7
வாய் திறந்த நாக்கில்
அம்மாவின் குரலொளி
அமுங்கிய நாதமாய்
குரல் கானம் மறைந்தது!
செடியின் பாதுகாப்பிற்கு
அருகில் தாய்!
எங்கள் அருகிலோ
யாரோ இடும் உணவுக்காக
யாரோ அளித்த வெற்றுஅலுமினிய
சொட்டைப் பாத்திரம்
பசிப்பிணி அறுத்திட
அருகில் அதுவல்ல
ஆபுத்திரன் அட்சயபாத்திரம்
நகைக்கடையில் தொங்கிய
சரமாலை அல்ல எங்களது தேவை
இங்கு அணியணியாய்
இடுப்பிற்கு மேலே ஆரமாய்
மரக்கிளை வேராய்
மண்பானைத் தலையாய்
உயிருள்ள எலும்புவாசிகளின் முகாரி!
இந்திரனின் வஜ்ராயுதத்திற்கு
பின்னாளில் தேவை
என்பதை உணர்த்தும்
நவீன இந்திய 2020 ஒளி விளக்குகள்