19

நாலாவது

துன்மனன்சருக்கம்

450 தூண்டுகின்றசெஞ்சுடர்கொள்சோதிதாள்

பூண்டவன்புசேர்பொற்பின்மேலையோன்

காண்டகுந்தவச் சூதன்கண்ர்றீஇ

மீண்டுமோர்கதைவிளம்பன்மேயினான்

451 வீரவேடனைவென்றசௌனக

வோர்கநீயிமூதுரைப்பக்கேட்டிடி

லாருயிர்க்கெலாமாயுணல்கிடுஞ்

சேரும்வல்வினையாவுந்தீர்க்குமால்

452 வேதநன்குணர்வியாதன்முன்னரே

யோதிநெஞ்சகத்துவகைகூர்தருங்

கோதிலாமணிகுண்டமான்மிய

மேதுவாற்சிறிதியம்புவாமரோ

453 தருமநன்கதைதஞ்செவிக்கொளார்

நரகவாதிகளாவர்நாளுமே

திருமிகுங்கதைசெவிமடுத்துளோர்

மருவிடுஞ்சுவர்க்கத்தின்வாழ்குவார்

454 நவிற்றுகின்றவெந்நரகமென்றுநற்

சுவர்க்கமென்றுமேற்சூதமாதவ

வௌற்றினாலிவையேயுமாலரோ

வவற்றைநீவிரித்தருளவேண்டுமால்

455 தந்தைதாய்புகழ்தருமதேசிகன்

முந்தைநான்மறைதன்னைமுற்றுண

ரந்தணாளரையறிஞர்தங்களை

நிந்தியார்தமைநிந்தைசெய்துளோர்

456 பொருவினான்மறைபுகலுமந்தண

ரானரும்பொருளபகரித்துளோர்

கருதிவந்துபொய்க்கரிபகர்ந்துளோர்

பரவுகன்னிகைதனைப்பழித்துளோர்

457 மதுநுகர்ந்திடுமங்கையானன

மதனைமோந்தவரவளைமேவினோர்

கதுமெனப்ப்ரமகத்திபண்ணினோர்

விதமுறுவிடர்விரவுகாதலர்

458 நன்குலத்திலாசராநந்திடாத்

தன்குலக்கொடிதனிபுலம்பவே

பொன்பறிப்பவர்தோளைப்புல்குவோர்

மின்குலத்தியைப்பெட்பின்மேவுவோர்

459 கொழுநரைப்பிழைத்தோர்கள்கூடுறா

மழலையின்சொல்வாய்மைந்தர்பூணணி

விழைவின்வவ்வினோர்வெமூகிநன்பொருள்

பழுதிலாதுயர்பசுவைவிற்றுளோர்

460 புண்ணியப்புனல்புண்ணியத்தல

மெண்ணிடும்பதினெண்புராணநூ

றண்மையாகநிந்தனையிசைத்துளோ

ரண்ணலாலயமிலயமாக்குவோர்

461 அண்ணறன்னைநிந்தனையறைந்துளோர்

பண்ணிடுந்தருமம்பழித்துளோர்

திண்ணமாயவைசிதைவுசெய்துளோ

ரெண்ணறம்பொருளெண்ணிவிற்றுளோர்

462 அன்னம்விற்றுளோரதுபழித்துளோர்

முன்னைநூல்வருமுறைதிறம்பினோர்

சொன்னவாசகந்தோமுறுத்துளோர்

பன்னலாக்கொடும்பழிபகர்ந்துளோர்

463 கருதுகின்றதங்காரியத்தினான்

மருவினோர்கடம்மன்னுகாரியம்

பெருகுகாதலிற்பிழைபடுத்தினோர்

பரிவுகூர்ந்துளோரவரைப்பார்த்துளோர்

464 நந்தனவனநறியகூவனீர்

தந்திடேரிதான்றந்திடக்கருத்

துந்துகாதலினுரைத்துளோர்தமை

நிந்தைசேர்ந்தசொன்னிகழ்த்திநின்றுளோர்

465 தந்தைதாய்திவசஞ்செயாதவர்

வந்துநம்பினோர்தமைவதைத்துளோர்

சுந்தரந்துதைந்திலங்கு தொன்மைசால்

வெந்தநீறணியாதமெய்யினோர்

466 சிந்தையின்மகிழ்தந்திடுந்திரு

வைந்தெழுத்தினையவமதித்துளோ

ரெந்தைகண்டிகையினையிகழந்துளோர்

நிந்தைசேரிவர்நிரயவாணரே

467 திருகுசிந்தனைதீர்ந்தமாதவ

மருவுஞாலமேன்மன்பதைக்கெலாம்

பெருகிநாடொறும்பீழைமம்மர்செய்

நரகுறுந்திறநவிலுவாமரோ

வேறு

468 கும்பிபாகங்கராளங்கூடுவிட்டாசனத்தோ

டம்புவியிகழ்லாலாம்புசேவனமறையுங்கீலம்

பம்புவெங்கிருமியுண்டல்பகர்ந்தவிகராளங்கண்டங்

கம்பதப்ரகரங்காலசூத்திரங்கரியகாகம்

469 ஒட்டகம்புலியயத்தோடுறுமயிடத்தின்றுண்டம்

கொட்டிடுதத்தாங்காரங்கொல்லயபாத்திரஞ்சேர்

தட்டல்குட்டனந்தீசேர்ந்தசைகத்தினில்வறுத்தல்

பட்டுருவசிபடைத்தபத்திரமூத்ரபானம்

470 மன்னியரவுரவஞ்சேர்மாரவுரவங்களாதி

தன்மைகளுணருங்காலைத்தருமராசனுந்தயங்குஞ்

சின்மயனருளாற்றேருஞ்சித்திரகுத்தன்றானு

மிந்நிலைதன்னைநாடியிற்றெனக்கிளத்தலாகா

471 ஆதலால்யாவரேனுமரும்பெரும்பாதகங்க

டீதுறமுயலிலிந்தத்தீநரகடைவரன்றே

யாதுகாரணத்தினாலுமிகபரமியைவோர்தீய

பாதகமானவற்றைப்பாற்றிடக்கடவரன்றே

472 சொற்றிடுந்தருமமுந்தான்சுருக்கியேதெரித்துச்சொல்வா

மற்றதுமுனிவகேண்மோவகிஞ்சையேவாய்மைசேர்த

லுற்றிடுகளவுதீர்தலுளமகிழ்கூர்தலோடு

பொற்புறுதேகசுத்திபூசைசன்னியாசிபூசை

473 துறவிகடமதுபூசைசொல்லிடுமதிதிபூசை

வறியரைக்கதியிலோரைமருவுமந்தகரைக்காத்த

லுறுமனச்சழக்குத்தீர்த்தலுற்றிடுசுகன்மம்பேண

லறையகிஞ்சாதியீரேழந்தணர்விதியிற்றந்தோர்

474 சரணடைந்தோர்கடம்மைத்தாங்குதன்மாகமூழ்க

லரனருச்சனையியற்றலதிதியர்க்கனமீவோர்க்குப்

பரவுபகாரம்பேணல்பண்ர்கன்னிகாதானத்தோ

டுரியவான்முதிரையெள்ளோடுயர்பலதானஞ்செய்தோர்

475 தருமகாலங்கடன்னிற்றண்புனற்பந்தர்செய்தோர்

பொருவில்புண்ணியம்பரிந்தோர்புங்கவர்யாரும்பூசை

யுரிமையினிற்றவுள்ளமோர்தருங்காதல்கூர்ந்தே

திருமிகுசுவர்க்கபோகத்தெரிவையர்திரட்சியோடும்

476 நம்பிநாடகநடிப்பநவமணித்துவசமின்னக்

கிங்கிணிமாலைத்தாமங்கெழுமியேயெங்குந்தூங்கக்

கண்கொளாத்துணைவெண்கற்றைக்கவரிக்காலசைப்பமாதர்

விண்குலாவியவிலக்கவிமாத்தினாப்பண்மேவி

477 தெண்டிரைக்கடற்பாற்கொண்டதிசைவிசயஞ்செலுத்தி

வண்டருநீழல்சேர்ந்துபூந்தேன்றுளிப்ப

வெண்டகுமுலகம்போற்றவீரேழிந்திரர்கள்கால

மண்டர்களடிவணங்கவமருலகத்தில்வாழ்வார்

478 முண்டகனனையவேதமுனிவமுன்னிறுத்தவாற்றாற்

கண்டதையன்றிக்கேட்டகாலையிற்பவங்கடீர்க்கு

மண்டலம்பரவுமந்தமாமணிகுண்டமேன்மை

யெண்டொகைபெறவெடுத்தங்கிசைக்குவமின்னுங்கேண்மோ

479 நயவுணர்வறியாதானோர்நான்மறைக்குலத்தின்வந்தோ

னெயினரோடிணங்கிவாழுமிழிதொழின்முழுதுணர்ந்தோன்

கயமுறுகபிலைநன்னீர்க்கரையினிற்கருதிவாழ்வோன்

றுயர்தருதுராசாரஞ்சேர்துன்மனனென்னும்பேரோன்

480 சீர்த்திகளகன்றவேதத்திறங்கள்யாவுந்திறம்பி

யார்த்தநல்லறிவிழந்தேயறந்தருஞ்செயன்மறந்து

கூர்த்தவெங்கன்மநோயாற்கொலைபுரியெயினரோடுந்

தூர்த்தர்களோடுங்கூடித்தொன்னெறிமுறைதுறந்தான்

வேறு

481 காதலுடன்மாதர்பயில்காமகலைதன்னை

நாதமொடுபாடிமிகநாடகநடிப்போன்

றீதில்பலதேனுவொடுசெந்தழல்வளர்க்குஞ்

கோதின்மறையோரைநனிகொன்றுயிரையுண்போன்

482 ஏற்புடையபாலகரையிட்டிடையினோரைப்

பாற்படுவாலீசரொடுபண்புடைமையோரைச்

சீற்றமொடுதேசமிசைசென்றுநனிகொன்று

கூற்றுணவிரும்பியுயிர்கொள்ளையிடுகிற்போன்

483 சொற்றகையவின்னபலதொல்லுலகினோரைச்

செற்றமொடுகொன்றவர்கள்செம்பொனவைகொண்டே

வெற்றிமிகுபாதகன்விரும்பியணையாத

கற்புடையமங்கையர்கள்காசினியிலுண்டோ

484 கொன்றுதிரியுங்கொடியகூற்றமனையான்செய்

நன்றிகளிலொன்றறியுநன்றியதுவுண்டோ

சென்றுபடிகின்றதொருதீர்த்தமதுவுண்டோ

வன்றியிவனீந்திடுமரும்பொருளுமுண்டோ

485 எண்டிசைமுகத்தினமரெக்கடவுடன்னைக்

கண்டனனெனப்பரவுகட்டுரையுமுண்டோ

வுண்டலரிதாய்வளர்தலோருயிருமுண்டோ

மண்டனில்வதைக்கரியமன்பதையுமுண்டோ

486 திண்டிறலின்வேட்டைபுரிசிந்தைமிகுதீயோ

னெண்டகவியம்பலுறினின்றுமிவன்முன்னும்

பண்டரொருபாரினிடைபண்ணவருபாவ

முண்டெனவெடுத்தினுமுரைத்திடவுமுண்டோ

487 கட்களவுபொய்மைகொலைகாமமுறுகாமத்

துட்டரெனவேமருவுதூர்த்தர்தொழுமூர்க்கன்

மட்டறுகிராதரெனுமாகுலவரோடு

மிட்டமுறநாளுமுலகெங்குமுழல்கின்றான்

488 சத்தியமொழிச்சவுனகத்தலைவநாளுந்

துய்த்தல்பழுதென்றுபகர்தூய்மதுவுமுண்டே

பத்திதருபன்னகபணாமுடிகிடந்த

வித்தலனவன்செய்பவம்யாதெனவுரைப்பாம்

489 துன்றியமதங்கர்பலதூர்த்தர்புடைசூழ

வென்றிதருவேடருடன்வேட்டைமிகுதீயோன்

மன்றலவிழ்கண்டகவனங்கடொறுநாடிச்

சென்றுபலதேசமவைசிலபகல்கழித்தான்

490 மன்னுமிருவினையொப்புவந்தடைதலானு

மன்னதொர்திரோதமருளாய்வருதலானும்

பன்னருவிழாவணியெனப்பகர்தல்கேட்டுப்

பொன்னுலகெலாம்பரவுபூவணமடைந்தான்

வேறு

491 இடர்ப்பிறப்பிறப்பென்றோதுமிருங்கடற்படிந்துநாளுங்

கடைப்படாதுயிர்க்கிரங்கிக்கதியருள்புரியநீடும்

படித்தலம்போற்றுகின்றபங்குனியுத்தரத்தின்

விடைக்கொடியேற்றிமிக்கவிழாவணிநடந்ததன்றே

492 மதிதொடுசெம்பொற்றேரூர்மாடநீண்மறுகுதோறும்

புதுநறுங்கலவைச்சேறுபொலிதரமெழுகிக்கோலம்

விதிபெறவெழுதும்வாயில்வெண்ணிறப்பளிக்குத்திண்ணை

முதிர்நிலாவெறிப்பத்தூயமுளைகொள்பாலிகைவயங்க

493 சீர்மணிமாடந்தன்னிற்சித்திரகூடந்தன்னி

லேர்பெறுமரமியத்தினெழுநிலைமாடந்தன்னிற்

றோரணவீதிவாயிற்சுடர்மணிமண்டபத்திற்

பூரணகுடநற்றீபம்பொங்குவெங்கதிரிற்பொங்க

494 நீடுகோபுரவாயிற்கணிலாவுமிழ்நிலாமுற்றத்தி

னாடரங்கதனிற்செம்பொனம்பலந்தன்னிற்சோதி

கூடுநற்சதுக்கந்தன்னிற்கொடிமணிச்சித்திரஞ்சேர்

மாடகூடதினட்டமங்கலநின்றிலங்க

495 மிகுபுகழ்வேந்தர்விண்ணோர்மிண்டியவீதியின்கண்

மகுடநன்மணியின்குப்பைவயின்வயினலகிட்டெங்கும்

புகழ்பெறத்​தெளித்தவாசப்புனிதநீரொடுபுத்தேளிர்

மகிழ்வொடுபொழிமந்தாரமாமலர்வாசம்வீச

496 மாமணித்தேர்களெங்குமாடமண்டபங்களெங்குந்

தாமநீள்வீதியெங்குந்தக்கபூம்பந்தரெங்கும்

பூமகளுறையுளெங்கும் பூங்கமுகரம்பைநாட்டிக்

காமர்பொன்னகரமென்னக்கடிநகரலங்கரித்தார்

வேறு

497 செங்கமலத்திற்றிசைமுகன்மாயன்றேவர்கள்சித்தர்கண்முனிவர்

புங்கவர்யாரும்புடைபரந்தீண்டிப்போற்றிநின்றிசைத்திடப்புகழ்யாழ்

மங்கலகீதவிதத்துடன்பாடிமலர்தலையுலகமங்கையரோ

டங்கண்வானத்தினழகொழுகியநல்லரம்பையர்நாடகநடிப்ப

498 திண்டிறற்குலவுதிக்குபாலகர்தந்திசைதொறுஞ்சேர்ந்துசேவிப்பத்

தண்டலில்குண்டோதரனகல்வானிற்றயங்குவெண்மதிக்குடைநிழற்ற

வெண்டிசைவிளக்குமிருசுடர்மருங்கினிணைமணிச்சாமரையிரட்ட

விண்டலந்தயங்குவெள்ளிமால்வரைபோல்விடைக்கொடிமீதுநின்றலங்க

499 பண்டருவிபஞ்சிபாடிடுமொலியும்பல்லியந்துவைத்திடுமொலியுங்

கொண்டல்சேர்கூந்தற்குங்குமக்கொங்கைக்கொடியிடைப்பிடிநடைத்தீஞ்சொற்

றொண்டையங்கனிவாய்த்தோகையர்நடிக்குந்துணைப்பதாம்புயச்சிலம்பொலியு

மெண்டிசாமுகத்துமண்டர்வானகத்துமெங்கர்ஞ்சென்றெதிரேற

500 திண்டிறற்குலவுதீர்த்தர்களேத்துந்திருவருணந்தியெம்பெருமான்

மண்டுகாதலிற்சேர்வானவர்செம்பொன்மணிமுடிதருபிரம்பொலியும்

பண்டருவேதப்பாடலினொலியும் பன்னுதேவாரத்தினொலியுங்

கொண்டசீர்வானத்தண்டகூடத்தின்கொழுந்துவிட்டதுபடர்ந்தேற

501 இன்னனவளஞ்சேரிந்திரசெல்வத்திலங்கியவீதியினலங்கூர்

பொன்னலந்தயங்குமின்னனையிடங்கொள்பூவணமேவியபெருமான்

பன்னருஞ்சிகரபந்திiயின்மிக்கபைம்பொன்மால்வரையெனச்சோதி

மன்னியவலங்காரந்திகழ்ந்தோங்குமணிநெடுந்தேரினில்வந்தார்

வேறு

502 இந்தநல்விழாவணியிடத்தெயினர்சூழ

வந்தமலரோர்நெடுமாலுமறியாத

வெந்தைபெருமானுமிகுமின்னருளினாலே

சிந்தைமகிழ்வோடுநனிசென்றுதரிசித்தான்

503 நாதமுயர்விந்துவினுநாடரியநம்பன்

மேதகுவிணோருடனல்வீதிகள்கடந்தே

பூதலமெலாங்குலவுபொற்சுவருடுத்த

கோதின்மணிசோதிவிடுகோயிலிடைபுக்கான்

504 காதலுடன்மேவுகனகங்களவுகொள்வா

னேதுநிகழ்காலமெனவெண்ணிமனனூடே

யோதுமவணீடுதனியூசலெனவந்த

வீதிதனினின்றுவிளையாடல்புரிகின்றான்

505 பண்டறிவருங்கொடியபாதகனைவீதி

கண்டிடுபவத்தையுறுகாதலுடன்வெய்யோன்

றெண்டிரைகொடீர்த்தமதுசென்றொழிவனென்றுட்

கொண்டனனெனக்குடகடற்கிடைகுளித்தான்

506 முண்டகமிலங்குமணிகுண்டமதின்மூழ்கி

யண்டர்தொழுமுத்தியினடைந்திடுவனந்தோ

கண்டிடுவமென்றுவருகாட்சியதுமான

மண்டலம்விளங்குமதிவானவனுதித்தான்

வேறு

507 ஆங்கவனரையிருள்யாமத்தன்னதன்

பாங்குறுகொலைபுரிபரிசனங்களை

யீங்குநீர்வம்மினென்றெடுத்துவல்லைகூய்

நீங்கருகாதலானிகழ்த்தன்மேயினான்

508 நிகழ்த்தலொன்றுடையன்யானீவிர்கேண்மெனா

வுகப்படன்யாமெலாமொருங்குகூடியே

புகழ்ச்சியினீடியபுரவலன்மனை

மிகுத்தநற்றனங்கொடுமீண்டுசெல்குவோம்

509 என்றவனியம்பலுமெயினர்நன்றெனா

வென்றிவேல்வேந்தனன்மனையின்மேவியே

தன்றனியிலக்கநேர்தபனியங்கொடு

மன்றல்சேர்மலர்த்திருவாயினண்ணினார்

510 கடைத்தலைவாயில்காவலர்கள்கண்ர்றீஇ

யடுத்தவர்யாரெனாவையுற்றோர்சில

ரிடிக்குரலெனவதிர்த்தெழுந்துசீறியே

படைத்தலைவீரர்கள்படையின்மூண்டனர்

511 மூண்டனர்முறைமுறைமுடுகிமுன்னரே

மாண்டகுதிறற்படைமானவேடருங்

காண்டகுகனற்பொறிகண்கள்சிந்தவே

யேண்டிகழ்வாயிலினிடைக்கணீண்டினார்

வேறு

512 இடங்கொள்வானகத்தெறிகுவரேற்றுவரீர்ப்பர்

தொடர்ந்துசுற்றுவர்பற்றுவரடுத்துமெய்துளைப்பர்

படர்ந்துசெல்குவர்மீள்குவர்படைக்கலன்வழங்கிக்

கொடுஞ்சமர்த்தொழில்புரிகுவர்குருதிநீர்குளிப்பார்

513 தெரிவருந்திறற்சாரிகைகறங்கெனத்திரிவர்

குருதிவாய்தொறுங்கொப்பளித்திடவுயிர்குறைப்பர்

வெருவியோடுவர்மீள்குவர்வெள்குறாதெதிர்ந்து

பொருவர்மீண்டுமங்கிருவருந்தோள்புடைத்தெதிர்ப்பார்

வேறு

514 எதிர்திருவிசும்பிடையெறிந்திடுவருள்ளங்

கொதித்திடுவர்செங்கைகொடுகுத்திடுவர்வெண்பல்

லுதிர்த்திடுவரென்பினையொடித்திடுவர்நெஞ்சின்

மிதித்துயிர்பதைத்திடவிதத்துடனடிப்பார்

515 தண்டியெதிர்சென்றுசிலர்தாடலைதுணிப்பார்

கண்டமதனைச்சிலர்கள்கண்டமதுசெய்வார்

மண்டமர்புரிந்துசிலர்வன்கரமறுப்பார்

துண்டமதனைச்சிலர்கடுண்டமதுசெய்வார்

516 ஏவரும்வெலற்கரியவீறில்பெருவாயிற்

காவலர்தமிற்சிலரையாயிடைகலந்தே

கூவிளிகொளக்கொலைஞர்கோறல்புரிகின்றார்

மேவும்விதிவந்தணையில்வெல்லவௌர்வல்லார்

வேறு

517 வீடரிதாயவெம்போர்விளைத்தலும்வேந்தன்சேர்ந்த

நீடியமணிமுகப்புநிரைதொறுமிடிந்தநீள்வான்

கூடியமணிசேர்செம்பொற்கோபுரநிலைகுலைந்த

பீடுறுகின்றமாடப்பித்திகைபிறழ்ந்ததன்றே

518 பொருவின்மாளிகையிடத்தும்பூம்பொழிலிடத்தும்பொங்கி

யருவிபாயமுதவெள்ளத்தகலிருவிசும்பிற்றோன்றுந்

தருணவெண்ணிலாக்கொழிக்குஞ்சந்திரகாந்தச்சோதி

பரவியவிடங்களெங்கும்பரந்தனகுருதிநீத்தம்

519 அந்நிலைதன்னின்மிக்கவன்னதொன்னகரினாப்பண்

கன்னவிறடந்தோள்வீரர்கம்பலைசெவிமடுப்ப

மின்னுவெம்படைஞர்யாரும்வெகுண்டனர்விரைவினீண்டி

மன்னியபுரிசைவாயில்வந்தனர்வளைந்துகொண்டார்

520 ஆங்கவர்வெருவியெங்ஙனடைகுவமென்றுகொண்டு

நீங்கரும்வாயினீங்கிநீள்கடைப்புறத்துப்போந்து

தாங்கரும்வெகுளிவீரர்தாந்துரத்திடத்தகைத்துத்

தீங்கறுமணிகுண்டத்திற்சென்றனர்திகைத்துவீழ்ந்தார்

521 இப்பெரும்புனனமக்கிங்கிருங்கதிதருமென்றேயோ

வப்பெரும்பயத்தாலந்தோவந்தநீர்குளித்தோர்யாரு

மெய்ப்படநாடியங்கண்மீண்டெழுந்திலர்களம்மா

தப்பறவக்கணத்திற்றாமுயிர்பரிந்தாரன்றே

வேறு

522 நெற்றிதருகண்ணர்திருநீறிலகுமெய்யர்

நற்சடிலசேகரர்கணான்குதடந்தோளார்

பெற்றமதுகைத்துவருபிஞ்சகனையன்றி

மற்றுமொர்தெய்வந்தனைமனத்தறிகிலாதோர்

523 சோதிவிடுகின்றதிரிசூலர்சிவதூதர்

மாதிரம்விளங்குகதிர்மன்னுமணிதுன்னுங்

கோதில்பல்விமானமவைகொண்டவண்விரைந்து

நாதனருளான்மகிழ்வினண்ணினர்கண்மன்னோ

524 தங்கொளியின்மிக்குயர்தினத்தனிவிமானத்

தங்கவரையந்நிலையினன்பினவைமேல்கொண்

டெங்கள்பெருமானுரியவின்னருளினேயோ

புங்கவர்தொழச்சிவபுரத்தினிடைபுக்கார்

525 செப்புமவரிப்புடவிதேடவருபாவ

மப்புனலொளித்ததினகநற்றினர்களென்னா

வொப்பரியதீர்த்தமெனவோர்ந்துலகமாடி

னெப்பவமுமாற்றுமெனயாமொழிவதென்னோ

526 ஆதலினியாவர்களுமாதரவினென்றும்

வேதியர்தமக்குநிதிவேண்டியதொர்தானங்

கோதறவளித்துமணிகுண்டமதின்மூழ்கிற்

றீதில்சிவலோகமதுசென்றடைவரன்றே

527 பூர்வமுறுபூவணபுராணகதைதன்னைப்

பேர்பெறவழுத்துமுயர்பிரமகைவருத்தத்

தோர்வரியபேருலகுரைக்குமெழுபான்மூன்

றாரறிவளிக்குமத்தியாயமிமூதம்மா

வேறு

528 பரிதிமடுவுறுபான்மையைநாளுமேபரவையுடைதிகழ்பார்தனிலோதுவோ

ரொருமையுடன்மனனூடதைநாடுவோருரியசெவிநுகரூனமின்மேன்மையோர்

கருணையுறுமிகுகாமருசீர்கொடேகருதியறைகுநர்பூசைசெய்காதலோர்

மருவுமுருவசிமாமுலைமீதரோவருடமொருபதினாயிரம்வாழ்வரே

துன்மனன்சருக்கமுற்றியது

ஆகச்செய்யுள் 528

*****

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

திருப்பூவணப் புராணம் Copyright © 2015 by மு​னைவர். கி. காளைராசன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book