20
ஐந்தாவது
தருமஞ்ஞன் முத்தி பெற்ற சருக்கம்
529 ஓதுநன்பலமாயுகமுறுவதாய்க்கேட்போர்
பாதகங்கணோய்பற்றாத்துடைப்பதாய்ப்பின்னுங்
காதல்கூர் மணிகன்னிகை மன்னுமோர்காதை
ஃசூதமாதவன்சுவுனககேளெனச் சொல்வான்
530 தெக்கிணந்தருதிக்கினிற்றிரைபுரள்பொருநைத்
தக்கதீரநீடலைமைசேர்தாபதர்நெருங்குந்
தொக்கவஞ்சிறைப்புட்குலந்துதைந்தபூம்பொதும்பர்
மிக்கதோர்தலம்வேர்நல்வனமெனவிளங்கும்
531 குலவுமவ்வனங்கொண்டதோர்குடதிசைமருங்கி
னலகில்பல்புகழடைந்தகோலாகலமெனும்பேர்
நிலவுமக்கிராமத்தினோர்நேரிலந்தணனீ
டுலகம்யாவையுமொருங்குநின்றேத்திடவுதித்தான்
532 அந்தணர்க்கெலாந்தலைமையாயங்கமோராறுந்
தந்திடும்புகழ்திரித்தநற்சதுர்மறையுணர்ந்தோன்
முந்துகின்றவெண்ணெண்கலைமுழுதுணர்மேலோன்
சிந்தையிற்றிருவஞ்செழுந்தடைவினிற்செபிப்போன்
533 நித்தநன்னியமத்தொழினிரப்பிடுநெறியோன்
புத்திரர்தரும்பவுத்திரர்பொருவருகிளைஞர்
மைத்தடங்கண்மங்கையரொடும்வாழுநமென்னுஞ்
சித்தநன்குணர்வேதசன்மாவெனத்திகழ்வோன்
534 செங்கணேறெனத்தினந் தொறுந்தினந்தொறும் வளர்ந்து
கொங்குலாங்குழற்கோதையர்மனங்களிகூர்ந்து
துங்கமேவியகாமனேயெனவெழிறுதைந்து
மங்கலந்தருவடதிசைக்கிறையெனவாழ்நாள்
535 வந்தியாவருமணங்கமழ்மலர்ப்பதமிறைஞ்ச
விந்தமாநிலத்திரும்பொருள் யாவையுநுகர்ந்து
முந்தையூழ்வினைதிறம்பலான்மூப்புவந்தடைய
வந்தநான்மறையந்தணனாருயிர்துறந்தான்
536 அந்தவந்தணன்றந்தருளருமறைக்குலத்தோ
னிந்துவென்னநாடொறும்வளரெழிற்கலைமதியோன்
முந்தைநான்மறைசந்ததமுழ்கிடும்வாயான்
றந்தையிற்றிகழ்தருமஞ்ஞனென்னுநாமத்தோன்
537 சாற்றுகினறவத்தருமஞ்ஞன்றனைத்தருதந்தைக்
கேற்றநூல்விதியிருக்கடனியாவையுமுடித்தே
நாற்றடந்திசையோடியனானிலமெங்கும்
போற்றுகங்கையிற்போதுவான்புந்தியிற்றுணிந்தான்
538 அத்தன்மெய்த்தருமங்கம்யாவுந்தெரிந்தோர்கும்
பத்தமைத்துநற்படாங்கொடுபுதைத்துவாயரக்கின்
முத்திரைக்குறியிட்டுயர்முத்திதானல்கு
முத்தரத்திசைகொண்டுமாணாக்கனோடுற்றான்
539 வங்கவாரிதிவளாகத்துமருவியாங்காங்குத்
தங்குமாதவர்செங்கையிற்றானநன்கீந்து
பொங்குசீதநற்புண்ணியதீர்த்தங்களாடி
யங்கயற்கண்ணிபங்கன்மேவாலவாயடைந்தான்
540 அடைந்துமாநதியாடியேயருங்குலப்பிதிர்க
ளுடன்கலந்திடுமுனிவர்கடேவர்கட்குற்ற
கடன்கழித்துறுகண்ணிலர்கதியிலர்தரள
வடங்கொள்பூணணிமங்கையர்வனமுலையுண்போர்
541 விருத்தவேதியராதுலர்வேணவாவொழிய
வருத்தமேனியதழகுறவமைத்திடுஞ்சேதாப்
பெருத்தகாதன்மெய்த்தந்தைநற்பெரும்பதம்பெறுவான்
கருத்தனாகியாங்குதவியேகணிப்பருந்தானம்
542 வேணிமேன்மிளிர்வெண்ணிலாமிலைச்சியகூட
லேர்நாயகிதன்னைமுத்தினம்பணிந்தேத்திக்
கார்மாறரிதாகிய கடவுள்செம்பாகம்
பூர்லாமலைமங்கைசேர்பூவணமடைந்தான்
543 புடவிபோற்றுமப்பூவணங்கோயிலாக்கொண்ட
விடையுகைத்திடும் விண்ணவர்கோன்றனைவடுகக்
கடவுடன்பதங்கண்டுபின்கைகுவித்திறைஞ்சி
மடல்விரிந்தபூமாமணியோடையில்வந்தான்
வேறு
544 மண்டலம்புகழ்கொண்டமாமணிகுண்டநீரின்மணங்கமழ்
புண்டரீகமுநனையவிழ்ந்தபொதும்பர்நீடுசெய்பொழில்களு
மண்டராதியர்தானமும்புகலரியவாச்சிரமங்களும்
பண்டைநான்மறைபாடுமந்தணர்பழகிடுந்திகழ்கழகமும்
545 மன்னுமாச்சிரமத்தினிற்குநர்மாதவாம்புரிமாட்சியும்
பன்னுநன்கலைபயிலுமந்தணர்பன்னசாலைகளும்பொறி
துன்னுமாமயிலாலவந்தெழுதூமமுந்தழலோமமுங்
கன்னல்வேடனைவென்றசவுநககண்டுகண்களிகொண்டனன்
546 சித்தநன்குதெவிட்டியாயிடைத்தேசுகால்வடுகேசனைச்
சுத்தமார்திலந்தூருவாக்கதைதுன்னுபூசைமுடித்துவந்
தந்திகும்பமகன்கரைக்கணமைத்தளித்தருளத்தனை
முத்திதானடைவிப்பவெய்துபுமோகமோடதின்மூழ்கினான்
547 மூழ்குமேல்வையினாழ்கடற்புனன்மொண்டுசூன்மழைபொழியவே
சூழ்தருந்திசைமாறிடும்படிதூவுமாலிகள்சிதறிநல்
வேழ்வியந்தணன்விசையெழுந்துசென்மிகுபதங்கடமிடறவத்
தாழ்தலத்திடைவீழ்தலுற்றதுசங்கரன்றிருவருளினால்
548 மிக்கவத்தடம்வீழ்தல்கண்டுளம்வெருவியோடியெடுத்தன
னக்கடத்தினினிட்டவங்கமனைத்துமக்கணமாய்மலர்
தக்கநற்சதபத்திரத்தொடுசார்ந்தவுற்பலமாகவே
தொக்கவன்பினிறைஞ்சியந்தணர்சூழலுற்றிவைசொல்லுவான்
549 அற்புதந்தனையென்சொல்கேன்மிகுமறவிர்காளரிதரிதரோ
பெற்றதாதைபிறங்கெலும்புபெருங்கடத்திலிருந்துதா
ளெற்றவிந்தவிலஞ்சிநாப்பபெணழுந்துவீழந்தரவிந்தமோ
டுற்றபானலதாகயானொருவேனுமேதிருவுடைமையேன்
550 பாசமோசனதீர்த்தமென்பதுபண்டுகண்டதுகேட்டதாய்க்
காசிமாநகரத்தினும்மிதுகட்டுரைதிடவொண்ர்மோ
பேசின்முன்னமருந்தவஞ்செய்பிதாக்களுங்கதிபெற்றனர்
பூசுராதிபர்போற்றுமிப்பதிபூர்வமாமிதுபுகலிலே
551 ஈதுமுன்னரிழைத்தமாதவமீண்டுகண்டனனாகவிப்
போதெனன்குலவாணரும்புகழ்பொற்பின்வந்துபொருந்தினா
ராதலாலடியேனுமுய்ந்தனனதிகசற்குருவிரதனா
னாதவேதமுனகாடைந்தனனென்றுநின்றுநடித்தனன்
552 இன்னதன்மையனிந்நிலத்தினினென்னின்மேலவரின்றெனா
வன்னவந்தணர்தம்மைநீங்கினனாலயந்தனையண்மியே
துன்னுநாகர்தலத்ததுநின்றுமொர்சோதிலிங்தாகியே
முன்னைநாளின்முளைத்தெழுந்தருண்மூர்த்தியைத் தொழுதேத்தினான்
வேறு
553 அருண்மேனிதரித்தருள்வாய்சரணமறிவுக்கறிவாமானேசரண
முரகாபரணாசரணஞ்சரணமொருமூவிலைவேற்கரனேசரணம்
பொருளேயடியார்புகலேசரணம்பூதப்படையாய்சரணஞ்சரணந்
திருமாலயனறிவரியாய்சரணந்திகழ்பாற்கரபுரவசிவனேசரணம்
554 கழைவேளையெரித்தருள்வாய்சரணங்கனகாசலவிற்கரனேசரணம்
பொழில்சேரநிறைந்தருள்வாய்சரணம்பூர்வந்தருபுண்ணியனேசரண
மொழியாவுலகமொளிப்பாய்சரணமொருவெஞ்சமனையுதைத்தாய்சரணஞ்
செழுநான்மறையின்முடிவேசரணந்திகழ்பாற்கரபுரசிவனேசரணம்
555 ஒருமானிலகோருருவாய்சரணமோதுந்தொழிலைந்துடையாய்சரணம்
புரமூன்றெரிசெய்தருள்வாய்சரணம்பொருமால்விடைமேல்வருவாய்சரணம்
பெருகாதரலேபிரியாய்சரணம்பிறைவேணியனேசரணஞ்சரணந்
திரையார்புனல்சேர்சடையாய்சரணந்திகழ்பாற்கரபுரசிவனேசரணம்
556 அடைவார்வினைதிர்த்தருள்வாய்சரணமருளாலறியும்பொருளேசரணங்
கடல்சேர்விடமுண்டவனேசரணங்கமலன்றருகங்கையனேசரணஞ்
சுடர்சேர்சுடலைப்பொடிபூசிடுநற்சுகரூபமதையுடையாய்சரணஞ்
செடிசூழ்மிகுகற்பகநன்னிழலிற்றிகழ்பாற்கரபுரசிவனேசரணம்
557 மாயாவுருவாரமலாசரணமாலானவர்பாலேலாய்சரணந்
தாயாயுலகந்தருவாய்சரணந்தன்னடியார்கட்கருள்வாய்சரணம்
பேயோடாடும்பெருமான்சரணம்பிரிவருதிவ்வியவுருவாசரணந்
தியேந்திய செங்கரனே சரணந்திகழ்பாற்கரபுரசிவனே சரணம்
558 பொருமதகரியுரிபோர்த்தாய்சரணம்பொதுவினினடமிடுபுனிதாசரணம்
வெருவரல்விடவருள்விகிர்தாசரணம்வேதபராயணநாதாசரண
மரியயனடிபரவமலாசரணமடல்விடைதருகொடியரனேசரணந்
திருமணியுமிழ்கட்செவியணிமகுடந்திகழ்பாற்கரபுரசிவனேசரணம்
559 பத்தர்விரும்புவரத்தினைநித்தம்பரிவான்மிகவுந்தருவாய்சரணம்
புத்திகொளுத்தமர்புந்திபுகுந்தவர்பூசனைகொண்டருளீசாசரணம்
தத்துவஞானமளிப்பாய்சரணஞ்சஞ்சிதபாசமறுப்பாய்சரணஞ்
சித்தியுமுத்தியுமிக்கருள்புரியுந்திகழ்பாற்கரபுரசிவனேசரணம்
560 அட்டகுணஞ்சேரமலாசரணமாதுலர்தம்மையளிப்பாய்சரண
மெட்டுருவாகியவிறைவாசரணமெங்குநிறைந்தருளெந்தாய்சரணங்
கட்டமுநோயுங்கவர்வாய்சரணங்கதியருள்பாபதமானாய்சரணஞ்
சிட்டந்தினந்தொழுந்தேவேசரணந்திகழ்பாற்கரபுரசிவனேசரணம்
561 என்றின்னனபன்னியிறைஞ்சுதலுமிமவானருளுமுமையாளிடமாம்
பின்றங்கியசெஞ்சடையெம்பெருமான்பெரிதுந்திருவுள்ளமலர்ந்தருளி
நின்றன்புமனத்துறுதருமஞ்ஞனேர்கண்டிடநல்விழிநல்கியரோ
வன்றங்கலராசனன்மாலறியாவத்தன்பரமுத்தியளித்தனனே
562 அந்தன்பரமுத்தியளித்தருளியமரும்பொழுதினருடங்கியநற்
சித்தங்களிகூர்செழுநான்மறைதேர்திகழ்ஞானசுகோதயமாதவர்காண்
முத்தந்திரைதத்தியதன்கரையின்மோதுங்கடல்சூழ்முதுபாருலக
மித்தன்மையையுனித்தர்மஞ்ஞனேத்துந்துதிபன்னிவியந்தனரால்
563 தருமஞ்ஞனைச்சந்ததமும்புகழ்வோர்சாமீபமதிற்றானெய்திடுவா
ரிருதஞ்செவிகொண்டிடுவோர்கையினல்லிலகும்பரமுத்தியையெய்திடுவார்
பரவுந்தரையிற்படர்கின்றிடுவோர்பரிவாலிவைபன்னினரேலவர்தா
முரைதங்குடல்வீடுறுகாலரன்வந்துறுதாரகமந்திரமோதுவனால்
வேறு
564 அங்கவருபதேசந்தனையுற்றேயரியவிமானத்துரிமையினேறிச்
சங்கரனருள்கூர்கிங்கரராவார்சரதமிதருள்வழிசெவியினிறைப்போர்
வெங்கனலாயிரம் வேள்வியர்வேள்விமேயநல்வாசபேயம்மோர்நூறு
பொங்குலகஞ்செய்தபுண்ணியநண்ர்வர்பொழில்புரிபாவமுமொழிகுவரன்றே
வேறு
565 பிரமகைவர்த்தமாம்பெரும்புராணத்திற்
றருமஞ்ஞன்காதையத்தியாயஞ்சாற்றிடி
னருமையிங்கெழுபமூதந்தநாலதிற்
கரைதருசவுனககருத்திற்காண்டியால்
வேறு
566 தருணமெய்ச்செழுந்தழல்வளர்த்ததர்மஞ்ஞனுக்குநற்கதியளித்தநீள்
பரிதிதொட்டபைந்தடமதுற்றசீர்ப்பரவைசுற்றிடும்படியிடத்தரோ
கருதியிற்பெருங்கதைபடித்துளோர்கருணையிற்றினஞ்செவிநிறைத்துளோ
ரருணலத்தினங்கணனுருக்கொடேயரனிடத்துவந்தருகிருப்பரே
தருமஞ்ஞன் முத்தி பெற்ற சருக்க முற்றியது
ஆகச் செய்யுள் 566
*****