27
பன்னிரண்டாவது
திருக்கலியாணச்சருக்கம்
968 அருமறைநான்கையும் கத்தடைத்தசீர்
மருவியசவுனகமகிழ்ந்துகேண்மியா
பொருவிடைப்பாகனப்பொருவின்மங்கையைத்
திருமணஞ்செய்ததுசெப்புவாமரோ
969 பரைதிருமணஞ்செயப்பரமன்றந்தசொல்
விரைமலர்க்கூந்தலார்விளம்பும்வேலையிற்
றரைபுகழ்தரவருதக்கனந்தநாட்
கரையிலாவின்பநற்கடலிற்றுன்னினான்
970 முச்சுடராகியமுக்கணெம்பிராற்
கிச்சகம்புகழ்தரவீன்றெடுத்தநன்
மைச்சருளோதியைமணம்புணர்ந்துவா
னச்சதுர்முகன்மகனகத்தினெண்ணினான்
971 உரையுணர்வறிவருமும்பர்தம்பிரான்
மருவியவுமைதனைவதுவையாற்றவே
திருநகரணிபெறச்செய்மினென்றுநன்
முரசறைகென்றனன்மூண்டகாதலான்
972 அக்கடிமணமுரசறைந்தகாலையின்
மைக்கருங்கண்மடமங்கைபங்குறை
முக்கணாயகன்மணமுடித்தல்காண்குவான்
தொக்கனர்யாவருந்துன்னியெங்கர்ம்
973 கோகனகாசலங்கொண்டகோபுர
மாகமூடுறநிமிர்மாடமாளிகை
தோகைகணடமிடுந்துதைந்தசூளிகை
யாகியபந்திசேராவணந்தொறும்
974 வம்புசேரிளமுலைமாதர்மேவிய
செம்பொன்மண்டபத்திருவாயில்சீர்தரப்
பைம்பொனன்மணிகொள்பூம்பந்தர்செய்தன
ரும்பருங்கண்டுதம்முள்ளநாணவே
975 பம்பியெண்டிசாமுகம்பரந்துசென்றிடு
வம்புலாமதுமலர்மாலைசாமரை
நம்புசீர்த்தருப்பணநலங்கொள்பூந்துகில்
கம்பலஞ்சூழ்தரக்கலந்துதூக்கினார்
976 மாடநீடியகொடிமகரதோரணங்
கோடகமுகங்கொளுங்குலையரம்பைசேர்
பாறுடுகோண்மடற்பாளைவிண்டசீர்
வீடரும்பூகதமிகநிறுத்தினார்
977 உலம்பொருகுவவுத்தோளுற்றமைந்தர்பூ
ணலங்கிளர்பொன்மணிநண்ர்நன்மணிக்
குலத்திகழலர்மலர்க்குப்பைவாரியே
யலங்கிடவேதிருவலகிட்டாரரோ
978 சந்தகின்மேவுசெஞ்சாந்தங்குங்கும
மந்தநற்றண்பனிநீரளாவியே
சுந்தரம்பெறத்தறைமெழுகித்தோன்றவே
சிந்தையிற்கொடுதிருக்கோலந்தீட்டினார்
979 விண்டலந்தங்கியவெண்ணிலாக்கதிர்
மண்டலந்தயங்குபாலிகையமைத்தன
ரண்டர்கர்ண்டிடவட்டமங்கலங்
கொண்டிடுஞ்சோதியெண்டிசாமுகங்கொள
980 அத்திருவீதியினணிமயிற்புறாத்
தத்துவாம்பரிகரிதானைதேர்கிளி
சித்திரப்பொறியினாற்செய்துதத்தநன்
மெய்த்தொழிலியற்றிடவிதித்திட்டாரரோ
981 பூவிரிசோலையும்பூந்தடங்களு
மேவுதேரூர்மணிவீதியெங்கர்ந்
தேவர்கள்யாவருஞ்சேருங்கற்பகக்
காவுறுநகரெனக்கற்பித்தாரரோ
982 மாதருமைந்தருமன்னுமந்நக
ராதரவான்மிகவணியியற்றலும்
போதுசேர்கின்றபொற்பொகுட்டிற்புங்கவன்
காதல்கூர்மகன்றிருக்கண்பரப்பினான்
983 நன்றிதுநன்றெனநவின்றுநாடியே
யொன்றியவுளத்தினிலுவகைபூத்தனன்
மன்றல்செய்தருந்திருமருகன்காமுறத்
தன்றிருக்கோயிலுந்தயங்கக்கண்டனன்
984 பொற்புறுமாலயன்புரந்தராதிய
ருற்றநன்மாதரோடொல்லையீண்டியே
மற்றுமையவடிருமணத்தைநோக்குவான்
சொற்றிடவொற்றரைத்தூண்டினானரோ
985 துங்கமோடடைந்தனரவர்க்குச்சொற்றலு
மங்கைதன்றிருமணங்காணமாதரோ
டங்கதுபோழ்தினிலரியயன்முதற்
புங்கவர்யாவரும்பொள்ளென்றீண்டினார்
986 ஈண்டுறாப்பண்ணவர்யாருமெய்தவே
நீண்டசெஞ்சடாடவிநிமலன்மேவிய
காண்டகுஞானநற்கற்பின்காரிகை
மாண்டவம்புரிகடிமாடத்தெய்தினார்
987 எய்தியபுங்கவரீண்டிச்சூழ்வரத்
துய்யபொற்பூவினாற்றூவித்துத்திசேர்
பையணிபன்னகாபரணநாயகன்
செய்யதாமரைப்பதஞ்சென்னிசேர்த்தினார்
988 அந்நிலைதன்னிலட்டாங்கமாகவே
பன்னிருகான்முறைபடியிற்றாழ்ந்தெழீஇத்
துன்னியவுளங்களிதூங்கவின்னணந்
தன்னிகரருந்தவத்தக்கன்சொல்லினான்
வேறு
989 ஆதிநாயகியடியனேனிடத்துதித்திடவு
நீதியாலவனின்பநன்மணஞ்செயநினைந்திப்
போதுநீயிவண்போதரப்பொருந்தியபொற்பால்
யாதுநற்றவம் புரிந்ததிவ்விருங்கடிநகரம்
990 என்றுபற்பலவியம்பியேபின்னருமிறைஞ்சித்
துன்றுசீர்த்திருமாலயன்சுரர்புடைநெருங்க
மன்றலாற்றவென்மனையிடைத்திருவுளமகிழ்ந்து
வென்றிமால்விடைத்தனில்வரல்வேண்டுமென்றிரந்தான்
991 இரந்தகாலையினெம்பிரான்றிருவுளமகிழ்ந்து
வருந்தனீயெனவேதிருவாய்மலர்ந்தருளி
யருங்கலன்கண்மெய்யிலங்குறவருமணமுடிப்பான்
பொருந்திநன்கினிதிருந்தனன்பொருவிடையதன்மேல்
992 மாலயன்புகழ்வாசவன்வானவர்முனிவர்
சீலமார்தருசித்தர்வித்தியாதரரியக்கர்
கோலவட்டவெண்குளிர்மதிகொடுங்கதிர்வெய்யோ
ரேலுமிக்கதாராகணமெண்வகைவசுக்கள்
993 அழிவிலாதவுருத்திரகணத்தவரநேகர்
வழுவிலாதுயர்மந்திரநாயகரேனோர்
கழிவரும்பெருங்காதலிற்கண்டுகண்களித்தார்
குழகன்கொண்டதோரழகியமணத்திருக்கோலம்
994 மைக்கருங்குழன்மங்கையோர்பங்குடைவானோன்
மிக்கவெள்ளிமால்வரைபுரைவிடையினிற்றோன்ற
வக்கணத்தினிலளப்பரிதாமுளக்களிப்பிற்
றக்கனுற்றதுசவுனகசாற்றரிதன்றே
995 அன்னகாலையினரியயனாதியர்போற்றப்
பொன்னினாட்டவர்கற்பகப்பூமழைபொழிய
மன்னுமந்தரமத்திமதாரகமரபாற்
பன்னுநான்மறைதும்புருநாரதர்பாட
996 வண்ணமேவுகுண்டோதரன்வண்குடைநிழற்ற
வண்ணவர்க்கிறையாலவட்டங்கொடுவீசத்
தண்ணருங்கடற்றலைவன்சாந்தாற்றிகாலசைப்பக்
கண்ர்றுங்கலாமதிகதிர்க்கவரிசேர்ந்திரட்ட
997 பம்புமாயிரமம்புலமானுமோர்பானு
கம்பனாயிரமுகத்தினுமாயிரஞ்சங்கந்
தம்பமாமிரண்டாயிரங்கைகொடுசாற்ற
நம்புமாயிரமறையொலிநாற்றிசைநடப்ப
998 சகலலோகமுநிலைபெறுதபநியமேருச்
சிகரமால்வரைதிகழுமொராயிரந்திண்டோண்
மிகுமணித்தொடிக்கரத்தினான்மேவியவாணன்
முகிலெனக்கொடுமுழக்கிடுமுழவொலிமுழங்க
999 பாழிசேர்துடிகாகளம்பரந்தவாய்ப்பதலை
வாழிமாலொருகட்பறைவயிர்சிறுசின்னந்
தாழ்வில்பேரிகைசல்லரியாதிசாரதங்கள்
குழுமாழியோரேழினதோசையிற்றுவைப்ப
1000 ஆதிநாரணனாகிகழூயபண்ணவரார்ப்பும்
பூதநற்கணந்துவைத்திடுபொங்கியத்தொலியு
நாதகீதத்தினோதையுநான்மறையொலியுங்
கோதிலண்டகோளகைமுகட்டினிற்குடியேற
1001 கன்னிதன்னொடுந்தவம்புரிகடிமணிமாடந்
தன்னினின்றுமத்தக்கன்மாமனையிடைச்செல்வான்
முன்னவன்றிருமுதற்பெருவாயில்களொருவிப்
பொன்னிநாட்டமர்மாடநீண்மறுகினிற்போந்தான்
1002 போந்தகாலையிற்கொபங்கரவல்குலார்செம்பொன்
வாய்ந்தமாடத்துங்கூடத்துமன்னுகோபுரத்து
மேய்ந்திலங்கு செய்குன்றினுமெழின்மறுகெங்குஞ்
சேர்ந்துசெங்கைகள் குவித்தனர்களித்தனர்திளைத்தார்
வேறு
1003 எந்தைபெருமானழகிருந்தபடிகாணூஉச்
சுந்தரமலர்ப்புதியசுண்ணமலைதூவி
யிந்தவுமைதன்னையிவனின்பமணமேய்வான்
வந்தருளுமந்தமணவாளனிவனென்பார்
1004 மைக்கரியகண்டனருண்மாதுதனைவெமூகி
யிக்கடிநகர்த்தெருவெழுந்தருளமேனாண்
மிக்ககமலக்குரிசின்மெய்த்தவமளித்த
தக்கன்மகள்செய்ததவமேதவமதென்பார்
1005 இத்திருநகர்க்கர்மையின்பமணநாடி
யத்தனணைகின்றபரிசாரறியகிற்பார்
சத்தியமெய்ஞ்ஞானசிவசத்திதவமேவும்
பத்தியவள்கைமிசைபலித்ததிமூதென்பார்
1006 உள்ளமிகழ்கூரவருளுத்தமமதாமேல்
வள்ளலெனவந்தமடமங்கைமணவாளற்
கெள்ளரியபூணணியிருங்கலைகளெல்லாங்
கொள்ளுமெனநின்றுசிலர்கொள்ளைகள்கொடுப்பார்
1007 ஐயன்மணிமகுடமிகுமாதவர்கொலென்பார்
செய்யதிருவாயழகுசெம்பவளமென்பார்
துய்யமதுமாலைபுனைதோள்வரைகளென்பார்
மெய்யணிவிழுங்கியதிம்மேவுமணியென்பார்
1008 கண்ர்தலெம்மண்ணமன்மிகுகாமநிகழென்பால்
வண்ணமுறுகாமர்சரமாரிபொழியக்கண்
டெண்ர்லகிலின்பசுகமேவவநுபோக
நண்ர்கிலனென்னவிவனாகரிகமென்பார்
1009 காண்டகையகாமவிரகக் கடல்விழாது
நீண்டதொடைநல்கெனநினைந்தருள்செய்கில்லான்
வேண்டினர்தமக்கவர்கள்வேண்டியவைநல்கு
மாண்டகைதனக்கிமூதடாதெனவுரைப்பார்
1010 தங்குகழைவிற்றனதுசெங்கையினெடுத்துத்
துங்கமதினீலமலரம்பதுதொடுத்தான்
மங்கையைமணம்புணரவந்தருளும்வள்ள
லெங்களகமீதிதினெழுந்தருளுமென்பார்
1011 நந்தமனைநண்ர்மெனநண்ர்கிலனென்பா
ரிந்தவிறைநந்தமனையெய்தரியனென்பார்
பந்தணிவிரற்பரவைபாலிருளின்முன்னாட்
சுந்தரன்விடுப்பவருதூதனிவனென்பார்
1012 கந்தமலரம்பன்விடுதூதுகளகண்டங்
கொந்துலவுசோலைபயில்கூற்றமிதுவென்பார்
மந்தமருதங்கொல்வடவானிலமதென்பா
ரிந்தமிதமொண்டழலிறைக்குமினியென்பார்
1013 நன்றுமிகநன்றுமிகநாடினமரங்காள்
வென்றிவிடையேறியிவன்வீதியிடைபோத
வன்றில்பகையாழிபகையாயர்குழலோடித்
தென்றல்பகையென்றுசிலர் செப்பியிடுகிற்பார்
1014 எண்டரிலிவன்றினமெழிற்பிரமசாரி
யொண்டொடியுமோதினமுமுன்னிலொருகன்னி
பெண்டகைமணம்புணர்தல்பேசினமாங்காள்
கண்டறிகிலாதகலிகாலமிதுவென்பார்
1015 சந்தமறையேபரவுதக்கன்மருகோனென்
றிந்தமறுகூடிருவரின்னுமறியொண்ணா
நந்தியுமைநன்மணநயந்துநமரங்காள்
வந்தருளுகின்றதெனமாயமிமூதென்பார்
1016 சங்கரன்விரும்பிவிடைதன்னிலிவண்மன்னி
மங்கையைமணம்புணரவந்ததெவனென்பார்
சங்கரன்மணம்புணர்தல்சாற்றினமரங்காள்
மங்கையருமைந்தருமணம்புணரவென்பார்
1017 என்றெழுவகைப்பருவமாதர்களியம்பி
நின்றுதொழமாடமலிநீண்மறுகுநீங்கா
வென்றியயன்மால்கைகொடுவெள்விடையிழிந்து
மன்றல்புரிமாடமணிவாயிலிடைவந்தான்
1018 வந்தருளெந்தைமுன்மாதர்நிம்பநற்
பைந்தளிர்செய்யகாற்பாசஞ்சேர்ப்பராற்
சிந்துறுமிலவணந்திரன்பகற்சுடர்
சுந்தரக்கலங்கொடுசுலவிப்போயினார்
1019 காரணகாரியங்கடந்துநின்றதோர்
பூரணன்பதத்தினான்பொழிந்தகீரத்தா
லாரணவல்லிவந்தடிவிளக்கியே
சீரணிதன்றிருமனையிற்சென்றனள்
1020 படர்ந்தமாமணிவெயில்பரப்புஞ்சோதிவா
னடர்ந்துசென்மணட்பமதனினாப்பணோர்
முடங்குவாலுளைமணிமொய்த்திலங்குநன்
மடங்கலாசனத்தினில்வந்துதோன்றினான்
1021 மாலயனாதியவானுளோரெலா
மேலவனேவலின்விருமப்பினோங்குநற்
கோலமாநவமணிகுயிற்றிடுங்கதி
ரேலுமாசனங்களினினிதினேறினார்
1022 பாரினும்விசும்பினும்படர்மணிக்கதிர்
மேருமால்வரையெனவிளங்குமண்டபச்
சீரியவளனெலாந்திருக்கண்சாத்தினா
னாருயிர்க்குயிரதாயமர்ந்தநாயகன்
1023 பன்னருமன்னுயிர்படைக்கும்பண்பினான்
மன்னியநன்பெருவளங்கணல்கலாற்
றென்னுறுதிசாமுகஞ்சேர்ந்திலங்கால
லன்னமண்டபமலரயனையொத்ததே
1024 மேலுறநிமிர்ந்துவான்வெளியடைத்தலாற்
சீலமாம்பொறிமயில்சேர்ந்திலங்கலாற்
கோலமாகியவுருக்கொண்டிலங்கலான்
மாலவன்போன்றதம்மாடமண்டபம்
1025 உவமனற்றியாவருமுரைக்கொணாமையா
லிவையெனவியம்பருமின்பமீகையா
னவையறுசிறப்பினினண்ணியோங்கலாற்
சிவபிரான்போன்றதச்செம்பொன்மாடமே
1026 முத்தொழிலியற்றிடுமூவர்சேர்தலாற்
சத்தியவுலகமுந்தகுவைகுண்டமு
மத்தனதுலகமுமவனிசேர்ந்ததை
யொத்ததம்மணவினைக்குரியமாடமே
1027 அங்கதுகாலையினருமறைக்கொடி
தங்கியமனையிடைத்தானெழுந்தரு
ளெங்கணாயகியுலகெங்குமீன்றருண்
மங்கைதன்செய்கையைவழுத்துவாமரோ
1028 மாயிருஞாலஞ்சேர்மன்னுயிர்க்கெலாந்
தாயெனவந்தருடம்பிராட்டியை
நேயநன்மறைக்கொடிநெருங்கப்புல்லினா
ளாயிழையார்களுமடிவணங்கினார்
1029 மருவியமஞ்சனமாட்டிவார்ந்தநற்
புரிகுழலீரமெய்புலர்த்திப்பொங்கெழி
லரவகலல்குலினம்பொன்மாமணி
யுரியசெம்பட்டினையுவந்துசாத்தினார்
1030 மண்டியவகிற்புகைவாசமூட்டியே
கொண்டல்சூழ்நித்திலக்கொத்துமாலைபொன்
முண்டகக்கரங்களான்முடித்துக்கூந்தலி
னெண்டருஞ்சிகழிகையிலங்கச்சூட்டினார்
1031 தருணமிக்கலிங்கியசந்திரோதயத்
திருமுகமழகுறத்திலகஞ்சேர்த்தினார்
வரிபரந்தொழுகியமதர்நெடுங்கணி
லிருளுமிழஞ்சனமெழுதினாரரோ
1032 இருசுடருதயமால்வரையினேய்ந்தெனக்
கருதருமணிக்குழைகாதுசேர்த்தினார்
திருமிகுமங்கலநாண்டிகழ்ந்திட
மருவுகந்தரமணிமாலைசேர்த்தினார்
1033 நுர்கிடைமுரிதரநுவலருந்திரு
மணமலிகுங்குமமன்னுதேய்வையா
லிணையறவேபுடைத்தெழுந்தவேந்திளந்
துணைமுலையணிபெறத்தொய்யிறீட்டினார்
1034 பழுதறுபசும்பொனிற்பதித்தபான்மைசேர்
கழுவியநன்மணிக்கற்றைத்தூறுசீர்
கெழுதகுவயிரகேயூரங்கேழ்கிள
ரழகியதோள்களிலலங்கல்சேர்த்தினார்
1035 சூழுறுதிசாமுகந்தொறுநிறைந்துறும்
பாழிசேர்மிகுவெயில்பரந்தெறித்திடு
மேழிரண்டென்னவேயிசைக்குநன்மணி
யாழிகளங்குலியணிந்திட்டாரரோ
1036 ஓதிடுமுவமனாலுரைக்கொணாதநற்
காதலிற்கனவளைகவினச்சேர்த்தியே
மேதகுநவமணிவிட்டெறிந்திடுஞ்
சோதிசேர்சூடகந்துணைக்கைசேர்த்தினார்
1037 நற்கமலத்திருவழகுநண்ணியே
பொற்பதந்தனிற்றெழில்பொருந்தப்பொற்கொலர்
பற்பகலியற்றுநற்பாடகத்துடன்
செற்றியசில்லரிச்சிலம்புசேர்த்தினார்
1038 உணர்வருந்திருவருளுமையையின்னண
மணியினுக்கணிகலனணிந்ததாமென
மணவணிபுரிதலுமகிழ்ந்துதக்கனேர்
பணிதலுற்றெழுந்தருள்கெனப்பராயினான்
வேறு
1039 தங்குபுகழ்த்தக்கனிமூதுரைத்திடலுமுடனெழுந்துசததளப்பூஞ்
செங்கமலத்திருக்கோயிற்றிருமாதுங்கலைமாதுஞ்செங்கைதாங்கப்
பொங்காவவகலல்குற்புலோமசைமுன்போற்றமணம்புணருங்கோல
மங்கலஞ்சேர்மாடத்தின்மன்னுமரசன்னமெனமங்கைசேர்ந்தாள்
1040 சேர்ந்தருளுமுமையாடன்செங்காந்தட்கரங்குவித்துச்சிவபிரான்முன்
போந்தெதிர்நின்றிறைஞ்சிடத்தன்புடையிருத்தியென்றருளிற்புகறலோடு
மார்ந்தசெழும்பல்லியங்களார்கலியினார்ப்பெடுப்பவமரர்போற்ற
வேந்தரியாசனத்தேறியுடனிருந்தாளுலகீன்றவெம்பிராட்டி
1041 எங்கள்பெருமாட்டியுடனெம்பெருமானெழுந்தருளியிருப்பத்தக்கன்
றுங்கமறைக்கொடிவளைக்கைத்தூமலர்மஞ்சனமாதிசுமந்துநிற்ப
வங்கணன்றனடியிணையிலருக்கியமீந்தருச்சனைசெய்தான்பால்கொண்டு
பங்கயப்பொற்பதம்விளக்கிப்பைந்தொடியையளித்திடுவான்பரிவுகூர்ந்தே
1042 எம்மையினிதாண்டருளென்றியாவருமேபணிந்தேத்துமெம்மான்றன்னை
நம்மருகனென்றெண்ணிநாயகியைநிற்களித்தேனானேயென்னா
வெம்முனைசேர்வேனெடுங்கண்விளங்கிழைசெங்காந்தளங்கைதன்னைமிக்க
செம்மணிப்பொற்குண்டிகையிற்றிகழ்திருமஞ்சனமரன்றன்செங்கையீந்தான்
1043 அந்நிலையிலயனெடுமாலமரர்முனிவரரிறைஞ்சியார்வங்கூர்ந்தார்
பன்னுமரம்பையர்கானம்பாடிநடமாடினர்முன்பணிந்துபாங்காற்
றுன்றுதிரைக்கடலெனவேசொல்லரியபல்லியங்கடுவைத்தார்பூதர்
தன்னருளைக்கைகலந்துதனதுதிருவுளமகிழ்ந்தான்றார்வானோன்
1044 மண்டபநின்றிலங்கவட்டமங்கலமும்பாலிகையுமரபிற்றந்தாங்
கண்டர்மனங்கண்டுவப்பவருத்திமிகுந்தருப்பைமலராச்சியத்தாற்
குண்டமதிற்கொழுந்தழன்மேற்கொழுந்துவிடத்தானினைந்துகூட்டிமூட்டிப்
பண்டருநான்மறைமுறையிற்பரிவினெரிவளர்த்தனன்பல்லுயிர்படைப்போன்
1045 நாலுமுகனின்பமணச்சடங்குமுடித்திடலும்மேநஞ்சமுண்டு
நீல்மணியெனமிடற்றுநீங்காமற்பழுத்தோங்குநிமலமூர்த்தி
மாலயனேமுதலானவானவர்சூழந்திடத்தக்கன்மருகனானோன்
கோலமதனைக்காய்ந்தகுறிக்கரியதனதுதிருக்கோலங்கொண்டான்
வேறு
1046 வானோர்பெருமான்மறைந்திடலும்வண்டுறங்குந்
தேனார்ந்தகஞ்சத்திருவாணிதம்முழைச்சேர்ந்
தானாமணியிழந்தவவ்வரவயெனன்னக்
கானார்ந்தகூந்தற்கவுரியிவைகட்டுரைப்பாள்
1047 பன்னாளருந்தவங்கள்பண்ணியவென்பாக்கியத்தா
லென்னாயகன்றானேயென்பாலெழுந்தருளி
நன்னாளெனவுவந்துநன்மணமுஞ்செய்தருளி
யிந்நாண்மறைந்ததியானேதென்றறியேனே
1048 இன்னமும்யான்காண்போனோவெம்மான்றனதுதிருச்
சென்னியின்மேற்சேர்ந்திலங்குஞ்செம்பொன்மணிமுடியும்
பன்னுமறைபாடும்பவளத்திருவாயு
முந்நூன்மணிமார்புமூன்றுநயனங்களுமே
1049 கண்ணாலினுமொருகாற்கண்டுகளிகூர்வதெந்நாள்
விண்ணார்நதிமிலைச்சுமிக்கபவளச்சடையு
மண்ணாடையானமகராலயத்தெழுந்த
வுண்ணாதநஞ்சதனையுண்டிருண்டகண்டமுமே
1050 எந்தநாட்கண்டிங்கினியானிறைஞ்சிடுகேன்
சுந்தரஞ்சேருங்கடகத்தோள்களொருநான்கும்
வெந்ததிருநீறணிந்தமேனியுந்தன்மெய்யடியார்
பந்தமறுத்தாண்டருளும்பாதாரவிந்தமுமே
1051 இங்கினியானென்றோவிறைஞ்சப்பெறுவேனான்
சங்கக்குழைதான்றயங்குகின்றவார்காதுந்
திங்கள்விளங்குந்திருமுகத்தின்சேவையுமேற்
பொங்கிவழிகாதற்பொருந்துமணக்கோலமுமே
வேறு
1052 என்றென்றுபினுமிறைவாவெனுமா
லொன்றும்மினியானுரையேனெனுமாற்
பின்றங்குசடைப்பெருமானருடா
னன்றிங்கிதெனாநகைசெய்திடுமால்
1053 பொன்றோய்சடிலப்புனிதன்மறையுஞ்
சென்றோங்குபுகழ்த்திசைகைதொழுமா
லொன்றோவுரையாமலொளித்தனையா
னன்றோசிவதாநடுவோவெனுமால்
1054 இருளாணவநீங்கிடவேயெனையோர்
பொருளாகமனைப்புகுந்தாண்டுமெனக்
கருளாதெவனோவறியேனெனுமான்
மருளாதினமும்வருமோவெனுமால்
வேறு
1055 என்றுபன்னியிரங்கும்விழுமெழு
நின்றசோர்ந்திடுநெட்டுயிர்ப்பெய்திடுங்
கன்றுநெஞ்சகங்காந்தளங்கையினா
லொன்றுமாநிலத்துற்றிடவெற்றிடும்
1056 தாங்குஞ்சூடகத்தாமரைக்கைகளாற்
பூங்கருங்குழன்மாலையைப்போக்கிடுங்
கோங்கரும்பன்னகொங்கைமுகட்டினி
லோங்கியேபின்னொலித்திடவெற்றிடும்
1057 காசிலாதகதிர்மணிமண்டபத்
தாசைபோலகலல்குனன்மாதரா
ரேசவேமணஞ்செய்தென்பயனெனும்
பேசில்யான்பெண்பிறந்தென்பயனெனும்
1058 செல்லும்வானிற்றிசைதனைநோக்குமென்
சொல்லுகேனென்றுதுண்ணெனச்சோர்ந்திடும்
வல்லுலாவும்வனமுலைமுன்றிலிற்
கல்லுமுத்தெனக்கண்புனல்கான்றிடும்
1059 இன்னதன்மையையெண்ணியிலங்கிழை
மன்னுநாதன்மறைக்கொடிமாமல
ரன்னமன்னவளன்னையைவாழ்த்தியே
துன்னுகின்றனர்சூழ்ந்திவைசொல்லுவார்
1060 மாதராய்நின்மனந்தளரற்கநற்
காதலாலுனைக்கண்ர்தற்சாமியிப்
போதுவந்துபொருந்துவனன்கெனா
வாதரத்துடனங்கவர்தேற்றினார்
1061 தேற்றிப்பின்னருந்தேமொழிமாதரா
ராற்றவேநின்னருமணக்கோலத்தை
நோற்றநோன்பினுவலருமப்பலப்
போற்றினாற்றொழப்பெற்றனமியாமென்றார்
1062 என்றகாலையினெம்பெருமாட்டிதான்
றுன்றுமாதர்குழுவைத்துறந்துநீண்
மன்றல்சேர்கடிமாத்தினெய்தியே
யொன்றுமாதவமுற்றிருந்தாளரோ
1063 உற்றவேலையினோதிடுமாலயன்
மற்றியாருமனந்தளர்வெய்தியே
கற்றைவார்சடைக்கண்ர்தலண்ணறன்
பெற்றிநாடரிதென்றென்றுபேசினார்
வேறு
1064 எம்பிரான்மறைந்தேகலுமெண்கணன்றருஞ்சேய்
வெம்பியுள்ளம்வெகுண்டுமெய்வியர்த்தறவெள்கித்
தம்பமாகியதடக்கையொன்றோடொன்றுதாக்கி
யம்புயக்கைநாசாக்கிரத்தமைத்திவையறைவான்
1065 என்னருந்தவப்பேற்றினாலீன்றமெய்ஞ்ஞானக்
கன்னிபாகன்வான்கங்கைமாநதியலையெறிக்கும்
பின்னறாழ்ந்திடப்பேயுடனாடியபித்தன்
நன்னர்நண்புணர்கின்றதுநன்றெனநக்கான்
1066 ஈதியாலெனவென்மகடனையிவண்மேவ
வேதநூனெறிமேவியவிண்ணவர்வியப்பக்
காதலாலருங்கடிமணமுடித்தனன்யானிப்
போதிவன்புகல்கணவனென்றறிந்திலன்போலாம்
1067 தெரியின்யானினிச்செப்புவதென்னையோவண்ணங்
கரியமாலயன்கண்ர்தலாகியகள்வன்
பெரியர்யாவரேயென்னினும்பிழைத்திடவெண்ணி
லரியதோர்தலைவிதியினைவிலக்கிடலாமோ
1068 ஆதலாலிமூதென்றலைவிதியிதுவாயி
னேதுசெய்குதிர்நீவிரென்றியம்பிமான்முதலோர்ப்
போதுநும்பதியெனவவர்தமையிடம்போக்கி
நாதனார்செயனாடியேநண்ணிடுநாளில்
1069 பூதிசாதனமுந்திரிசூலமும்பொருதுங்
காதில்வெண்குழையுங்கரகபாலமுஞ்செய்ய
பாததாமரைப்பரிபுரமும்படர்சடையு
மாதுகாதலோர்தாபதன்போலிறைவந்தான்
1070 வந்ததாபதன்றன்னெதிர்வந்துவந்தனைசெய்
தெந்தைதன்னடியானெனவேத்தலுமிரங்கிக்
கந்தவார்குழற்காரிகைகண்டுகண்களிப்பச்
சுந்தரங்கொள்வெள்விடையினிற்றோன்றினன்றொல்லோன்
1071 தோன்றலாங்கெதிர்தோன்றலுஞ்சுந்தரிதுர்க்குற்
றான்றவன்புடனளிக்குலங்களிக்குமம்புயத்தா
ணான்றபூங்கழறைவரநன்கினிதிறைஞ்சி
யேன்றநற்றுதியியம்பிநீயிரங்கெனவிரந்தாள்
1072 இரந்தகாலையினெம்பெருமாட்டியையெங்கோன்
வருந்தனீயெனவேதிருவாய்மலர்ந்தருளி
விரும்பியேபொருவெள்விடைமீதுடனிருத்திப்
புரந்தராதியர்போற்றிடக்கயிலையிற்போந்தான்
1073 போந்தகாலையிற்பொருந்தியசேடியர்விரைந்து
சார்ந்துதக்கனைத்தாழ்ந்துநீதந்தருண்மருந்தை
யேந்திடும்புனற்சடிலன்வந்தெழில்விடையேற்றிக்
காந்துவெண்மதிக்கதிர்விடுங்கயிலையிற்படர்ந்தான்
1074 என்றவேலையினிறைமகனெம்பிரான்றன்னை
யொன்றுசீற்றமேற்கொண்டுநிந்தனைசெய்யவும்பர்
கன்றுமான்மழுவேந்தியகண்ர்தற்பெருமான்
மன்றலங்கழன்மதித்திடாதுரைத்திடல்வழக்கோ
1075 ஆதலாலரனம்புயமருவியசெம்பொற்
பாதமீதினிற்பரிவொடுபணிவதேபாங்காற்
போதியென்றுபுத்தேளிர்கள்போற்றிசெய்திசைப்ப
வோதுநீள்விசும்பிடறிடுங்கயிலையையுற்றான்
1076 உற்றவானதியுவட்டெடுத்தெழுந்தலைகொழிக்குங்
கற்றையஞ்சடைக்கண்ர்தற்சாமிதன்கோயின்
முற்றுமாமணியெறித்திடுமுதற்பெருவாயிற்
பொற்பினேறினன்போகலையென்றனர்பூதர்
1077 பூதர்நீவிர்தாம்போகலையென்றதென்புவிமே
லோதரும்பெருந்தவம்புரிந்துவந்தியானீன்ற
மாதராண்மணமருவியவொருதிருமருகன்
காதலாற்கலந்திருத்தல்யான்காணியவந்தேன்
1078 என்றுதக்கனீதியம்பலுஞ்சாரதர்வெகுண்டே
யுன்றன்மாமுகநோக்கினுமுற்றிடுநிரயம்
பின்றயங்குசெஞ்சடிலனைப்பேசிமுனிந்தை
நன்றுகாணியவந்ததுநவின்றிடினகையே
1079 அன்றியெந்தைநின்மருகனாயம்பிகைமகவா
யுன்றனாணையிலுலகெலாமொருதனிச்செங்கோ
லென்றுமோங்கிடவீந்ததையயர்த்திநீதக்க
கொன்றுநன்றியைத்தின்றுழல்கூற்றனேகொடியாய்
1080 இன்னுமொன்றுநன்கியம்புவங்கேட்டியாலெங்கோன்
பொன்னடிக்கமலந்தொழப்போதுவையாயின்
மன்னுகிற்றியாலன்றெனில்வந்திடும்வழியே
நின்றனக்கினிதேகெனநிகழ்த்தினரன்றே
1081 அந்தவாசகங்கேட்டலுமக்கொடுந்தக்கன்
கந்தமாமலரோன்முதற்கடவுளர்யாரும்
வந்தெனாணையின்வழிபிழைக்கின்றிலரதனா
லெந்தஞான்றினுமிறைவனையிறைஞ்சலன்யானே
1082 திருமணிப்பெருங்கோயினீசெல்லலென்றதுதா
னுரியநற்றவத்தியான்றருமொருமடக்கொடியு
மருவுமென்றிருமருகனும்வழங்கியமாற்றங்
கருதினும்முறையன்றிதுவென்றுகட்டுரைப்பான்
1083 பரவுகின்றநும்பரஞ்சுடர்தன்னையாவருமே
கருதிடாவகைகாண்குவனன்னதுகாண்டிர்
பொருவில்செய்கையான்புகழ்பெறப்புரிகுவலென்னாத்
திருகுசிந்தையாலினையனசெப்புதலுற்றான்
1084 வீடருங்கொடும்பவந்தொறும்விஞ்சியசெம்பொற்
பாடகந்தரும்பழகியதீவினைபற்றிப்
பீடுறாவகைபிடர்பிடித்துந்திடப்பெருஞ்சீர்த்
தேடரும்புகழ்த்தக்கமாபுரத்தினைச்சேர்ந்தான்
1085 சேர்ந்துபுங்கவர்க்குரைசெய்வான்றிருந்துமோவியரு
மோர்ந்துநல்லெழிலெழுதொணாவொண்டொடிதன்னோ
டேந்துபுன்சடையிலங்கியவிறைசெயன்முறையாற்
சார்ந்துவாயினோர்சாரதர்தாந்தடைசெய்தார்
1086 ஈதலாதுபின்னியம்பியதிசைத்திடவற்றோ
வாதலாலின்றுபற்றிநீரங்கணனம்பொற்
பாததாமரைபணிவதுதவிர்குதிரென்னாப்
போதுகென்னலும்புங்கவர்தம்பதிபுக்கார்
வேறு
1087 அன்பருளந்தனதாயகோயிலாமங்கணன்மங்கையையார்வமாகவே
யின்பமணம்புணர்காதையோதுவோரின்புடனன்செவியேறவேய்குவோர்
வன்பவவெந்துயர்யாவுமாறியேமங்கலவங்கனையார்களோடுதாந்
தென்பயிலிந்திரபோகமேவியேசெஞ்சடிலன்பதமீதுசேர்குவார்
திருக்கலியாணச்சருக்கமுற்றியது
ஆகசெய்யுள் 1087
*****