23
எட்டாவது
சர்வபாவமோசனச்சருக்கம்
658 சுத்தமாம்புராணந்தேர்ந்தசூதநன்மாதவத்தோய்
சித்திரமணிகுண்டத்திறிசைமுகன்றீர்த்தந்தன்னிற்
பத்தியினடைந்தியாரும்படிந்திடுகாலபேத
மித்திறனன்மாதோவிசைக்குவதின்னுமுண்டால்
659 பல்பவமகற்றுந்தானம்பண்ணிடுங்காலம்பாங்காற்
றொல்லைநூல்விதிவழாமற்றொடங்கிடுஞ்சாந்தியன்றி
மல்லலோங்கெழில்சேர்தீர்த்தமாடவல்வினைகண்மாய்க்கு
மெல்லையில்பலங்கடம்மையெடுத்துநன்கியம்புகென்றான்
660 மோனஞானந்தெரிந்தமுழுதுலகிறைஞ்சியேத்த
லானவானந்தவெள்ளத்தழுந்திடுமந்தணாள
வூனமதகலச்செய்திங்குரைக்குவமோர்கவென்னாத்
தானருள்கூர்ந்தசூதன்சவுனகற்குரைப்பதானான்
661 மேடநற்றிங்கடன்னின்மிக்கபுரணையினன்பாற்
கூடியமவுனத்தோடுவடுகனைப்பணிந்துகொன்றை
சூடியகடவுடன்னைத்தொழுதிராக்கடையில்விண்ணோர்
தேடருமணிகுண்டத்திற்சேர்ந்தவர்பலத்தைச் சொல்வாம்
662 வேதியற்கோறலாதிவெங்கொடும்பாவமாயப்
பாதகமனைத்துமங்ஙன்பாறிடும்பரிவின்முன்ன
மோதிடுமந்தநாளினொளிகிளர்மணிகுண்டத்தி
னேதமிலந்நீர்மூழ்கினின்பமாமுத்திசேர்வார்
663 அக்கிநிட்டோமமாதியரியநல்வேள்வியாற்ற
மிக்கசெம்பொன்கொடுத்தோர்மேவியபலன்களுண்டாம்
பக்கமோடரிதினேனும்பகர்ந்திடுமந்தநாளிற்
றெக்கசீர்மணிகுண்டஞ்சேர்தோயத்திற்றோயமாதோ
664 கடுங்கொடுங்குட்ட நோயன்களத்துரோமத்தன்மிக்க
கொடும்பிணியாளனந்நீர்குடித்திடனொளிக்கும்வெந்நோய்
திடம்படுமிடபமன்னுந்திங்களிற்சௌம்யவாரத்
தடைந்ததின்மூழ்கிற்செம்பொனரும்பெருங்களவுநீங்கும்
665 இந்த நீர்மணிகுண்டத்தினின் புறக்கருதியன்பாற்
புந்திகன்றனக்குப்புந்திபொருந்திடப் பொலங்கொள்பைம்பொன்
வந்துநன்கியைந்ததானமகிழ்ச்சியின் வழங்கினோர்கட்
கந்தகன்றன்னைக்காண்டலருந்தண்டமிரண்டுமின்றாம்
666 மன்னியமைந்தரானோர்வைகாசிவிசாகந்தன்னிற்
பன்னுநான்மறையோர்கையிற்பரவுதன்பிதிர்கடம்பாற்
றுன்றுவெம்பசிதணிப்பான்றூயவெட்டயிர்பான்மாடந்
தன்னிகர்குளந்தயங்குந்தக்கசித்ரான்னத்தோடும்
667 அரியனபொருளினட்டவறுசுவையுண்டிமிக்க
பரிமளஞ்சுகந்தநன்பூப்பாதுகைகுடைபூணாதி
யுரிமையினுலோபியாதங்குதவிடிற்பிதிர்கள்வான்றோ
யிரவிவெண்மதிநாட்காறுமின்பத்தினியைவரன்றே
668 தந்தைதாய்வர்க்கத்தோடுந்தகும்பெருங்கிளைஞரோடுஞ்
சுந்தரந்துதைந்திலங்குந்தூயநல்விமானநூறு
முந்துறவந்துசூழமுடுகியேகடிதினேகி
யெந்தைசேர்கயிலைவெற்பினிடத்தினிதமர்வரன்றே
669 தன்னிகர்மாகத்திங்கடக்கமந்திரிசிங்கத்தின்
மன்னுமாமாகந்தன்னின்மாமணியோடைசேர்ந்த
வன்னதீர்த்தத்தினாடியரும்பெருந்தானமீவோர்
பன்னரும்பவங்கள்யாவும்பற்றாத்துடைப்பரன்றே
670 தனைநிகர்தநுர்மாதத்திற்சதுர்முகன்றீர்த்தந்தன்னி
லினைதலொன்றின்றிநெஞ்சத்தினியதேநுவைவதைத்தோர்
மனமொழிமெய்களொன்றிமன்னொருமாதமூழ்கி
னனையதோர்காலையந்தவரும்பவமனைத்துநீங்கி
671 தக்கபன்மணிப்பதாகைத்தவளநல்விமானத்தேறி
மிக்கசீர்விளங்குமந்தவிரிஞ்சனதுலகமெய்தித்
தொக்கசெம்மணிகள்வானிற்சுடரவன்வெயின்மறைத்தொண்
டிக்கிலகொளிபரப்புஞ்சித்திரமண்டபத்தில்
672 நிறைமதிபுரையுமந்தணித்திலக்கொத்துமாலை
முறைமுறைநிவந்தமாடமுகப்பினின்ஞாங்கர்த்தூங்கக்
குறைவறுசெம்பொற்சோதிகுலவுபூங்கொடிகளாட
மறுகுசேர்நிரைகடோறுமகரதோரணம்வயங்க
673 வேதநற்புராணமாதர்மிக்கவெண்டிக்குப்பால
ரோதுகந்தருவர்வீணையுயர்தவச்சநகராதி
யேதமின்முநிவர்போற்றவீரேழிந்திரர்கள்காலங்
கோதறவாழ்ந்துபின்னர்க்குவலயத்தரசராவார்
674 கார்த்திகைத்திங்கடன்னிற்கார்த்திகைநாளிற்றிங்கள்
சீர்த்திகழ்கலையீரெட்டுஞ்செறிந்தநாள்குறைந்தநாண்மெய்ந்
கீர்த்திகொள்க்ரகணகாலங்கெடுமதிதிங்கள்சேர்நா
ளார்த்தசுந்தரப்பொன்சேயிலருங்கலையொடுங்குமந்நாள்
675 வந்திடுமிவற்றையிந்தமலர்தலையுலகந்தன்னிற்
புந்திகொளறிவின்மிக்கோர்புட்கரயோகமென்ப
ரந்தநீர்மையினலோரொன்றாயிரங்க்ரகணமொக்குஞ்
சிந்தைகூர்ந்தந்நீராடிற்சிவபுரியதனிற்சேர்வார்
676 தவலருஞ்சிவநிசிக்கட்சந்நிதிமன்னுதீர்த்தத்
தவலமதகலவுன்னியாடியேயன்பின்மிக்க
புவனநன்கியாரும்போற்றும் பூவணங்கோயில்கொண்ட
சிவபிரான்றனைவில்வத்திற்சிறப்புடன்பூசைசெய்து
677 உவமனிலந்தநாளினுண்டியோடுறக்கநீத்துப்
பவமறப்புராணம்பன்னிற்பகர்சிவநிசியதொன்றா
னுவலிலந்நியதலத்தினூற்றொருகோடிகொண்ட
சிவநிசிவதியிற்பூசை செய்திடும்பலத்தைச்சேர்வார்
678 அச்சிவசிநிக்கணானைந்தரியபஞ்சாமுதத்தோ
டிச்சையாங்குசோதகம்மோடெட்டயிலாதிகொண்டு
நிச்சயமணிகுண்டத்தினீரினாட்டினர்பதத்தை
நச்செயிற்றநந்தனாலுநவிற்றநாவசைக்கவற்றோ
679 ஆயினுமரிதுவந்ததறைகுவனவர்சாலோக
மேயபின்சாரூபத்தின்மேவியேவிளங்குங்கார்த்தி
கேயனோடொத்தநந்திகேயனுக்கிணையதாகி
யோய்விலாயிரஞ்சதுர்நல்லுகஞ்சிவலோகத்தேய்வார்
680 செய்யவொண்பட்டினுாலுந்திகழ்ந்தவெண்பட்டினாலுந்
துய்யபூங்கதலிபூகமாதியதொங்கறன்னா
லைதிகழ்பூவணத்தெம்மடிகளையலங்கரித்தோர்
பையழகொழுகுந்துத்திப்பன்னகாபரணனாவார்
681 ஐம்பெரும்பாதகங்களகற்றிடுமஞ்செழுத்தை
யிம்பரினேன்றதீக்கைக்கீனனாயிருந்தானேனு
நண்பினான்வெறுப்புத்தன்னானவின்றிடினோர்கால்வானத்
தும்பரின்மேலாயன்னோனுறுபவமொழிப்பனன்றே
682 தேறிநன்கிருகாற்செப்பிற்றிகழ்திருக்கயிலைசேர்வா
னூறுடனெண்காலன்பினுவன்றிடில்வீடுசேர்வான்
மாறிலாச்சதவுருத்தரமந்திரஞ்செபிக்கின்மூழ்கிற்
கூறருநன்றிகொன்றகொடும்பவங்குலையுமன்றே
683 உருத்திரன்றனக்குமிக்கோங்கொளியுருத்திராக்கமாலை
யருத்தியினளித்தோரக்கவணிமணியொன்றினுக்குத்
திருத்தகுசிவலோகத்திற்றிகழ்தருவருடம்வாழ்ந்து
பரப்பிரமத்தைச் சேர்வர்படர்புவியிடத்துமன்னோ
684 எப்பொருளேனுமுள்ளத்தின்பமுற்றதனையன்பா
லப்பொருடன்னை மேலாமரன்றனக்காகவென்றே
தப்பறவளிப்போரிந்தத்தடங்கலுடுத்தபார்மே
லொப்பறவாழ்ந்துபின்னருயர்பரமுத்திசேர்வார்
685 ஓதுமிவ்வத்தியாயமுறுபவமொழிக்குமேலோர்
பூதலத்துபதேசஞ்செய்பொருடருசாரமாகுங்
காதலினோதுவோர்க்குக்கருதியதளிக்குமென்று
மேதகவிரைத்தவற்றைவேட்கையின்விளக்கக்கேட்போர்
686 மேதினியடத்தின்மேவுமிக்கதீர்த்தங்கள்யாவுங்
காதலிற்சென்றடைந்துகலந்தவைபடிந்தோராவர்
போதநன்குணர்ந்தமேலோர்புகன்றிடும்வேள்வியாவு
மாதரவதனாற்செய்தவரும்பலமடைவரன்றே
687 இந்தநற்பூவணத்தினினிதுவாழ்கிற்போர்தம்மை
யந்தரதேசநின்றுமடைந்தவரிவர்க்கண்டாங்கே
முந்துறுபவங்கடீர்ந்துமுத்தியையடைவரென்றாற்
புந்திகொண்டமர்வோர்வீடுபொருந்துதல்புகலல்வேண்டா
688 கூனலம்பிறைமிலைச்சுகோடீரபாரத்தெந்தை
யூனமிலுமையாள்கேட்பவுரைத்தருளுபதேசத்தை
யானதோர்காலைதன்னிலாறுமாமுகங்கொடுற்ற
ஞானவானதனைக்கேட்டுநந்திபானவிற்றான்மன்னோ
689 நந்திதான்கேட்டவற்றைநற்சநற்குமாரற்கோத
வந்தநற்சனற்குமாரனருள்வியாதற்குரைப்பச்
சுந்தரவியாதனெற்குத்தொகுத்துபதேசஞ்செய்ய
முந்துறக்கேட்டவற்றைமொழிந்தனனுமக்கியானே
690 நுண்ணியபொருளாய்மேலாய்நுவலருமுலகுக்கெல்லாம்
புண்ணியமளிக்குமிந்தப்பொருடனைவிரும்பிக்கேட்டோற்
குண்மகிழ்ந்துரைத்ததின்றீங்குமக்கியான்றொகுத்துரைத்தேன்
கண்ர்தற்பெருமான்றந்தகணிப்பருங்கருணையாலே
691 ஈதுமக்கிறைவன்ஞானமெய்துதற்கேதுவாகு
மாதலாலருண்மைந்தர்க்குமரியநன்மாணாக்கர்க்குங்
காதல்கூர்பவர்க்குமிந்தக்கருதருபுராணந்தன்னை
யோதுதியறிவின்மேலோயுடங்கியைந்தெந்தஞான்றும்
வேறு
692 அழகியமின்னன்னையெனுமானந்தவல்லியுடனமர்ந்துதோன்றுஞ்
செழுமலர்க்கொன்றையினறும்பூந்தேன்றுளிக்குஞ்செஞ்சடிலசேகரன்சேர்
பொழிறிகழ்பூவணக்காதைபுகல்பிரமகைவர்த்தபுராணந்தன்னி
னெழுதரியமறைமுநிவவீரெழுபத்ததாறாமத்தியாயமாகும்
வேறு
693 இந்தவத்தியாயம்படித்துளோரின்பமுற்றுநாளுஞ்செவிக்கொள்வோர்
சிந்தையிற்கொடேசெஞ்சொல்செப்புவோர் செங்கரத்தினானன்குதீட்டுவோர்
மைந்தர்பெற்றமாமைந்தர்சுற்றவேமங்கலத்தினான்மண்டலத்தில்வாழ்ந்
தந்தமற்றசீரண்டர்பொற்பினீடம்பொன்மிக்கவானங்கிருப்பரே
சர்வபாவமோசனச்சருக்கமுற்றியது
ஆகச்செய்யுள் 693
*****