சிவமயம்

யோகிராம் சுரத்குமார் யோகிராம் சுரத்குமார்

யோகிராம் சுரத்குமார் ஜெயகுருராய

பேராசிரியர் ராம.திண்ணப்பன்,

ஆங்கிலத்துறை முன்னாள் பேராசிரியர்,

சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி,

தேவகோட்டை.

No. 5, P.L.S. சாலை,

தேவகோட்டை.

அணிந்துரை

நகரத்தார்கள் கோயில் திருப்பணிக்குத் தங்களை அர்பணித்துக் கொண்டவர்கள், அதிலும் தேவகோட்டை நகரத்தார்கள் தமிழ்நாட்டில் மட்டு மல்லாமல் மற்ற மாநிலங்களிலும் கோயில் திருப்பணி செய்தவர்கள். திருப்பூவணத்தில் நேமங் கோவிலைச் சேர்ந்த தேவகோட்டை .மு. வகையறாவினர் தலைமுறை தலைமுறையாகத் திருப்பணிகள் செய்து வருகின்றனர்.

திருப்பூவணம் குரு உபதேசத் தலமாகும். மாத்தியாந்தினி மற்றும் தியான காட்டர் ஆகிய இரு முனிவர்களும் 100 தேவவருடம் தவம் செய்து, சிவபெருமானின் தீட்சை பெற்ற திருத்தலமாகும். சுமார் 37 லட்சம் வருடத்திற்கு முன்பு, அம்பாள் தவம் செய்து அதன் பயனாகப் பாரிஜாதப் பூவால் சிவலிங்கம் தோன்றியது. அதனால் பூவணநாதர்என்ற பெயர் பெற்றது.

அம்பாள் ஆடிமாதம் மட்டும் வைகை ஆற்றுக்கு வடகரையில் தவம் செய்துள்ளாள். அந்த இடம்தான் ஆடித்தபசு மண்டபம்“. அம்பாள் தவம் செய்த இடம் என்பதால் திருஞானசம்பந்தர் அந்த இடத்திற்குச் சென்று இறைவனை வணங்கி வழிபட்டுள்ளார். அப்போது ஆற்று மணல்களெல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சியளித்துள்ளன. எனவே அவர் ஆற்றைக் கடந்து திருக்கோயிலுக்குச் செல்லாமல் அங்கிருந்தபடியே ஆற்றின் தென்கரையில் உள்ள சிவலிங்கத்தை வணங்கிப் பாடியுள்ளார். நந்தி விலகிக் காட்சி அளித்துள்ளது.

திருப்பூவணநாதரின் திருவருளைப் பெற்று மதுரை சென்று. சமணர்களை வென்று வைசத்தைத் தழைக்கச் செய்து, அதன்பின்னர் மீண்டும் திருப்பூவணத்திற்கு வந்து திருக்கோயில் சென்று மீண்டும் ஒரு பதிகம் பாடி இறைவனை வணங்கியுள்ளார்.

திருப்பூவணத்தில், பொன்னனையாள் நடத்திய அன்னதானத்தில் மதுரை சொக்கர், சித்தர் வடிவத்தில் தோன்றி இரசவாதம் செய்து, திருப்பூவண உற்சவர் அழகிய நாயகரைப் பொன்னால் செய்வதற்கு வேண்டிய பொன்னை உறுக்கிக் கொடுத்துள்ளார். மதுரையில் இருந்து சொக்கர் வந்து திருப்பணி செய்த திருத்தலமாகும்.

இக்காரணங்களால் மதுரை சொக்கரை வணங்குவதற்கு முன் திருப்பூவணநாதரை வணங்கினால் மிகுந்த பலன் உண்டு.

ஆடித்தபசுமண்டபம் சிதிலமடைந்த நிலையில்

ஆடித்தபசுமண்டபம் புனர்நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருகின்றன

ஆடித்தபசு மண்டபம் சிதலமடைந்த நிலையில் இருந்தபோது, திருஞானசம்பந்தப் பெருமான் பாடிய இடம் புதுப்பொலிவுடன் விளங்கவேண்டும் என எந்நேரமும் நினைந்து தன்னை முழுமையாகத் திருப்பூவணநாதருடன் இணைத்து கொண்டவரும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழத் துணைப்பதிவாளர் திரு,காளைராசன் மற்றும் தேவகோட்டை, ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர் டாக்டர் சந்திரமோகன் மற்றும் அடியேன் தலைமையில் இணைந்து ரூபாய்,2,50,000-00 (ரூபாய் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம்) செலவில் மற்றபிற அன்பர்கள் உதவியுடனும் திருப்பணியை நிறைவு பெறச் செய்துள்ளோம். 2009ம் ஆண்டு தைமாதம் குடமுழுக்குவிழா செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. திருப்பூவணம் பிதுர் மோட்சத் தலமாகும்“. தருமஞ்ஞன் என்பவருடைய தந்தையாரின் அஸ்திக் கலசத்தில் இருந்த எலும்பு பூவாக் மாறிய திருத்தலமாகும்“, “காசிக்கு வீசம்கூடஎன்பது மக்கள் வழக்கு.

திருமலை நாயக்கர் காலத்திற்குப் பின்னாள், தொடர்ந்து 300 ஆண்டுகளுக்கும் மேலாக அன்னதாம் நடைபெறாமல் நின்றுவிட்டது. மானாமதுரை அருள்மிகு ஸ்ரீ பிரித்தியங்கிரா தேவி திருக்கோயில் ஸ்ரீஸ்ரீ ஞானசேகர சுவாமிகளின் தலைமையில், திருப்புவனம் வழக்குறைஞர் சண்முகநாதன், காளைராசன் மற்றும் சுவாமிகளின் அன்பர்கள் பலரும் இணைந்து சித்திரை மாதம் வளர்பிறை பிரதோச நாளில் (17-4-2008) திருக்கோயிலில் மீண்டும் சிறப்பாக அன்னதானத்தை நடத்தியுள்ளனர். அன்று நடைபெற்ற அன்னதானத்தில் சிவபெருமானே வயோதிகனாக பழுத்த பழமாக சன்னியாசி வேடத்தில் தோன்றி அன்னம் பெற்றார் என்பது உண்மையாகும்.

ஸ்ரீ மகா பஞ்சமுக ப்ரித்யங்கிரா தேவி கோயில், வேததர்ம ​​ஷேத்ர டிரஸ்ட் ஸ்ரீஸ்ரீ ஞானசேகர சுவாமி அவர்கள்

திருப்பூவணம் திருக்கோயிலில் 17-4-2008 அன்று அன்னதானம் நடைபெறுகிறது

இனிமேல் வருடம்தோறும் தொடர்ந்து அன்னதானம் நடைபெற சுவாமிகளின் ஆசியுடன், அடியேன் தலைமையில் ஒரு கமிட்டி நிறுவப்பட்டுள்ளது. அடியேன் திருப்பூவணத்தில் உணர்ந்ததையும், திரு.காளைராஜாவின் திருப்பூவணப்புராணம் படித்ததையும், கேள்விப்பட்ட எதையும் எழுதத் தவிர்க்க முடியாததால் அணிந்துரை நீண்டதாக அமைந்துள்ளது.

தேவகோட்டை இப்படிக்கு

14-9-2008 பேராசிரியர் ராம,திண்ணப்பன்

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

திருப்பூவணப் புராணம் Copyright © 2015 by மு​னைவர். கி. காளைராசன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book