8
வேறு
21 அற்றமில்கலையினுண்ணறிவின் மேலையோர்
பொற்றிருப்பூவணப் புராணமாண்புற
முற்பகர்வடகலை மொழிபெயர்த்துநீ
நற்றமிழான் முறைநவிற்றுகென்னவே
22 பொங்கு வெங்கதிரவன் பூசையாற்றிய
சங்கரன்கதை சொலத்தமிய னெண்ர்த
றுங்கமாமேருவைச் சுமப்பனின்றெனப்
பங்குடையான் கரம்பற்றல் போலுமால்
23 குற்றமிலிரதநற்குளிகை காக்கலும்
பொற்புறத்தாமிரம்புகரில் பைம்பொனா
முற்றவென்பாடலுமுணர்வின்மேதகு
நற்றமிழ் வாணர்முன்னவையுந்தீருமால்
வேறு
24 விடையுகைத்திடுமின்னனைபாகன்மேற்
றொடைநிரம்புசொல்சூடத் தொடங்கல்யா
னடையிடற்கருநல்லெழின்மைந்தர்சூழ்
கடல்கடக்கக்கருதுவதொக்குமால்
25 திருத்தகும் பொழிற்றென்றிருப்பூவண
நிருத்தமாடியநின்மலன் காதையை
யருத்தியாலுலகம் புகழ்காரிகை
விருத்தயாப்பினெடுத்து விளம்புகேன்
அவையடக்க முற்றியது
ஆகச் செய்யுள் 25
*****