37
திருப்பூவணத்திற்கு வடக்கே சுமார் 18 கி.மீ. தூரத்தில் உள்ளது திருவாதவூர். இவ்வூரில் பிறந்தவர் மாணிக்கவாசகர். அதனால் அவருக்குத் திருவாதவூரர் என்னும் பெயர் அமைந்தது. அவருடைய கல்வி. கேள்வி. ஒழுக்கம். அறிவு. ஆற்றல் ஆகிய சிறப்புக்களைப் பற்றிக் கேள்வியுற்ற பாண்டிய மன்னன் அவரைத் தனது தலைமை மந்திரியாக நியமனம் செய்தான். அவரது ஆட்சித் திறமையைக் கண்டு “தென்னவன் பிரமராயன்” என்ற சிறப்புப் பட்டத்தையும் வழங்கினான்.
மாணிக்கவாசகர் பொருட்டு இறைவன் நேரில் எழுந்தருளி நரிகளைப் பரிகளாக்கியும். பின்னர் பரிகளை நரிகளாக்கியும் திருவிளையாடற் புரிந்தருளினார்.
(1) மாணிக்கவாசகப் பெருமான் கீர்த்தித் திருவகவலில்
“இந்திர ஞாலம் காட்டிய இயல்பினாய் போற்றி
உத்தரகோச மங்கை வித்தக வேடா போற்றி
பூவண மதனிற் தூவண மேனி காட்டிய தொன்மையோய் போற்றி
வாதவூரில் பாதச் சிலம்பொலி காட்டிய பண்பா போற்றி
திருவார் பெருந்துறை செல்வா போற்றி்
என்று திருப்பூவணநாதரின் தொன்மைகளையும் அருளும் தன்மையையும் பாடியுள்ளார்.
(2) “அரனே போற்றி. அந்தணர்தம் சிந்தையானே போற்றி் – என்று ஆரம்பிக்கும் திருமுறைத்திரட்டில்.
“… …
வெண்காட்டில் உறைவா போற்றி
விடைகாட்டும் கொடியா போற்றி
சக்கரம் மாலுக்கு ஈந்தாய் போற்றி
சலந்தரனைப் பிளந்தாய் போற்றி
பாலொடு நெய்தயிர் பலவும் ஆடுவாய் போற்றி
… …”
“தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி
திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி
சாவாமே காத்து என்னை ஆண்டாய் போற்றி
“மைசேர்ந்த கண்டம் உடையாய் போற்றி
மாலுக்கும் ஓர் ஆழி ஈந்தாய் போற்றி
பொய்சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி்
“விண்ர்லகம் ஈந்தவிறல் போற்றி
மண்ணின்மேல் காளத்தி போற்றி கயிலைமலை போற்றி
சதுர்முகன் தந்தைக்குக் கதிர்விடு கடவுள்
ஆழி கொடுத்த பேரருள் போற்றி்
சலந்தரன் தடிந்த தண்டம் போற்றி
தாதையை எறிந்த வேதியச் சிறுவற்குப் பரிகலம்
கொடுத்த திருவுளம் போற்றி்
“சிறுவனுக்கு அழியா வாழ்நாள் அளித்து அருள் செய்தி போற்றி
சலந்தரன் உடல் கீண்ட சக்கரப் படையாய் போற்றி
வலம்தரு அதனை மாயோன் வழிபடக் கொடுத்தாய் போற்றி
அலர்ந்த செங்கமலப் புத்தேள் நடுச் சிரம் அரிந்தாய் போற்றி்
என்று திருப்பூவணநாதர் பெருமாளுக்குச் சக்கராயுதம் வழங்கிய செய்தியைப் பாடியுள்ளார். இச்செய்தி. திருப்பூவணப் புராணத்திலே. சிதம்பர உபதேச சருக்கத்திலே விரிவாக எடுத்துக் கூறப் பெற்றுள்ளது.
(3) போற்றித் திருவகவலில்.
“… … …
திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றிஸ
பொருப்பமர் பூவணத்தரனே போற்றிஸ
அருவமும் உருவமும் ஆனாய் போற்றிஸ
… … … ” என்று திருப்பூவணநாதரைப் போற்றி வணங்கியுள்ளார்.
*****
கருவூர்த் தேவர் பாடியது
ஒன்பதாம் திருமுறை
பண் – பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
திருவருள் புரிந்தா ளாண்டு கொண் டிங்ஙன்
சிறியனுக் கினயது காட்டிப்
பெரிதருள் புரிந்தா னந்தமே தருநின்
பெருமையிற் பெரியதொன் றுளதே
மருதர சிருங்கோங் ககின்மரஞ் சாடி
வரைவளங் கவர்ந்திழி வைகைப்
பொருதிரை மருங்கோங் காவண வீதிப்
பூவணங் கோயில்கொண் டாயே. (பாடல் – 144)
பாம்பணைத் துயின்றோ னயன்முதற் றேவர்
பன்னெடுங் காலநிற் காண்பா
னேம்பலித் திருக்க வென்னுளம் புகுந்த
வெளிமையை யென்றுநான் மறக்கேன்
தேம்புனற் பொய்கை வானளவாய் மடுப்பத்
தெளிதரு தேறல்பாய்ந் தொழுகும்
பூம்பணைச் சோலை யாவண வீதிப்
பூவணங் கோயில்கொண் டாயே. (பாடல் – 145)
கரைகட லொலியிற் றமருகத் தரையிற்
கையினிற் கட்டிய கயிற்றா
லிருதலை யொருநா வியங்கவந் தொருநா
ளிருந்திடா யெங்கள்கண் முகப்பே
விரிதிகழ் விழவின் பின்செல்வோர் பாடல்
வேட்கையின் வீழ்ந்தபோ தவிழ்ந்த
புரிசடை துகுக்கு மாவணவீதிப்
பூவணங் கோயில்கொண் டாயே. (பாடல் – 146)
கண்ணியன் மணியின் குழல்புக் கங்கே
கலந்துபுக் கொடுங்கினேற் கங்ங
னுண்ணியை யெனினு நம்ப நின்பெருமை
நுண்ணிமை யிறந்தமை யறிவன்
மண்ணியன் மரபிற் றங்கிருண் மொழுப்பின்
வண்டினம் பாடநின் றாடும்
புண்ணிய மகளி ராவண வீதிப்
பூவணங் கோயில் கொண் டாயே. (பாடல் – 147)
கடுவினைப் பாசக் கடல்கடந் தைவர்
கள்ளரை மெள்ளவே துரந்து
னடியிணை யிரண்டு மடையுமா றடைந்தே
னருள்செய்வா யருள்செயா தொழிவாய்
நெடுநிலை மாடத் திரவிருள் கிழிக்க
நிலைவிளக் கலகில்சா லேகம்
புடைகிடந் திலங்கு மாவண வீதிப்
பூவணங் கோயில்கொண் டாயே. (பாடல் – 148)
செம்மனக் கிழவோ ரன்பு தாஎன்றுன்
சேவடி பார்த்திருந் தலச
வெம்மனங் குடிகொண் டிருப்பதற் கியானா
ரென்னுடை யடிமைதானி யாதே
யம்மனங் குளிர்நாட் பலிக்கெழுந் தருள
வரிவைய ரவிழ்குழற் சுரும்பு
பொம்மென முரலு மாவண வீதிப்
பூவணங் கோயில் கொண் டாயே. (பாடல் – 149)
சொன்னவின் முறைநான் காரண மு ணராச்
சூழல்புக் கொளித்தநீ யின்று
கன்னவின் மனத்தென் கண்வலைப் படுமிக்
கருணையிற் பெரியதொன் றுளதே
மின்னவில் கனக மாளிகை வாய்தல்
விளங்கிளம் பிறைதவழ் மாடம்
பொன்னவில் புரிசை யாவண வீதிப்
பூவணங் கோயில்கொண் டாயே. (பாடல் – 150)
பூவணங் கோயில் கொண்டெனை யாண்ட
புனிதனை வனிதை பாகனை வெண்
கோவணங் கொண்டு வெண்டலை யேந்தும்
குழகனை யழகெலா நிறைந்த
தீவணன் றன்னைச் செழுமறை தெரியு
திகழ்கரு வூரனே னுரைத்த
பாவணத் தமிழ்கள் பத்தும்வல் லார்கள்
பரமன துருவமா குவரே. (பாடல் – 151)
திருச்சிற்றம்பலம்