"
பிள்ளையார் என் இஷ்ட தெய்வம். அவரோடு உரிமையாகச் சண்டை போடுவேன். மனதுக்குள் விவாதம் செய்வேன். திட்டுவேன். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு அமைதியாக இருப்பவர் என் நண்பர். ஆகவே அவரைப் பற்றிய செய்திகளைத் தேடித் தேடிப் படிப்பேன். பிள்ளையார் படம் போட்ட சின்னத் தாளைக் கூட விட்டு வைக்க மாட்டேன். கொலு பொம்மை வாங்கினால் கூட வருஷா வருஷம் பிள்ளையாராகவே வாங்கிக் கொண்டிருந்தேன். பின்னர் அனைத்தும் விநியோகம் செய்தாயிற்று! 🙂 ஆகவே இணையத்துக்கு வந்து எழுத ஆரம்பித்த புதிதில் மழலைகள்.காம் என்னும் இணைய தளத்தில் நண்பர் ஆகிரா அவர்கள் என்னை ஏதேனும் எழுதித் தரும்படி கேட்டபோது அதுவரை நான் கேட்டிருந்த, படித்திருந்த பிள்ளையார் கதைகளைத் தொகுக்க ஆரம்பித்தேன். பின்னர் சிலவற்றைத் தேடித் தேடிப்புத்தகங்களில் இருந்தும் பெற்றேன். அனைத்தையும் தொகுத்து இங்கே அளிக்கிறேன். இதில் என் சொந்தக் கருத்தோ, சொந்தமான கற்பனைகளோ எதுவும் இல்லை. பல புத்தகங்களில் படித்துக் கேட்டு அறிந்தவைகளே! ஆகவே இதன் குறைகள் மட்டுமே என்னைச் சார்ந்தது. நிறைகள் அனைத்தும் நான் படித்த புத்தகங்களைச் சேர்ந்தது. நன்றி. வணக்கம்.
கீதா சாம்பசிவம்
geethasmbsvm6@gmail.com
http://sivamgss.blogspot.co.in

Share This Book