12
100 முன்னவனருளினாலேமுக்குறும்போட்டிமேலாந்
தன்னிகரருந்தவத்துச் சவுநகமுனிவகேண்மோ
பன்னுசெந்தமிழ்சேர்சங்கப்பாண்டிநன்னாடுசூழ்ந்த
தொன்மைசால் பொருநைவைகை வளஞ்சில தொகுத்துரைப்பாம்
101 பன்னிறங்களினுஞ் சென்றுபடிகந்தான்பற்றுகின்ற
வந்நிலைபோல்வெண்மேகமார்கலிபடிந்தருந்தித்
துன்னியெம்மருங்குமார்த்துச் சூன்முதிர்ந்திடித்துமின்னி
மைந்நிறங்கவர்ந்து கொண்டுவானகத்தெழுந்ததன்றே
102 இகம்பரமிரண்டுஞ் சேரவெடுத்ததநூற்கடன்மடுத்திட்
டகந்தெளிந்துணர்ந்த மேலாமறிவுடைக்குரவரானோர்
பகர்ந்தமாணாக்கர் தம்பாற் பரிந்து நல்லருந்தமிழ்ச் சொற்
புகன்ற போற்பொதியவெற்பிற் பொழிந்தனபுனலின்றாரை
103 மருவியவரசன்றன் பால்வண்கொடைக்கடலையுண்டு
பரவருமகிழ்விற்றத்தம்பதியிடைப்புலமைமிக்கோர்
விரைவொடுபடர்வதென்னமிகுவனங்கவர்ந்துவிண்டோய்
தருமுயர்மலயவெற்பிற்றண்முகில் பொழிந்தமாதோ
104 கிளர்தருபொதிய வெற்பிற் கேழுறு பொருநை நீத்தந்
தளையவிழ்ந்துயர்பூங்கொம்பர்த்தருக்குலஞ் சாய்த்துருட்டி
யளவில் பல்கால் கடோறுமடைத்தநெட்டணையுடைத்து
நெளிதிரைக்கடலைநாடி நெறிக் கொடு சென்றதன்றே
105 பொருவரும்பொருநைமன்னும் புனிதநீர்குடையுமாதர்
குருமணிக்கலசக் கொங்கைக்குங்குமமளைந்து சேறாங்
கருதுநல்லறிவின் மேலோர் பேதையர்க்கலந்தகாலை
மருவுதன்னிலை கலங்கும் வண்ணமே போலமாதோ
106 மகிழ்சிறந்தியாவர்க்கேனும் வழங்கிடும் வள்ளலேபோன்
மிகுநலமணியும் பொன்னும் வீசுந் தெண்டிரைக்கரத்தா
லகமலர்ந்தங்கண் ஞாலத்தாருயிர்க்கருள வேண்டிப்
புகழ்தருபொருநைநீத்தம் பொருந்து கால் பரந்ததன்றே
107 கொலைகெழுகூர் வேற்றாங்குங் குமரவேள் பதமேல்கொண்டு
கலைவரு கன்னிதாள்கை கூப்பி மால் கழலிறைஞ்சி
வலனைவென்றவன்றாள் கண்டு வருணனை வணங்கி நீத்தம்
பலசமயத்துளோரும் பரவுற வொழுகுமன்றே
108 பருப்பதந்தன்னினோங்கும் பராரைமாமரஞ் சாய்த்தீர்த்துப்
பொருக்கெனப் பொருநைசெல்லப் பொந்தில் வாழ்புட்கள் போத
லுரைக்கரும்பகைஞர் வெம்போர்க்குடைந்திடுமரசனோடு
தருக்கறச் சூழ்ந்து நீங்காத்தானையை மானுமன்றே
109 வான்முகங்கிழிய வோங்குமலயநீர்ப்பொருநைமண்மேற்
றான்முகங்கொடுநடந்துதலைத்தலைமயங்கிமள்ளர்
கான்முகம்பரந்து மிக்ககருங்கடல்படியுந்தன்மை
நான்முகன்படைப்ப நண்ணிநானிலமொடுங்கல்போலும்
110 பொருதிருப்பொருநையோடு புரிசடைப்பெருமான்றன்னான்
மருவியமகிழ்வினீடும் வைகைமாநதியையுந்தான்
றருணவெண்ணிலாக் கொழிக்குந் தரளமாலிகை போற்றாங்குந்
திருமிகுவண்மைசான்றசெந்தமிழ்ப்பாண்டிநாடு
ஆற்றுச் சருக்க முற்றியது
ஆகச் செய்யுள் 110
*****