24
சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்
இரத்தம் கண்ட சுதந்திரம்
சோம்பல் அற்ற பாரதம்
காந்தி விரும்பிய சுதந்திரம்
பூந்தோட்டம் சூழ்ந்த கற்பீடங்களாய்
நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள்
சிலைகள் வடிவில்சிரித்திருக்க
இநதியத் தாய் மனதளவில்
இரணமாகிப் போனாள்.
இயந்திரங்களாய்
இந்திய மனித உள்ளங்கள்
மாறியதால்
இநதியத் தாயின் கண்ணீரினால்
கடல்நீரும் தன்னளவில் உயர்ந்ததோ?
இருட்டில் வாங்கிய சுதந்திரம்
இன்னமும் விடியவில்லை.