19

 

பூக்களெல்லாம் யாருக்காக

பூக்கின்றோம் என

நினைப்பதில்லை!

சூரியனும் யாருக்காக

காத்திருப்பதில்லை!

மனிதன் மட்டும்

ஏன் இங்கு

கல்மரமாய்

மாறிப்போனான்!

வாழ்க்கையின் கடிகாரத்தில்

சுயநலம் முள்

வேகமாக சுற்ற

என்றோ ஒருநாள்

கடிகாரப் பழுதுக்கு

காந்தி வருவார்

என்ற நம்பிக்கையில்

காத்திருக்கும்

விவேகானந்தர் காண விரும்பிய

ஒளிவிளக்கு மாணவர்கள்!!!

காதலர் தினத்திற்கு வெண்சாமரம்

வீசிக் கொண்டிருக்கும்

விடியா ஒளிவிளக்கை

ஏற்ற எப்போது

வருவார் விவேகானந்தர்?

License

Share This Book