11

ஒரு மனிதன் தனக்காக மட்டும் உழைத்தால்,அவன் ஒரு

புகழ்பெற்ற விஞ்ஞானியாகவோ, மாபெரும் ஞானியாகவோ,

தலைசிறந்த கவிஞனாகவோ ஆகக்கூடும்…..ஆனால்

அவனால் என்றுமே உண்மையில் நிறைவான,

மகத்தான மனிதனாக ஆக முடியாது.

உலகத் தலைவர்களின் வரிசையில் முன்னிலையில் இருப்பவர் கார்ல் மார்க்ஸ் (Karl Marx) ஆவார்.இவர் 1818 ஆம் ஆண்டு மே 5 அன்று ஜெர்மனியில் பிறந்தார். அறிவியல் சார்ந்த பொதுவுடமைக் கொள்கையை வகுத்தார் ,அரசியல் பொருளாதார வரலாற்றில் வல்லுநர்,தலைசிறந்த அறிஞர்,எழுத்தாளர் , சிந்தனையாளர் மற்றும் புரட்சியாளராக உலகம் முழுவதும் அறியப்படுகிறார். இவருடைய தத்துவங்கள் சிந்தனைகளும் மார்க்ஸிசம் என்று அழைக்கப்படுகிறது.இக்கொள்கை உலகம் முழுவதும் தொழிலாளி வர்க்கத்தினரால் பின்பற்றப்படுகிறது.இவரும்,ஏங்கெல்சும் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை 1948 ஆம் ஆண்டு லண்டனில் வெளியிட்டனர்.

கார்ல் மார்க்ஸ் 1867 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று மூலதனம் என்ற நூலை வெளியிட்டார்.இந்த புத்தகம் வெளிவந்த முதல்நாளே உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப்பெற்றது.உலகின் தலைசிறந்த நூலாக மூலதனம் கருதப்படுகிறது.மூலதனம் என்ற நூலின் மூலம் உலகத்திற்கே பொருளாதாரப் பாதையை மார்க்ஸ் ஏற்படுத்திக் கொடுத்தார்.உழைப்பு,உழைப்புக்கு ஏற்ற ஊதியம்,ஊதியம் உழைத்தவனைச் சென்று சேர வேண்டும் என்று மூலதனம் என்னும் புத்தகத்தில் மார்க்ஸ் எழுதியிருந்தார்.இது தொழிலாளர்களின் வாழ்வில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியது.மார்க்ஸ் என்னும் மாமனிதர் 1883 ஆம் ஆண்டு மார்ச் 14 இல் இயற்கை எய்தினர்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சமூக அறிஞர்களின் வாசகங்கள் Copyright © 2015 by ஏற்காடு இளங்கோ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book