சி.சரவணகார்த்திகேயன் (1984) அண்ணா பல்கலைக்க‌ழகத்தில் கணிப்பொறியியல் படித்து, தற்போது பெங்களூரில் தனியார் நிறுவனமொன்றில் மென்பொருளாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது ஊர் கோவை – ஈரோடு. 2007ல் குங்குமம் இதழில் கவிப் பேரரசு வைரமுத்து இவரது ஒருத்தி நினைக்கையிலே… என்ற படைப்பினை முத்திரைக் கவிதையாகத் தேர்ந்தெடுத்தார். இவரது முதல் புத்தகமான சந்திரயான் (கிழக்கு பதிப்பகம்) 2009ம் ஆண்டின் தமிழக அரசின் சிறந்த நூல் விருது பெற்றது. பரத்தை கூற்று (அகநாழிகை), தேவதை புராணம் (கற்பகம் புத்தகாலயம்) என்ற கவிதைத் தொகுதிகள் எழுதியிருக்கிறார். இவரது கட்டுரைகள் தொகுப்பு கிட்டதட்ட கடவுள் (அம்ருதா). குங்குமம் இதழில் இவர் எழுதிய ச்சீய் பக்கங்கள் என்ற பேசத் தயங்கும் விஷயங்கள் குறித்த வரலாற்றுத் தொடர் வெட்கம் விட்டுப் பேசலாம் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியானது (சிக்ஸ்த் சென்ஸ்). குஜராத் 2002 கலவரம் (கிழக்கு பதிப்பகம்) என்ற அரசியல் வரலாற்று நூல் எழுதி உள்ளார். காதல் அணுக்கள் என்ற பெயரில் திருக்குறள் காமத்துப்பாலுக்கு கவிதை உரை எழுதி இருக்கிறார். ஆனந்த விகடன், குமுதம், குங்குமம், அம்ருதா, ஆழம், அகநாழிகை, மெல்லினம் (ஆஸ்திரேலியா), விளம்பரம் (கனடா), தமிழ்பேப்பர்.காம், அதிகாலை.காம் ஆகிய மின், அச்சு இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகி இருக்கின்றன‌. தமிழ் என்ற இலவச மின் காலாண்டிதழை நடத்தி வருகிறார்.

| http://www.writercsk.com/ | https://www.facebook.com/saravanakarthikeyanc | https://twitter.com/writercsk |

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

ச்சீய்… Copyright © 2015 by சி.சரவணகார்த்திகேயன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book