3

அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும்வரை

உங்களுக்கு என்றைக்கும் விடிவு காலம்தான்.

பிளேட்டோ (Plato) பெரும் செல்வாக்குள்ள, புகழ்பெற்ற கிரேக்க தத்துவஞானி. இவர் சாக்ரட்டிஸின் மாணவர்,அரிஸ்டாட்டிலின் குரு.இவர் கணிதம், தர்க்கம், தத்துவம் சார்ந்த துறைகளில் சிறந்தவராக விளங்கினார்.மேற்கு உலகின் முதல் கல்விக்கூடமான ஏதென்ஸ் நகரில் அகாடமியை நிறுவினார்.இவர் 36 புத்தகங்களை எழுதியுள்ளார்.அவை பெரும்பாலும் அரசியல் மற்றும் அறவியல் சார்ந்தது.இவர் எழுதிய குடியரசு என்ற நூல் பல நூற்றாண்டுகளாகப் படிக்கப்பட்டு வருகிறது.

மக்களை ஆளும் அரசாங்கம் நேர்மை தவறாதிருக்க வேண்டும்.அரசாங்கத்தில் மக்களின் சார்பாக பொறுப்பில் இருப்பவர்களுக்குக் கடுமையான சட்டதிட்டங்கள் இருக்க வேண்டும்.அவர்களுக்கென்று சொத்துகள் வைத்துக்கொள்ளும் உரிமை இருக்கக்கூடாது.சம்பளமும் கிடையாது.பொது உணவு நிலையங்களில் உணவும், அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள அரசாங்கக் கட்டிடத்தில் தங்கவும், தூங்கவும் அனுமதிக்க வேண்டும்.அப்படிச் செய்தால் அவர்களிடம் சுயநலம் இருக்காது. லஞ்சங்களுக்கு விலை போகமாட்டார்கள்.சமூகத்தில் நேர்மை என்ற குறிக்கோளுடனே செயல்பட வேண்டும்.இவ்வாறு தனது குடியரசு புத்தகத்தில் அவர் எழுதியுள்ளார்.

.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சமூக அறிஞர்களின் வாசகங்கள் Copyright © 2015 by ஏற்காடு இளங்கோ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book