“பண்பென்ற பாசக்கூட்டிலே  சேர்ந்து பண்பாடும் வாணம் பாடி நாமே என்ற “பரதன் பாடல் போல ரகுவின் தந்தை கதிரவனும் ஒரு பாடல் பிரியன் அமைதியானவர்

.அமைதியில் அப்பனுக்குப்  தப்பாமல் பிறந்து பிள்ளையாக இருக்கின்றான்  என்று அயலவர்கள் போற்றும் வண்ணம் ரகு.பொதுவாகவே  அமைதியான சுபாவம் கொண்டவன். யாருடனும் இலகுவில் பழகிவிடமாட்டான்,அதுவும் பெண்கள் என்றால் சொல்லவே வேண்டாம் ஆஞ்சநேய பக்தன் போல அவர்களாக வந்து பேசினாலும் விலகி போகும் ஒரு கேரக்டர்,

உயர்தர வகுப்பில் மாணவிகள் மாணவர்களுடன் சகஜமாக வந்து பேசுவது ரகுவிற்கு ஆச்சரியமாக இருந்தது.”பால் வாசம் கடந்து பூவாசம் கண்டான் பல்கலைக்கழகம் புகும் முதல் நிலைப்பள்ளியில் என்ற “கண்ணதாசன் கவிதைபோல அதுவரை 11ம் வகுப்புக்களில் மாணவர்கள் மாணவிகளுடன் பேசுவது இல்லை.!
 
ரகுவின் அமைதியான சுபாவம் பல மாணவிகளுக்கு அவனை எப்படியும் பேசவைக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்தார்கள்.கல்லைக்கூட ஆலையில் போட்டு மாவைப்போல அரைப்பதில் தந்திரம் வைக்கும் கன்னியர் அவன் போகும் இடம் எல்லாம் வலியவந்து பேசுவார்கள் ரகு எதுவும் பேசாமல் போய்விடுவான்,துறவி விஸ்வாமித்திரர் போல பூஜிக்கும் பூக்கள் அல்ல பெண்கள் இந்தக்கல்லூரிக் காலத்தில் தவசியைப்போல தாண்டிப்போகவேண்டும்!இனவாத நாட்டில் வெட்டுப்புள்ளியில் தட்டிவிடுவார்கள் வன்னித் தமிழன்  பல்கலைக்கழகம் போனால் அடுத்த சிங்களவனை  எப்படி  உள்வாங்குவது? என்ற மேல்மட்ட அரசியல் புரியாதவன் இல்லை ரகு.

ஆனால் பசங்களுடன் நன்றாக பம்பல் அடித்து கதைப்பான் இதனால் பல மாணவிகளுக்கு அவன் மேல்அக்கினிச் சுவாலைதான். வெற்றி நிச்சயம் வடக்கை கைப்பற்றும் என்ற கனவில் இருந்த இனவாத ஆட்சி போலத்தான் செம கடுப்பு.

ரகுவுடன் தோள் கொடுப்பான் தோழன் என்பது போல நட்பு என்ற குழாமில் இருந்தான்  அர்ஜுன்.

இவர்கள் இருவரும் தான் வகுப்பில் நெருகிய நண்பர்கள் இவர்களுடன் சுயன்,குமரேசன் இவர்களும் அடக்கம் வகுப்பில் மொத்தம் 12 ஆண்கள் 13 பெண்கள்.அர்ஜுன்,சுயன்,குமரேசன்,ரகு நால்வரை தவிர ஏனைய 8 மாணவர்கள் மாணவிகளுடன் சகஜமாக பேசி பம்மல் அடித்து கும்மாளம் போடுவார்கள்.

 சர்வவல்லமை பொருந்திய  ஜனாதிபதி போல மாணவர்களிடையே ரகுவின் ஆலோசனை கேட்கப்படும் பின் தான் மாணவர்கள் அதை செயல் படுத்துவார்கள்
.உயர்தரத்தில் மாணவர்கள் மாணவிகளின் கல்வி நடவடிக்கையில் ஏதாவது மாற்றம் என்றாலும் கீழ் நிலை வகுப்புக்களில் வரும் மாற்றம் என்றாலும் அதனைப் பற்றி  மாணவர் தலைவர்களின் தலைமகனாக ஆலோசனைக்கு பள்ளி அதிபர் அழைப்பது ரகுவைத்தான். கட்சியின் பொதுச்செயலாளர் போல!மாணவர்    தலைவர்களை விளையாட்டு ,இலக்கியம் ,என முன்னனியில் இருக்கக்கூடியவர்கள் யார்  ,,?   என்பது வரை அபிப்பிராயம் கூறக்கூடிய அளவிற்கு  பின்னனியில்  இயக்கும் இயக்குனர் என்பதாலும் பதவியில் இருந்தாலும் பணிவானவன் என்பதால்  பள்ளியில் ஒரு சிறந்த மாணவன் என்ற அபிப்பிராயம் பல ஆசிரியர்களிடமும் இருந்தது.பள்ளியின் மாணவர் பத்திரிகை ஆசிரியராக ரகு இருந்ததும் ஒரு காரணம். இன்னொன்று பொதுச்சேவையான ஊடக ஆர்வம் பள்ளியில் தொடங்கும் வாய்ப்பு எல்லாருக்கும் வாய்ப்பது இல்லை அது ரகுவிற்கு கிடைத்ததுக்கு பள்ளியில் அவன் மாணவர்களின் மதியுரையனாக இருந்ததும் ஒரு காரணம்!

ரகுவின் பாடசாலையில் அப்போது பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டு இருந்தவள் சுகி !

.சமுதாயத்தில் பெரும் செல்வாக்கு மிக்க ஒருவரின் மகள் அதிகாரம் அப்போது அவர்கள் கையில் இருந்தது வன்னியில். இயக்க பொறுப்பாளர் ஒருவருடைய
மகள்.

சுகியின் சுந்தர புருசன் நீயடா!
சூடிக்கொள்வானா என்னை
சுவாசத்தில் இவள்
சுந்தர காண்டம் நாயகி
சிந்துஜா போல சுகியை …..
(சுகியின் நாட்குறிப்பில் இருந்து 2005 )

 

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

விழியில் வலி தந்தவனே Copyright © 2015 by தனிமரம் நேசன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book