது திருத்தும் அயோக்கியர்களான அரசூழியர்களுக்கு, இணைய வலைப்பக்கத்தில்இருப்பதை மாற்ற எத்தனை நிமிடங்கள் ஆகும்? கட்டிடம் இடிந்தது என தெரியவந்த அடுத்த நொடியே நிச்சயம் இதைத்தாம் செய்திருப்பார்கள்.
இவ்வளவு ஏன், பிரபல தனியார் தொழிற்நிறுவனமான டி.வி.எஸ் கூட, இதைத்தாம் செய்தது என்பதை பதிவு செய்துள்ள கட்டுரை விபரங்களை இங்குசொடுக்கிப் படித்தறியலாம்.
நாங்களெல்லாம் மீட்பு பணியில் ஈடுபட்டோமெனவும், எங்களுக்கு சிலர் உணவுப்பொருட்களை வழங்கியதாகவும் பதிவு செய்கிறார்கள். இவர்கள் உண்மையில்,மனிதாபிமானம் என்கிற வகையில், மெய்மறந்து இதுபோன்ற மீட்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
இதனை தார்மீக கடமையென்று கருதுகிறார்கள். கடமையை மடமையாகவும், மடமையை கடமையாகவும் செய்பவர்களே ஏராளம். இதில், அரசின் பங்குஅதிகம்.
இது பொய்யர்கள் செய்யும் தொழில்போல!
ஆம், விதிமீறல் செய்யாதோர், இதுபோன்ற விதிமீறல்களில் சிக்கமாட்டார்கள் என்பதை கருத்தில்கொண்டு, ஒரேயொருமுறை மீட்புப்பணிகளில் ஈடுபடாமல்விட்டால் மட்டுமே, வேண்டுமென்றே விதிமீறலில் ஈடுபடுவோரையும், இதற்கு துணைபோவோரையும் கொஞ்சமாவது யோசிக்கச் செய்யமுடியும்.
இல்லாவிட்டால், இதற்கு முன்பாக இதுபோன்று எத்தனையோ இடிந்து விழுந்த சம்பவங்கள் நடந்திருந்துங்கூட, இது நடந்திருக்குமா அல்லது இனியாவதுநடக்காமல்தாம் இருக்குமா?
இதுபற்றி மேலோட்டமாக மேயாமல், கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால் சட்டப்படி தண்டனை விதிக்கப்படுவதன் நீதிமுறை அடிப்படை நோக்கமுங்கூட, இதுதாம்என்பது புரியும்!
ஆனால், இந்நீதிமுறையுங்கூட, பணத்தால் விதிமீறலுக்கு உள்ளாக்கப்பட்டு நெடுங்காலமாகி விட்டதன் விளைவே, இதுபோன்ற சர்வ சாதாரணமான ஒவ்வொருவிதிமீறல்களுக்கும் அடிப்படை காரணமாகிவிட்டது.
எனவே, முதலில் நீதிமுறையை ஒழுங்குபடுத்தால், எந்த விதிமீறலையுமம் தடுக்கமுடியாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டிய தருனமிது.செயல்பட வேண்டியது தர்மம்.
இந்த வகையில், நியாயந்தான் சட்டம் என்பதை அடிப்படை தத்துவமாக எடுத்துக்கொண்டு, எனது சட்ட ஆலோசனைகளைஆரம்பத்திலிருந்தே ஒழுங்குபடுத்த ஆரம்பித்ததன் விளைவே, எடுத்துக்கொண்ட கொள்கையில் கொஞ்சஞ்கொஞ்சமாக முன்னேற முடிந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, உங்க கருத்தென்ன என்பதை இதுவரை பதிவு செய்யவில்லையே என சில அன்பர்கள் வம்படியாக கேட்கிறார்கள். இப்படிஉண்மையை எழுதி பலபேர்கிட்ட நான் திட்டுவாங்க வேண்டுமென்பதே, எனது கருத்தின்மீது அளவுகடந்த அன்புகொண்ட வம்பர்களது ஆக்கப்பூர்வமானஆர்வமாக இருக்கிறது.
ஆமாம், ரமணா படத்தில் வருவதுபோன்று எல்லோரும் குடியேறிய பிறகு இச்சம்பவம் நடந்திருந்தால், விதிமீறலில் துணிந்து ஈடுபடுவோருக்கும்,அதற்கு துணைநிற்போருக்கும் நல்லதொரு பாடமாக இருந்திருக்கும்.
ஆனால் பாவம், இதையெல்லாம் அறியாத எங்கிருந்தோ வந்த பற்பல அப்பாவி தொழிலாளர்கள் வாழ்வை இழந்து விட்டனர். நாமும் விசாரணையில்சிக்குவோமென, இத்தொழிலாளர்களை அழைத்து வந்தவர்கள் கூட, மக்கி மண்ணாகி விடட்டும் என்று, அன்று எத்தனைபேர் வேலை செய்தார்கள் எனசொல்லமாட்டார்கள். அடையாளங்காட்ட பயந்து அநாதையாக விட்டு விடுவார்களே?!
(இ, உ)றுதியாக, இப்படியொரு தலையங்கமெழுதும் இவன் எவ்வளவு கேவலமானவனா, வக்கிரபுத்தியுடையவனா இருப்பான் என இப்போது நீங்கள்நினைத்தால், அடுத்து இதுபோன்றதொரு சம்பவம் நடக்கும்போது, இதிலுள்ள உண்மையை உணர்வீர்கள்.