10

47

நவில்கின்ற நைமிசாராணியந்தன்னி னற்றவத்தின் மிக்க சிவஞானவேட்கைச்

சவுநகாதியமுனிவர் கணங்களானோர்தர்க்கமோடுத்தரங்கள் சாற்றித் தாபித்

துவமனிலாமாதவன்றன் மைந்தன் மைந்தரொருமையுடனிருண் மலந்தீர்ந்திருந்தங்கோர்நாட்

சிவனடியை யடையும் வகை தெரிக்குங் காதை சேர்ந்தவர் கடாந்தம் மிற்றேருங்காலை

வேறு

48 பின்னியபின்னல் பிறங்கவிரித்தோன்

மன்னியநல்லரைவற்கலையாத்தோ

னன்னியமத்தொழினாளுமிழைப்போன்

பன்னியதீவினை பற்றாவிட்டோன்

49 பாயதலம்பெறுபல்லுயிருக்குந்

தாயினுமன்புதழைத்திடுமேலோ

னேயமிகுந்தவநீங்கலிலாதோன்

றூயவெணீறு துதைந்திடுமெய்யோன்

50 புண்டரமீது பொருந்திவிளங்குங்

கண்டிகைகொண்டகவின்றருமார்ப

னெண்டருமெண்கலையாவுமுணர்ந்தோன்

பண்டருவேதபராயணர்சூழல்

51 அங்கணிலம்புகழங்கர்தற்சேர்

சங்கரனன் புதழைத்துறன்மானச்

செங்கைகடாங்கிய சென்னியன்மன்னுந்

துங்கமிகுந்தவசூதனடைந்தான்

52 கட்டமும்வெம்பிணியுங்களைகட்ட

சிட்டர்கடாமெதிர்செங்கைகுவித்துச்

சட்டெனவாயிடைசார்ந்திடநாப்ப

ணிட்டதொராதனமேறியிருந்தான்

53 இருந்தருள்காலையிருந்தவவாணர்

சுரந்தருண்மாதவசூதனை நோக்காப்

பொருந்தியகை நனிகூப்பினர் போற்றித்

திருந்துரையின்னன செப்புதலுற்றார்

54 நாடியகாலையினானில மெங்குந்

தேடியபூடடிசேர்ந்ததையொக்குங்

கேடிலருந்தவகேட்குதியெம்பா

னீடருளாலிவணீவரலாலே

55 மாதவமேபுரிமாதவனான

மேதகுவேதவியாதனவன்பா

லாதரவிற் கொளருங்கலையாவு

மோதியுணர்ந்தவுனக்கிணையுண்டோ

56 உன்னையலாதினியோர் கதியின்றா

னின்னருளைப் பெற நேர்ந்தவன்யானென்

றென்னை முனிட்டவிருந்தவர் முன்னென்

புன்மொழி நன்மை பொருந்தவுணர்ந்தே

57 முன்பொர்தினந்தனின் மூதறிவாலே

மன்பயில்புட்பவனத்தது காதை

மின்பயில்கின்ற சுவேதவனத்தி

னன்கதை நாப்பணவின்றிடுகாலை

58 அப்பரிசங்கணறைந்தசுருக்க

மெய்ப்படநாடிவிளங்கவிரித்துத்

திப்பியமான செழுங்கதை மேன்மை

யிப்பரிசென்னவியம்பிட வேண்டும்

59 என்றிவைசவுநகனேத்தியிசைப்ப

நன்றிதுநன்றிதெனாநனிநாடிப்

பொன்றிகழ்மாமுனிபுங்கவவென்னாத்

துன்றியவன் பொடுசூதனுரைப்பான்

வேறு

60 கந்தநறும்பொகுட்டுடைவெண் கதிர்நிலாக்கற்றைக் கமலமலர்ப்பீடிகை சேர்கலைமடந்தைதனையு

முந்தமறைநான்கினொடு புராண மூவாறுமுழுதுலகமிறைஞ்சவன்பின் மொழிந்த வியாதனையுஞ்

சுந்தரநற்கவுட்டுமதசலமருவி தூங்குந் தூங்கியகைத் தூங்கன்முகபடாந்துலங்குமொற்றைத்

தந்தமுறுமடிகடிருவடிகளையும் போற்றிச் சந்ததமு மருள் புரிவான்சிந்தனை தான் செய்தே

61 வேதமொடாறங்கமாகமபுராணங்கண் மேதகுநற்கலையாவுமோதியுணர்ந்தவனீ

யாதலதற்கையமிலையாயினுமென்றன்னை யவையகத்துநன்குணர்ந்தோனாக்குதற்குநினைந்தே

யோதுகவிக்காதைதனை யெனவுரைத்தியதனாலுவந்துரைப்பன் சவுநகமாமுனிவரனேயென்னாச்

சூதனருள்வியாதனுரைத்திட்ட வணமோர்ந்து தொல்கயிலைவளஞ்சிறிது சொல்லலுற்றான்மாதோ

சவுநகர் சூதரை வினவியசருக்க முற்றியது

ஆகச் செய்யுள் 61

*****

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

திருப்பூவணப் புராணம் Copyright © 2015 by மு​னைவர். கி. காளைராசன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book