28

பதின்மூன்றாவது

தக்கன் வேள்வியழித்தசருக்கம்

1088 மட்டவிழ்சரோருகனன்மைந்தன்மகிழ்கூர்ந்தாங்

கிட்டிபுரிகாதையையிசைப்பவதுகேண்மோ

கட்டழகுசேர்சவுனகத்தலைவவென்னாச்

சிட்டர்புகழ்சூதமுனிசெப்பியிடுகிற்பான்

1089 மாதவன்விரிஞ்சன்மிகுவானவர்கண்மாத

ரேதமறுமாதவர்களெண்டிசைபுரப்போ

ராதியர்கள் சூழநுதலங்கணனைநீத்தே

மேதகையதக்கனொருவேள்விசெயலுற்றான்

1090 வேழ்விதனைநன்மகதவீணைமுனிகாணூஉத்

தாழ்விலருணாடுமுயர்சத்தியதவத்தேர்

வாழ்வுறுபெருங்கயிலைமால்வரையினண்ணிக்

காழ்தருகளத்தனடிகைதொழுதுநின்றான்

1091 நின்றுதொழுநாரதனைநின்மலனுவந்தே

யின்றிவணடைந்தபரிசென்னவுரையென்னா

மன்றன்மலரோன்முதலவானவர்கள்சூழ

வென்றிகொடுதக்கனொருவேள்விபுரிகின்றான்

1092 என்னலுமகிழ்ந்திறையிடத்தினிலமர்ந்த

மின்னனையநுண்ணிடைவிளங்கிழையெழுந்து

தன்னிகரிலெந்தையிருதாடொழுதுபோற்றி

மன்னியதொர்செம்பவளவாயினுரைசெய்வாள்

1093 எந்தையிதுகேண்மதியியம்பலுடையேனென்

றந்தைபுரிவேள்விதிகழ்சாலையடியேற்காச்

சிந்தைமுனியாதுகொடுசென்றவியருந்தி

வந்தருள்புரிந்திடும்வரந்தருதல்வேண்டும்

1094 அல்லதடியேற்குநினதானனமலர்ந்தே

வல்லைவருகென்னவிடைவாய்மையொடுமீதி

செல்லலெனவேயருள் செய்தேவவெனவிமவான்

நல்வினையைநாடிவிடைநாதனுரைசெய்தான்

1095 உரைத்தருளுவொல்லையினுவந்துவிடைகொண்டே

விருப்பினோர்விமானமதின்மேவியருணந்தி

யருட்டருகணங்களொடுமக்கொடியதக்கன்

றருக்கினுடன்வேள்விபுரிசாலையிடைசார்ந்தாள்

1096 சார்ந்துயர்விமானமதுதன்னைமுனிழிந்து

சேர்ந்துரியதக்கனெதிர்செல்லவவண்வல்லே

வார்ந்தகுழன்மாதுதனைமற்றவன்வெகுண்டே

நேர்ந்தபலநிந்தனைநிகழ்த்தியிடலுற்றான்

1097 நின்னருமைபூண்டகணவன்னிலைமையென்னோ

வுன்னிலவன்மன்னிடவொரூரதுவுமுண்டோ

பின்னரதுநிற்கவொருபேர்பரவவுண்டோ

வின்னனிவனென்றுலகியம்பிடவுமுண்டோ

1098 மாசுணமருந்துமொருவாயுமலைவுற்றே

வீசியலையாழியிடுமேருமலைவில்லா

மூசுதலையோடுகலனூர்கொள்பலியாலப்

போசனமிலங்கிடமெய்பூசுதல்வெணீறே

1099 பன்னகமிகுந்திலகுபைம்பொனணியார்

முன்னிலொருகோவணமுடுப்பதுபுலித்தோ

றன்னிகர்பொருங்கரடதந்தியுரிபோர்வை

சென்னிதிகழ்கின்றதுசிறந்ததலையோடே

1100 கூறரியவென்பினோடுகொக்கிறகுமக்கு

மாறுபடுவன்றிறல்வராகவளைகோடு

மூறுபடுமாமைமுதுகோடுமுறுசெஞ்சேல்

வேறுபடுகண்ர்மலர்வெள்ளர்க்கமாலை

1101 காதணிகலன்சுரிமுகங்கடகமார

மேதமறவேதினமுமேறுதல்வெளேறே

யாதரவினின்றுநடமாடுவதுகாட்டிற்

கோதின்மணிமேவுதிருக்கோயில்சுடுகாடே

1102 ஒள்ளிதெனவேதினமுமொண்டொடிநின்னோடும்

வெள்ளிமலையென்றதனின்மேவியிடமேனா

ளெள்ளருமிலங்கையிலிராவணனிராதே

யள்ளியகழ்கின்றதனையாருமறியாரோ

1103 இந்தமுறைதன்னையிறையும்மறிகிலாதே

சந்தமறைநூலின்வழிதந்தநின்மணந்தான்

முந்தவிதிவந்திதுமுடிந்ததவனைத்தா

னந்தமருகோனெனவுநாணியிடுமுள்ளம்

1104 என்றுபலநிந்தனையியம்பினனிசைப்பான்

வென்றிதருகின்றபலவிண்ணவர்கள்காண

மன்றல்செயவந்தெனதுமாமருகனாகி

யன்றவனெடுத்தபரிசார்புரியவல்லார்

1105 தக்கவுலகங்களிடைசார்ந்தபலயோனி

தொக்கவுயிர்கட்கருள்செய்தோன்றலினியானென்

றக்கொடியதக்கனுமையாளையும்வெகுண்டே

மிக்ககயிலைக்கிரியின்மீண்டுபடர்கென்றான்

1106 அங்கர்மைமங்கைதிகழங்கணனையந்தோ

பங்கமுறநிந்தனைபகர்ந்தவதனாலே

வெங்கனல்விளங்கிடுமிவ்வேள்வியுமழிந்து

தங்கியிடுநின்றலைதணந்திடுகவென்றே

1107 வெங்கனல்சொரிந்திடும்விலோசனம்விளங்கு

நங்கள்பெருமானருகுநண்ணிடவுமஞ்சித்

தங்குமனல்வேள்விபுரிசாலைநடுமூல

வங்கியையெழுப்பியதினம்பிகைகுளித்தாள்

1108 ஏர்கொளிமவானுமையெனக்குமகவாகென்

றோர்பரனைநோக்கிமுனுழந்ததவம்வந்து

நேர்படலும்வேள்வியிடைநீடருளின்வந்து

பேர்பரவுமந்தவொருபெண்கொடிபிறந்தாள்

வேறு

1109 ஆங்கதன்பின்னரருங்கணத்தலைவனையகோவென்றெடுத்தரற்று

மேங்குநின்றிரங்கும்விழுமெழும்வாயினெற்றிடுவெம்பிராற்குரைக்கும்

பாங்கெதுவென்னப்பரதவித்துழலும்படர்புவிசென்னிமேற்படுத்துந்

தீங்குறுகனற்கண்சென்றுகாணாதுதிகைத்திடுமெய்யணிசிதைக்கும்

1110 ஈங்கினியாதுசெய்குவனென்னவெண்ணியேயெம்பிரான்கயிலைப்

பாங்கரிற்படர்ந்துபவளவார்சடையிற்பகீரதிமிலைச்சியபரமற்

காங்கனஞ்சென்றேயறைகுவமென்னாவந்தனனந்தியங்கணத்தோர்

தீங்கெடுத்தியம்பச்சிறிதறியார்போற்சிவபிரான்றிருச்செவிசார்த்தி

1111 அண்டகோளகைக்கீழமர்ந்தினிதென்றுமருந்திறல்வீரர்கள்விரும்ப

மண்டியகாதல்கொண்டருள்புரியும்வயமிகுவீரபத்திரனைக்

கண்டனன்மனத்திற்கணத்தினிலந்தக்ககனகூடத்தினின்றிழிந்த

முண்டமதிமைசேர்கண்டனில்வந்துமுளைத்தனன்மூண்டெழுசினத்தால்

1112 எரிந்தகுஞ்சியுமூன்றெரிசொரிகண்ர்மிருசிறுபிறைதருமெயிறுந்

திருந்துசெம்மதியந்திகழ்திருமுகமுஞ்சேர்ந்தவிற்புரூரமுங்காதிற்

பொருந்துகுண்டலமும்புகழ்திருமார்பிற்பொலங்கொளாபரணநின்றிலங்கத்

திரண்டதிண்டோளிற்செங்கண்வாளரவகங்கணஞ்செறிந்துடன்விளங்கக்

1113 விரவியபவங்கள்வேரறுத்திடுநல்வெண்டிருநீறுமெய்விளங்கக்

கருதிதாயதிகழரையதனிற்கட்டியகச்சுடைவயங்க

மருவியவுதரபந்தனமானவாளராமணியொளிவயங்கப்

பொருவருகிரணபரிபுரமிலங்குபொற்பதாம்புயங்கவின்பொழிய

1114 மாமுகிலெனவேமன்னுமோர்செங்கைமணிநெடுநாவினையசைப்ப

வேமமாகியவோரெழிற்கரநின்றேயிடிபடுதுடியதுமுழக்கத்

தோமறுமின்போற்றுணைக்கரகமலஞ்சூலமேல்கொண்டதுசுலாவத்

தேமலர்வாசந்தினந்தொறும்வீசுஞ்சேவடிதொழுதிதுபுகல்வான்

1115 புண்ணியபுராணபூரணஞானபுனிதபொற்பொதுவினின்றாடுங்

கண்ர்தற்பரமகயிலைநாயகநீள்கடல்விடமுண்டிருள்கண்ட

வண்ணநல்லரவிந்தாசனன்றனதுமருவியசிரகரகபால

வுண்ணினைந்ததனையுரைத்திநீயென்னவும்பர்தம்பிரானிமூதுரைப்பான்

1116 நேரரிதாயவீரநீகேட்டிநிந்தனைநந்தமைநிகழ்த்திச்

சீருறுகமலத்திசைமுகன்றந்தசிறுவிதிவேள்விசெய்கின்றான்

பாரிடப்பெரியபடையுடனெருங்கிப்பகர்ந்திடுமவன்றனைமருவி

யேருறுமவியையீகெனக்கேட்டியீந்திடினீண்டடைகுதியால்

1117 அருத்தியினந்தவவியளித்திலனேலம்புயத்தவிசினெஞ்ஞான்றும்

விருப்புறுமயன்மால்விண்ணவராதிமேவியபண்ணவர்வெருவத்

தருக்குறுதக்கன்சிரத்தினையறுத்துத்தக்கவவ்வேள்வியைத்தகர்த்தி

பொருக்கெனயாமும்போதுதுமென்றான்பொடிபடப்புரங்கண்மூன்றெரித்தோன்

1118 தூமமார்வடவைத்தூயவெங்கனல்போற்றொடர்ந்தெரிகுஞ்சியுந்துண்ட

மாமதியிரண்டுமன்னியதென்னவளைந்தபேரெயிறுவாய்வயங்கக்

காமருசிறப்பிற்கண்கள்செங்குருதிகான்றிடக்ககனகூடத்திற்

றாமநீள்சென்னிதடவிடுங்கொடியசாரதர்சந்ததம்பரவ

1119 அண்டமானவற்றையணித்துணைக்கரத்தினங்குலியொன்றினாற்றாங்கி

யுண்டிடவேண்டினொருகணமதினனுண்டுமிழ்தரவுறுவலியு

மண்டியபுகையின்வளர்ந்தெழுசிகையும்வானிளம்பிறையிரண்டென்னக்

கொண்டபேரெயிறுங்குருதிசோர்கர்ஞ்சேர்குறட்சிறுபு{தங்கள்பாட

1120 துஞ்கமிக்குறச்சூழ்ந்தாழ்ந்தகண்களுஞ்சீர்சொற்றரிதாயசிற்றரையுந்

தங்கமிக்கொடுங்குங்கபோலமுநீள்கந்தரமுமேல்கிளர்ந்தறவெறிந்த

பங்கியுமுலர்ந்தபண்டியுமிலங்கப்பதங்களைமாறியேநீண்ட

வங்கைகள்கொட்டியலமரலுற்றேயலகைகளவைதிரண்டாட

1121 சீரணிவாசந்திகழ்ந்தசெங்கமலத்திருமுலைத்தடங்களிற்றிளைக்கு

நாரணரிறந்தநாட்கவர்கின்றநன்னிலாக்கற்றைசேர்ந்தரிக்கும்

பூரணமதிபோற்பொருந்தும்வெண்சங்கிற்பொருவருவிந்துநாதத்தின்

சார்தருமோசைதழங்கிடவந்தச்சாரதர்தமிற்சிலர்தொனிப்ப

1122 பொங்கியவாசந்துதைந்தளிமுரன்றுபுதுமதுவுண்டுதேக்கிடும்பூம்

பங்கயத்தவிசிற்பண்ணவரனேகர்பண்டுயிர்பிரிந்திடவவர்சேர்

செங்கமலத்தாட்டிகழ்சிறுசின்னஞ்சேர்ந்தகைச்சிறுகுறட்பூத

மங்கணர்தற்சேர்துங்கவீரன்வந்தானெனவேபணிமாற

1123 அண்டர்நாயகன்றனனுக்கிரகத்தாலலகிலண்டங்களுமுதவிப்

பண்டருவேதப்பாடலோர்நான்கும்படர்திசாமுகத்தினும்பயிலும்

புண்டரீகப்பொற்பொகுட்டில்வீற்றிருக்கும்புங்கவரனேகர்பொன்றிடச்சேர்

குண்டிகையனந்தங்குறட்சிறுபூதங்கொண்டுகைக்குடமுழாமுழக்க

1124 இன்னபல்லியங்கடுவைத்திடவுயர்வானெழுமுகடிடிபடச்சேடன்

மன்னியசென்னிமருவியவுலகும்வானமுமிகநடுநடுங்கப்

பன்னுமேழ்கடலிதென்னவேசூழ்ந்தபாரிடப்படையொடுபடர்ந்தான்

கொன்னுருவீரர்கொடியவாருயிரைக்கூற்றினுக்கிரையிடும்வீரன்

1125 மன்னியகரிமேல்வாலுளைமடங்கன்மறங்கொடுசெல்வதுபோன்று

முன்னிமான்றன்னையுறுவலியொழிப்பானோர்வயப்புலியுறல்போன்றும்

பன்னகமதனைப்பரிகுவானினைந்துபன்னகவயிரிசென்றெனவுந்

தன்னிகர்வீரபத்திரன்வேள்விதந்திடுந்தக்கனைச்சார்ந்தான்

வேறு

1126 சார்ந்தகாலையிற்றக்கன்முன்

சேர்ந்துளோர்திடுக்குற்றனர்

வாய்ந்தமாதவர்வாழ்தினா

ரேய்ந்தவான்வரேங்கினார்

1127 கந்தமாமலர்க்கடவுள்சேய்

முந்துறக்கடிதுமொழிகுவா

னிந்தமாநிலத்தியாரைநீ

வந்ததென்னுரைவழங்கெனா

1128 வெள்ளநீர்பொதிவேணிசேர்

வள்ளறன்றிருமைந்தன்யா

​​னெள்ளருங்கனலவியினைக்

கொள்ளவென்றுநிற்குறுகினேன்

1129 ஆதலாலவிப்பாகநீ

நாதனுக்கிவணல்கெனா

வோதுமற்றவியுதவிலன்

போதயென்றுபுகன்றனன்

1130 என்றவேலையிலெம்பிரான்

வன்றிறற்றிருமாயனைத்

தன்றடக்கைசேர்தண்டினாற்

பொன்றினானெனப்புடைத்தனன்

1131 அலங்குநன்சிகையவிழமெய்

கலங்கிவாய்குருதிகக்கவே

நலங்கொள்வேதனொருநான்முகங்

குலுங்கிடக்கைகொடுகுட்டினான்

1132 மயலுழந்துநல்வாசவன்

குயிலதாமுருக்கொண்டுவான்

சயமொடேகலுந்தடிந்தனன்

பயிலுந்தனகைவாட்படையினால்

1133 நாற்பொருந்திசையுநாடியே

யேற்றதிக்கிதெனவேகலுஞ்

சீற்றமோடுதலைசிந்திவெங்

கூற்றனாருயிர்குடித்தனன்

1134 பொஞ்கும்வெங்கதிர்பொருந்துபற்

றங்குகைகொடுதகர்த்தனன்

றிங்கண்மாமுகந்தேய்த்தனன்

பங்கயந்திகழ்பதத்தினால்

1135 நந்துவாணிதிரணகிலமோ

டந்தநாசிகையரிந்தனன்

செந்தழற்கடவுள்செங்கைநா

வந்துவல்லையினின்மாற்றினான்

1136 மைக்கருங்கணவன்மனைவிமூக்

கக்கணத்தினிலரிந்தனன்

சிக்கெனச்சிகைபிடித்துடன்

றக்கனைத்தலையறுத்தனன்

1137 ஆயகாலையத்தலையைவெந்

தீயருந்திடச்சிறுவரை

யேயவேள்வியினெய்தினோர்

மேயவாருயிர்வீட்டினான்

1138 வீடினோர்குருதிவெள்ளநீர்

கூடியுண்டுபினர்குதுகுதுத்

தாடுகின்றனவலகைகள்

பாடுகின்றனபாரிடம்

1139 நாரணன்னயனந்துநாட்

சோரியுண்டுதுலைத்தல்போ

லாரவுண்டனமின்றுநல்

வீரவென்றுவிளம்புமால்

1140 கூடுசோரிகுளித்தலான்

மாடுயூபமரந்திகழ்

காடுநின்றுகவந்தநின்

றாடுகின்றவனந்தமே

1141 ஆயகாலையினண்ணலை

வீயும்விண்ணவருயிர்பெற

நேயமோடருணீயெனா

மாயன்வந்துவணங்கினான்

வேறு

1142 தந்தையுந்தாயுந்தன்சொலின்வாராத்தனயரைத்தண்டமாற்றுதல்போற்

சிந்தையாவருமேதிருந்திடமுனிந்தேதிறலுறும்வீரனாற்றீர்த்தாங்

கந்தவேலையினிலரியயன்முதலோர்க்கறிவுறுத்தருண்மிகப்புரிவான்

வந்துதோன்றினனோர்மழவிடைமீதில்வார்ந்தசெம்மகுடவேணியனே

1143 வானதிமுடித்தவானவன்விடைமேல்வந்தெதிர்தோன்றமாலயன்செந்

தேனலம்பியவஞ்சிறையளிமுரலுஞ்செம்மலர்க்கழறொழுதெந்தா

யானநன்மைந்தரளித்தனர்தமக்கேயவமதிபுரியினுமன்னோர்

தானருள்வதுபோற்றமியர்கட்களித்ததண்ணளியாதெனவுரைக்கேம்

1144 என்னலுமிரங்கியெம்பிரான்மகிழ்கூர்ந்திந்திராதியர்தமையின்னே

நின்னரும்பண்பானிலைபெறத்தருதிநீயெனநிகழ்த்ததிடவீரன்

சின்மயனருளாற்றேவரைத்தரலுந்திருமலர்த்திசைமுகப்பெருமான்

றன்னிகர்தலைவவென்னொருசேயைத்தந்தருளென்று நேர்ந்திரந்தான்

1145 இரந்திடுமமையத்தெம்பிரான்வீரவின்னதும்புரிதிநீயென்னாக்

கரந்தலைக்கொண்டுவணங்கியேபானுகம்பனைத்தக்கனற்கவந்தம்

விரைந்துநீகொணர்தியென்னலுமந்தமேதகுபூதமாங்குய்ப்பப்

புரிந்தவவ்வேள்விக்கரிந்தமைத்தலையைப்பொருத்தினனெழுகெனவுரைத்தான்

1146 உரைத்தலுமுயிர்பெற்றுறங்கினன்போலவொல்லையினெழுந்துளநாணித்

தரைத்தலமதனைநோக்கிமுன்னின்றதகர்முகத்தக்கனைமேரு

வரைத்தனுவெடுத்துமால்கணைதொடுத்துமருவியதிரிபுரமெரியச்

சிரித்தருள்புரிந்தசிவபிரானுனதுசிந்தனைதியங்கலையென்றான்

1147 என்றலுங்கமலதத்தெழில்கவர்கழற்கீழிரந்திரந்துருகிநின்றிறைஞ்சி

யொன்றுநின்றன்மையுணர்ந்திடாதயன்மாலும்பரைநம்பியேநம்ப

மன்றல்செய்கின்றமருகனென்றுன்னைமனனிடைமதித்தனனந்தோ

பின்றிகழ்சடிலப்பெருமநாயடியேன்பிழைத்ததுபொறுத்தருளென்றான்

1148 ஆங்கதுகாலையரியயன்முதலோர்க்கங்கணணருள்செய்வானெம்மை

யீங்குநீரிகழ்ந்ததிசைக்கின்முன்விதியேயிரங்கலிர்நீவிர்நும்பதத்திற்

பாங்குடன்படர்மினென்றுரைபகர்ந்துபரிவினல்வீரனோடருளாற்

றீங்கறுமன்பர்சிந்தையிற்றிகழுந்தென்றிருக்கயிலையிற்சென்றான்

1149 சென்றபினந்ததத்திறல்கெழுவீரன்சேவடிதொழுதெதிர்நிற்ப

வென்றுநீமுடிவினின்பதத்திருத்தியென்றுவான்முகடுதோய்பதத்தில்

வென்றிகொள்வீரமேவுதியென்னாவிடைகொடுத்தருளிநீள்வெள்ளிக்

குன்றினையொருவிக்குலவுநல்லிமயக்குன்றில்யோகுற்றனன்குழகன்

1150 சந்ததமின்னுஞ்சதுர்மறைதேடித் தான்றடவிடத்தனிசென்று

மந்தரமலைபோல்வளரதன்பாங்கர்மங்கைவந்தவதரித்திடவு

மெந்தையோகத்தினெண்ணருங்காலமின்பமாத்திருவருள்செயவு

மந்தநல்லிமவான்முந்தைநாட்புரிந்தவருந்தவம்யாதெனவுரைப்பாம்

1151 எம்பிரான்யோகுற்றிருப்பவையாண்டிலெண்ணரும்புவனமீன்றருள்பூங்

கொம்பினைநோக்கிக்குறித்துநல்லிமவான்கோதிலாவென்குலக்கொழுந்தே

யும்பர்கோனாகியுயிர்க்குயிராகியோங்குலகுக்கெலாமொன்றாந்

தம்பிரான்றனக்குத்தகும்பணிவிடைநீசந்ததம்புரிகெனவிடுத்தான்

1152 அப்பரிசலகிலண்டமீன்றெடுத்தவருண்மடக்கொடியகண்டிதமா

யொப்பிலாதுயர்ந்தவும்பர்தம்பிரானுக்குறுந்தொழிலுழந்திடுநாளின்

மைப்புயல்வண்ணமாயவன்மலரோன்வாசவன்வானவரேனைச்

செப்பருமுனிவர்திரட்சியின்வதுவைசெய்துடன்கயிலைiயிற்சேர்ந்தான்

வேறு

1153 தக்கன்வேள்விதகர்த்திடுமிக்கதைதக்கஞானதவத்துறுமாதவீர்

மிக்கசீரின்விருப்பினுரைக்குநர்மெய்ச்சொன்மேவுசெவிக்கொளுமேன்மையோர்

திக்கினோடுலகுக்கரசாகியேசித்தநீடுகளிப்புடன்மேவியே

தொக்கபோகசுவர்க்கமதுற்றுயர்சுத்தஞானசுகத்தினிலாழ்வரே

தக்கன்வேள்வியழித்த சருக்கமுற்றியது

ஆகச்செய்யுள் – 1153

*****

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

திருப்பூவணப் புராணம் Copyright © 2015 by மு​னைவர். கி. காளைராசன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book