விடுதலையின் பாதையில் சேர்ந்து ரகுவும் இப்போது ஒரு போராளி.இந்த வாழ்கை அம்பானியின் வாரிசுபோலவோ அரசியல் வாதியின் வாரிசு போலவோ அவ்வளவு எளிதானது இல்லை. மரணபயம் என்பது அவனுக்கு துளியும் இல்லை. காரணம் மூன்று தலைமுறை கடந்து
தொடர்கின்றது .தமிழர்மீது யுத்தம் ஆனாலும் தலைக்கு மேல் நாகபாசுரம் போல மரணம் இப்போது இருக்கின்றது.இன்று மரணமோ இல்லை அடுத்த நொடி மரணமோ என்று தெரியாத நிச்சயம் அற்ற வாழ்க்கை.
மண்ணுக்காக தம் உயிரை தாரை வார்த்து வித்தாகிப் போவார்கள் வீரத்துடன் இது பழகிபோன விடயமாக நாளாந்தம் நடக்கும் விடயமாக மாறிவிட்டது எல்லாப்போராளிகள் போலவே ரகுவின் வாழ்க்கையிலும்.
இனவாத ஊடகம் தனிக்கை என்று உள்நாட்டில் கவசம்போட்டாலும் கசிந்துவிடும் கடல்கடந்து வெளிநாட்டு சுதந்திர ஊடகத்திற்கு .ஏன் நம்மவர் அறியக்கூடாதா என்று விடைதேடினால் வீட்டிற்கு வரும் வெடிகுண்டு .கேட்டுப்பாருங்கள் ஆய்வுக்களம் எழுதும் இக்பால் அத்தாஸ் வாழும் சாட்சி இனவாத நாட்டில் .!
அதுமட்டுமா??போர்களத்தில் உணவு ,தண்ணீர் இருக்காது,சோற்றைக்காண்பது கடவுளை காண்பது போல இருக்கும்.நெல்விளைந்த எங்கள் நெஞ்சம் போன்ற தாய்பூமி எங்கும் கந்தக குண்டுமழை பொழிந்த இறையாண்மை ஆட்சியினர் மீது எந்த இணைத்தலைமை நாடும் நிறுத்துங்கள் என்று குரல் கொடுக்கவில்லை .தமிழர் குரலை மட்டும் அடக்கி வாசியுங்கள் என்று அதிகாரப்பாட்டல்லவா பாடினார்கள்!காயம் அடைகின்ற நண்பர்களை வாகனத்தில் ஏற்றிவிட்டு வரும் போது அங்கம் எல்லாம்இந்தமண்ணு எங்கள் சொந்த மண் என்ற தன்மானத்தில் அந்தக் குருதி சிந்தியிருக்கும்.
அதை கழுவ முடியாது தண்ணீர் இருக்காது.எங்கும் நீர் இருந்த பூமியில் தடைகள் போட்டு அணைகள் எல்லாம் பெருக்கு எடுக்காமல் இருக்க போர் வெறியர்கள் வாய்க்கால்கள் மீது கொட்டிய சீமெந்து எந்த சுனாமி நிதியில் சுட்டதோ ?யார் அறிவார்கள் ??,ஆனாலும் தேசத்துக்காக ஒருவன் சிந்திய குருதி என்பதால் அதில் வீரமும் ,பற்றும் இருக்கும்.அதில் பிரதேசவாத வாடை வீசாது தாய் மண்வாசமே வீசும்.
போராட்ட களத்தில் இருப்போரிடம் சுடச்சுட செய்தி சொல்லுமா ஊடகம் சினிமா ஒளியில் இருப்பவர் மீது மட்டும் முன்னும் பின்னும் முகத்தை நீட்டும் துப்பாக்கி முணைபோல!அவன் பற்றிய எந்த தொடர்புகளும் இல்லை.அவனது நண்பர்களிடமும் போய் கேட்க முடியாது அவர்களும் போராட்டகளத்தில் ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து போய்விட்டார்கள்.
