திகழ்வரைமின்னனைவதனச் செங்கமலந்தளையவிழ்க்குந்திவாகரஞ்செய்
மகிழொருவெண்மதி மருப்பின் வயிரகிம்புரி வயங்குமத்தயானை
நிகழுமடியார்க்கன்புநீடுமறம்பொருளின்பம் வீடுநல்கும்
புகழ்தருநற்கற்பகத்தின் பொற்பதத்தையெஞ்ஞான்றும் போற்றல் செய்வாம்
நூற்பயன்
ஒப்பிலாத வுருத்திர சங்கிதை யுற்ற பூவண நற்கதை யோதுவோர்
செப்புமாறு செவிக்கொடு மன்னிய சிட்டராய சிறப்புறு தன்மையோர்
விப்பிராதி பவித்தக மெய்ம் மொழிமிக்க வேத விதத்துயர் மாதவீர்
தப்பிலாத தவத் திரு மன்னவர் தயாபரன் கயிலைக்கிரி வாழ்வரே
பூவணநாதர் வாழ்த்து
பூமாது மகிழ்துளபப்புயல்வண்ண நெடுமாலும்புகழ்வெண்கஞ்ச
நாமாதுநடனமிடு நான்மறைதேர்நான்முகனுநயப்ப நன்னீர்த்
தேமாது செழும்பவளச் சடையிருப்பத்திங்களிருடுரப்பச்சைல
மாமாது வடிவிலங்கமன்னிய பூவணத்தான்றாள் சென்னிசேர்ப்பாம்.