21
ஆறாவது
உற்பலாங்கி பதியை யடைந்த சருக்கம்
567 தற்பரத்துடன் றிகழ்சவுனகப்பெயர்
முற்றுணரருந்தவமுநிவகேட்டியாற்
சொற்றிடற்கரும்பரிசுத்தமேவிய
நற்கதைதன்னையாநவிற்றுவாமரோ
568 இம்மைநற்றவமுழந்தெம்பிரானிடத்
தம்மைதன்னடியிணையருச்சித்தேத்தியோர்
கொம்மைசேர்வரிமுலைக்கோதில்கொம்பனாள்
கைம்மைநீக்கியமணிகன்னிகைப்புனல்
569 முன்னருந்தவம்பலமுற்றியன்னனைதன்
பொன்னடிக்கமலத்திற்பூசையாற்றிய
வன்னவள்காதையையறைதிசூதநீ
யென்னலுங்கேண்மினோவென்றியம்புவான்
570 துங்கபத்திரையெனுந்தூநதிக்கரை
தங்கியபுண்ணியகிராமந்தன்னில்வாழ்
பங்கயனனையகோபாலனென்றொரு
துங்கவேதியன்மறைக்குலத்திற்றோன்றினாள்
571 அன்னவன்றன்னிடத்தவதரித்ததோர்
கன்னிமான்கன்னல்வேள்கணைக்கிலக்கனாள்
பொன்னுலகத்தினிற்புலவர்போற்றிட
மன்னியவுலகினில்வந்துதோன்றினாள்
572 முந்தைநாளிவளுறின்முகில்வணன்கடற்
செந்திருமாதினைச் சிந்தைகொண்டிடா
னந்துநான்முகனுநாமாதைநண்ணிடா
னிந்திரன்வேண்டிலனிந்திராணியை
573 கற்பகஞ்சேர்தருகாமவல்லியோ
கொற்றவில்வேளையாட்கொள்ளுந்தெய்வமோ
வெற்றியந்தணன்புரிமெய்த்தவங்கொலோ
மற்றவடன்னையான்மதிக்கற்பாலதோ
574 நிறையிருட்சைவலநீலமாமுகில்
குறைவில்சீர்க்கொன்றையின்கோலந்தாங்கியே
பிறையொடுபெருந்திருப்பிறங்கன்மேலணிந்
தறல்விரிபாளைசேரளகபந்தியாள்
575 கொம்மைசேரமுதநற்கோதிலாக்குளிர்
செம்மதிபோன்றொளிர்திருமுகத்தினாள்
வெம்மைநீடியபுகழ்வேனில்வேடிருக்
கைம்மிகுஞ்சிலைநுதற்கவினிலங்குவாள்
576 தாமநற்றாழ்குழைதந்தபொற்புறு
மாமணியூசல்போல்வயங்குகாதினாள்
காமசங்கீதமேகலந்தகாமனூற்
பாமணமொழுகுசெம்பவளவாயினாள்
577 சேயுயர்விசும்புறுதிங்கள்போன்றொளிர்
வேயுறுநித்திலம்விளங்குமூரலாண்
மாயவனேந்தியவண்ணவால்வளை
யாயகந்தரத்தினிலமைந்தபூணினாள்
578 இனமிகுகயற்கண்மூண்டிகல்செய்யாமலே
துனிவழியடைத்துநேர்துலங்குதுண்டத்தாள்
புனமுறுபசுக்கழைபொருந்துகின்றதோட்
கனவளைதாங்கியகாந்தடகையினாள்
579 கோதில்பூவணத்தினுங்கும்பகோணத்துங்
காதல்கூர்விண்ணவர்கரந்துதாங்கொணர்ந்
தாதிகாலந்தருமமுதகும்பழிப்
போதுசேர்ந்தனவெனப் பொலிந்தகொங்கையாள்
580 தூமணிகன்னிகைச்சுழிகொளுந்திமேன்
மாமணிவயிற்றுறுமயிரொழுங்கினாள்
காமருசிறப்புறுகலைவல்லோர்களு
மாமதியாலறிவருமருங்குலாள்
581 ஆர்ந்தமாமணிதிகழம்பொன்மேகலை
பாந்தளின்றொகுபணம்பரிந்தவல்குலாள்
வார்ந்தநெட்டிலையொடுவயங்குபூங்குலை
சார்ந்திடுமரம்பைநேர்தருகுறங்கினாள்
582 கருதரியதாயகற்கடகந்தன்னைநேர்
தருமழகியமுழந்தாள்வயங்குவாள்
கிருதமாலையில்விளையாடுகின்றநற்
றிருமிகுமணிவரால்சேர்ந்தகாலினாள்
583 எண்ர்வமேயமுமிசைக்கநின்றெதிர்
நண்ர்வமானமுநடுவினாவினேர்
கண்ர்றநிறப்பவேள்கருத்தமைத்துடன்
பண்ணியபொற்றராசெனும்பாட்டினாள்
584 இரதிகாந்தன்கலையெழுதுபுத்தக
மருவியவிருபுறவடிவயங்குவா
ளருளுடனுரியபேடாடல்கொண்டிடும்
பரிபுரவொலிமிகுபதாம்புயத்தினாள்
585 நாதவேதம்பயினற்குலாதிப
காதல்கூரின்பநற்கற்பின்மேதகு
மாதராண்மலர்தலையுலகமாண்புற
வோதுமுற்பலாங்கியென்றுரைக்கும்பேரினாள்
586 இந்தநல்லுலகினர்யாருமேத்திடச்
சுந்தரமெய்யினிற்றுலங்கிநாட்குநா
ளந்தநன்மடநடையன்னமன்னவள்
சந்திரகலையெனத்தான்வளர்ந்தனள்
587 பங்கமோடன்னவட்பயந்துளோர்கடாந்
தொக்கிருந்துளங்களிதுளங்கவோர்நனாண்
மைக்கருங்கண்ணியைமாமணஞ்செயத்
தக்கவர்யாரெனத்தம்மிற்றேர்ந்தனர்
588 இன்னணந்தம்முளத்தெண்ணியெண்ணியே
யன்னவரிருவருமாயுங்காலையிற்
றன்னிகரந்தணனொருவன்றான்மகிழ்
மன்னியமணிக்கடைவாயில்சார்ந்தனன்
589 மன்றல்செய்விருப்புடைமறைவலாளன்முன்
சென்றவன்சொன்றியீகென்றுசெப்பலு
நன்றசேரெழிலினைநாடித்தேவனென்
றொன்றியவுள்ளநின்றூசலாடினான்
590 பழகியநான்மறைபயிலுமந்தண
னழிவிலாப்பெருந்திருவழகுங்கோலமுங்
குழலுடன்யாவையுங்குறிப்பிற்கண்ர்றீஇக்
கழிபெருங்காதலான்கழறன்மேயினான்
591 மேவினையாரைநீமிக்கவன்புகூர்
யாவனின்றந்தையெங்கேகுகிற்றியென்
பாவையுமன்னமும்பரிந்துநல்குவேன்
மாவிரதீயுரைவழங்குகென்னவே
592 என்னலுமதற்கிசைந்தின்சொல்வாய்மையாற்
கன்னிசேருவகையங்கடற்குளித்தனன்
றன்னுணர்விழந்துரைதளர்ந்துதேறினன்
பின்னருந்தன்னுடன் பேசலுற்றனன்
593 மங்கலமவுட்கலியவிப்பிரன்றரு
திங்கள்போற்கலைமதிசேர்ந்தமைந்தன்யான்
றங்கியபிரமநற்சரியம்பூண்டுளேன்
பொங்குமாதவம்பலபுரியும்புந்தியேன்
594 அருமறையங்கமோராறுமாய்ந்துளேன்
குருவருளுடைமையேன்கோதினின்மகட்
டருதியேலென்கையிற்றகுவதாமென
வுரியமோனத்துடனுற்றிருந்தனன்
595 ஆங்கவன்மோனமோடிருந்தகாலையிற்
றாங்கரும்விருப்புடன்சார்ந்துதன்மனை
வாங்குவினுதலியைவரவழைத்தனன்
பாங்குடையந்தணன்பகர்தலுற்றனன்
596 நம்பெருந்தவத்தினானமதுகற்பகக்
கொம்பினைமணஞ்செய்வான்குறித்தொரந்தண
னிம்பரினடைந்தனனிருக்கின்றானென
வம்புலாமுலையவண்மகிழ்ந்துவாழ்த்தினாள்
597 அங்கதுபோழ்தினினரியகேதனந்
தங்குபூம்பந்தர்கள்சமைத்துச்சார்ந்தநற்
பங்கமில்பல்லியந்துவைப்பப்பாவைதன்
மங்கலமணவணிமரபினாற்றினார்
598 அறுசுவையடிசிலந்தணர்கட்காற்றியே
மறைவழிமணமகன்மலர்ப்பதங்கழீஇ
யறையிருகரங்களினளிக்கமாதொடுங்
குறைவில்சீர்மனைமிசைக்கொண்டுசேர்த்தினார்
599 தாவில்சீர்க்கன்னிகாதானநல்குவான்
காவிசேர்தடங்கணாள்காண்டகப்புனல்
பூவுறழ்செங்கையிற்புகாமுனன்குயிர்
மேவியமணமகன்வியோகமாயினான்
600 ஆண்டகையுயிர்பிரிந்தவனிசேர்தலு
மாண்டனனென்றுநன்மாதர்மைந்தர்கள்
காண்டலுநடுங்கிமெய்கலங்கியேங்கியே
யேண்டகவெடுத்தணைத்தினிதியம்பினார்
601 பொற்கொடிமடந்தையிப்போதுபாக்கியம்
பெற்றிலளென்றுதாம்பேசிப்பன்முறை
மற்றவட்புல்லியேவாய்புலம்பிநின்
றற்புதமெய்தினராற்றுகின்றனர்
602 அந்தணன்மணப்பிரேதத்தையன்பினான்
முந்தைநூல்விதிவழிமுறையிற்கொண்டுதான்
றந்திடுமந்தியச்சடங்கிழைத்தபின்
வந்தனர்தம்பதிவழிக்கொண்டேகினார்
603 பளபளத்திளகிநற்படீரகுங்குமக்
களபமுங்கியமுலைக்காமர்கன்னியுந்
தளரிடையன்னையுந்தந்தையும்பெருங்
கிளைஞருநெஞ்சகங்கிலேசமுற்றனர்
604 பின்னர்முத்திங்கடான்பெயர்ந்துசெல்லவக்
கன்னியைமணஞ்செய்வான்கருதிச்சேர்ந்தரோ
வன்னவந்தணனுநீரங்கைதாங்குமுன்
றென்னிலைசேருயிர்துறந்துபோயினான்
605 மங்கையர்க்கரசியைமாமணஞ்செய்வான்
றுங்கமோடணைகுநர்தம்மைத்தூக்கினோர்
பங்கமிலாதநற்பத்திரட்டியோர்
தங்களாருயிர்தனைத்தணந்துபோயினார்
606 மற்றவள்பொருட்டிவர்மாய்ந்தபின்னரே
பெற்றருளன்னையும்பிறங்குதாதையும்
வெற்றுடம்பாகவிண்விரைந்துபோயினார்
பொற்றொடிதான்றனிபுலம்பிவைகினாள்
607 நீடியகிளைஞரானிந்தையுற்றனள்
கூடியேயணைதருகொழுநர்க்கூட்டிடும்
பீடுறும்பெரும்புனற்பிறங்குநற்றலந்
தேடியேயெண்டிசாமுகமுஞ்சென்றனள்
608 ஓதுநல்லுண்டியுமுறக்கமுங்கடிந்
தேதமிறீர்த்தங்களெங்குமாடியே
போதவிழ்பொழிறிகழ்பூவணந்தனிற்
காதலினடைந்தனள்காமர்கன்னிகை
609 படர்ந்தெரியுமிழ்கொடும்பாலைசேர்நில
நடந்திடும்வெம்மையானன்புனற்றரு
தடந்தெரிகுற்றதிதாகமோடுறா
வடந்திகழ்பூண்முலைமடந்தைகண்டனள்
610 பண்டருமறையவர்பன்னசாலையும்
புண்டரீகச்செழும்பொய்கையும்புக
ழெண்டகுமிருந்தவரியைந்திலங்குபூந்
தண்டலைசூழ்மணிகுண்டந்தன்னையே
611 வெள்ளிடைவெயிலின்மெய்வெதும்பிவேர்வர
வுள்ளநொந்தடிபெயர்த்தியங்கியேயுராய்த்
தெள்ளுதீம்புனன்மிகப்பருகித்தேக்கியே
யள்ளனீர்த்தடங்குடைந்தாடினாளரோ
612 தடமடுமூழ்கியதபோபலத்தினா
னிடைவிழுநாளறவிருந்தவம்புரி
தொடர்வுறுமருள்விடுசோதிதுன்றுமெய்
முடிவறுகாலவமுநியைக்கண்டனள்
613 பன்னிருகான்முறைபடிபஞ்சாங்கமாய்
மன்னியபொன்னடிவணங்கிவீழ்ந்தெழீஇ
யன்னவள்கழறலோடர்கலின்றியே
நின்னருள்புரியெனநேர்நின்றாளரோ
614 சின்மயமாகியசிவானுபூதிசேர்ந்
தந்நிலைதிரிந்தவனன்னமென்னடைக்
கன்னிகைதன்னைநேர்கடைக்கண்டாக்கியே
முன்னுறுகாதலான்முநிவன்கூறுவான்
615 சீர்மிகுமாதராய்சேர்கநன்குநீ
யார்கொலோவெங்கிருந்தேகுகிற்றியா
னேர்தருகணவன்யார்நிற்பயந்தவன்
பேரெதிங்கடைந்ததென்பேசுவாயென்றான்
616 அகங்குதுகலிப்பவேயரியமாதவன்
மிகுந்தபேரன்புடன்விளம்பக்கேட்டுள
மகிழ்ந்தனள்பாக்கியவதியும்யானெனாத்
திகழ்ந்தசெம்பவளவாய்திறந்துசொல்லுவாள்
வேறு
617 செடுங்காலந்தவமுழந்துநீள்சடையோனருள்படைத்துநீண்டபார்மேற்
படர்ந்தேறும்பல்புகழ்சேர்பங்கயனையனையதவப்படிவமென்னா
வுடன்சேருமுயிர்த்துணைவருயிர்துறந்துமுயிர்சுமந்திங்குழலுமிக்க
கொடும்பாவியெனதுநிலைகூறரிதாயினுஞ்சிறிதுகூறக்கேண்மோ
618 தொன்மறையோர்புகழ்ந்தேத்துந்துங்கபத்திரையெனுமோர்தூநதிப்பான்
மன்னுமதன்கரையின்கண்மருவுபுண்ணியகிராமத்துவாழ்வோன்
கொன்னவிலந்தணர்கோமான்கோபாலன்றந்தகுலக்கொடியேனானே
யிந்நிலத்திற்பிறந்தவன்றேயெல்லோருமேசுதற்கிங்கிலக்காய்நின்றேன்
619 இங்கதுவுமிசைக்குவன்கேளெனையளிப்பவெனைப்பயந்தவெந்தையந்தோ
மங்கலமாமறைவிதியின்மணவாளர்செங்கையினின்வழங்கும்வேலைத்
துங்கமுறுமைந்நான்குதுணைவராருயிர்துறந்துதுறக்கஞ்சேர்ந்தா
ரங்கதனாலடியேனுமருங்கணவற்பெறவேண்டியடைந்திட்டேனால்
620 முன்னைவினையின்பயனோவிம்மையில்யான்செய்தபவமூண்டதேயோ
கன்னியெனப்பேர்படைத்துங்கலங்கழிந்தகாரிகைபோற்கலங்காநின்றேன்
றன்னிகராகின்றவெழிறாங்குமடமங்கையர்கடங்கண்முன்ன
ரென்னேயோவென்னேயோவின்னமும்யானுயிர்சுமந்திங்கிருக்கிறேனால்
621 மிக்கார்வத்துடன்கௌரிவிரதமநுட்டித்துமுன்னைவிதியினாலே
யெக்காலுமிழைத்திடுமுத்தியாபனநீயிழப்பவிமூதியைந்ததென்று
முக்காலமுதலியனமுறையானேமுற்றறிந்துமொழியுமந்தத்
தக்கார்கொளம்முநிவன்ஞானக்கண்ணாலுணர்ந்துசாற்றினானே
622 அலர்கதிர்வெய்யோன்றீர்த்தத்தங்கணன்றனருளதனலாடலாலே
நிலவலயந்தனிற்செய்தநீண்டகொடும்பாதகமுநீங்காநின்று
மலிபுகழ்சேரித்தீர்த்தமான்மியத்தினான்மிகுமங்கலமுமாகு
முலகமெலாம்பணிந்தேத்தவுயர்தவநீபுரியும்வகையுரைப்பக்கேண்மோ
623 பைந்தடஞ்சேர்தருமுட்டாட்பங்கயப்பொற்பூவினொடுற்பலங்கைக்கொண்டு
மந்திரதந்திரம்பொருந்தவாலுகவேதிகைசதுரம்வகுத்தமைத்தே
யந்தரியையாவாகித்தக்கற்பவிதிபூசையாற்றினின்பாற்
சுந்தரிநேர்வந்துநிற்பொற்சுமங்கலியந்தந்தருளுஞ்சுடர்வேற்கண்ணாய்
624 என்றுமுநிவரனிசைப்பவேந்திழைநலிருங்கணவற்பெறுவான்வேண்டி
நன்றிதெனமிகழ்ந்தந்தநன்முநிவனாச்சிரமநர்கிப்பாங்கா
லொன்றியவன்புடன்விதிநின்றுமையாடன்றிருநோன்பையுவந்துநோற்றே
யன்றுடனுத்தியாபனஞ்செய்தருங்கணவன்றனையருளினடைந்தாளன்றே
625 இத்தகையதீர்த்தத்தினினிதாடவிடர்ப்பிறவிக்கடற்படாவே
யுத்தமநற்குலத்தினல்வந்துற்பவித்தவுலகமெலாமுவப்பினாலே
நித்திலத்தையொத்தநகைநேரிழைதன்வைதவ்வியநீக்கலாலே
பத்தியுடன்மடவாரும்படிந்தாடக்கடவர்தினம்பரிவிற்பாங்கால்
வேறு
626 இடபநல்லிரவிதன்னிலெழிறருமிந்துவாரத்
துடனிகழ்நடுநாளந்தவோடையினாடிமன்னுங்
கடனுறுமிக்ககாமக்கலங்கழிமகளிரானோர்
தொடர்பினால்வருபிறப்பிற்சுமங்கலியாகிவாழ்வார்
627 கோதின்மங்கலையாய்க்காதற்கொழுநரைக்கூடுகின்ற
மாதராரந்நீராடின்மகிழ்தருமகப்பேறுண்டாங்
காதலிற்கலந்துகாமர்கன்னியர்கணவற்சேர்வார்
மேதகுத்தியாபனத்தால்விரதநற்பலங்களுண்டாம்
வேறு
628 அற்பினோங்குசீரரனடிக்கண்வாழற்புதந்தருமருடவத்தினா
னுற்பலாங்கிதன்கதைபடித்துளோருய்த்துணர்ந்துதஞ்செவிவழிக்கொள்வோர்
கற்குமாண்பினோர்கலியகத்தரோகட்டவெங்கொடும்பவமகற்றியே
மற்றையாண்டையோர்வளமைபெற்றுமேல்வைத்திடுங்கதிமருவுகிற்பரே
உற்பலாங்கி பதியையடைந்த சருக்க முற்றியது
ஆகச்செய்யுள் 628
*****